இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 5 February, 2011

பட்டுகுட்டி பிறந்த நாள் -பதிவர்கள் அறிமுகம் ஆன நாள்.

                                                   கடந்த இரு நாட்களுக்கு முன்பு, அம்பாசமுத்திரத்தில் பதிவர்  ராஜகோபால்  (எறும்பு) மகளின் முதல் பிறந்த நாள் விழா. இவர் பிறந்தது உயர்- திருநெல்வேலி(இப்படித்தான் இவர் பதிவில் ஊர் பெயரை குறிப்பிட்டு இருப்பார்), வளர்ந்தது அம்பாசமுத்திரம், தற்போதைய இருப்பு சென்னை மாநகரம்.

                                                                          
                                       சென்னையிலிருந்து வரும்போதே, அவருடன் பலா பட்டறை சங்கரும் வந்திருந்தார். முதல் முறையாக, சக பதிவருடன் நேரடி அறிமுகம். இரு தினங்கள், அலுவலக பணியிலிருந்து விடுதலை. ஊர் சென்றவுடன், பதிவர் துபாய் ராஜாவும் எங்களுடன் இணைந்தார்.                                                   
உணவுஉலகம் (சங்கர்), பலா பட்டறை சங்கர் &எறும்பு (ராஜகோபால்)
                                    கேட்கவா வேண்டும், குஷியான பகிர்வுகள், கொண்டாட்டங்கள். பதிவுலகம் பற்றி பல வித நுணுக்கங்களை, பலா பட்டறை சங்கர் எனக்கு கற்று தந்தார். மணிமுத்தாறு, சிங்கம்பட்டி ஜமீன் பங்களா, குற்றாலம் என சுற்றி வந்தார் சங்கர். அவரது அடுத்த பதிவில்  அவற்றை எதிர்பார்க்கலாம்.துபாய் ராஜாவின் சிரிப்பில் சில்லறைகள் சிதறும். (பார்க்க படம்.)இவர் இந்தியாவில் இருந்தால், எழுதுவதில்லை. பணி நிமித்தம் பல நாடுகள் செல்லும் போது, தினம் எழுதாமல் தூங்குவதுமில்லை. ஒவ்வொரு பதிவரிடமும் ஒவ்வொரு பழக்கங்கள். 
                                     நாங்கள் சென்ற கோவிலில் உள்ள நாகலிங்க மரம் இது. அதில் பூத்த மலர் ஒன்றை 'சாம்சங் '  கண்களால் "க்ளிக் "கி  கீழே கொடுத்துள்ளேன்.
 
                                       அதன் விசேஷம் என்னவென்றால், நடுவில் "லிங்கம்" போன்ற ஒரு அமைப்பும், அதை சுற்றி  "நாகம்" குடை பிடித்தது போன்றும் இருப்பதால், அதனை "நாகலிங்க பூ" என்று அழைகின்றனர். 
                                      சென்னைக்கு ரயிலேறுவதற்கு  முன்,  நெல்லையின் தனி  சிறப்பான, அல்வா தயரிக்குமிடத்தை, அழைத்து சென்று காண்பித்தேன். மீதி விஷயங்களை, பலா பட்டறை சங்கரின் பார்வையில் காணலாம். 
துபாய் ராஜா, சங்கரலிங்கம், ராஜகோபால்,சிவாஞ்சலி &சங்கர்.    

                                  வருடம் ஒரு முறையேனும், வரவேண்டும் இத்தகைய சந்திப்புகள். பதிவர்  உலகில்  பரவ வேண்டும், நட்பின் தித்திப்புகள்.                                
Follow FOODNELLAI on Twitter

5 comments:

Chitra said...

Our Birthday wishes to Sivanjali.

இந்த இடுகையை வாசிக்கும் போது, ஒரு உற்சாகப் பெருவெள்ளம்.... படங்களும் அசத்துது.... Looks like you all had great time! :-)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது! நீங்ககூட அசத்தலா எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள் சார்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சென்னைக்கு ரயிலேறுவதற்கு முன், நெல்லையின் தனி சிறப்பான, அல்வா தயரிக்குமிடத்தை, அழைத்து சென்று காண்பித்தேன்.//

ஸோ நெல்லைக்கு வந்தா அல்வா சாப்டலாம்!

Anonymous said...

அருமையான சந்திப்பா இருந்திருக்கும் போலிருக்கே நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

உணவு உலகம் said...

@@ சித்ரா//
சித்ரா, கடந்த புதன் மற்றும் வியாழ கிழமைகளில் தங்களுக்கு புரை ஏறியிருக்க வேண்டுமே! பதிவர் களை பற்றி பேசும்போது,தங்களை பற்றியும் பேச்சு வந்தது. சங்கர் மற்றும் ராஜகோபால் ஆகியோரின் கருத்துக்களை, நீங்கள் நெல்லை வரும்போது நேரில் சொல்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.
- - - - - - - - - - - - - - - - -
@@மாதி யோசி//
நெல்லைக்கு வாங்க, கண்டிப்பா, அல்வா (வாங்கி) கொடுப்போம்.நன்றி
- - - - - - - - - - - - - - - - -
@@ஆர்.கே.சதீஷ்குமார்//
தங்களின் முதல் வரவு , மகிழ்ச்சி . அடிக்கடி கருத்துக்களை பதிய வாருங்கள். நன்றி.
- - - - - - - - - - - - - - - - -