இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 16 May, 2011

தன்னலம் கருதாத தாயை நாம் காக்கிறோமா?

தன்னிலை தாழ்ந்தேனும், தன் குழந்தையின் துயர் துடைத்திடும், தன்னலம் கருதாத தாயை நாம் காக்கிறோமா? நம் தாய் நாடு, தாயைக் காத்திடும் தாய்சேய் நலத் திட்டத்தில், மூன்றாமிடத்தில் இருக்கிறது.
ஆம்,அண்மையில், அன்னையர் தினம் கொண்டாடும் நாளில், சேவ் த சில்ட்ரன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையிது.
வளர்ந்த நாடுகள், ஓரளவு வளர்ந்த நாடுகள், வளர்ச்சியடையும் நாடுகள் என்ற மூன்று பிhpவுகளில், நம் நாடு, மூன்றாம் பிரிவில், தலைகீழ் தரவரிசையில் மூன்றாமிடத்திலிருக்கிறது. ஆம், 77 நாடுகள் பட்டியலில், 75ம் இடத்தில் இருக்கிறது.
பிரசவ கால தாய் சேய் இறப்பு விகிதம், கருத்தடை சாதன பயன்பாடு, பெண்களின் கல்வி அறிவு, கர்ப்பம் மற்றும் பேறுகால மருத்துவ வசதி ஆகியவற்றின் அடிப்படையில் தரம் பிரிக்கப்படுகிறது.
காரணங்கள்:
  பின்தங்கிய பிரசவகால மருத்துவ வசதி.
  விழிப்புணர்வு குறைவு.
  பணியாளர்கள் பற்றாக்குறை.
விளைவு:
  30ல் ஒரு பெண் கர்ப்பகால சிக்கல்களால் உயிhpழக்கிறார்;.
   6ல் ஒரு குழந்தை 5 வயதிற்குள் இறக்கிறது.
   3ல் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறது.

                        இந்தியாவில் நிகழும் ஒரு லட்சம் பிறப்புக்களில், ஐநூற்றி நாற்பதில், தாய்க்கு மரணம் நிகழுகிறது. என்ன கொடுமை சார் இது!
பெண்களும் ஏழ்மையும்:
உலகளவில் ஏழ்மையில் வாடும் மக்களில் எழுபது சதவிகிதத்தினர் பெண்களே. வேலை செய்யும் பெண்கள் உலக வருவாயில் பத்து சதவிகிதத்தை ஈட்டுகின்றனர். ஆண்களை ஒப்பிட்டு பார்க்கையில், முப்பது முதல் நாற்பது சதவிகிதம் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது. உலகளவில், அறுபது முதல் என்பது சதவிகித உணவு பெண்களால் உற்பத்திசெய்யப்படுகிறது. ஆனால், பத்து முதல் இருபது சதவிகித அளவிலேயே, நிர்வாக பொறுப்புக்கள் வழங்கபடுகின்றன. 
இந்திய பெண்கள்:
ஆறு வயதிற்குட்ட்பட்ட குழந்தைகளில் ஆண் பெண்  இன விகிதம் ,  1991 இல் 1000   ஆண்களுக்கு 945 பெண்கள் என்றிருந்தது, 2001 இல்,  1000   ஆண்களுக்கு 927 பெண்கள் என்று குறைந்து விட்டது.  யுனிசெப் நிறுவன கணக்க்குப்படி ,  50 மில்லியன் பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்தியாவில் காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளனராம்.
இந்திய பெண்களில், 245 மில்லியன் பெண்கள் எழுத படிக்க தெரியாதவர்கள். பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களில், 46.4%  பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றுள்ளனர். 
உணவைப் பொறுத்த வரையில், அவர்களுக்கு தேவைப்படுவதோ - 2200 கலோரிகள், எடுத்து கொள்வதோ- 1400 கலோரிகள் மட்டுமே!
 எய்ட்ஸ்  எனும் இரக்கமற்ற அரக்கனின் கோர பிடிக்கு ஆட்பட்டோரில், 38 சதவிகிதம் பெண்களே!  இந்திய பெண்களில், 92 சதவிகிதத்தினர்  மறைமுக(பிறப்புறுப்பு சம்பந்தமான ) நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். மகப்பேறு காரணங்களால் இறப்போர் நாளொன்றிற்கு 300 பேர்.
                                           எங்கே, இப்ப  சொல்லுங்கள்: தன்னலம் கருதாத  தாயை  நாம் காக்கிறோமா?  சிந்திப்போமா, சில நொடி? 
என்ன செய்யலாம்? : 
  • பெண் சிசுக்கொலை செய்யும் பேய் மனங்களைக்  கொல்வோம்!
  • பேறுகாலத்தில் பெண்களுக்கு முறையான  ஊட்டச்சத்தும், உரிய தடுப்பூசிகளும் கிடைத்திட வழி வகுப்போம்.  
  • பிறந்த பெண் குழந்தைகளுக்கு, முறையான ஊட்டச்சத்தும், மருத்துவ கவனிப்பும் தருவோம்.
  • பெண் குழந்தைகளுக்கு,உரிய பருவத்தில், முறையான உடற்கூறு இயல் கற்றுக் கொடுப்போம்.
Follow FOODNELLAI on Twitter

27 comments:

Unknown said...

மாப்ள நல்ல விழிப்புணர்வு பதிவு!..........இந்த விஷயத்துல படிச்சி நல்ல பொறுப்புள இருக்க மனிதர்களே அதிகம் இப்படி தாயை நடத்துவதாக இருக்கு......பாமரர்கள் எவ்வளவோ மேல்!

உணவு உலகம் said...

Vikki's First visit.Post Super hit.Thanks.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.. நீட்டான , பொறுப்பான பதிவு.. என்ன ஒரே வருத்தம் கும்ம முடியல ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சாட்டையடி பதிவு....! மருத்துவத்தை பொறுத்த வரை இந்தியா ஆப்பிரிக்காவின் ஏழ்மையான சஹாரா நாடுகளோடுதான் இருக்கிறது. காசு கொடுத்தால் அமெரிக்காவிற்கு இணையான மருத்துவ வசதி, காசு இல்லையென்றால், ஆப்பிரிக்க தரத்தில்!
நம் நாட்டிலேயே முறையான மருத்துவ வசதி சரியான நேரத்தில் கிடைக்காமல் எத்தனையோ உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன, நாம், மெடிகல் டூரிஸத்தை பற்றி பெருமை பேசுகிறோம்!
நம் பணத்தில் இருந்து உருவாக்கப்படும் மருத்துவ கட்டமைப்பில் நம் மக்களுக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதில் ஆறுதல் கொள்ளும் விஷயம், தமிழகத்தின் மருத்துவ புள்ளி விபரங்கள் மிக நல்ல நிலையில் உள்ளதுதான்!இந்தியாவைப் பொறூத்தவரையில் மருத்துவ வசதிகளில் தமிழகம்தான் முன்னோடி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிரசவ கால இறப்புகள் அட்டவனையில் ஃபாண்ட் பிரச்சனை உள்ளது?

Chitra said...

நாடுகளின் பெயர்கள் தெளிவாக வரவில்லை. மற்ற படி, விழிப்புணர்வு பதிவு. உண்மையில் இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரைட்டு.தேவையான விழிப்புணர்வு பதிவு.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மற்றுமொரு முக்கியமான, அவசியமான பதிவு! வாழ்த்துக்கள் சார்! பதிவுலகில் உங்களுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது! நல்லதொரு எதிர்காலமும் இருக்கிறது!

சக்தி கல்வி மையம் said...

தன்னலம் கருதாத தாயை நாம் காக்கிறோமா? சிந்திப்போமா/// கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்..

சக்தி கல்வி மையம் said...

பிரசவ கால இறப்புகள் அட்டவனையில் ஃபாண்ட் பிரச்சனை உள்ளது?

சக்தி கல்வி மையம் said...

இந்தியாவைப் பொறூத்தவரையில் மருத்துவ வசதிகளில் தமிழகம்தான் முன்னோடி!// பெருமைபடுவோம்..

உணவு உலகம் said...

Sorry friends. I am in coimbatore to give a guest lecture. I've tried my level best to edit and the only way out was to delete the statistics. I'll include it after returning back to headquarters.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மிகவும் வருத்தப்பட வைக்கிறது இந்த விஷயம்..

முறையான விழிப்புணர்வு
மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினால் தான் இப்பிரச்சனைக்கு முடிவு ஏற்ப்படும்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
வலைச்சரம் வாங்க....

பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_16.html

Anonymous said...

தாய்மை அருமையான நிகழ்வு..அதில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி அருமையான பதிவு

இராஜராஜேஸ்வரி said...

விழிப்புணவு ஊட்டும் பொறுப்பான பதிவுக்குப் பாராட்டுக்கள்.

Speed Master said...

நன்றி

ரஹீம் கஸ்ஸாலி said...

பாராட்டுக்குரிய பதிவு

இம்சைஅரசன் பாபு.. said...

சரியான நேரத்தில் வந்திருக்கும் ..பாரட்டுதலக்குரிய பதிவு சார் ....

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர் புள்ளிவிபரம் ஆபீசர்...

நிரூபன் said...

சகோ, பிரவச கால இறப்பு வீதத்தைத் தடுக்க வேண்டும் என்றால், முதலாவதாக செய்ய வேண்டிய விடயம்- பள்ளிகளில்ல் உயர் வகுப்பு மாணவர்களுக்கு பிரவச கால உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி அறிவுரை வழங்க வேண்டும், நாடு தழுவிய ரீதியில் உள்ளூர் மன்றங்கள் வாயிலாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்தின் போது எப்படி போஷாக்கான உணவினை உண்பது போன்ற விடயங்களை அறிவுரையாக வழங்க வேண்டும்.

வைத்திய சாலைகளில் மகப் பேற்றிற்கு முன்பதாக சிகிச்சை பெற வரும் தாய்மார்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் பற்றிய பிரவச காலக் குறிப்புக்கள் அடங்கிய நூல்களை, அறிவுரைகளை வழங்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட விசேடமான விடயம்,
மருத்துவத் துறை கர்ணிப் பெண்களின் நலனில் அக்கறை கொண்டு மாதா மாதம் அவர்களது தேக ஆரோக்கியத்தினை கணிப்பிடுவதுடன், பிரவச காலத்தின் போது தரமான சேவைகளை வழங்க முன் வர வேண்டும்.

இவை அனைத்தும் இருந்தால் நிச்சயாமக இந்த இறப்பு வீதத்தைக் குறைக்க முடியும்.

உணவு உலகம் said...

வந்து வாழ்த்தியும், குறைகளைக் களைய சுட்டிக் காட்டி உதவிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

சென்னை பித்தன் said...

நமது ஆட்சியாளர்கள் அனைவரும் வாய்ச்சொல்லில் வீரர்களாக இருப்பது தான் கொடுமை!இதையெல்லாம் கவனிக்க எந்த அரசுக்கும் நேரமிருப்பதில்லை!
நல்ல பதிவு!

Sivakumar said...

பகிர்வுக்கு நன்றி.

//FOOD said...
Vikki's First visit.Post Super hit.Thanks.//

அவர் அல் கொய்தா ஆளுங்க....

SANKARALINGAM said...

//சென்னை பித்தன் said...
நமது ஆட்சியாளர்கள் அனைவரும் வாய்ச்சொல்லில் வீரர்களாக இருப்பது தான் கொடுமை!இதையெல்லாம் கவனிக்க எந்த அரசுக்கும் நேரமிருப்பதில்லை!
நல்ல பதிவு!//
கருத்துக்கு நன்றி.

உணவு உலகம் said...

//சிவகுமார் ! said...
பகிர்வுக்கு நன்றி.
//FOOD said...
Vikki's First visit.Post Super hit.Thanks.//
அவர் அல் கொய்தா ஆளுங்க....//
ஆஹா, அப்படியா,அதான் வியட்னாமில் ஒளிந்து கொண்டிருகிறாரா?