காருன்னா பெட்ரோல்ல ஓடும் டீசல்ல ஓடும். காற்றுல ஓடும்னு கேள்விப்பட்டிருக்கேளோ! கலி முத்திடுத்து! - இன்று காலை நான் கேட்ட ஒரு வசனம்.
ஆம், நிஜமாகவே காற்றில் ஓடும் காரை கண்டுபிடித்துள்ளனர் கல்லூரி மாணவர்கள். கோவையிலுள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில், இயந்திரவியல் துறை மாணவர்கள் நான்கு பேர் சேர்ந்து, காற்றில் ஓடும் கார் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
மதன்குமார், பூர்ணசந்திரன், சுரேந்தர், ஆனந்தன் ஆகியோர் இணைந்து இம்முயற்சியைச் செய்துள்ளனர். சமுதாயத்திற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்ற அவர்களின் ஆர்வமும், உடனிருந்த பேராசிரியரின் தூண்டுதலும் அவர்களை வழிநடத்தியுள்ளன. மூன்று மாத இடைவிடாத முயற்சியில், ரூபாய் முப்பத்தைந்தாயிரம் முதலீட்டில் இதனை உருவாக்கியுள்ளனர்.
ஒருவர் அமர்ந்து பயணம் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்தக் காரில், 300 பவுண்ட் கொள்ளளவு கொண்ட டேங்க் ஒன்றைப் பொருத்தியுள்ளனர். அந்த டேங்கிலிருந்து அழுத்தத்துடன் வெளியாகும் காற்று, அந்த காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஜினை இயக்குகிறது. மற்ற கார்களைப் போன்றே, இந்த காரிலும், கிளட்ச், கியர், பிரேக், இத்யாதிகள் இருக்கும்.
டேங்கிலுள்ள காற்று தீர்ந்துவிட்டால், வழியிலுள்ள கடைகளில் நிறுத்தி, கம்ப்ரசர் மூலம் காற்றை டேங்கினில் நிரப்பி நம் பயணம் தொடரலாம். புகையில்லையென்பதால், நம் சுற்றுச்சூழலிற்குப் பகையில்லை. விலையென்ன, வேகமென்ன இன்னும் தெரியவில்லை.
டேங்கிலுள்ள காற்று தீர்ந்துவிட்டால், வழியிலுள்ள கடைகளில் நிறுத்தி, கம்ப்ரசர் மூலம் காற்றை டேங்கினில் நிரப்பி நம் பயணம் தொடரலாம். புகையில்லையென்பதால், நம் சுற்றுச்சூழலிற்குப் பகையில்லை. விலையென்ன, வேகமென்ன இன்னும் தெரியவில்லை.
டிஸ்கி: வரவிடுவார்களா பன்னாட்டு பண முதலைகள்.

41 comments:
இனிய காலை வணக்கங்கள்.
அண்ணன் இன்னைக்கு எந்திரிக்க 30 நிமிஷம் லேட் போல ஹி ஹி
அண்ணே.. இதெல்லாம் ஓக்கே.. நீங்க ஏதோ கண்டு பிடிச்சதா பதிவுலகுல பரபரப்பா பேசிக்கறாங்களே? அதென்ன? ஹி ஹி பப்ளீக்ல சொல்ல சங்கடமா இருந்தா தனி மெயில் இடவும் ஹி ஹி
முயற்சித்தால் முடியாதது எதுவுமே இல்லை...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?
வாழ்த்துக்கள் அந்த இளம் விஞ்ஞானிகளுக்கு.
Super!!! Best wishes to them!
வாழ்த்துக்கள்...
கண்டுபிடிப்பை செய்த மாணவ செல்வங்களுக்கும்........
எங்களுக்கு தங்கள் பதிவு மூலம் தெரிவித்த தங்களுக்கும்...... வாழ்த்துக்கள்!
அண்ணே.. இதெல்லாம் ஓக்கே.. நீங்க ஏதோ கண்டு பிடிச்சதா பதிவுலகுல பரபரப்பா பேசிக்கறாங்களே? அதென்ன? ஹி ஹி பப்ளீக்ல சொல்ல சங்கடமா இருந்தா தனி மெயில் இடவும் ஹி ஹி///
இந்த டவுட் எனக்கும் இருக்கு! எல்லாம் அண்ணனோட கைங்கரியம் தான் போல!
டிஸ்கியில் எழுப்பியிருக்கும் கேள்வி நியாயமானதுதான்! அனைவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணே!
அரசின் ஆதரவுடம் இதனை மேலும் சீரமைத்து தயாரிப்பு பணிகள் தொடங்கினால் நம் நாட்டில் நல்ல வரவேற்பை பெரும் திட்டமிது.
பன்னாட்டு பண முதலைகளை நம் ஒன்று சேர்ந்தால் துரத்தி அடிக்கலாம். 'அம்மாவின் ' அருள் இருந்தால் போதும் இப்போது.
மாணவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.
//வரவிடுவார்களா பன்னாட்டு பண முதலைகள். //
சரியான கேள்விதான்.
மாணவர்களுக்கு வாழ்த்துகள்!
கண்டுபிடித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.... பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
அவர்களை பிரபல கார் நிறுவனங்களிடம் தங்களுடைய ஃபிராஜக்டை டெமோ செய்ய சொல்லுங்கள்
///வரவிடுவார்களா பன்னாட்டு பண முதலைகள். //
சில முதலாளிகள் இன்னும் புதிய கண்டுபிடுப்புகளை வரவேற்கின்றனர்
ஆமா..எப்போ விற்பனைக்கு வரும்? பெட்ரோல் தங்கமா மாறிட்டு வருதே?
எனது வலைப்பூவில்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வரலாறு!
//நிரூபன் said...
இனிய காலை வணக்கங்கள்//
காலை வணக்கம் சொன்ன உங்களுக்கு மதிய வணக்கம்தான் சொல்லமுடிந்தது.
மாணவர்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்;
இதனை பகிர்தமைக்கு உங்களுக்கு நன்றிகள்
//Blogger சி.பி.செந்தில்குமார் said...
அண்ணன் இன்னைக்கு எந்திரிக்க 30 நிமிஷம் லேட் போல ஹி ஹி//
இல்ல, இது நேற்றே ப்ரோக்ராம் செய்தது.[Auto Publish]
//Blogger சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே.. இதெல்லாம் ஓக்கே.. நீங்க ஏதோ கண்டு பிடிச்சதா பதிவுலகுல பரபரப்பா பேசிக்கறாங்களே? அதென்ன? ஹி ஹி பப்ளீக்ல சொல்ல சங்கடமா இருந்தா தனி மெயில் இடவும் ஹி ஹி//
எனக்கெல்லாம் சிபியைப் போல், மறு பக்கங்கள் கிடையாது.ஹே ஹே!
//Blogger ♔ம.தி.சுதா♔ said...
முயற்சித்தால் முடியாதது எதுவுமே இல்லை...//
உண்மைதான்.
//Chitra said...
Super!!! Best wishes to them!//
நன்றி சித்ரா.
//Blogger விக்கி உலகம் said...
வாழ்த்துக்கள்...
கண்டுபிடிப்பை செய்த மாணவ செல்வங்களுக்கும்........
எங்களுக்கு தங்கள் பதிவு மூலம் தெரிவித்த தங்களுக்கும்...... வாழ்த்துக்கள்!//
நன்றி நண்பரே, இன்னைக்கு சிபி ஒரே உளரலா இருக்கு!
//Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அண்ணே.. இதெல்லாம் ஓக்கே.. நீங்க ஏதோ கண்டு பிடிச்சதா பதிவுலகுல பரபரப்பா பேசிக்கறாங்களே? அதென்ன? ஹி ஹி பப்ளீக்ல சொல்ல சங்கடமா இருந்தா தனி மெயில் இடவும் ஹி ஹி
இந்த டவுட் எனக்கும் இருக்கு! எல்லாம் அண்ணனோட கைங்கரியம் தான் போல!//
தல, உங்களுக்குமா இந்த டவுட்? ஓ, சிபி அண்ணனோட கைங்கரியம் தான்னு சொல்ல வருகிறீர்களா?
//Blogger கக்கு - மாணிக்கம் said...
அரசின் ஆதரவுடம் இதனை மேலும் சீரமைத்து தயாரிப்பு பணிகள் தொடங்கினால் நம் நாட்டில் நல்ல வரவேற்பை பெரும் திட்டமிது.
பன்னாட்டு பண முதலைகளை நம் ஒன்று சேர்ந்தால் துரத்தி அடிக்கலாம். 'அம்மாவின் ' அருள் இருந்தால் போதும் இப்போது.
மாணவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.//
வாங்க, வாங்க வாழ்த்தலாம்.
//Blogger சென்னை பித்தன் said...
//வரவிடுவார்களா பன்னாட்டு பண முதலைகள். //
சரியான கேள்விதான்.
மாணவர்களுக்கு வாழ்த்துகள்!//
நன்றி, தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும்.
//தமிழ்வாசி - Prakash said...
கண்டுபிடித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.... பகிர்ந்த உங்களுக்கு நன்றி.//
தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றி.
//Speed Master said...
அவர்களை பிரபல கார் நிறுவனங்களிடம் தங்களுடைய ஃபிராஜக்டை டெமோ செய்ய சொல்லுங்கள்
///வரவிடுவார்களா பன்னாட்டு பண முதலைகள். //
சில முதலாளிகள் இன்னும் புதிய கண்டுபிடுப்புகளை வரவேற்கின்றனர்//
நாமும் வரவேற்கலாம்.
//Mahan.Thamesh said...
மாணவர்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்;
இதனை பகிர்தமைக்கு உங்களுக்கு நன்றிகள்//
உங்கள் கருத்து பதிவிற்கு நன்றி.
என் வாழ்த்துக்கள்
பகிர்ந்தமைக்கு நன்றி
மாற்று எரிபொருள் கண்ட மாணவச்செல்வங்களுக்குப் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
ஜி.டி.நாயுடு வாழ்ந்த பூமியல்லவா கோவை. இன்னும் பல கண்டுபிடிப்புகள் கிடைக்க வாழ்த்துகிறோம்.
நெசமாவே அருமையான கண்டுபிடிப்பு... அந்த தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள் அந்த இளம் மாணவ பொறியாளர்களுக்கு. தென்காசி பக்கம் அலுவலக வேலையாக வருவீர்களா ???
வாழ்த்துக்கள் அவர்களுக்கு..
பணமுதலைகளை கூறு போடுங்கள்!!!
ஆக்சுவலி நான் கூட சக்கரமே இல்லாமல் ஒரு கார் கண்டுபிடித்தேன்..
யாரும் ஸ்பான்சருக்கு வராததால் நிறுத்திவிட்டேன்!!
இதை பற்றி முதல்வருக்கு தெரியப்படுத்தலாமே
Good ...informative..
காற்றில் ஓடும் காரா? நமக்கு தரையில் ஓடும் கார்தான் தெரியும் ஹி...ஹி...உண்மையிலேயே அருமையான கண்டுபிடிப்புதான்
அருமையான தகவல். மாணவ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்.
நன்றிகள்: ஆர்.கே.சதீஷ்குமார்
இராஜராஜேஸ்வரி
கந்தசாமி
Ponchandar
மைந்தன் சிவா
எல் கே
குணசேகரன்
ரஹீம் கஸாலி
தமிழ் உதயம்
மனிதனுடைய அறிவின் வளர்ச்சியை நினைத்துப்பார்க்கவே
முடியவில்லை!.....இந்த நான்கு விஞ்ஞானிகளின் புதிய
கண்டுபிடிப்பு வியத்தகு விடயம்.அவர்களுக்கு எனது பாராட்டுக்களும்
மனமார்ந்த வாழ்த்துக்களும்...அருமையான தகவல் தந்த தங்களுக்கும்
மிக்க நன்றி பணிதொடரட்டும்........
@அம்பாளடியாள் :
நன்றி சகோ, தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும்.
கார் எந்த எரிபொருளைப் பயன்படுத்தா விட்டாலும், காற்றை அடைக்க ஏதாவது ஒரு எந்திரத்தைப் பயன்படுத்துவோம், அதற்க்கு மின்சாரமோ, டீசலோ தேவைப் படும், எவ்வளவு சக்தி தேவைப் படுகிறது, நேரடியாக டீசலையோ, பேட்டரிகளையோ பயன்படுத்துவதை விட இது சிக்கனமாக [Efficient] உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
Post a Comment