இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Sunday, 13 March, 2011

இன்று திருநெல்வேலி எழுச்சி நாள்.

                     
    இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் (அப்போதைய ஒருங்கிணைந்த)நெல்லை மாவட்டத்திற்கு என்று தனியிடமே உண்டு. வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன்,பூலித்தேவர்சுந்தரலிங்கம், பாரதியார், வீரவாஞ்சிநாதன் போன்ற பல தியாக சீலர்கள் விடுதலை போராட்ட வரலாற்றில் போற்றப்படுபவர்கள். 

           இவர்கள் மூட்டிய விடுதலை வேட்கையெனும் தீ, நெல்லைப்பகுதியில், கொழுந்து விட்டு எரிந்தது. அதன் எதிரொலியாய், சுதேசி இயக்க உணர்வு சுறுசுறுவென்று பரவியது. இந்த நேரத்தில்தான், வ.உ.சி., தூத்துக்குடி-கொழும்பு துறைமுகங்களுக்கிடையே சுதேசி கப்பல் கம்பெனியைத் துவக்கி, வாடகைக்கப்பல்களை இயக்கினார். கம்பெனியை நடத்த, தமிழகம் முழுவதும் வ.உ.சி. உள்ளிட்ட தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிதி திரட்டினர்.
                         ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார்  ஆகியோர் சுதேசி இயக்க பிரசராக்கூட்டங்கள் நடத்தினர். அன்னிய பொருட்களைப் பகிஷ்கரிக்க மக்கள் மத்தியில் வேண்டினர். சுதேசி உணர்வு மிகுந்த குதிரை வண்டி,சலவை மற்றும் சவரத் தொழிலாளிகள் ஆங்கிலேயர்களுக்குப் பணிபுரிய மறுத்தனர். சுதேசியத்திற்கு எதிராய் பேசிய வக்கீல் ஒருவருக்கு பாதி சவரம் பண்ணிய நிலையில் சிகையலங்கார கலைஞர் விட்டுச்சென்ற பரபரப்பு சம்பவங்களெல்லாம் நடந்தேறியது. இதன் விளைவாக, நெல்லை மக்கள் மீது ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு விரோத மனப்பாண்மை தலை தூக்கியது. 
                                 விடுதலைப்போராட்ட வீரர் விபின் சந்திரபால் 08.03.1908ல் விடுதலையானர். அதனை நெல்லை மாவட்டத்தினார்.தாமிரபரணி நதிக்கரையில் கூட்டம் நடத்தி சுயராஜ்ய நாளாக கொண்டாடினர்.துhத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு நெல்லை கூட்டத்திற்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார்ஆகியோர், 12.03.1908ல் கைது செய்யப்பட்டனர். அதன் எதிரொலியாய், நெல்லையில் பெரும் கலவரம் மூண்டது. நெல்லை ரயில் நிலையப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர்  திரண்டு, அருகிலிருந்த இந்து கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களை அழைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.எம்.எஸ். கல்லுரிக்குள் நுழைந்த போராட்டக்குழுவினர் உதவிப்பேராசிரியார் ஒருவரை அடித்து உதைத்தனர். நெல்லை நகராட்சி அலுவலகக் கட்டிட சுவர்இடிக்கப்பட்டது. ஆவணங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. அத்துடன் அருகிலிருந்த போஸ்ட் ஆபிஸ்,மற்றும்  மண்ணெண்ணெய் கிடங்கு, காவல் நிலையம், நீதி மன்ற கட்டடிடம் சேதப்படுத்தப்பட்டது. 
   
                        கலவரத்தைக்கட்டுப்படுத்த காவல் துறையினர், துப்பாக்கி சூடு நடத்தினர். கோவில் பூசாரி, முஸ்லீம் இளைஞர்  உட்பட நான்கு பேர் துப்பாக்கி சூட்டில் பலியாயினர். அடக்குமுறையை ஏவியே, ஆங்கிலேயே ஆட்சியாளார்கள், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ‘திருநெல்வேலி எழுச்சிபிரிட்டன் பார்லிமெண்டிலும் எதிரொலித்தது. விரிவான விவாதம் நடத்தினர். சென்னை, சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதைய நெல்லை நகர்மன்றத்தில், அலுவலகக்கட்டிடம் சேதப்படுத்தியதைக் குறிப்பிட்டு, ‘திருநெல்வேலி எழுச்சியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்ற திருநெல்வேலி எழுச்சி’, வரலாற்றில் இடம் பெற்ற, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள். இதுவே, பிற்காலத்தில் பல போராட்டங்களுக்கும் உந்து சக்தியாய் இருந்ததென்பது பல சரித்திர பேராசிரியர்களின் கூற்றாகும். 
                         இத்தனை சிறப்பு வாய்ந்த திருநெல்வேலி எழுச்சிநாள் இன்று. வருடங்கள் 103 ஆகிவிட்டாலும் வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று. வாருங்கள், நம் குழந்தைகளுக்கும் தேசபக்தியூட்ட எடுத்துச்சொல்லலாம்.
            குறிப்பு: அப்போதைய நெல்லை நகர்மன்றத்தில், ‘திருநெல்வேலி எழுச்சியைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சமீபத்திய நெல்லை மாநகராட்சிக்கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டு, ‘திருநெல்வேலிஎழுச்சியை  பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
                நன்றி: என்னை எழுத வைத்த 'தினமலர்' செய்திக்கு.
Follow FOODNELLAI on Twitter

59 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

IN FIRST,I PAY MY RESPECT TO THOSE WHO SACRIFIED THEIR SOUL FOR THIS COUNTRY FROM YOUR DISTRICT.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I AM REALLY HAPPY WHILE READ SUCH A GREAT HISTORY THAT YOU HAVE.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

YOU HAVE WRITTEN THIS ARTICLE WITH HIGHLY ARRANGED WORDS AND PHRASES.IT MAKES ME WONDER.......!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I NEVER VISITED YOUR CITY AND THAMILNADU TOO.BUT NOW I FEEL HAPPY TO READ AND HEAR ABOUT YOUR CITY AS YOU CONTINUELY WRITE ABOUT IT.

MANO நாஞ்சில் மனோ said...

// இத்தனை சிறப்பு வாய்ந்த ‘திருநெல்வேலி எழுச்சி’ நாள் இன்று. வருடங்கள் 103 ஆகிவிட்டாலும் வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று. வாருங்கள், நம் குழந்தைகளுக்கும் தேசபக்தியூட்ட எடுத்துச்சொல்லலாம்.//

கண்டிப்பாக நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் கட்டாயமாக....

MANO நாஞ்சில் மனோ said...

இந்த தியாகிகளுக்கு எல்லாம் நாஞ்சில் மனோவின் ராயல் சல்யூட்.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I WISH TO MENTION SOME WORTHFUL LYRICS OF BHARATHIYAR IN THIS GREAT DAY.BUT NOW I AM UNABLE TO WRITE IN THAMIL.

SORRY FOR IT.

ராம்ஜி_யாஹூ said...

காலையில் உங்கள் பதிவு பார்க்கத் தவறி விட்டேன்
இப்போது தான் பார்த்தேன்

தியாகிகளுக்கு நன்றிகள் வணக்கங்கள்

Kousalya said...

ரொம்ப பெருமையாக மகிழ்ச்சியாக இருக்கிறது...

'திருநெல்வேலி எழுச்சி நாள்' பற்றிய அர்த்தத்தை நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது மிக அவசியம்.

//பிற்காலத்தில் பல போராட்டங்களுக்கும் உந்து சக்தியாய் இருந்ததென்பது பல சரித்திர பேராசிரியர்களின் கூற்றாகும்.//

இதைவிட பெருமை வேற என்ன இருக்கமுடியும்...

சந்தோசமாக நம் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வோம்.

இதனை பற்றி பதிவிட்ட உங்களுக்கு என் நன்றிகள் பல.

FOOD said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
IN FIRST,I PAY MY RESPECT TO THOSE WHO SACRIFIED THEIR SOUL FOR THIS COUNTRY FROM YOUR DISTRICT.//
தியாகிகள் வணக்கம்- நன்றி., ரஜீவன்.
சாரி, விடுமுறை நாளென்பதால், ப்ளாக்கில் பதிவை போட்டுவிட்டு, சிறிது ஓய்வெடுத்து விட்டேன். அதனால் காலதாமதமான பதில்.

FOOD said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
I AM REALLY HAPPY WHILE READ SUCH A GREAT HISTORY THAT YOU HAVE.//
சரித்திரங்கள் சாட்சியாகின்றன. நன்றி.

FOOD said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

YOU HAVE WRITTEN THIS ARTICLE WITH HIGHLY ARRANGED WORDS AND PHRASES.IT MAKES ME WONDER.......!//
தப்பிருந்தா, தமிழ் ஈட்டியா பாயஞ்சிருங்க பாஸ்! அதுக்காக இப்படியெல்லாம் கலாய்க்காதீங்க!:-)))

FOOD said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I NEVER VISITED YOUR CITY AND THAMILNADU TOO.BUT NOW I FEEL HAPPY TO READ AND HEAR ABOUT YOUR CITY AS YOU CONTINUELY WRITE ABOUT IT.//
தங்கள் வருகை எங்களை மகிழ்விக்கும் . வாருங்கள் ஒருமுறை தமிழ்நாட்டு பக்கம். ஜூனில் கூட நெல்லை பதிவர்கள் சந்திப்பு ஒன்று நடத்த சகோதரி சித்ரா தொடர்ந்து பேசிவருகிறார். வருகிறீர்களா?

FOOD said...

MANO நாஞ்சில் மனோ said...
// இத்தனை சிறப்பு வாய்ந்த ‘திருநெல்வேலி எழுச்சி’ நாள் இன்று. வருடங்கள் 103 ஆகிவிட்டாலும் வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று. வாருங்கள், நம் குழந்தைகளுக்கும் தேசபக்தியூட்ட எடுத்துச்சொல்லலாம்.//
கண்டிப்பாக நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் கட்டாயமாக....//

சந்தேகமின்றி, மனோ.

FOOD said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
I WISH TO MENTION SOME WORTHFUL LYRICS OF BHARATHIYAR IN THIS GREAT DAY.BUT NOW I AM UNABLE TO WRITE IN THAMIL.
SORRY FOR IT.//
பரவாஇல்லை, நாளைக்கு வந்து தாங்க.

FOOD said...

//ராம்ஜி_யாஹூ said...
காலையில் உங்கள் பதிவு பார்க்கத் தவறி விட்டேன்
இப்போது தான் பார்த்தேன்
தியாகிகளுக்கு நன்றிகள் வணக்கங்கள்//
நன்றி. தங்கள் வருகையே மகிழ்ச்சியளிப்பதுதான்.

FOOD said...

//Kousalya said...
ரொம்ப பெருமையாக மகிழ்ச்சியாக இருக்கிறது...
இதைவிட பெருமை வேற என்ன இருக்கமுடியும்...
சந்தோசமாக நம் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வோம்.
இதனை பற்றி பதிவிட்ட உங்களுக்கு என் நன்றிகள் பல.//
நன்றி சகோதரி. உங்கள் வலை பூக்களில், தொடர்ந்து பதிவுகளை பார்க்க ஆவலாக இருக்கின்றேன். எழுதுங்கள், என்றும் உற்சாகத்துடன்.

பாரத்... பாரதி... said...

திருநெல்வேலி வீரமும், விவேகமும் விளைஞ்ச மண்...

பாரத்... பாரதி... said...

//திருநெல்வேலி எழுச்சி நாள்' //


நெல்லை தந்த விடுதலை வீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்...

FOOD said...

பாரத்... பாரதி... said...
திருநெல்வேலி வீரமும், விவேகமும் விளைஞ்ச மண்...
நெல்லை தந்த விடுதலை வீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்...//
வாங்க பாரதியாரே! முதல் வருகை. நன்றி. விடுதலை எழுச்சி உங்களை என் வலைபூவிற்குள் வரவழைத்ததில் மகிழ்ச்சி.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

செய்தி புதுசு (எனக்கு)! அருமையான பகிர்வு! :))

FOOD said...

வாங்க ஷங்கர்.

எல் கே said...

பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். அந்த வீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்

FOOD said...

வருகைக்கு நன்றி, சார்

சென்னை பித்தன் said...

தியாகத்தில் மட்டுமல்ல,தமிழ் இலக்கியத்திலும் சிறந்த பலரைத்தந்தது நெல்லை மண்! --கு.அழ்கிரிசாமி,கி.ராஜ நாராயணன் போல. சல்யூட்!

FOOD said...

சென்னை பித்தன் said...
தியாகத்தில் மட்டுமல்ல,தமிழ் இலக்கியத்திலும் சிறந்த பலரைத்தந்தது நெல்லை மண்! --கு.அழ்கிரிசாமி,கி.ராஜ நாராயணன் போல. சல்யூட்!//
தங்கள் வருகையால் கூடுதல் தகவல்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி.

! சிவகுமார் ! said...

நிறைய விவரங்களை திரட்டி தந்ததற்கு நன்றி!

FOOD said...

முதல் வருகை. மகிழ்ச்சி.

asiya omar said...

பகிர்வுக்கு மிக்க நன்றி..இப்ப தான் இந்த எழுச்சி நாள் பற்றி தெரிய வந்தது.

FOOD said...

வருகைக்கு நன்றி, சகோ.

தாராபுரத்தான் said...

பாராட்ட வேண்டிய பதிவுங்க..

FOOD said...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

//வருடங்கள் 103 ஆகிவிட்டாலும் வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று. வாருங்கள், நம் குழந்தைகளுக்கும் தேசபக்தியூட்ட எடுத்துச்சொல்லலாம்//

நிச்சயமா சொல்லப்படவேண்டிய ஒன்று..

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்.. குட் போஸ்ட்.. கடைசில செய்திக்கு நன்றி சொன்னது அருமை..

FOOD said...

அமைதிச்சாரல் said...
//வருடங்கள் 103 ஆகிவிட்டாலும் வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று. வாருங்கள், நம் குழந்தைகளுக்கும் தேசபக்தியூட்ட எடுத்துச்சொல்லலாம்//
நிச்சயமா சொல்லப்படவேண்டிய ஒன்று..//

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

FOOD said...

சி.பி.செந்தில்குமார் said...
சாரி ஃபார் லேட்.. குட் போஸ்ட்.. கடைசில செய்திக்கு நன்றி சொன்னது அருமை..//
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் செய்தியா கொடுப்பதில் உங்கள் பாணி தனிதான்.

கோகிலவாணி கார்த்திகேயன் said...

மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். நன்றி.

FOOD said...

முதல் வருகை. நன்றி.

டக்கால்டி said...

நான் கொஞ்சம் லேட்டு...பகிர்வுக்கு நன்றி...இது போல தொடர்ந்து நம் வீர வரலாற்றை பறை சாற்றுங்கள்...

FOOD said...

வருகைக்கு நன்றி. தொடர்ந்து எழுதுகிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

புதுசா.. எதுவும் போடலையா? போஸ்ட்..?

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Good one..!

FOOD said...

சி.பி.செந்தில்குமார் said...
புதுசா.. எதுவும் போடலையா? போஸ்ட்..?
மன்னிக்கவும். இந்த மாதம் முழுவதும் இப்படித்தான். பதிவு எழுத நேரம் கிடைப்பது அரிது. தேர்தல் வேலை பின்னி எடுக்கிறது. எனினும், முடிந்த அளவு எழுதுகிறேன் . பொருத்தருள்க.

FOOD said...

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
Good one..!//
Thank You very much.

ரமணி said...

ஒரு அருமையான கட்டுரையோடுதான் உங்களை வாசிக்கத்துவங்கியிருக்கிறேன். பெருமைமிகு நெல்லை, சிறப்பான் பதிவு.

FOOD said...

முதல் வருகை. நன்றி. தொடர்ந்து வாருங்கள்

prabakaran p said...

'திருநெல்வேலி எழுச்சி நாள்' பற்றிய அர்த்தத்தை நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பது மிக அவசியம எனும் கௌசல்யாவின் கருத்துடன் ஒத்துப்போகிறேன்

வேடந்தாங்கல் - கருன் said...

தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்

பெண்ணெழுத்தைபற்றிய ஒரு தொடர் எழுதியுள்ளேன் படித்துவிட்டு கருத்தினை பகிருங்கள்..http://niroodai.blogspot.com/2011/03/blog-post_17.html

FOOD said...

//வேடந்தாங்கல் - கருன் said...
தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.//
காலதாமதமானாலும், உங்கள் வருகையே என்னை மகிழ்விக்கும். நன்றி, நண்பரே!

FOOD said...

//அன்புடன் மலிக்கா said...
நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்
பெண்ணெழுத்தைபற்றிய ஒரு தொடர் எழுதியுள்ளேன் படித்துவிட்டு கருத்தினை பகிருங்கள்.//
தங்கள் வருகைக்கு நன்றி.
சென்று பார்த்தேன். அருமை. வாழ்த்தும், ஓட்டுக்களும்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பதிவு ரொம்ப நல்லாருக்கு அடிக்கடி வரேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நிறைய பழைய தகவல்களை தெரிந்துகொண்டேன்..அபூவமான செய்திகள் கலக்குங்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தலைவர்கள் பற்றிய செய்திகள் நாட்டுக்கு உழைத்த நல்லோர் பற்றி தெரிந்து கொள்ளும்போதே உடல் சிலிர்க்கிறது

ஆர்.கே.சதீஷ்குமார் said...

உங்கள வலைப்பூவை என் தளத்தில் இணைத்துள்ளேன்

விக்கி உலகம் said...

நெல்லை தந்த விடுதலை வீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்

FOOD said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
1. பதிவு ரொம்ப நல்லாருக்கு அடிக்கடி வரேன்
2.நிறைய பழைய தகவல்களை தெரிந்துகொண்டேன்..அபூவமான செய்திகள் கலக்குங்க
3.தலைவர்கள் பற்றிய செய்திகள் நாட்டுக்கு உழைத்த நல்லோர் பற்றி தெரிந்து கொள்ளும்போதே உடல் சிலிர்க்கிறது
4.உங்கள வலைப்பூவை என் தளத்தில் இணைத்துள்ளேன்//

1.வாங்க வாங்க!
2.வாழ்த்துக்களுக்கு நன்றி.
3.உங்கள் வாழ்த்துக்களால், என் மனம் சிலிர்க்கிறது.
4.மிக்க மகிழ்ச்சி,நண்பரே.

FOOD said...

//விக்கி உலகம் said...
நெல்லை தந்த விடுதலை வீரர்களுக்கு எமது வீர வணக்கங்கள்//
முதல் வருகை. நன்றி, நண்பரே! தங்கள் தளம் சென்று பார்த்து வந்தேன். நன்றாய் இருக்கிறது.

Part Time Jobs said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com