இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday, 21 January, 2011

மறு சுழற்சிக்கு பயன்படா குவளைகள்.

                          ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக்  பொருட்கள் சுற்றுசூழலை மாசுபடுத்துகின்றன. அவை மண்ணோடு மண்ணாக மக்கி போவதில்லை. மண்ணில் விழுந்த இடத்தில், மழை நீர் பூமிக்குள் செல்வதை தடுத்திடும். நிலத்தடி நீராதாரம், நம் அனைவருக்கும்  வாழ்வாதாரம்.
                                   எத்தனையோமுறை எச்சரித்து விட்டோம். இருந்தும் பயன் இல்லை. கடந்த மாதம், நெல்லை மாமன்றமும், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை  விற்க, வாங்க, தயாரிக்க தடை விதித்துள்ளது. 
                                  நேற்று நடந்த அதிரடி ஆய்வில், மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தோம்.
 
                                  உடனே வந்தது, ஓர் அமைப்பு. எப்படி எடுக்கலாம், எங்கள் கடைகளில் என்றே! சட்டப்படிதான் எடுத்து செல்கிறோம் என்றாலும், சட்டம் எங்களுக்கும் தெரியும் என்றனர். அனைவர் கூடி ஆணையாளரை சென்று பார்த்தனர். அவகாசம் தாருங்கள் என்று கூறி பார்த்தனர். அனைத்திற்கும் அவர் பதில், ஆய்வுகள் தொடரும், பறிமுதல் செய்தால், செய்ததுதான், நீங்கள் மாறிகொள்ளுங்கள் என்பதொன்றுதான்.
                                      சொல்லி கேட்காதவர்கள், அள்ளி சென்றாலாவது அவர்களை மாற்றிகொள்வார்களா? மாற வேண்டும் மனித மனங்கள், மாசற்ற சூழல் உருவாக!
Follow FOODNELLAI on Twitter

4 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றிகள்

Kousalya said...

மற்றுமொரு மிக நல்ல விஷயம் நடந்தேறி இருக்கிறது...

எவ்வளவு தான் சொன்னாலும் சுயநலம் கொண்ட மக்கள் சுலபத்தில் திருந்த மாட்டார்கள்...

//பறிமுதல் செய்தால், செய்ததுதான், நீங்கள் மாறிகொள்ளுங்கள் என்பதொன்றுதான்//

நம்ம ஆணையாளருக்கு ஒரு சல்யூட்.

பகிர்விற்கு நன்றி.

Chitra said...

I salute this effort! Super!

FOOD said...

வந்து வாழ்த்திய நெஞ்சங்களுக்கு,நெஞ்சார்ந்த
நன்றி.மீண்டும் மாலையில்,
"இன்றைய நெல்லை"யில், அட்வான்ஸ் செய்தி ஒன்றுடன் சந்திப்போம்.