தண்ணீர் எப்போ வரும்? தாகம் எப்போ தீரும்?
இன்று உலக தண்ணீர் தினம். வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீரும், ஒரு துண்டு அச்சு வெல்லமும் கொடுத்துத்தான்.
இன்று, ஒரு குடம் தண்ணீரை ஒன்பது மைல் நடந்துதான் கொண்டு வரவேண்டுமென்ற நிலையில், வந்தோர் தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை.
இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை.
ஆற்றிலே குளித்து, அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. வற்றாத ஜீவ நதிகளிலெல்லாம், வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டியப பின் விட்டுச் சென்ற பள்ளங்கள் மட்டுமே, மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன.
வளம் கொடுக்கும் வற்றாத நதிகளெல்லாம், வரன் கொடுத்த சிவன் தலையில் கை வைத்த கதைபோல், ஆலைக்கழிவுகளாலும்., சாலையோர சங்கடங்கள் கலப்பாலும் சாபம் பெற்று, கழிவு நீர்க்கால்வாய்களாய் சடுதியில் சுருங்கிவிட்டன.
இன்று, ஒரு குடம் தண்ணீரை ஒன்பது மைல் நடந்துதான் கொண்டு வரவேண்டுமென்ற நிலையில், வந்தோர் தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை.
இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை.
ஆற்றிலே குளித்து, அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. வற்றாத ஜீவ நதிகளிலெல்லாம், வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டியப பின் விட்டுச் சென்ற பள்ளங்கள் மட்டுமே, மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன.
வளம் கொடுக்கும் வற்றாத நதிகளெல்லாம், வரன் கொடுத்த சிவன் தலையில் கை வைத்த கதைபோல், ஆலைக்கழிவுகளாலும்., சாலையோர சங்கடங்கள் கலப்பாலும் சாபம் பெற்று, கழிவு நீர்க்கால்வாய்களாய் சடுதியில் சுருங்கிவிட்டன.
ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.
என்ன செய்யலாம்?
வீட்டில் வீணாகும் தண்ணீர் குழாய்களை உடனே சரி செய்யலாம்.(ஒரு நாளில், ஒரு குழாயில், ஒரு நொடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் வீணானால், ஓராண்டில் ஏழாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகுதாம்)
இயற்கை வளங்களை சீர் கெடுப்போரை சிந்திக்கவும் வைக்கலாம், சொல்லியும் கேட்காவிட்டால் . . . . . . . . . . . . . . . . . . (உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்)

50 comments:
well said..
அடடே...
படிச்சுட்டு வரேன்..
தண்ணீரைச் சேமிப்போம்..
விழிப்புணர்வு பதிவு
சமுத்ரா said...
well said..//
முதல் வருகை. வாழ்த்திற்கு நன்றி, நண்பரே
இன்றைய உலகில் இப்போது அவசியமான பதிவு..
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அடடே...//
நாளை வாங்கலாம்
(ஒரு நாளில், ஒரு குழாயில், ஒரு நொடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் வீணானால், ஓராண்டில் ஏழாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகுதாம்) ---- கணக்கெள்லாம் கரெக்ட் தலைவரே..
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
1. தண்ணீரைச் சேமிப்போம்..
2.விழிப்புணர்வு பதிவு
உங்கள் மூலமாகவும் இந்த தகவல், விழிப்புணர்வு பரவட்டும். நன்றி, நண்பரே!
வளம் கொடுக்கும் வற்றாத நதிகளெல்லாம், வரன் கொடுத்த சிவன் தலையில் கை வைத்த கதைபோல், ஆலைக்கழிவுகளாலும்., சாலையோர சங்கடங்கள் கலப்பாலும் சாபம் பெற்று, கழிவு நீர்க்கால்வாய்களாய் சடுதியில் சுருங்கிவிட்டன. --- இதிலேயும் அரசியல் விளையாடுது தோழரே..
* வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்றைய உலகில் இப்போது அவசியமான பதிவு..//
ஆமாம்.
சரி, தமிழ்-10 இல் அனைவருக்கும் ஓட்டு போடுகிறேன். என் பதிவை இணைக்கும் பொது, பிழை செய்திதான் வருகிறது. ஏனென்று தெரியவில்லை.
* வேடந்தாங்கல் - கருன் *! said...
வளம் கொடுக்கும் வற்றாத நதிகளெல்லாம், வரன் கொடுத்த சிவன் தலையில் கை வைத்த கதைபோல், ஆலைக்கழிவுகளாலும்., சாலையோர சங்கடங்கள் கலப்பாலும் சாபம் பெற்று, கழிவு நீர்க்கால்வாய்களாய் சடுதியில் சுருங்கிவிட்டன. --- இதிலேயும் அரசியல் விளையாடுது தோழரே..//
நான் வரல இந்த விளையாட்டிற்கு. தேர்தல் பனி சம்பந்தமான கூட்டத்திற்கு அழைப்பு வந்துவிட்டது. செல்கிறேன்.அய்யா.
//நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான். //
அருமையாகச் சொன்னீர்கள்!
“ஓர் ஆங்கிலக் கவிஞன் சொன்னான்”தண்ணீர்,தண்ணீர்,எங்கும்;குடிப்பதற்கு ஒரு சொட்டு இல்லை” என்று!
இன்றைய பதிவும் சூப்பர் தல..
//இன்று உலக தண்ணீர் தினம். வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீரும், ஒரு துண்டு அச்சு வெல்லமும் கொடுத்துத்தான்.//
எங்கள் குடும்பத்தில் இது இப்பவும் தொடர்கிறது.....எதிரிக்கும் தண்ணீர் உண்டு...
//நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.//
நெஞ்சில குத்திட்டீன்களே ஆபீசர்....
//வீட்டில் வீணாகும் தண்ணீர் குழாய்களை உடனே சரி செய்யலாம்.(ஒரு நாளில், ஒரு குழாயில், ஒரு நொடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் வீணானால், ஓராண்டில் ஏழாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகுதாம்)
இயற்கை வளங்களை சீர் கெடுப்போரை சிந்திக்கவும் வைக்கலாம், சொல்லியும் கேட்காவிட்டால் . . . . . . . . . . . . . . . . . . (உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன்)//
அருமையான ஐடியா....
சரியான தினதில் சரியான பதிவு....
அடுத்த 3 வது உலக போர் தண்ணிருக்காக் தான் இருக்கும்...
அடுத்த தலைமுறை சந்தோசமாக இருக்க வேண்டுமானால் தண்ணிரை சேமிக்க வேண்டியது நம்ம கடமை
it's a great thing to save water and make awareness to do so.
you done it.
congrats.....sir.
சென்னை பித்தன் said...
//நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.
அருமையாகச் சொன்னீர்கள்!
“ஓர் ஆங்கிலக் கவிஞன் சொன்னான்”தண்ணீர்,தண்ணீர்,எங்கும்;குடிப்பதற்கு ஒரு சொட்டு இல்லை” என்று!//
இந்த செய்தி எல்லோரையும் சென்றடைந்தால் சிறப்பு.வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சார்.
# கவிதை வீதி # சௌந்தர் said...
இன்றைய பதிவும் சூப்பர் தல..//
பொறுத்திருந்து பார்ப்போம்.நன்றி.
MANO நாஞ்சில் மனோ said...
எங்கள் குடும்பத்தில் இது இப்பவும் தொடர்கிறது.....எதிரிக்கும் தண்ணீர் உண்டு...//
அண்ணா, உங்களை நினைத்துத்தான் சொன்னேன்!
Blogger MANO நாஞ்சில் மனோ said...
//நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.//
நெஞ்சில குத்திட்டீன்களே ஆபீசர்....//
நான் முதுகில் குத்துவதில்லை, நாஞ்சிலாரே!வலிப்பவர்களுக்கு வலிக்கட்டும்.
மொக்கராசா said...
சரியான தினதில் சரியான பதிவு....
அடுத்த 3 வது உலக போர் தண்ணிருக்காக் தான் இருக்கும்...
அடுத்த தலைமுறை சந்தோசமாக இருக்க வேண்டுமானால் தண்ணிரை சேமிக்க வேண்டியது நம்ம கடமை//
நான் சொல்ல மறந்ததை நினைவூட்டி அதிலிருந்த இடைவெளியை சரிசெய்துவிட்டீர்கள், நண்பரே! நன்றி.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
it's a great thing to save water and make awareness to do so.
you done it.
congrats.....sir.//
நேற்று பதிவு பிரபலமடைய வாழ்த்தினீர்கள். பிரபலமடைந்தது. இன்று எப்படி?சொல்லவே இல்லையே?
அண்ணா இப்போதைக்கு மிக மிக அவசியமான ஒரு பதிவை பகிர்ந்ததுக்கு நன்றிகள் பல.
தண்ணீர் பிரச்சனை பற்றி மக்கள் முதலில் கவலைப்படணும், எனக்கு தெரிந்தவரை நிறைய தண்ணீர் கிடைத்த அன்று அதில் பாதி வீணாக செலவாகும். குறைவா கிடைக்கும் போது மட்டும் யோசிச்சி கொஞ்சமா செலவு பண்ணுவாங்க, இதே போல எப்பவும் இருந்தா நல்லது.
பாட்டில் தண்ணீர் இந்த தொழில் அமோகமாக நடக்கிறது. எதிர்காலத்தில் தண்ணீர் விற்கும் தொழில் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் போல...?!!!
Kousalya said...
அண்ணா இப்போதைக்கு மிக மிக அவசியமான ஒரு பதிவை பகிர்ந்ததுக்கு நன்றிகள் பல.//
நன்றி சகோதரி.
Kousalya said...
தண்ணீர் பிரச்சனை பற்றி மக்கள் முதலில் கவலைப்படணும், எனக்கு தெரிந்தவரை நிறைய தண்ணீர் கிடைத்த அன்று அதில் பாதி வீணாக செலவாகும். குறைவா கிடைக்கும் போது மட்டும் யோசிச்சி கொஞ்சமா செலவு பண்ணுவாங்க, இதே போல எப்பவும் இருந்தா நல்லது.
பாட்டில் தண்ணீர் இந்த தொழில் அமோகமாக நடக்கிறது.எதிர்காலத்தில் தண்ணீர் விற்கும் தொழில் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் போல...?!!!//
தண்ணீர் தொழில் நடத்த ஆளிருக்கும், ஆனால் தண்ணீர் இருக்குமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
ரொம்பச் சரியா சொல்லி இருக்கீங்க சார். நம்ம இருக்கும் சமூக, அரசியல் சூழல்கள் என்றைக்கு இதை பற்றி மக்களை அக்கறைப்பட வைக்கப் போகிறதோ?
தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. அப்புறமா வந்து ஓட்டு போடுகிறேன்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்பச் சரியா சொல்லி இருக்கீங்க சார். நம்ம இருக்கும் சமூக, அரசியல் சூழல்கள் என்றைக்கு இதை பற்றி மக்களை அக்கறைப்பட வைக்கப் போகிறதோ?//
உங்களுக்கு சமூகத்தின் மீது இருக்கும் அக்கறை பாராட்டத்தக்கது ! உங்கள் பிஸியிலும், என் பதிவில் பின்னூட்டங்கள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது சார்.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. அப்புறமா வந்து ஓட்டு போடுகிறேன்!//
வாங்க மறக்காம வாங்க சார்.
நல்லாயிருக்கு..!
I am Late..Sorry...I shall read and comment later..bcoz i am in full mabbu..he he...
ஆஹா செம போஸ்ட் சார்
>>ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.
உண்மை
Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...
நல்லாயிருக்கு..!//
தங்கள் கவிதைகள் போல் இருக்கிறதா? நானும் ரசிப்பதுண்டு உங்கள் கவிதைகளை.
டக்கால்டி said...
I am Late..Sorry...I shall read and comment later..bcoz i am in full mabbu..he he...//
உங்கள் வருகையே மகிழ்ச்சி அளிக்கும். மெதுவாக வாங்க.
சி.பி.செந்தில்குமார் said...
ஆஹா செம போஸ்ட் சார்//
அய்யா உங்கள பாலோ பண்றவங்க நாங்க!
//சி.பி.செந்தில்குமார் said...
>>ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான்.
உண்மை//
நன்றி சார்.
ஆக்கப்பூர்வமான இடுகை தல...லேட்டானாலும் பரவால்லை ஒட்டு போட்டுடுறேன்...
//டக்கால்டி said...
ஆக்கப்பூர்வமான இடுகை தல...லேட்டானாலும் பரவால்லை ஒட்டு போட்டுடுறேன்...//
வருக உங்கள் வரவு நல வரவாகுக
இன்னமும் ஊர் வந்தால் தாமிரபரணியில் கைகளை நனைக்காமல் வந்ததில்லை,அருமையான பகிர்வு.தண்ணீர் என்றாலே அது என்னவோ தெரியலை நம்ம ஊர் ஆறு தான் நினைவு வருது.
//ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம்.//
எழுதியிருக்கும் விதம் மிகப்பிடித்தது நல்லதொரு கட்டுரை வாழ்த்துகள்..!
தாமிரபரணியின் தண்ணீரை அயல் நாட்டவன் புட்டியில் அடைத்துக்கொடுக்க நாம் பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கும் அவலத்தை என்னத்த சொல்ல.....
asiya omar said...
இன்னமும் ஊர் வந்தால் தாமிரபரணியில் கைகளை நனைக்காமல் வந்ததில்லை,அருமையான பகிர்வு.தண்ணீர் என்றாலே அது என்னவோ தெரியலை நம்ம ஊர் ஆறு தான் நினைவு வருது.//
என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊருதான்.நன்றி சகோ.
ப்ரியமுடன் வசந்த் said...
ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம்.
//எழுதியிருக்கும் விதம் மிகப்பிடித்தது நல்லதொரு கட்டுரை வாழ்த்துகள்..!//
முதல் வருகை. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!
மைதீன் said...
தாமிரபரணியின் தண்ணீரை அயல் நாட்டவன் புட்டியில் அடைத்துக்கொடுக்க நாம் பணம் கொடுத்து வாங்கிக் குடிக்கும் அவலத்தை என்னத்த சொல்ல.....//
வருகைக்கு நன்றி நண்பரே!
Post a Comment