அள்ள அள்ள குறையாத ஆக்கிரமிப்புகள். எத்தனை முறை எடுத்தாலும், எள்ளளவும் பயமின்றி, பிள்ளை விளையாட்டு போல், புதுசு புதுசாய் , புற்றீசலாய் புறப்பட்டு வரும்.
முன்னறிவிப்பு ஏதுமின்றி, முழு மூச்சாய் இறங்கி, அள்ளியே எடுத்து வந்தோம், பயணிகள் செல்லும் பாதை எல்லாம், பதவிசாய் வைத்திருந்த ஆக்கிரமிப்புகளை. பத்திரமாய், பாதுகாப்பாய் வைக்காமல், திறந்த நிலையில், ஈக்கள் மொய்க்க எதுவாய், இழி நிலையில் வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களும், எம் பார்வையில் தப்பவில்லை.
பயணிகளுக்கான ஓய்வு அறை கூட , ஆக்கிரமிப்பாளர்களின் அநியாயங்களில் இருந்து தப்பவில்லை. பயணிகள் ஓய்வு அறையில், பழைய புத்தகங்களை பரப்பி வைத்திருந்தான், பாதகன் ஒருவன். ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது அள்ளுபவை எல்லாம், உரக்கிடங்கிற்கு மட்டுமே உறுதியாய் அனுப்பப்படும். கல்வி கண் திறக்கும் புத்தகங்கள் என்பதால்,அவற்றை மட்டும் பாதுகாப்பாய் பத்திரபடுத்தினோம்.
அவரவர் கடமையை, அவரவர் உணரும் வரை, ஆக்கிரமிப்புகள் தொடர்கதைதான்.
அவரவர் கடமையை, அவரவர் உணரும் வரை, ஆக்கிரமிப்புகள் தொடர்கதைதான்.

7 comments:
அவரவர் கடமையை, அவரவர் உணரும் வரை, ஆக்கிரமிப்புகள் தொடர்கதைதான். //
உண்மையான வார்த்தைகள்! திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது தானே!
நன்றி. நல்லொதொரு வார்த்தை சொல்லிவிட்டீர்கள்.
முயற்சிக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்
பாராட்டப்படவேண்டிய உன்னதப்பணிகள்.ம
தேவையான நடவடிக்கை....தொடர்ந்து செய்யுங்கள்!
நம்பிக்கைகள் மெய்படும், நண்பரே.
Post a Comment