இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday, 4 March, 2011

பேரீச்சம்பழத்தில் பெருகும் கலப்படம்!

                       
                                பேரீச்சம்பழம்- இரும்புச்சத்தை இனிதே தந்து, இரத்த விருத்திக்கு வித்திடும்.
         மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா பகுதியில் தோன்றிய பனைமரம் போன்ற ஒரு மரம், பின்னர் உலகின் பிற பகுதிகளிலும்  பயிரிடப்பட்டது.

         பேரீச்சம்பழம் மரங்கள் 82 அடி உயரம் வரை வளரும். மரத்தின் உச்சியில் படர்ந்துள்ள இலைகளின் அடியில் கொத்துக் கொத்தாய் காய்த்து தொங்கும். பழம் பழுக்கத்துவங்கும்போது, மஞ்சள் நிறத்துடனிருக்கும். நன்கு பழுத்த பின்னரே, பழம் மிருதுவாகும். அவற்றைப்பறித்து, பதப்படுத்தி விற்பனைக்குச் சந்தைப்படுத்துகின்றனர். பறித்த பழங்கள், குளிர்சாதன நிலையில் இரு வாரங்கள் வரை கெட்டுப்போகாமலிருக்கும். பதப்படுத்திய பழங்களை நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
பழங்களை எப்படி பார்த்து வாங்குவது?:
         பேரீச்சம்பழத்தின் நிறம் செழுமையாக இருக்கவேண்டும். காய்ந்த பழங்களும், உப்புப் பொரிந்தார்போலுள்ள பழங்களும் தவிர்க்கப்படவேண்டியவை.
சத்துக்கள்: (100 கிராமில்)
சக்தி                        :280 கிலோ கலோரிகள்.
காh;போஹைட்ரேட்          : 75 கிராம்.
இனிப்பு                      : 63 கிராம்.
நாh;ச்சத்து                    :  8 கிராம்.
கொழுப்பு                     : 0.4 கிராம்.
புரதம்                        : 2.5 கிராம்.
நீh;ச்சத்து                     : 21 கிராம்.
உயிh;ச்சத்து-சி                : 0.4 மி.கி.
         
பேரீச்சம்பழ உணவு: இதனை உணவாகவும் உண்ணலாம். மருந்தாகவும் உண்ணலாம். நாம் அன்றாடம் உண்ணும் பண்டங்களில், பேரீச்சம்பழத்தை பல விதங்களில் கலந்து உண்ணலாம். தேனில் ஊறிய பேரீச்சம்பழம், உடலில் இரும்புச்சத்தை உருவாக்கி, இரத்த விருத்திக்கும் வழிவகுக்கும். நைஜீரியாவில், பீரில்(BEER) பேரீச்சம்பழத்தையும், மிளகையும் போட்டு அருந்தினால், பீரினால் உருவாகும் நச்சுத்தன்மை குறையுமென்று நம்புகின்றனர். பேரீச்சம்பழ ரசத்தை, பண்டிகை நாட்களில், போதையற்ற பானமாக, சில இஸ்லாம் நாடுகளில் பயன்படுத்துகின்றனர். இளம் பேரிச்சை இலைகளும், குருத்துப் பூக்களும் கூட உணவாகப்பயன்படுத்தப்படுகின்றன. பெண் பூக்களே எடை அதிகம்.
மருத்துவ குணங்கள்:பேரீச்சம்பழத்திலுள்ள டேனின்(Tanin) எனும் சத்து, அவற்றிற்கு நம் வயிற்றுக் குடல்களை சுத்தம் செய்யும் குணத்தினை அளித்துள்ளது. பேரீச்சம்பழக்கொட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் டிகாக்ஷன், தொண்டை தொற்றுக்களையும்,அதனால் வரும் காய்ச்சலையும் குணப்படுத்த வல்லது. பேரிச்ச மரங்களைக்கீறி விட்டு, அதிலிருந்து வெளியாகும் பிசினை, வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரக நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகின்றனர். வேர்கள் பல்வலிக்கு அருமருந்தாகும். 
             
கலப்படம் காண்பது எப்படி?: இத்தகைய மருத்துவ குணங்கள் வாய்ந்த பேரீச்சம்பழத்தை பாக்கட்களில் அடைத்து விற்பனை செய்கின்றனர். அவ்வாறு, பாக்கட்களில் பொதியும்போது, அந்த பாக்கட்கள் மீது, பாக்கிங் செய்த தேதி, பாட்ச் எண்.,எந்த தேதி வரை பயன்படுத்தலாம், சைவ வகை உணவுக்குறியீடு, தயாரிப்பாளாரின் முழு விலாசம், விலை விபரம் கண்டிப்பாக அச்சிடப்படவேண்டும். அவ்வாறு தேவையான விபரங்கள் அச்சிடப்படவில்லையென்றால், அந்த பாக்கட்கள், உணவுக்கலப்படத்தடைச்சட்டம் மற்றும் விதிகளின் கீழ், தப்புக்குறியடப்பட்டதெனக் கருதப்படும். பேரீச்சம்பழத்தில் கலப்படம் என்றால், பழத்தை பளபளப்பாகக் காட்ட அதன்மீது தடவப்படும் தாது எண்ணெயே. பெட்ரோலியக் கழிவாகக் கிடைக்கும் தாது எண்ணெயை, பேரீச்சம்பழங்கள் மீது தடவினால், பழங்கள் பள பளவென பகட்டாய் இருக்கும். தொடர்ந்து தாது எண்ணெய் தடவிய பழங்களைத்தின்றால், வயிற்றுப்புற்று வரும் வாய்ப்பு அதிகம். பூச்சி அரித்த பழங்களும், அழகான பாக்கட்களில், பகட்டாகப் பேக்கிங் செய்து வரும். 
அட்வைஸ்:எனவே, அடுத்த முறை பேரீச்சம்பழ பாக்கட்கள் வாங்கும்போது, பார்த்து வாங்குங்க! பள பளப்பை நம்பி ஏமாறாதீங்க!
சுய புராணம்: கடந்த 18.08.2006 அன்று, நெல்லை டவுண் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டோம். ஒரு பலசரக்கு கடையில் விற்பனை செய்த பேரீச்சம்பழ பாக்கட்களில் கலப்படம் செய்யப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில், அதனை உணவு மாதிhpயாக எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். 
         எடுத்து அனுப்பிய அன்று மாலையே வந்தது பிரச்சனை. அவர் ஒரு அரசியல் பிரபலத்திற்கு வேண்டியவரென்பதால், அடிப்பொடிகள் சிலர் பண்ணிய அலம்பல்கள் ஆயிரம். நாளையே, உன்னை இந்த ஊரிலிருந்து மாற்றி, தண்ணீர் இல்லா காட்டிற்குத் தூக்கியடிப்போம் என்பன போன்ற மிரட்டல்கள் நேரிலும், போனிலும். நான் சொன்னேன், நாளை காலை நாமிருவரும் உயிருடன் துயில் எழுவோமா என்பதற்கு உத்தரவாதம் கொடுங்கள், அதன் பின்னர், இந்த ஊரை விட்டு மாற்றுவது குறித்து அஞ்சலாம் என்றேன். 
          நாட்கள் நகர்ந்தன. ஆய்வறிக்கை வந்தது. விதிகளுக்குப் புறம்பாக, அந்த பேரீச்சம்பழ பாக்கட்கள் தயாரிக்கப்பட்டிருந்ததால், வழக்கு தொடர்ந்தேன். தீர்ப்பும் வந்தது. ஆனால், நான் இன்னமும் அதே ஊரில்தான் பணியாற்றுகிறேன். விந்தை மனிதர்கள். வியப்பாகத்தான் இருக்கின்றது. இவர்கள் வீழ் என்றால் வீழ போவதுமில்லை, வாழ் என்றால் வாழ போவதுமில்லை!  
                                         
                                 
Follow FOODNELLAI on Twitter

45 comments:

வேடந்தாங்கல் - கருன் said...

இதிலேயும் கலப்படமா... இனி பழம் வாங்கும் போதெல்லாம் இந்த ஞாபகம் வரும்..

பகிரிவுக்கு நன்றி

# கவிதை வீதி # சௌந்தர் said...

நான் கூட கேள்வி பட்டிருக்கேன்.. எண்ணை தடவிதான் பளபளப்பாக்கி விப்பாங்களாம்..

நல்ல தகவல்
வாழ்த்துக்கள்..

FOOD said...

நீங்கள் அறிந்தவைதான். வருகைக்கு நன்றி.

ஓட்ட வட நாராயணன் said...

இந்தக் கலப்படப் பிரச்னைக்கு முடிவே இல்லையா? உங்கள் பதிவு நல்லதொரு விழிப்புணர்வு தரும்!

சென்னை பித்தன் said...

பேரீச்சம்பழத்திலும் கலப்படமா!கவனமாக
இருக்க வேண்டியதுதான்.அஞ்சாமல் கடமையைச் செய்த உங்களுக்குப் பாராட்டுக்கள்!

FOOD said...

@ஓட்ட வட நாராயணன் said:
இந்தக் கலப்படப் பிரச்னைக்கு முடிவே இல்லையா? உங்கள் பதிவு நல்லதொரு விழிப்புணர்வு தரும்!//
வாங்க முடிவு கட்டிடலாம்.

FOOD said...

@சென்னை பித்தன் said:
பேரீச்சம்பழத்திலும் கலப்படமா!கவனமாக
இருக்க வேண்டியதுதான்.//
இன்னும் இருக்கு,கலப்படத்தின் பல முகங்கள்.

Vinoth said...

நன்றி...

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான தகவல் மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

ஆபீசருகிட்டே ஜாக்கிரதையா இருங்கப்பு பிடிச்சி உள்ளே தூக்கி போட்ற போறார்....

FOOD said...

@Manoநாஞ்சில் மனோ said:
ஆபீசருகிட்டே ஜாக்கிரதையா இருங்கப்பு பிடிச்சி உள்ளே தூக்கி போட்ற போறார்....//

ஓஹோ, எங்க ஊரு வியாபாரிகளை காப்பாற்ற வாரீகளோ! நேற்றும் கூட கலப்பட பால் விற்றவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் நெல்லையில் விதிக்கப்பட்டுள்ளது.

FOOD said...

@Vinoth said://
வருக, வணக்கங்களும்,நன்றிகளும்,வினோத்.

@Manoநாஞ்சில் மனோ said://
நன்றி,மனோ

Jana said...

தண்ணீரிலேயே கலப்படம் செய்யும் உலகத்தில், எல்லாவ்றிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், பேரிச்சையும் விதிவிலக்கில்லை. வாஸ்தவம்தான்.

திவா said...

இதே போல் தைரியமாக பணியாற்ற வாழ்த்துகள்!

எல் கே said...

நல்ல தகவல் நன்றி எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் lab க்கு எல்லாம் அனுப்பி சோதனை செய்ததாக கூறினீர்கள் எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் இருக்கிறது தயவுசெய்து தீர்த்து வையுங்கள் . LION பேரிச்சம்பழம் நல்லது தானா அதை சோதனை செய்து பார்த்தது உண்டா எனக்கு கூறுங்களே மறந்து விடாதீர்

mohan said...

Good Service.
Congratulation.

sakthi said...

தன்னிலை அறியாத தற்குறிகள் தண்டனையிலிருந்து தப்பமுடியாமல் செய்துள்ள தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Chitra said...

எடுத்து அனுப்பிய அன்று மாலையே வந்தது பிரச்சனை. அவர் ஒரு அரசியல் பிரபலத்திற்கு வேண்டியவரென்பதால், அடிப்பொடிகள் சிலர் பண்ணிய அலம்பல்கள் ஆயிரம். நாளையே, உன்னை இந்த ஊரிலிருந்து மாற்றி, தண்ணீர் இல்லா காட்டிற்குத் தூக்கியடிப்போம் என்பன போன்ற மிரட்டல்கள் நேரிலும், போனிலும்.


.......இப்படி எல்லாம் கடமையை செய்ய விடாமல் செய்யுறது, சினிமாவில் மட்டும் தானா? நிஜ வாழ்க்கையில் இருக்குமா என்று நினைச்சேன்.... உங்கள் பதிவில் பதில் சொல்லிட்டீங்க...
தொடர்ந்து கடமையை செய்ய, இறைவன் அருள் உண்டு. அசத்துங்க!

FOOD said...

Jana said:தண்ணீரிலேயே கலப்படம் செய்யும் உலகத்தில், எல்லாவ்றிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், பேரிச்சையும் விதிவிலக்கில்லை. வாஸ்தவம்தான்//
ஆம், வாஸ்தவம்தான். எல்லா பொருள்களிலும் எப்படியும் கலப்படம் செய்வதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கும்.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் முறியடித்து விடலாம்,நண்பரே!

FOOD said...

//திவா said:
இதே போல் தைரியமாக பணியாற்ற வாழ்த்துகள்//
முதல் வருகை,நன்றி.

FOOD said...

எல் கே said:
எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் இருக்கிறது தயவுசெய்து தீர்த்து வையுங்கள் . LION பேரிச்சம்பழம் நல்லது தானா அதை சோதனை செய்து பார்த்தது உண்டா எனக்கு கூறுங்களே மறந்து விடாதீர்//
ஒவ்வொரு மாதமும் ஒரு உணவு ஆய்வாளர், சந்தேகப்படும் நான்கு உணவு பொருட்களை எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்புவோம். தனிப்பட்ட கம்பெனியின் தயாரிப்பு பற்றி கேட்டால், வலைப்பூவில் சொல்ல இயலாது, சொல்லவும் கூடாது. சென்னையில்தானே இருக்கின்றீர்கள், தயவு செய்து செல்லில்/ மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள். நிறைய பேசலாம். நன்றி நண்பரே.

FOOD said...

//Mohan said:
Good service//
Thanks a lot.

FOOD said...

Sakthi said:
தன்னிலை அறியாத தற்குறிகள் தண்டனையிலிருந்து தப்பமுடியாமல் செய்துள்ள தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்//
தங்கள் அனுபவங்களையும் அனுப்பி வையுங்கள். பகிர்ந்து கொள்ளலாம். நன்றி, சக்தி.

FOOD said...

Chitra said:
.......இப்படி எல்லாம் கடமையை செய்ய விடாமல் செய்யுறது, சினிமாவில் மட்டும் தானா? நிஜ வாழ்க்கையில் இருக்குமா என்று நினைச்சேன்.... உங்கள் பதிவில் பதில் சொல்லிட்டீங்க...
தொடர்ந்து கடமையை செய்ய, இறைவன் அருள் உண்டு//
தங்கையின் வாழ்த்துக்களுடன் தவறாமல் தொடரும் இந்த பணி.

ஆனந்தி.. said...

ஏற்கனவே இப்படி என்னை தடவி விக்கும் கூட்டம் கேள்வி பட்டு இருக்கேன் சார்...ரோடு இல் தள்ளுவண்டியில் இந்த மாதிரி கலப்பட பள பளா பழங்களை பார்த்து இருக்கேன்...எனக்கும் எல் கே க்கு இருக்கும் சந்தேகம் இருக்கு...எல் கே சொன்ன கம்பெனி பழங்களை தான் என் பையனுக்கு கொடுக்கிறேன்...ஆனால் நீங்கள் கடமையில் கருத்தூன்றி இருப்பது மிக்க மகிழ்வு ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்கள் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு ஒரு சல்யூட் சார்.......!

baln said...

hospitel la operation pannum pothu ..kaayam seekiram kunamaaga ..perichampalam vaithu kettuvaarkal ..athai kuraintha vilaikku vaangi .kaluvi viyabaram seikiraargal

FOOD said...

//ஆனந்தி said:
சார்...ரோடு இல் தள்ளுவண்டியில் இந்த மாதிரி கலப்பட பள பளா பழங்களை பார்த்து இருக்கேன்...எனக்கும் எல் கே க்கு இருக்கும் சந்தேகம் இருக்கு...எல் கே சொன்ன கம்பெனி பழங்களை தான் என் பையனுக்கு கொடுக்கிறேன்...//
சில விஷயங்கள் பப்ளிக்கா சொல்ல முடியாது, சகோ. எல்.கே. என் மெயிலில் கேட்டிருந்தார். பதில் சொல்லிவிட்டேன். எனவே, தனிப்பட்ட கம்பனி குறித்த விபரங்களுக்கு, மெயிலில் பதில் தருகிறேன்.நன்றி.

FOOD said...

//உங்கள் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு ஒரு சல்யூட் சார்.......!//
உங்கள் நல்லாதரவுடன் தொடரும். வருகைக்கும், வாழ்த்துக்கும்
நன்றி.

FOOD said...

baln said:
hospitel la operation pannum pothu ..kaayam seekiram kunamaaga ..perichampalam vaithu kettuvaarkal ..athai kuraintha vilaikku vaangi .kaluvi viyabaram seikiraargal//
முதல் வருகை,நன்றி.
நான் கேள்விப்பட்டதில்லை. நெல்லையை சார்ந்தவர்தானே, அப்படி ஒரு கடையை சொல்லுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுக்கலாம். ரகசியங்கள் பாதுகாக்கப்படும். மாணவர் மனது வைத்தால், மாற்றங்கள் நிச்சயம்.

Kousalya said...

இப்பதான் போஸ்ட் பார்த்தேன்...ரொம்ப தெளிவா இருக்கு எல்லா விவரமும்...அசந்து விட்டேன்...உங்களின் அதிரடி நடவடிக்கை எனக்கு நன்றாகவே தெரியும்...

உங்களின் தைரியமும், மக்களுக்கு நல்லது செய்யணும் என்கிற எண்ணமும் எத்தனை பாராட்டினாலும் தகும்.


தொடரட்டும் உங்களின் இந்த சீரிய பணி இன்று போல் என்றும்.....

FOOD said...

நாங்கள் என்றாவது ஒரு நாள் செய்வது, இத்தகைய ரெய்டுகள். நீங்கள் "எங்கே செல்கிறது ... பதிவுலகம்? http://kousalya2010.blogspot.com/ செம ரெய்டு.

ராஜ ராஜ ராஜன் said...

அருமையான, பயனுள்ள பதிவு. எவ்வளவு சிரத்தை எடுத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ரொம்பச் சிறப்பு...!

asiya omar said...

தொடர்ந்து பணியில் வெற்றி நடை போட வாழ்த்துக்கள் சார்.பேரீச்சை பற்றிய விள்க்கமான பகிர்வு அருமை.

FOOD said...

ராஜ ராஜ ராஜன் said:
அருமையான, பயனுள்ள பதிவு. எவ்வளவு சிரத்தை எடுத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ரொம்பச் சிறப்பு...!
முதல் வருகை. நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

FOOD said...

asiya omar said:
தொடர்ந்து பணியில் வெற்றி நடை போட வாழ்த்துக்கள் சார்.பேரீச்சை பற்றிய விள்க்கமான பகிர்வு அருமை.//
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

தமிழ் ஈட்டி! said...

பிழை:

//போதையற்ற பாணமாக//

பானமாக

..பாத்து எழுதுங்க சகோ!

♔ம.தி.சுதா♔ said...

////பேரீச்சம்பழத்தின் நிறம் செழுமையாக இருக்கவேண்டும்.////

இங்கு அப்படியான பழம் பெறுவது மிகவும் சிரமம் சகோதரம் அப்படி இருந்தாலும் சாதாரண பழத்தை விட 2 மடங்கு விலை அதிகம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

FOOD said...

மதி சுதா said:
இங்கு அப்படியான பழம் பெறுவது மிகவும் சிரமம் சகோதரம் அப்படி இருந்தாலும் சாதாரண பழத்தை விட 2 மடங்கு விலை அதிகம்...//
சிறிது விலை அதிகம் கொடுத்தாவது, சிறந்ததையே வாங்குவோம். நன்றி.

FOOD said...

தமிழ் ஈட்டி said:
பிழை:
//போதையற்ற பாணமாக//
பானமாக
..பாத்து எழுதுங்க சகோ!//

திருத்தி கொண்டேன் சகோ, சுட்டிகாட்டியதற்கு நன்றி.

கே. ஆர்.விஜயன் said...

எல்லோரும் தெரிந்திருக்க வேண்டிய அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

மைதீன் said...

கலப்படம் இல்லாத பொருளே இல்லை என்ற சூழல் உருவாகும் போல் உள்ளது.இதை மாற்ற மக்களிடையே விழிப்புணர்வு தேவை. அதை திறம்பட செய்து வரும் உங்களுக்கு பாராட்டுக்கள். கடமை தவறாத உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது.

FOOD said...

கே. ஆர் .விஜயன் said://

வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி

FOOD said...

மைதீன் said:
முதல் வருகை. நன்றி.

siva said...

ஓஹோ, எங்க ஊரு வியாபாரிகளை காப்பாற்ற வாரீகளோ! நேற்றும் கூட கலப்பட பால் விற்றவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை .தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் நெல்லையில் விதிக்கப்பட்டுள்ளது.//

பாஸ் நீங்க நம்ம ஊருக்கு வந்த்ருங்க..
neriya peru thanniyilathan baala oothi vikkiranuga..