இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 9 February, 2011

கலர்கலராய் கலக்கல் கலப்படங்கள்

                                   செயற்கை வண்ணங்கள் -நாம் தயார் செய்யும் உணவு பொருட்களுக்கு, தனித்தன்மை கொடுப்பதற்கு,  தாராளமாய் உணவில் சேர்க்கபடுபவை. (உ-ம்: பர்பி என்றால் - மஞ்சள் குளித்திருக்கும், ஜாங்கிரி என்றால் -ஆரஞ்சு நிறம் அப்பியிருக்கும்)

                                    இயற்கை வண்ணங்களை  பொறுத்த வரை:                                        
                                     Beta-carotene 
                                     Chlorophyll
                                     Riboflavin
                                     Caramel
                                     Annato
                                     Saffron
                                     Curcumin(or Turmeric)
                        போன்றவை உணவு பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டவை.  
                                    செற்கை ண்ங்ளை பொறுத்தவரை:
                                     சிகப்பு நிறம் தர   - Ponceau 4R, Carmoisine&Erythrosine
                                     மஞ்சள் நிறம் தர- Tartrazine, Sunset Yellow
                                     நீல நிறம் தர        - Indigo Carmine, Brilliant Blue
                                     பச்சை நிறம் தர  - Fast Green FCF
ஆகியவையும், உணவு கலப்பட தடை சட்டம் மற்றும் விதிகளின்படி, உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்படுபவை. 
                                  விதிகளின் கீழ், அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்கள், இனிப்பு பண்டங்களில் ஒரு குறிப்பிட்ட அளவே பயன்படுத்தலாம். (100 PPM). ஆனால், பேருந்து நிலையங்களிலும், பெரிய லாலா கடைகளிலும் ஷோ கேஸில்  நம்மை வா வாவென அழைக்கும் இனிப்புகள் அனைத்தும், அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாகவே அரிதாரம் பூசிக்கொண்டிருக்கும்.  அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாய் பயன்படுத்தினாலும், உணவு கலப்பட தடை சட்டத்தின்படி குற்றமாகவே கருதப்படும். இனிப்பு வகை பண்டங்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட செயற்கை  வண்ணங்கள் கூட, கார வகை உணவுகளில் பயன்படுத்த அனுமதியில்லை.
                                  சற்றே சிந்தித்து பாருங்கள்: லாலா கடைகளில், வெள்ளை நிறத்தில் ஜாங்கிரியும், ஆந்திரா முறுக்கும் இருக்குமானால்,  வியாபாரம் விறுவிறுப்பாய் இருக்குமா? நாமெல்லாம் விரும்பித்தான் வாங்குவோமா? கலர்களை கண்டு நாம் ஏமாறுகிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
                                    என்ன செய்யும் இந்த செயற்கை  வண்ணங்கள்?:
                                வயிற்று பாதிப்பில் ஆரம்பிக்கும்.  ஜீரண மண்டல உறுப்புகள் , சிறிது சிறிதாய் பாதிக்கும். முடிவில், வயிற்று  புற்று நோய்க்கும் வழி வகுக்கும். கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டு,கலப்படம் செய்வோர்,நீதியின் முன் நிறுத்தப்பட்டால், நிச்சயம் தண்டனை உண்டு. ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாதம் மெய்க்காவல் தண்டனையும் வழங்க உணவு கலப்பட தடை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
                                  செயற்கை  நிறங்கள் உணவில் சேர்த்தால்,  மனித உயிர்களை மாய்த்துவிடும். வேண்டாமே இந்த செயற்கை வண்ணங்கள்!                                               பாலில் கலப்படம் பற்றி சொல்ல, பல தகவல்கள் என்வசம் உண்டு. செய்தித்தாள் மட்டும் உங்கள் பார்வைக்கு இப்போது. மீண்டும் ஒருமுறை, விரிவான தகவல்களுடன், பாலில் கலப்படம் பற்றி பார்ப்போம். 
Follow FOODNELLAI on Twitter

4 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Colourful and useful presentation.everyone should know all these.

NARAYANAN said...

Congratulation, Sir
By S.Narayanan B.Sc.,
Sanitary Officer
Theni Municipality

Chitra said...

இதை வாசித்த பின், அடுத்த முறை கடைகளில் பலகாரங்கள் வாங்கும் போது கவனமாக இருக்கத்தான் தோன்றுகிறது.

உணவு உலகம் said...

1.நன்றி நாராயணனுக்கு. நீங்கள் "Sanitary Officer" ஆனா பின் பதிவு செய்யும் முதல் பின்னூட்டம். வாழ்த்துக்கள்.
2.நிச்சயமாக!