இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 21 March, 2011

குஷியான கோடை கொண்டாட்டம்-1

                             கோடைக்காலத்தை குஷியாகக் கொண்டாடலாம். 
               எப்படிங்க? இதப்படிங்க.
          கோடை என்றாலே கொளுத்தும் வெயில்தான் பாடாய்ப்படுத்தும். வெயிலின் விளைவாய் வியர்வை மிக அதிகம் வெளியேறும். வியர்வை வெளியேறுவது கூட, நம் உடலின் வெப்ப நிலையை சீராக வைத்திருக்கவே. வியர்வை அதிக அளவில் வெளியேறினால், வியர்வை நாற்றம் என்ற வில்லங்கமும் கூட வரும். வியர்வை என்பது நம் உடலிலிருந்து வெளியேறும் வெறும் நீர் மட்டுமல்ல. நம் உடலிலுள்ள தண்ணீருடன் சில தாதுக்களும் சேர்ந்தே வெளியேறும். இந்த தாது உப்புக்கள் நம் தோலின் மேல் பகுதியில் படிவதால் பலருக்கு தோல் அரிப்பு ஏற்படுகிறது. இதுவே, சிலருக்கு தோல் அலர்ஜியாகவும் மாறலாம்.
என்ன செய்யலாம்-எப்படித் தடுக்கலாம்?
 
      இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். 
·               வெளியில் செல்லும்போது, குடை கொண்டு செல்லலாம், கண்ணாடி
                      தொப்பி அணியலாம்.  

·                             முடிந்த வரை பருத்தி ஆடைகள் அணியலாம். 

·                             வெயிலில் வெளியிடங்களுக்குச் சென்று வந்த பின், வியர்வை உலர்ந்த   பின், குளர்ந்த நீரினால், உடலில் வெயில் பட்ட இடங்களைக்  கழுவ வேண்டும்.
·                                   காலை, மாலை இரு வேளை குளிப்பது நலம்.

·                                  இளநீர், நுங்கு, பதநீர்  இனிமை தரும்.
               எலுமிச்சம் பழ சாறு எடுத்து, சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நீருடன் கலந்து பருகலாம். இது வெயிலில் இழந்த உப்பு சத்துக்களை மீட்க உதவும்.
 
·                                   இவை மட்டுமல்ல, தர்பூசணி, பழச்சாறுகள் மற்றும் மோர், போன்றவை வெயிலின் தாக்கத்திலிருந்து விடுதலையளிக்கும்.

·                                  வெயில் காலங்களில் வெளில் செல்லும்போதும், வீட்டிற்குத் திரும்பிய பின்னரும், குளிர்பானங்களை அருந்துவதை விட, சூடான தேநீர், காபி போன்றவை அருந்தலாம்.
·                                சுவைத்துப்பாருங்கள், சூடான பானங்களே, வெயில் காலங்களில் உடனடியாக தாகம் தணிக்கும். 
              தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக வெப்பம் உள்ள இடங்களில் குடிக்கும் நீரின் அளவை இன்னும் அதிகபடுத்தி கொள்ளலாம். 
·                                கோடை காலத்தில், சிறு நீரை அடக்கக்கூடாது. வியர்வை வழியே அதிக நீரிழப்பு ஏற்படுவதால், சிறு நீரின் அடர்த்தி அதிகமிருக்கும். அடக்கினால் சிறுநீர், அமிலமாக மாறிவிடும் அபாயமும் உண்டு.
            வீட்டின் ஜன்னல் கதவுகளை இரவில் திறந்து வைததிருந்தால்(பாதுகாப்பும் முக்கியமுங்க)  அறை குளுமையடையும்.
               ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நாம் தூங்கும் அறையில் வைததிருந்தால், அந்த பாத்திரத்தில் உள்ள நீர் ஆவியாகி, அறையை குளுமையடைய செய்யும்.
Follow FOODNELLAI on Twitter

42 comments:

சக்தி கல்வி மையம் said...

இந்த டாபிக்க நேத்தே பார்த்தமாதிரி ஞாபகம்...

சக்தி கல்வி மையம் said...

ஞாயிறு வேண்டாம் என விட்டுவிட்டீர்களா?

சக்தி கல்வி மையம் said...

இருங்க படிச்சுட்டு வரேன்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஐடியாக்கள் சூப்பர்! அனைவருக்கும் பயன்படும்! இந்தப் பதிவு பிரபலமடைய வாழ்த்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

usefull tips sir.. கலக்குங்க

சக்தி கல்வி மையம் said...

கோடைக் காலம் வந்துவிட்டதா....
உங்கள் ஆலோசனையை பின்பற்றுகிறேன்..

சக்தி கல்வி மையம் said...

மிகவும் பயனுள்ள பதிவு..

சக்தி கல்வி மையம் said...

பகிர்வுக்கு நன்றி...

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

usefull tips sir.. கலக்குங்க ---- தம்பி மறுபடியும் ஊருக்கு போய்டீங்களா?

சக்தி கல்வி மையம் said...

9...

சக்தி கல்வி மையம் said...

ஆகா நான் மட்டும் 10....

உணவு உலகம் said...

மன்னிக்கவும், எங்கள் பணி காலை ஆறு மணிக்கே ஆராம்பம். அதனால் பதில் சொல்ல காலதாமதம் ஆகிவிட்டது

உணவு உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
vadaya?//
ஆம் உங்களுக்குத்தான். வடையும் பாயாசமும். எப்படிண்ணே எல்லா பதிவிலும் வடைய வாங்கிறீங்க! உங்கள் சுறுசுறுபிற்கு முன் இந்த பாண்டிய நாடே அடிமை!

உணவு உலகம் said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...
இந்த டாபிக்க நேத்தே பார்த்தமாதிரி ஞாபகம்...
* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஞாயிறு வேண்டாம் என விட்டுவிட்டீர்களா?//
அண்ணா சொன்னா சரிதான்.

உணவு உலகம் said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...
இருங்க படிச்சுட்டு வரேன்.
* வேடந்தாங்கல் - கருன் *! said...
மிகவும் பயனுள்ள பதிவு..
உங்கள் வருகையாலும், வாழ்த்துக்களாலும் வளம் பெறுகிறேன். நன்றி.

உணவு உலகம் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஐடியாக்கள் சூப்பர்! அனைவருக்கும் பயன்படும்! இந்தப் பதிவு பிரபலமடைய வாழ்த்துக்கள்!//
நான் வளர்கிறேனே அண்ணா, உங்கள் வாழ்த்துக்களால்!நன்றி.

உணவு உலகம் said...

சி.பி.செந்தில்குமார் said...
usefull tips sir.. கலக்குங்க//
நன்றி, சார். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

உணவு உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கோடைக் காலம் வந்துவிட்டதா....
உங்கள் ஆலோசனையை பின்பற்றுகிறேன்..//
கோடையை சமாளிக்க நாங்கள் வேடந்தாங்கல் வரலாமென்றிருக்கிறோம்.

உணவு உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சி.பி.செந்தில்குமார் said...
usefull tips sir.. கலக்குங்க ---- தம்பி மறுபடியும் ஊருக்கு போய்டீங்களா?//
இல்ல கொஞ்ச தூரம் நடை பயிற்சி + ஏரியா சுற்றி பார்த்தல். வந்து பார்த்தால், வடை கேட்டு விண்ணப்பம். வழங்கிவிட்டேன், நன்றிகளோடு.

உணவு உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
9...
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆகா நான் மட்டும் 10....//
எப்பவுமே நீங்க முதல்வர்தான்.

டக்கால்டி said...

வந்தேண்டா ப்ளாக் காரன் அடடா இப்போ உங்க இடுகை கொஞ்சம் படிக்க போறேன்

டக்கால்டி said...

கோடைக்கு தேவையான பதிவு தான்...பகிர்தலுக்கு நன்றி...அந்த சிறுநீர் மேட்டர் எனக்கு புதிய தகவல் தல...

உணவு உலகம் said...

டக்கால்டி said...
வந்தேண்டா ப்ளாக் காரன் அடடா இப்போ உங்க இடுகை கொஞ்சம் படிக்க போறேன்//
வாங்க வாங்க! தங்கள் வலைபூ மீள கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.

உணவு உலகம் said...

டக்கால்டி said...
கோடைக்கு தேவையான பதிவு தான்...பகிர்தலுக்கு நன்றி...அந்த சிறுநீர் மேட்டர் எனக்கு புதிய தகவல் தல...//
உங்கள் ஆசிகளோடு, அறிந்த தகவல்கள் அவ்வப்போது தருகிறேன்.

டக்கால்டி said...

உங்கள் ஆசிகளோடு, அறிந்த தகவல்கள் அவ்வப்போது தருகிறேன்.
21 March 2011 8:44 AM//

பெரிய வார்த்தை தல...நான் எல்லாம் சும்மா காமெடி பீசு...நீங்க அருமையா எழுதி வரீங்க...தொடர்ந்து கலக்குங்க

உணவு உலகம் said...

டக்கால்டி said...
உங்கள் ஆசிகளோடு, அறிந்த தகவல்கள் அவ்வப்போது தருகிறேன்.
பெரிய வார்த்தை தல...நான் எல்லாம் சும்மா காமெடி பீசு...நீங்க அருமையா எழுதி வரீங்க...தொடர்ந்து கலக்குங்க//
ஹாஸ்யமும் வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒன்றுதான். நகைச்சுவை உணர்வு ஒரு வரப்ரசாதம்.

ரஹீம் கஸ்ஸாலி said...

கொடியை தணிக்க நீங்கள் கூறிய விஷயம் ஜில்லென்று இருந்தது .

உணவு உலகம் said...

நன்றி நண்பரே! கோடை குளுமையாய் கழியட்டும். .

Anonymous said...

ஆஹா வெய்யிலுக்கு இதமான பதிவு

Anonymous said...

தர்பூசணி நினைச்சாலே குள்ளுன்னு இருக்கு

Anonymous said...

கரும்பு சாறு இஞ்சி கலந்து சாப்பிட்டா அமிர்தம்தான்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல மற்றும் இந்த காலத்தில் தேவையான பதிவு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ் மணத்தில் பாப்புலர் ஆக்கியாச்சி..

அடுத்த பதிவுக்கு வருகிறேன்..

உணவு உலகம் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆஹா வெய்யிலுக்கு இதமான பதிவு//
பதமான வரவு. நன்றி.

உணவு உலகம் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
1. தர்பூசணி நினைச்சாலே குள்ளுன்னு இருக்கு
2.கரும்பு சாறு இஞ்சி கலந்து சாப்பிட்டா அமிர்தம்தான்//
அந்த கரும்பு சாரிலும் சாக்கரின் கலப்படம்.கவனம் தேவை.

உணவு உலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
1.நல்ல மற்றும் இந்த காலத்தில் தேவையான பதிவு..
2.வாழ்த்துக்கள்...//
வருகைக்கும் தங்கள் வாழ்த்திற்கும் நன்றி, நண்பரே!

உணவு உலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
தமிழ் மணத்தில் பாப்புலர் ஆக்கியாச்சி..
அடுத்த பதிவுக்கு வருகிறேன்..//
நன்றி, நண்பரே! அடிக்கடி வந்து அன்பு தொல்லை கொடுங்க.

மொக்கராசா said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல
நான் நினைச்ச எல்லாதையும் பயபுள்ளக கமெண்டா போட்டுட்டாங்களே...நான் என்ன எழுதுறன்னு புரியல...

உணவு உலகம் said...

//மொக்கராசா said...
கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல
நான் நினைச்ச எல்லாதையும் பயபுள்ளக கமெண்டா போட்டுட்டாங்களே...நான் என்ன எழுதுறன்னு புரியல...//
வந்ததே சிறப்புதான் ராசா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தேவையான தகவல்கள், சில புதிய தகவல்களும் உள்ளன...! நன்றி சார்!

உணவு உலகம் said...

நன்றி சார். உங்கள் வருகைக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து கருத்து பகிர்வுகளை தாருங்கள்.