அலோபதி மருந்துகள் சிலவற்றை, அரசு தடை செய்துள்ளது.
வலி நிவாரணிகளையும், எதிர் உயிரி ( ஆண்டி பயோடிக்) மருந்துகளையும் எடுத்து கொள்வதற்கு, பதிவு பெற்ற மருத்துவரின் பரிந்துரை அவசியம். ஆனால், நடப்பதென்ன?
வலியும், காய்ச்சலும் வரும்போதெல்லாம், நாமே மருந்துகடைகளுக்கு சென்று,வகைதொகை இன்றி,மருந்து மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துகிறோம்.
அதன் விளைவுகள் , உடனடியாக நமக்கு தெரிய வருமென்று சொல்ல முடியாது. பல மருந்துகள் பக்க விளைவுகள் ஏற்படுத்துபவை. குறிப்பாக சொல்லபோனால், மேலை நாடுகள் பலவற்றில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பல, இங்குள்ள மருந்து கடைகளில், எவ்வித கட்டுப்பாடுமின்றி விற்பனை செய்யபடுகின்றது.
சொல்லபோனால், வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் பல, இந்தியர்களை இளிச்சவாயர்கள் என்றெண்ணி , இங்கே குவிக்கபடுகின்றன! அந்த வகையில், அண்மையில் நான் அறிந்த செய்தியொன்று:
பன்னிரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் 'நிமுசிலிட்' (nimesulide) மற்றும் அது தொடர்பான கலவைகள், 'cisapride' மற்றும் அது கலந்த கலவை, 'Phenylpropanolamine ' மற்றும் அது சார்ந்த கலவை, மனித தொப்புள்கொடி நஞ்சு சாறு( human placenta extract ), 'sibutramine ' மற்றும் 'R- sibutramine' ஆகிய ஆறு வகை அலோபதி மருந்துகளை அரசாங்கம் விற்பதற்கு தடை விதித்துள்ளது.
என்ன விளைவுகள் ஏற்படுத்தும்?
Nimesulide - கல்லீரல் பாதிப்பு.
Cisapride - இதய கோளாறுகள்.
Phenylpropanolamine - Stroke வர வாய்ப்பளிகிறது.
Sibutramine - மாரடைப்பு.
வேண்டுமா விலை கொடுத்து வினையை வாங்கும் செயல்கள்? விழிப்புடன் இருந்தால், வேதனைகள் தவிர்க்கலாம்!

30 comments:
வழக்கம் போலவே எல்லோருக்கும் உபயோகமான தகவலைச் சொல்லி இருக்கிறீர்கள்! மிக்க நன்றி சார்! சமூகத்தில் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் பணி சிறக்கட்டும்!!
என்றுன் உங்கள் நல்லாதரவுடன்,
ரஜீவன். நன்றி.
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இங்கே சர்வசாதரணமாக எழுதித் தரப்படுகிறது
அது மாறவேண்டும்
உண்மைதான். உரைத்ததற்கு நன்றி.
பயனுள்ள பதிவுகள் தரும் அண்ணனுக்கு நன்றிகள்...
நன்றி சார்
http://en.wikipedia.org/wiki/Phenylpropanolamine
Please read this info whenever you have time.
இந்த விழிப்புணர்வு பதிவு, பலரை சென்றடைய வேண்டும், அண்ணா!
//வேடந்தாங்கல் கருன் said://
ஆசிரியர் = குரு. குருவிடம் நாங்கள் மாணவர்கள். ஆகவே, அண்ணா என்றழைத்து, உங்கள் வயதை குறைத்து கொள்ளவேண்டாம்.
வருகைக்கும், வாழ்துக்கும் நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் மேலும் எழுதவைக்கும்.
//அசோக் said://
தொடர்ந்து வாருங்கள்.
//சித்ரா said://
எந்த விஷயமானாலும், அதற்கு தொடர்புடைய செய்தி சொல்வது உங்கள் பாணி, சகோ. சென்று பார்த்து சொல்கிறேன். தகவலுக்கு நன்றி.
ofcourse sir, self medication and using banned drugs are slow-suicide methods. thanks for such nice post.
Thank You for your visit. Expecting ur new post in ur blog?
நம் நாட்டில்தான் மருந்துக் கடையில் கேட்டு மருந்து வாங்கிச் சாப்பிடும் வழக்கம் இருக்கிறது.
தேவையான பதிவு!
சரியான விழிப்புணர்வு பதிவு நன்றி மக்கா....
சாப்பாடு ஆபீசருன்னா சும்மாவா செம அலசல்....
மக்கள்தான் உஷாராய் இருக்க வேண்டும்...
//சென்னை பித்தன் said://
என்றுதான் மாறுமோ,இந்த பழக்கம்!
//Manoநாஞ்சில்Mano said://
நாஞ்சில் குறும்பு?
ஓட்ட வட நாராயணன் said...
வழக்கம் போலவே எல்லோருக்கும் உபயோகமான தகவலைச் சொல்லி இருக்கிறீர்கள்! மிக்க நன்றி சார்! சமூகத்தில் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்கள் பணி சிறக்கட்டும்!!
அதே
Thank You Jana.
கண்டிப்பாக எல்லோரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்..
பகிர்வுக்கு நன்றி..
கொஞ்சம் தாமதம் இருந்தாலும் வந்துட்டேன்..
வாழ்த்துகளும் வாக்குகளும்..
வருகை தாமதமானாலும், வந்தது மகிழ்ச்சியே!வந்ததால் மகிழ்வது நானல்லவோ!
தொடரட்டும் தங்கள் வழிகாட்டுதல்.
நன்றி சக்தி.
sir
Diclofenac sodium and paracetamol,tramadal and CPM ithellam narambu thalarchiya undaakum thaanae ?
ithu athigapadiyaa PUZHANGUTHU ...,
Melum neenga sonna nimesulide ellam regulara with prescription noda tharanga ..,
Yes, You are correct.
naamthaan vizhiththukkollavendum.
நம்ம விழிப்புணர்வு என்பது : பெரிய விபத்து ஏற்பட்டப்பின் அதைப்பற்றி ஒரு வாரம் விழிப்புணர்வு பிரச்சாரம், பின்னர் வழக்கம் போல் கோயில் பிரசாதம்.
உங்களைப்போல் தொடர்ந்து விழிப்புணர்வு வேண்டும்.
நம்ம விழிப்புணர்வு என்பது : பெரிய விபத்து ஏற்பட்டப்பின் அதைப்பற்றி ஒரு வாரம் விழிப்புணர்வு பிரச்சாரம், பின்னர் வழக்கம் போல் கோயில் பிரசாதம்.
உங்களைப்போல் தொடர்ந்து விழிப்புணர்வு வேண்டும்.
இனியாவது படித்து...பார்த்து கருத்துரை வழங்க... எனக்கு புத்தி வந்து விட்டது.
அவசியமான தகவல் சார்!
Post a Comment