இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 2 May, 2011

சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?

                                 
 கோடை காலம் தொடங்கிவிட்டால், பலருக்கு குஷியாகிவிடும். என்ன, விடுமுறையால் என்று பார்க்கிறீர்களா? இல்லை இல்லை, குளிர்பானங்களும், மாம்பழங்களும் ஓஹோ என்று   விற்க  தொடங்கும்.  வியாபாரம் சூடு பிடித்தால் பரவாயில்லை! இவர்கள் நம் வாழ்க்கைக்கே சூடு வைப்பவர்கள்.
ஆட்டோ மீட்டரில் சூடு வைக்கும் அறிவாளிகள் உண்டு , அடம் பிடிக்கும் பிள்ளைக்கு சூடு வைக்கும் அம்மா(?)க்கள் உண்டு, பழம் பழுக்க சூடு வைக்கும் சூனியக்காரர்கள் இவர்கள்.
தானாய் விளைந்த மாங்காய்கள் பழுத்து வர பல நாட்கள் ஆகும். பொறுத்திருக்க புண்ணியவான்களுக்கு நேரமில்லை. புதுப்புது வழிகள், புற்று நோய் உருவாக்கும்  என்று தெரிந்தும், காசு ஒன்றின் மீது மட்டும் கவலை இவர்களுக்கு.
நன்கு விளைந்த மற்றும் விளையாத மாங்காய்களை பறித்து வந்து, அன்றிரவே ஓர் அறையினில் கொட்டி, சிறு சிறு பொட்டலங்களில், கார்பைடு கற்களையும் சேர்த்து வைத்து விடுவர்.
 விடிந்து பார்த்தால், விளைந்தது, விளையாதது என்று அனைத்தும் பழுத்தது போல் காட்சியளிக்கும். ஆம், பழுத்தது போல், அவற்றின் மேல் தோல் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். சந்தைக்கு சடுதியில்  அனுப்பி, அவர்தம் கல்லாவை நிரப்பிட துடித்திடுவார். 

கடந்த வார மத்தியில் ஒரு நாள், பழங்களை பார்வையிட :-(( நாள் குறித்திருந்தோம்.ஆணையாளர் அறிவுரையின்படி, ஒரு வாரமாக நானும் நண்பர்கள் இருவரும்(அரசகுமார், சாகுல் ஹமீது) சேர்ந்து ஆய்விற்கு திட்டமிட்டோம்.  ஏழு கோடோன்களில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதை அறிந்து கொண்டு, ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டது.                                
ஆய்விற்கு நாள் குறித்த காலையில் ஆறு மணிக்கு, மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், ஒரே நேரத்தில், ஏழு குழுவினரும், ஏழு கோடோன்களில் சோதனையில் இறங்கினர்.
பார்த்த கோடோன்களில், மனம் பதைபதைத்த இடமொன்றும் உண்டு. மாங்காய்களின்    எண்ணிக்கையைவிட, அதில் மறைத்து வைத்திருந்த கார்பைடு கற்களின்  எண்ணிக்கை அதிகம். அப்படியே, அதை இழுத்து பூட்டினோம், இனியும் அந்த வியாபாரம் தொடரக்கூடாதென்று.
அதெல்லாம் சரி, கால்சியம் கார்பைடு அப்படீன்னா என்ன? அது பெருசா ஒன்னும் இல்லீங்க, காஸ் வெல்டிங் கேள்விபட்டிருக்கீங்களா? அதற்கு பயன்படுத்தும் ரசாயனம்தாங்க அது. அதன் தன்மை, அதிக வெப்பத்தை வெளிப்படுத்துதல். வெல்டிங் வைக்க அதிக வெப்பத்தை உருவாக்க பயன்படுத்தியதை, பழங்களுக்கு சூடு வைக்க பயன்படுத்துகின்றனர், அவ்வளவுதான்! :-((
இதுதாங்க அந்த கால்சியம் கார்பைடு.
 என்னாகும்? அந்த கார்பைடு கற்களிலிருந்து வெளியாகும் அபரிமிதமான வெப்பத்தால், எத்திலின் எனும் வாயு உருவாகி, பழங்களில் ஊடுருவும். அந்த எத்திலின் நம் குடலில் அழற்சியை உருவாக்கும்.
எப்படி கண்டு பிடிப்பது? கடைகளில் இருக்கும் மாம்பழங்களின் மேல், சாம்பல் பூத்தாற்போல் ஒரு படிவம் இருந்து, கைகளால் அழுத்தி துடைத்தால் மறைகிறதா? பழங்களின் மேல், கருப்பு புள்ளிகள் இருக்கா?மேலே பழுத்தும்,வெட்டினால், உள்ளே காயாகவும் இருக்கா? அப்போ, அது கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டவையாக இருக்கலாம்.
என்ன செய்யலாம்? கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டிருக்கும் என சந்தேகம் வந்து விட்டதா? கடைகளில் வாங்கி வந்த பழங்களை இருபத்து நான்கு மணி நேரம், குளிர்சாதன பெட்டியில் வையுங்க! எத்திலின் வாயு இருந்தா, அது  எளிதாய்  வெளியேறிடும்.

சரி, எங்க வீட்டில் பிரிட்ஜ் இல்ல, என்ன பண்ண? கேட்பது என் காதில் விழுகிறது. தண்ணீர் பானை இருக்கா உங்க வீட்டில? அதற்குள் இருபத்து மணி நேரம் போட்டுவச்சா, எத்திலின் இருந்த இடம்  தெரியாமப் போயிடும்.
                                     என்ன, இப்ப சொல்லுங்க: சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா?
Follow FOODNELLAI on Twitter

56 comments:

நிகழ்காலத்தில்... said...

பழமே வேண்டாமோ எனத் தோன்றுகிறது:))

சரி இனி பழம் வாங்கினால் ஒரு நாள் ஊறப்போட்டு விடவேண்டியதுதான்..

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.. நீங்க சுடாத பழம்தான் பிடிக்கும்னு நேத்து சொன்னீங்க.. இன்னைக்கு டைட்டிலே அதானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணன் எப்பவும் விழிச்சிருந்து காலைல 6 மணீக்கு முன்னேயே போட்டுடரார்.. பதிவை.. அதனால தான் விழிப்புணர்வுப்பதிவா அமைஞ்சிடுது.. நாமும் அண்ணன் கிட்டே கத்துக்கனும்

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணம் ஓட்டு விழலை.. சுத்திட்டே இருக்கு. மறுபடி வந்து பார்க்கரேன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் சார்! மறுபடியும் வந்துட்டேன்! காலையில் வருகிறேன் கமென்ட் போட!

ம.தி.சுதா said...

எனக்கு மாங்காயை நினைச்சாலே பல்லுக் கூசுமுங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

PRABHU RAJADURAI said...

நன்றி...

உணவு உலகம் said...

//நிகழ்காலத்தில்... said...
பழமே வேண்டாமோ எனத் தோன்றுகிறது:))
சரி இனி பழம் வாங்கினால் ஒரு நாள் ஊறப்போட்டு விடவேண்டியதுதான்..//
அதே அதே! நன்றி.

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே.. நீங்க சுடாத பழம்தான் பிடிக்கும்னு நேத்து சொன்னீங்க.. இன்னைக்கு டைட்டிலே அதானா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
அது நேற்று, இது இன்று! நன்றி.

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணன் எப்பவும் விழிச்சிருந்து காலைல 6 மணீக்கு முன்னேயே போட்டுடரார்.. பதிவை.. அதனால தான் விழிப்புணர்வுப்பதிவா அமைஞ்சிடுது.. நாமும் அண்ணன் கிட்டே கத்துக்கனும்//
எனது பணி நேரம் அப்படி. நான் யாரது இரவு தூக்கத்தையும் கெடுப்பதில்லை!

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
தமிழ்மணம் ஓட்டு விழலை.. சுத்திட்டே இருக்கு. மறுபடி வந்து பார்க்கரேன்//
உங்களையும் சுத்த விட்டிருச்சா? காலையில் பதிவை, தமிழ்மணத்தில் இணைக்கும் முன் அப்பப்பா!மறக்காம தமிழ்மண ஓட்டை போட வந்திருங்க!

உணவு உலகம் said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் சார்! மறுபடியும் வந்துட்டேன்! காலையில் வருகிறேன் கமென்ட் போட!//
இண்ட்லியில் ஓட்டு போட்டுட்டு,இப்ப வந்து கமெண்ட் போட்டுட்டு,. . நன்றி.
மறக்காம வந்து தமிழ்மணத்த கொஞ்சம் பாருங்க!

உணவு உலகம் said...

//♔ம.தி.சுதா♔ said...
எனக்கு மாங்காயை நினைச்சாலே பல்லுக் கூசுமுங்க...//
எனக்கும்தான். ஆனா என்ன பண்றது, எழுதித்தானே ஆகணும்.நன்றி.

உணவு உலகம் said...

//Prabhu Rajadurai said...
நன்றி...//
கருத்துக்களையும் பதியுங்க,நண்பரே!

சக்தி கல்வி மையம் said...

கடைகளில் இருக்கும் மாம்பழங்களின் மேல், சாம்பல் பூத்தாற்போல் ஒரு படிவம் இருந்து, கைகளால் அழுத்தி துடைத்தால் மறைகிறதா? பழங்களின் மேல், கருப்பு புள்ளிகள் இருக்கா?மேலே பழுத்தும்,வெட்டினால், உள்ளே காயாகவும் இருக்கா? அப்போ, அது கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டவையாக இருக்கலாம் --- மக்களே இனிமே இதெல்லாம் செக் பண்ணனும்... சபாஷ் சரியான தகவல்கள்.. நன்றி...

சக்தி கல்வி மையம் said...

கடைகளில் வாங்கி வந்த பழங்களை இருபத்து நான்கு மணி நேரம், குளிர்சாதன பெட்டியில் வையுங்க! எத்திலின் வாயு இருந்தா, அது எளிதாய் வெளியேறிடும். //// ஓ ..இதற்கு தீர்வும் உண்டோ?
சார் இப்போ சாப்பிடலாமா?

கூடல் பாலா said...

தங்கள் அதிரடி தொடரட்டும் ...

vijay said...

Vaazhthukkal sir, enga oorla ungala madiri food inspector illaye

பாட்டு ரசிகன் said...

ம்.. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்...

மக்களின் நலமே முக்கியம்..

சென்னை பித்தன் said...

நான் அவ்வையார் கட்சி!

Asiya Omar said...

ரெய்டோ ரெய்டு தான்..பகிர்வுக்கு நன்றி..

hamaragana said...

அன்புடன் வணக்கம்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !!!இன்னும் நிறைய சோதனைகள் இட்டு மக்களுக்கு சேவை செயனும்..இன்னும் செயலாம் கார்பைடு கல் விற்கும் விற்பனயளர்களை வெல்டிங் அடிப்பவர்களுக்கு மட்டும் விற்க அறிவுறுத்தலாம் பெரும்பாலும் குறைந்த அளவுதான் வெல்டர்கள் வாங்குவார்கள்.. அதிகமான கொள்முதல் எனில் உடன் உங்களுக்கு தகவல் தெரிவிக்க செயலாம் ஆட்சியாளர் இது பற்றி ஆணை இடலாம் நீங்கள் அதற்கு பரிந்துரை செயலாம்...

Jana said...

பழங்கள்தான் இயற்கை உணவு நல்லது என நினைத்துக்கொண்டிருந்தேன் அதுவும் போச்சே :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் தகவல்கள் சார், பிரின்ட் எடுத்து வெச்சிடபோறேன்!

இளங்கோ said...

மாம்பழ ஆசையே போய்விடும் போல் இருக்கிறது. விழிப்புணர்வுக்கு நன்றிகள்.

NARAYANAN said...

Sir Vanakkam. I think now-a-days we unable to find the riped mangoes without the carbide stone and the public needs awareness in this regard, then only the vendors change their activity.
by S.Narayanan
Sanitary Officer
Theni-Allinagaram Municipality.

ரஹீம் கஸ்ஸாலி said...

thanks for sharing

Unknown said...

நண்பரே உம் பணிதொடர வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

//புற்று நோய் உருவாக்கும் என்று தெரிந்தும், காசு ஒன்றின் மீது மட்டும் கவலை இவர்களுக்கு.//


அம்மாடியோ....

உணவு உலகம் said...

வந்து வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.

Anonymous said...

போட்டி வியாபார சூழலால் பாதிக்கப்படுவது மக்கள் தான், நல்ல தகவல்கள் பாஸ்

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர் ஆபீசர், பிரச்சினைக்கு தீர்வும் சொல்லிட்டீங்க.....

MANO நாஞ்சில் மனோ said...

நீங்கதான்ய்யா பதிவுலகின் ராஜா....

MANO நாஞ்சில் மனோ said...

மிகவும் பயனுள்ள பதிவு....

உணவு உலகம் said...

வாங்க கந்தசாமி சார், மனோ nanjil மனோ!

MANO நாஞ்சில் மனோ said...

மக்களே பதிவை முழுசா படிச்சிட்டு உங்கள் குடலை காத்து கொள்ளுங்கள்....

உணவு உலகம் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...
நீங்கதான்ய்யா பதிவுலகின் ராஜா....//
இது என்ன புது கலாட்டா?

MANO நாஞ்சில் மனோ said...

// FOOD said...
வாங்க கந்தசாமி சார், மனோ nanjil மனோ!//

இன்னைக்கு திங்கள் கிழமை ஆச்சா ஒவ்வொரு பதிவா போயி கமெண்ட்ஸ் போட்டுட்டு வர நேரமாகிருச்சி ஆபீசர்....

MANO நாஞ்சில் மனோ said...

// FOOD said...
//Blogger MANO நாஞ்சில் மனோ said...
நீங்கதான்ய்யா பதிவுலகின் ராஜா....//
இது என்ன புது கலாட்டா?///


ஹே ஹே ஹே ஹே உண்மையை சொன்னா கலாட்டாவா.....

உணவு உலகம் said...

பரவாயில்லை!.தமிழ்மண ஓட்டை போட்டாச்சா?

MANO நாஞ்சில் மனோ said...

பத்தாவது ஓட்டு நம்முது ஹே ஹே ஹே ஹே....

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
பத்தாவது ஓட்டு நம்முது ஹே ஹே ஹே ஹே....//
பத்தாது இன்னும் பத்தாது!

உணவு உலகம் said...

நம்ம சி.பி., மாத்தி யோசி காலைல தமிழ்மணத்தோட போராடிட்டு போய்ட்டாங்க!

காங்கேயம் P.நந்தகுமார் said...

கல் வைத்த பழத்தை கண்டுபிடிக்க நல்ல ஐடியா கொடுத்த உங்களுக்கு ஒரு சபாஷ்

காங்கேயம் P.நந்தகுமார் said...

கல் வைத்த பழத்தை கண்டுபிடிக்க நல்ல ஐடியா கொடுத்த உங்களுக்கு ஒரு சபாஷ்

காங்கேயம் P.நந்தகுமார் said...

கல் வைத்த பழத்தை கண்டுபிடிக்க நல்ல ஐடியா கொடுத்த உங்களுக்கு ஒரு சபாஷ்

காங்கேயம் P.நந்தகுமார் said...

கல் வைத்த பழத்தை கண்டுபிடிக்க நல்ல ஐடியா கொடுத்த உங்களுக்கு ஒரு சபாஷ்

காங்கேயம் P.நந்தகுமார் said...

கல் வைத்த பழத்தை கண்டுபிடிக்க நல்ல ஐடியா கொடுத்த உங்களுக்கு ஒரு சபாஷ்

Anonymous said...

ஞானப்பழத்தை தவிர எல்லாமே டுபாக்கூர் பழங்களா இருக்குதே!

அன்புடன் மலிக்கா said...

அது சரி இப்படியெல்லாம் செய்துதான் பழம் பழுக்கிறதா?

அப்ப வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பழங்களும் அப்படித்தானா சகோ?

நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.

நிரூபன் said...

விழிப்புணர்வு பதிவு சகோ, எங்கள் வீட்டில் அம்மம்மா(பாட்டி) வைக்கோலினால் மூடி மாம்பழத்தினை பழுக்கப் பண்ணுவா, அருமையான ரேஸ்ட் ஆக இருக்கும், கடைகளில் வாங்கும் பழங்களில் உள்ள சுவையை விட இயற்கையாக பழுக்க வைக்க்கப்படும் பழங்களில் சுவை அதிகமாகத் தான் இருக்கும்.

நிரூபன் said...

விழிப்புணர்வு பதிவு என்பதை விட, கடைகளில் உள்ள பழங்களில் எத்தகைய கெமிக்கல்/ இரசாயான பதார்த்தங்களை கலந்து பழுக்கப் பண்ணுகிறார்கள் என்பதனை அறிந்து கொண்டேன். இனிமேல் இந்த கடைப் பழமே வேண்டாம். தொடரட்டும் உங்கள் பணி.

Prabu Krishna said...

நல்ல செய்தி.இதுபோல கோக், பெப்சி போன்றவற்றின் தீமைகளையும் நம் நண்பர்களுக்கு கூறினால் மேலும் விழிப்புணர்வு பெறுவார்கள். இது போல நல்ல தரமான இயற்கை பொருட்களை நீங்கள் நினைவு படுத்தலாம். செய்வீர்களா???

Lali said...

First time I am visiting your blog, just wondering at your great work. Thank you sir! Really innovative write-ups and immensely helping the public to gain knowledge about toxins and preventive measures. Hats off to you!

http://karadipommai.blogspot.com/

இராஜராஜேஸ்வரி said...

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் !!
விழிப்புணர்வு தந்ததோடு தீர்வும் சொன்ன் பயனுள்ள பகிவுக்கு பாராட்டுக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மாம்பழ ஆசையே போச்சே!