பள்ளி செல்லும் குழந்தைகள், பாதியில் படிப்பைத் தொலைப்பது வாடிக்கையாகிவிட்டது. கல்லூரி செல்லும் வயதிலும், கல்வியைத் தொலைத்தவர் பல பேர். என்ன காரணமென்றுஎண்ணிப்பார்த்தால்,பயம்,அன்னைதந்தையரின் அரவணைப்பின்மை, ஆசிரியரின் கண்காணிப்பின்மை என்று பலவித காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கிய காரணம் மன அழுத்தம் எனலாம்.
பள்ளிப்படிப்பைத் தொலைக்கும் குழந்தைகள், பள்ளியை மட்டுமல்ல, வீட்டை விட்டே வெளியேறும் நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லை. படிப்பின் மீதும், பரிட்சையின்மீதும், சிலபல ஆசிரியர்கள் மீதும் இருக்கின்ற வெறுப்பு, குழந்தைகள் மனம் மாறவும் திசை மாறவும் வழிவகுக்கின்றன.இன்னும் சொல்ல போனால், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் உள்ள ஊட்ட சத்து குறைபாடே கூட, பிள்ளைகளிடம் மாறுபட்ட எண்ணங்கள், மன அழுத்தம் உருவாக வழிவகுப்பதாக, ஊட்டசத்து குறைபாடு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
என்ன செய்யலாம்? அண்மையில் பதிவர் கௌசல்யா தமது http://kousalya2010.blogspot.com/2011/01/blog-post_21.html பதிவில் பிள்ளைகளுடன்மனம்விட்டுப்பேசுதல், எந்த தொடல்(GOOD TOUCH,BAD TOUCH)எப்படிப்பட்டதென விளக்குதல், பிள்ளைகளை காமப் பிசாசுகளிடமிருந்து காக்குமென்றிருந்தார். இங்கும் அப்படித்தான், பிள்ளைகள் வழிதவற பெற்றோரின் அரவணைப்பின்மை பெருந்தவறாய் அமைகின்றது.
சமீபத்தில்கூட சென்னை புறநகர் பகுதியில் ‘குழந்தைகள் நல போலீஸ்’ என்றொரு அமைப்பை அரசு உருவாக்கி உள்ளது. சீருடை தவிர்த்து, சேலையில் பணிபுரியும் பெண் போலீஸ்,பாதியல் படிப்பைத்தொலைக்கும் மாணவர்களுக்கும், வீட்டை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கி மனமாற்றத்தை உருவாக்குகின்றனர்.
நம் வீட்டுப்பிள்ளைகளுடன், நாம் மனம் விட்டுப்பேசினால் நாளும் அது பலன் தருமே. சிந்திப்போம் சில நொடி- நம்மைப்பார்த்து, நம் சந்ததியை பார்த்து பிறர் சிரிக்காமல் இருக்கவே!

3 comments:
சென்னை புறநகர் பகுதியில் ‘குழந்தைகள் நல போலீஸ்’ என்றொரு அமைப்பை அரசு உருவாக்கி உள்ளது.
....இப்படி ஒரு சேவை நிறுவனம், எல்லா ஊர்களிலும் வரும் வண்ணம் செய்ய வேண்டும்.
//குழந்தைகள் நல போலீஸ்’//
நல்ல ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.
நான் எழுதிய பதிவை இங்கே குறிப்பிட்டதுக்கு வணங்குகிறேன்.
இந்த பிரச்சனையில் கண்டிப்பாக அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு வேண்டும்.
தங்களிருவர் வருகைக்கு நன்றி.
Post a Comment