இரவில் மட்டும் கொசு கடிக்கும் என்பதில்லை. பகலில் கடிக்கும் கொசுக்களும் உள்ளன. திறந்த வெளியில் சேமித்து வைக்கப்படும் டயர்களில் தேங்கும் மழை நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் சிக்குன்குனியா உள்ளிட்ட சிறப்பு நோய்கள் கொண்டு தருவன.
நெல்லை மாநகரின் தாமிரபரணி நதிக்கரையோரம், பழைய டயர்களின் கூடாரம். டயர்கள் சேமித்து வைத்திருப்பவர்களிடம் பலமுறை சொன்ன பின்னரும் திருந்த மனம் வரவில்லை. அல்லல் படுத்துவதற்கு என்றே சிலர் அல்லும் பகலும் அயராது பாடுபடுகின்றனர்.
தொல்லைகள் களைய வேண்டும், அதற்கு தொலை நோக்கு பார்வை வேண்டும். அள்ளி எடுத்து வந்தோம் அத்தனை டயர்களையும்.
நாம் என்ன செய்யலாம்?
வீட்டு மொட்டை மாடிகளில் கேட்பாரற்று கிடக்கும் பழைய சிரட்டைகள் (தேங்காய் ஓடு), டப்பாக்கள், உரல் போன்றவற்றில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கும். அவற்றில்தான், நம்மை கடிக்கும் கொசு, நன்றாய் வளரும். எனவே, நம் வீட்டின் சுற்றுப்புறங்களில், தண்ணீர் தேங்க ஏதுவாக கிடக்கும் பழைய பொருட்களை அப்புறபடுத்த வேண்டும். தெருக்களில் எறியப்படும் பழைய டயர்களும் கொசுக்கள் உற்பத்தியாகும் கூடாரங்களே.
அதேபோல், நம் வீட்டு குளிர்பதன பெட்டியின்(FRIDGE) பின்புறமுள்ள சிறிய டீ -ப்ரீசர் கப் (DEE-FREEZER CUP), A.C. இயந்திரம், மணி பிளான்ட் வைத்திருக்கும் பாட்டில்கள், மேல் நிலை நீர் தேக்க தொட்டி போன்றவற்றில், நல்ல நீரில் பெருகும் கொசுக்கள் உருவாகும். எனவே, அவற்றிலிருந்து வாரம் ஒரு முறை நீரை முழுவதும் வெளியேற்றி காய வைத்து பின்னர் பயன்படுத்த வேண்டும்.
விழிப்புடன் இருப்போம், வேதனைகள் தவிர்ப்போம்.

No comments:
Post a Comment