கிராமங்களிலிருந்து நகரங்கள் நோக்கிய பயணம் யுகங்கள் பலவாய் தொடர்கின்ற கதைதான்.நகர வாழ்க்கையின் அவலங்கள் அறிந்தால், நகர வாழ்க்கை நரகமாகும். பூலோக நரகம் எதுவென்றால்,நகரங்களில் அடித்தட்டு மக்கள் வசிக்கின்ற பகுதியெனலாம்.ஒரு நகரத்தின் பெருமை,மேல்தட்டு மக்கள் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற வழ வழ சாலைகளும்,வழுக்கி விழுந்தால் எதிர்ப்படும் வசதிகளுமல்ல.
இருக்கின்ற நீரை, இரக்கமின்றி இரைக்கின்ற மக்கள் - ஒருபுறம்,குடிக்கின்ற நீருக்கே கொள்ளை தூரம் நடக்கின்ற பெண்கள் - மறுபுறம் -யார் சிறந்தவர்? நடக்கின்ற தூரத்தில், கிடைக்கின்ற வசதியை,சடைக்கின்ற மக்கள்.எத்தனை வசதிகள் செய்து கொடுத்தாலும்,அத்தனையையும் முறையாகப் பயன்படுத்தும் மக்கள் எத்தனை பேர்?
ஓரு ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகல் பொழுது. வாரம் முழுவதும் பார்த்த வேலைகளின் களைப்புத் தீர, வகையாய் உண்டு- உறங்கியிருந்த நேரம். அரை குறை தூக்கத்தில்ஆழ்ந்திருந்தபொழுதில்,அலுவலகத்தலைவரிடத்திலிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது. அரக்கப்பரக்க எழுந்து பேசினால், அவசரமாய் ஒரு குறும்படம் வேண்டும் என்றே அன்புக்கட்டளைஅடுத்தபக்கத்திலிருந்து.(நன்றாய் பணி புரிவதுபோல்) நடிக்கத் தெரியும்,அப்படிநடிப்பவர்களை நன்றாய்ரசித்திடத்தெரியும். இது என்ன புதுசாய்?. . . . . . . .
யோசிக்க நேரமில்லை,நாளைக்கே வேண்டுமென்றார். நல்ல வேலைகள் செய்வதென்றால்,நால்வர் அணி ஒன்றுண்டு. ஒருவர் பொறியாளர் (திரு.இசக்கிமுத்து), என்னைப்போல் மேலும் இருவர் சுகாதார ஆய்வாளர்கள்(திரு.அரசகுமார்; மற்றும் திரு.சாகுல்ஹமீது). அடுத்த அரை மணி நேரத்தில், கதைக்கான ஸ்கிரிப்ட் ரெடியானது. ஒளிப்பதிவாளர் பணிசெய்ய நண்பர் “மித்ரா” ரவி வந்து சேர்ந்தார். கதை ரெடி,ஸ்கிரிப்ட் ரெடி, கதைக்களத்திற்கு எங்கே போவது? யாரை நடிக்க வைப்பது?
அலுவலகத்திற்கு அருகிலிருந்த விடுதியும், அதில் பணிபுரியும் பையனும் முதல் பகுதியை முடிக்க உதவினர்.
நாங்கள் சொல்ல வந்த செய்தி படத்தில் ஜொலிக்கிறதா? பார்த்துத்தான் சொல்லுங்களேன்:
தொடரும் இதன் இரண்டாவது பகுதியில், பொறுப்பற்ற மனிதர்களின் செயல்களால் விளைகின்ற இன்னல்கள் காண்போம்.

4 comments:
இருக்கின்ற நீரை, இரக்கமின்றி இரைக்கின்ற மக்கள் - ஒருபுறம்,குடிக்கின்ற நீருக்கே கொள்ளை தூரம் நடக்கின்ற பெண்கள் - மறுபுறம் -யார் சிறந்தவர்? நடக்கின்ற தூரத்தில், கிடைக்கின்ற வசதியை,சடைக்கின்ற மக்கள்.எத்தனை வசதிகள் செய்து கொடுத்தாலும்,அத்தனையையும் முறையாகப் பயன்படுத்தும் மக்கள் எத்தனை பேர்?
அத்தனையும் நியாயமான கேள்விகள்! இவற்றுக்கெல்லாம் பதில் சொல்வார் யார்? அருமையான பதிவு சார்!
கேள்வி கேட்பது எளிது. விடைகள் தேடினாலும் கிடைக்காது. கேள்விகணையை வீசியுள்ளீர்கள். விடியல் வரத்தான் செய்யும், விரைவில். நன்றி, வருகைக்கும், விரைவிற்கும்.
தெளிவான பார்வை...
//தொடரும் இதன் இரண்டாவது பகுதியில், பொறுப்பற்ற மனிதர்களின் செயல்களால் விளைகின்ற இன்னல்கள் காண்போம்.///
எதிர்பார்ப்புடன் சார்...
உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது, நண்பரே.
Post a Comment