இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 11 March, 2011

மாற்றங்களை நோக்கி!

                                 கடந்த மாதம் ஒரு திருமண விழா. மதங்களைக் கடந்து, பல் சமய பெரியோர்களும் மணமக்களை ஆசிர்வதிக்க வந்திருந்தனர். சொல்லப்போனால், உற்றார், உறவினரைவிட, பல் சமய பெரியோர்களே முதலில் மணமக்களை ஆசிர்வதிக்க அழைக்கப்பட்டனர்.இது இப்போதைய கலாச்சார  மாற்றம். 

                                   இந்து மத விழாக்களில், அனைத்து மத பெரியோர்களும் கலந்து கொண்டு  மகிழ்விக்கின்றனர். ஒரு மதத்தினர் நடத்தும் விழாவில், மற்ற மதத்தினர் மகிழ்வோடு பங்கேற்று மாற்றங்கள் கொண்டுவருகின்றனர். மதங்களாலும், இனங்களாலும் பிரிவுண்ட மக்கள் மனங்களால் இணைகின்றனர். செல்லும் வழிகள்தான் வேறு வேறு என்றாலும், போய் சேருமிடம் ஒரே இடம்தான் என்பதை உணர தொடங்கியுள்ளனர்.
             நேற்றும், அத்தகைய ஒரு விழா. நெல்லை, சிருங்கேரி மடம் பக்தர்கள் சார்பாக, சிருங்கேரி  சாரதா பீடம், பாரதி தீர்த்த மகா சுவாமிகளின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழா.
·                             மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக சிறப்பு பள்ளி துவக்க,   புதிய கட்டிட அடிக்கல் நாட்டப்பட்டது.(இப்பகுதியில் இது முதல் முயற்சி)
                                  விழாவில், ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக சேவையாற்றிய 61  பேர் கௌரவிக்கப்பட்டு, நற்சான்றிதழ் வழங்கப்ப்டடது. 
ஆன்மிகம்:  பேச்சாளர் இளம்பிறை மணிமாறன், நெல்லையப்பர் கோயில்   அறங்காவலர் செல்லையா, செயல் அலுவலர் சண்முக தெய்வநாயகம்
மருத்துவம்: மகத்தான சேவை புரிந்த மருத்துவர்கள்:
மரு.ராமலட்சுமி (மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவ மனைக்கு அடுத்துஅதிகம் குழந்தைகள் பிறப்பது இந்த மருத்துவமனையிலேயே. கைராசி    மற்றும் பில் குறைவு
மரு.A . சுப்ரமணியன்( குழந்தைகள் நல மருத்துவத்தில் குஷியான சேவை)
மரு.ஆக்னஸ்(மகப்பேறு மருத்துவம்
அரவிந்த் ராமகிருஷ்ணன்(இலவச கண்     மருத்துவ சேவை மற்றும் கண்தான விழிப்புணர்வு ), 
மரு.கோதண்டராமராவ்.
கல்வி: சங்கர்நகர்  ஜெயந்திரா பள்ளி முதல்வர்  உஷாராமன், தாளாளர் ஜெயந்திரன்மணி, சின்மயா பள்ளி முதல்வர் ரேணுகா சங்கரநாரயணன்,
 ஆசிரிர் ராதாகிருஷ்ணன்,
வணிகம்: வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ர்.சுப்பிரமணியன் ஆரெம்கேவி  பார்ட்னர் தியாகராஜன், சொனா வெங்கடாசலம்.
சமூகசேவை: சரணாலயம் பொறுப்பாளர் ஃபாதர் மோக்சம்(வழி தவறிய,
 வாழ்வை இழந்த குழந்தைகளுக்காக இயங்கும்  இந்த சரணாலயம்), ரத்ததான ஊக்குநர் பாட்ஷா
உணவு ஆய்வாளர்  சங்கரலிங்கம்
சிஸ்டர் மேகி
லுர்துதாஸ்
வக்கீல் (ரெட் கிராஸ்) பிரபாகரன்  மற்றும் பலர்.
                               தனிப்பட்ட மதத்தின் சார்பில் நடக்கும் விழா மேடையில் சங்கரானந்தா சுவாமிகள் அமர்ந்திருக்க, கௌரவிக்கப்பட்டவர்ள் அனைத்து சமுதாய, மத, இன பிரமுகர்கள்
                               சற்றே சிந்தித்தேன். மனித சமுதாயம் மாற்றங்களை நோக்கி பயணிக்கின்றது. இது ஆரோக்கியமான பயணமாக அமைய அனைவரும் பிரார்த்திப்போம். நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளே என்ற எண்ணம் தழைத்தோங்கும் என்றே  சிந்தித்தால், நாளை உலகம் நம்மை வாழ்த்தும்.  

Follow FOODNELLAI on Twitter

30 comments:

சக்தி கல்வி மையம் said...

ஆகா.. நான்தான் பஸ்ட்ன்னு நினைக்கிறேன்... இருங்க படிச்சுட்டு வருகிறேன்.

சக்தி கல்வி மையம் said...

ஆமாம் இப்போது தேவையான மாற்றம்... வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

நெல்லை பற்றிய செய்தி,பகிர்வுக்கு நன்றி.

உணவு உலகம் said...

வேடந்தாங்கல் - கருன் said...
ஆகா.. நான்தான் பஸ்ட்ன்னு நினைக்கிறேன்... இருங்க படிச்சுட்டு வருகிறேன்.//
முதல் வருகைக்கு முதல் வணக்கம் ஆசிரியரே!
உங்கள் BLOG சரியாகி விட்டதா? உடனே PASSWORD மாத்துங்கா சார்.(REQUEST)

உணவு உலகம் said...

asiya omar said...
நெல்லை பற்றிய செய்தி,பகிர்வுக்கு நன்றி.//
உங்கள் வருகைக்கு நன்றி,சகோ

Chitra said...

நெல்லையை குறித்த இன்றைய செய்திகளை தொடர்வதற்கு நன்றி.

மொக்கராசா said...

தற்செயலாக உங்க பதிவை பார்க்க நேரிட்டது, உண்மையில் உங்கள் எல்லா பதிவும் மிகவும் அருமை

இனி அடிக்கடி வருவேன்..

சென்னை பித்தன் said...

//இது ஆரோக்கியமான பயணமாக அமைய அனைவரும் பிரார்த்திப்போம்//.
தேவையான பயணம்!தொடர வேண்டுவோம்!
பகிர்வுக்கு நன்றி!

Pranavam Ravikumar said...

நல்ல பதிவு..நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...

//சற்றே சிந்தித்தேன். மனித சமுதாயம் மாற்றங்களை நோக்கி பயணிக்கின்றது. இது ஆரோக்கியமான பயணமாக அமைய அனைவரும் பிரார்த்திப்போம். நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளே என்ற எண்ணம் தழைத்தோங்கும் என்றே சிந்தித்தால், நாளை உலகம் நம்மை வாழ்த்தும்.//

நல்லதொரு பயணம், நானும் வாழ்த்துகிறேன் இது தொடர....

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர்.......
வாழ்த்துகள் ஆபீசர்....

தமிழ் ஈட்டி! said...

/கலாசார //
கலாச்சார

//மகபேறு //
மகப்பேறு

பிழை இன்றி எழுதுங்கள் சகோ.

உணவு உலகம் said...

Chitra said...
நெல்லையை குறித்த இன்றைய செய்திகளை தொடர்வதற்கு நன்றி.//
நெல்லை செய்தியை தினசரி பகிர ஆசைதான். தேர்தல் பணியும் சேர்ந்து விட்டதால், சற்றே இயலவில்லை. எனினும், முயற்சி செய்கின்றேன். நன்றி.

உணவு உலகம் said...

மொக்கராசா said...
தற்செயலாக உங்க பதிவை பார்க்க நேரிட்டது, உண்மையில் உங்கள் எல்லா பதிவும் மிகவும் அருமை
இனி அடிக்கடி வருவேன்..//
வாங்க ராசா, முதல் வருகை. மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வந்து கருத்துக்களை தாங்க.

உணவு உலகம் said...

சென்னை பித்தன் said...
தேவையான பயணம்!தொடர வேண்டுவோம்!
பகிர்வுக்கு நன்றி!//
தங்கள் கண்கள் நலமா? வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

உணவு உலகம் said...

//Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
நல்ல பதிவு..நன்றி!//
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
1.நல்லதொரு பயணம், நானும் வாழ்த்துகிறேன் இது தொடர....
2.சூப்பர்.......
வாழ்த்துகள் ஆபீசர்....//
1.வாங்க மனோ வாங்க! ஜப்பானில் சுனாமி தாக்கம் அதிகமா இருக்கே? நீங்கள் இருக்குமிடத்தில் பதிப்பு ஏதும் இருக்கிறதா?
2.நன்றி, நண்பரே!

உணவு உலகம் said...

//தமிழ் ஈட்டி! said...
பிழை இன்றி எழுதுங்கள் சகோ.//
திருத்தி கொண்டேன், சகோ.நன்றி.

இளங்கோ said...

தங்களுக்கு வாழ்த்துக்கள்

உணவு உலகம் said...

//இளங்கோ said...
தங்களுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி இளங்கோ. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும்.

ராம்ஜி_யாஹூ said...

வாழ்த்துக்கள் , மிகவும் மகிழ்வான செய்தி
இன்னும் மிகப் பெரிய விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்
, ஆசைப் படுகிறேன்

உணவு உலகம் said...

Blogger ராம்ஜி_யாஹூ said...
வாழ்த்துக்கள் , மிகவும் மகிழ்வான செய்தி
இன்னும் மிகப் பெரிய விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்
, ஆசைப் படுகிறேன்//
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.

Unknown said...

நல்ல பதிவு சார், உங்கள் தளத்தை இப்பொழுதுதான் பார்த்தேன், அருமையான பதிவுகள், நானும் தொடர்கிறேன்..

sakthi said...

ஆரோக்கியமான பயணத்தை தொடரும் இந்த சமூகத்திற்கு ஆரோக்கியமான தகவல்களை தரும் தங்களுக்கு கிடைத்துள்ள பாராட்டுகள் மகிழ்ச்சியை தந்தது .நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
மனித சமுதாயம் மாற்றங்களை நோக்கி பயணிக்கின்றது. இது ஆரோக்கியமான பயணமாக அமைய அனைவரும் பிரார்த்திப்போம்///

கண்டிப்பாக மற்றங்கள் நிகழ்ந்தே தீரும்..
நானும் பிராத்திக்கிறேன்..

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..

உணவு உலகம் said...

//இரவு வானம் said...
நல்ல பதிவு சார், உங்கள் தளத்தை இப்பொழுதுதான் பார்த்தேன், அருமையான பதிவுகள், நானும் தொடர்கிறேன்..//
முதல் வருகை. வணக்கம். தொடர்ந்து வா(பா)ருங்கள்.

உணவு உலகம் said...

//sakthi said...
ஆரோக்கியமான பயணத்தை தொடரும் இந்த சமூகத்திற்கு ஆரோக்கியமான தகவல்களை தரும் தங்களுக்கு கிடைத்துள்ள பாராட்டுகள் மகிழ்ச்சியை தந்தது .நன்றி//
நன்றி சக்தி. தங்கள் ஊக்கம் ஆக்கம் அளிக்கும்.

உணவு உலகம் said...

//Blogger # கவிதை வீதி # சௌந்தர் said... மனித சமுதாயம் மாற்றங்களை நோக்கி பயணிக்கின்றது. இது ஆரோக்கியமான பயணமாக அமைய அனைவரும் பிரார்த்திப்போம்///
கண்டிப்பாக மற்றங்கள் நிகழ்ந்தே தீரும்..
நானும் பிராத்திக்கிறேன்..
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..//
மகிழ்ச்சி மகிழ்ச்சி. மகிழ்ச்சி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் சார்!

உணவு உலகம் said...

வாங்க நண்பரே! தங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சி. வாழ்த்திற்கு நன்றி.