இந்த பகுதியில் நெல்லையின் சிறப்புச் செய்திகளை என் பார்வையில் அன்றாடம் தரலாமென்று எண்ணித் துவக்கியுள்ளேன். இந்த முயற்சி வெற்றிபெற, உங்கள் ஊக்கம், ஆக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை.
சரி, இன்றைய செய்திக்கு வருவோம்.
மாற்றுத்திறனாளிகளின் மகத்தான முயற்சி: மரம் நடுதல் மகத்தான சேவை. அந்த மகத்தான பணியை மாற்றுத்திறனாளிகள் மூலம், கின்னஸில் இடம் பெற, 19.01.2011ல், மாவட்டம் முழுவதும் 450 இடங்களில், ஒரு மணி நேரத்தில், முப்பத்தைந்தாயிரம் மரக்கன்றுகள் நடத்திட்டமிட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் அதன் செயலர் அட்வகேட் திரு.பிரபாகரன்,இரட்சண்ய சேனை, ஈஷா பவுண்டேசன், சுஸ்லான் பவுண்டேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் திரு.மனோகர் ஆகியோரின் முயற்சி, இன்றைய நெல்லையின் இனிப்பான செய்தி.

6 comments:
நெல்லையை பற்றிய இனிப்பான செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள ஆவல்.... சந்தோஷமாக இருக்கிறது.
மகிழ்ச்சியான செய்தி.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
ஒரு வேண்டுகோள்:
நாளைய நிகழ்ச்சி என நாளை/ இந்த வாரம் வரும் நாட்களில் நடைபெறும் நிகழ்சிகளை தெரிவித்தல், பங்கு பெற உதவியாக இருக்கும்,
நெல்லை செய்திகளுக்கு நன்றி நெல்லை என்றாலே சிறப்பு தான். சொல்லுங்கள்.
நல்ல செய்திகளை நாளும் தருகிறேன். முடிந்தவரை முன்னரே தர முயற்சிக்கிறேன், நண்பர்களே. நன்றி.
நெல்லையைப் பற்றி என்றாலே வாசிக்க வைக்கும்.
அதுவும் இன்றைய நெல்லை என்ன என்பதில் என்னைப்போல் பலருக்கும் ஆர்வம் இருக்கும் தொடருங்கள்.நாங்கள் உங்களைத் தொடர்ந்து தொடற்கிறோம்.ஆர்வத்துடன் காத்திருக்கும்
[1947வரை] நெல்லைவாசி
Post a Comment