கோவை SRKV கல்லூரியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி. |
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்தா பவ்யமா உட்கார்ந்து கேட்பாங்க. நீதிமன்றங்களில் வாதாடும் வக்கீல்களுக்கும், பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பாடம் நடத்திட அழைக்கப்பட்டேன்.எப்படி இருந்தது என் அனுபவங்கள்? பார்க்கலாம்.
நெல்லையில் வக்கீல்கள் சிலர் அரசு வக்கீலாக பணி புரிய, TNPSC தேர்வு எழுத பயிற்சி பெற்று வருவதாகவும், ஒரு நாள் உணவு கலப்படம் மற்றும் உணவு கலப்பட தடை சட்டம் சம்பந்தமாக விளக்க வரவேண்டுமென்று, நெல்லை அரசு உதவி வழக்கறிஞரின் அன்பு கட்டளை. நீதிமன்றங்களில், சாட்சி கூண்டில் நிறுத்தி வைத்து, கேள்வி கேட்டே பழக்கப்பட்டவர்கள் ஆச்சே, நாமும் சென்று சில கேள்விகள் கேட்கலாமே என்று அழைப்பை ஏற்றுகொண்டேன்.
நெல்லையில் வக்கீல்களுக்கு நடைபெற்ற பயிற்சி. |
வழக்கில் வாதாடியே பழக்கப்பட்டவர்கள் அங்கும் நன்றாய் வாதாடினார்கள். உணவு கலப்பட தடை சட்டம்-கலப்படம் பற்றி என்ன சொல்கிறது, தண்டனைகள் என்ன, மிக சமீபத்தில் வந்துள்ள பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் என்ன சொல்கிறதென சென்றது அந்த வகுப்பு. கட்சிகாரர்களுக்கே வாதாடி, வழக்கை தம் பக்கம் வளைக்கும், வாதத் திறமை படைத்தவர்கள், அரசு தரப்பில் அந்த வழக்குகளை தொடுத்திடவும், வாதங்களை எடுத்து வைத்திடவும், நாங்கள் படும் சிரமங்கள், நடை முறை சிக்கல்கள் பற்றி தெரிந்து கொண்டு வியந்தனர்.
பயிற்சி உணவு ஆய்வாளர்களுக்கு நடைபெற்ற வகுப்பு. |
கோவை SRKV கல்லூரியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி-அருகில் முனைவர் திரு.சுப்பிரமணியன் . |
அடிப்படை சுகாதாரக் கல்வி முதல், அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் கலப்படம் குறித்த அடிப்படை விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தேன். ஏனெனில்,ஒரு ஆசிரியருக்கு எடுத்துரைப்பது, ஓராயிரம் மாணவர் மனங்களை சென்றடையும்.
ஆஹா, என்ன ஒரு எழுச்சி, ஆசிரியர்கள் மத்தியில். வந்திருந்தோரில் ஒரு சகோதரி,சிறுமுகையிலுள்ள தொழிற்சாலை கழிவு நீர், ஓடுகின்ற ஆற்று நீரில் கலந்து உருவாக்கும் சுற்றுச்சூழல் சீர்கேட்டினை, அவர் வாழும் குக்கிராமத்தில் எதிர்த்திடும் அமைப்பு ஒன்றை வழி நடத்துவதாக சொல்லி, அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் எப்படி, கோவை வரை குடி நீரை பாழாக்குகிறது என்று பரிதவிப்புடன் எடுத்துரைத்தார்.
ஆஹா, என்ன ஒரு எழுச்சி, ஆசிரியர்கள் மத்தியில். வந்திருந்தோரில் ஒரு சகோதரி,சிறுமுகையிலுள்ள தொழிற்சாலை கழிவு நீர், ஓடுகின்ற ஆற்று நீரில் கலந்து உருவாக்கும் சுற்றுச்சூழல் சீர்கேட்டினை, அவர் வாழும் குக்கிராமத்தில் எதிர்த்திடும் அமைப்பு ஒன்றை வழி நடத்துவதாக சொல்லி, அந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் எப்படி, கோவை வரை குடி நீரை பாழாக்குகிறது என்று பரிதவிப்புடன் எடுத்துரைத்தார்.
கோவை SRKV கல்லூரியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி. |
இன்னொரு ஆசிரியரோ, அளவுக்கு அதிகமாய் எடுத்துக்கொள்ளும் பாரசீட்டமால் மாத்திரைகளின் பின் விளைவாய் புற்று நோய் உருவாவது குறித்து கவலை கொண்டார். (அது பற்றி தனி ஒரு பதிவே இடலாம்).ஆஹா, அந்த சகோதரிக்கு 'உள்ள' உணர்வு, நம் ஒவ்வொருவரிடமும் இருந்து விட்டால், இந்தியா இந்நேரம் எங்கோ சென்றிருக்கும்!

47 comments:
ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதமாய் ! உங்களின் எழுத்து மிக வசீகரமாக மாறி கொண்டு வருகிறது.
அந்த சகோதரி சொன்னதை இன்னும் விளக்கி இருந்தால், கோவையில் இருக்கும் மற்றவர்களுக்கு தெரிய வரும்.சகோதரியின் உணர்விற்கு பாராட்டுகள்...அவர்களை போன்றோரை உற்சாக படுத்த வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
அண்ணனை நாங்க என்னைக்கு ஆஃபீசரா பார்த்தோம்? ஹி ஹி
அண்ணே.. அப்படியே ஃநெல்லை புரோகிராம் பற்றி நிகழ்ச்சி நிரல் உட்பட டீட்டெயில் சொன்னா ஒரு பதிவா போடலாம்னு ஐடியா.. அண்ணனுக்கு எப்போ வசதி?
அருமையான அனுபவங்கள் தலைவரே...!
அதிகப்படியான பாரசிட்டமால் எடுத்தால் புற்றுநோய் வருமா? புதிய தகவலாக இருக்கிறதே? அதிகளவு பாரசிட்டமால் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்..!
நீதிமன்றங்களில், சாட்சி கூண்டில் நிறுத்தி வைத்து, கேள்வி கேட்டே பழக்கப்பட்டவர்கள் ஆச்சே, நாமும் சென்று சில கேள்விகள் கேட்கலாமே //அனுபவம்..புதுமை... வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.
ஆஹா, அந்த சகோதரிக்கு 'உள்ள' உணர்வு, நம் ஒவ்வொருவரிடமும் இருந்து விட்டால், இந்தியா இந்நேரம் எங்கோ சென்றிருக்கும்!//
அனைவரின் தவிப்பும் அதுதானே.!
//Kousalya said...
ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதமாய் ! உங்களின் எழுத்து மிக வசீகரமாக மாறி கொண்டு வருகிறது.
அந்த சகோதரி சொன்னதை இன்னும் விளக்கி இருந்தால், கோவையில் இருக்கும் மற்றவர்களுக்கு தெரிய வரும்.சகோதரியின் உணர்விற்கு பாராட்டுகள்...அவர்களை போன்றோரை உற்சாக படுத்த வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா//
பதிவராய் பல செய்திகள் சொல்ல நினைத்தாலும்,செய்யும் பணி,சில இடைவெளி கொணர்கிறது.
//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணனை நாங்க என்னைக்கு ஆஃபீசரா பார்த்தோம்? ஹி ஹி//
அப்படி சொல்லுங்க. இன்னைக்கு உங்களுக்கு மைனஸ் ஓட்டு போடமாட்டேன்.
//சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே.. அப்படியே ஃநெல்லை புரோகிராம் பற்றி நிகழ்ச்சி நிரல் உட்பட டீட்டெயில் சொன்னா ஒரு பதிவா போடலாம்னு ஐடியா.. அண்ணனுக்கு எப்போ வசதி?//
போடுங்க, போடுங்க, ஃபோன்ல பேசுறேன்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமையான அனுபவங்கள் தலைவரே...!//
நன்றி தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அதிகப்படியான பாரசிட்டமால் எடுத்தால் புற்றுநோய் வருமா? புதிய தகவலாக இருக்கிறதே? அதிகளவு பாரசிட்டமால் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்..!//
ஆம், நான் அன்று அதை கேள்விப்பட்டவுடன், http://www.ibloghealth.net/paracetamol-causes-blood-cancer.html
என்ற தளத்தில் பார்த்தேன்,சார்.மிகவும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவுமிருந்தது.
//இராஜராஜேஸ்வரி said...
நீதிமன்றங்களில், சாட்சி கூண்டில் நிறுத்தி வைத்து, கேள்வி கேட்டே பழக்கப்பட்டவர்கள் ஆச்சே, நாமும் சென்று சில கேள்விகள் கேட்கலாமே //அனுபவம்..புதுமை... வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.//
நன்றி சகோ,தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்.
//இராஜராஜேஸ்வரி said...
ஆஹா, அந்த சகோதரிக்கு 'உள்ள' உணர்வு, நம் ஒவ்வொருவரிடமும் இருந்து விட்டால், இந்தியா இந்நேரம் எங்கோ சென்றிருக்கும்!//
அனைவரின் தவிப்பும் அதுதானே.!//
எதிர்பார்ப்புகள் நிறைவேறும், சகோ.
அப்போ பதிவர்கள் சந்திப்பின்போது வருகின்ற பதிவர்களுக்கு இதே மாதிரி class எடுப்பீங்களா ?
அனுபவ பகிரல் சூப்பர்...baas
பரசிட்டமோல் பற்றி நண்பர் மதி சுதா ஒரு பதிவிட்டிருந்ததாக ஞாபகம் பாஸ் நீங்களும் ஒன்று போடுங்கள்
ஹிஹி ஏன் இதுக்க சி பிய இழுக்குறீங்க??
மழைக்கு கூட ஒதுங்காத பய புள்ள அவரு!!
அண்ணே, உங்கள பெரிய ஆள் னு நெனைச்சேன்! நீங்க ரொம்ப பெரிய ஆளா இருக்கீங்க!
arumai'yaa irukku sir....!!!
உங்க ஒவ்வொரு பதிவும் நாளுக்கு நாள் மெருகேறுது வாழ்த்துக்கள் ஆபீசர்....!!!
ஆபீசர், சிபி பய என்னமோ பதிவர் சந்திப்பு பற்றி பதிவு போடபோறேன்னு கமெண்ட்ஸ் போட்டுருக்கான் கவனத்தில் கொள்ளவும்.
உங்களை மாதிரி அன்பான, கண்டிப்பான அரசாங்க அதிகாரி எல்லா துறைகளிலும் அமைந்து விட்டால் கலாமின் 2020 கனவு விரைவில் மலரும்....
தல பதிவும் உங்க பகிர்வுகளும் அருமை!
//bala said...
அப்போ பதிவர்கள் சந்திப்பின்போது வருகின்ற பதிவர்களுக்கு இதே மாதிரி class எடுப்பீங்களா ?//
எடுத்திட்டா போச்சு! ஆனா, பதிவர்களை வரவிடாமல் தடுக்க இது நீங்கள் செய்யும் சதியா?
//மைந்தன் சிவா said...
அனுபவ பகிரல் சூப்பர்...baas//
பரிட்ச்சை நல்லா எழுதியாச்சா?ஆல் த பெஸ்ட்,சிவா.
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அண்ணே, உங்கள பெரிய ஆள் னு நெனைச்சேன்! நீங்க ரொம்ப பெரிய ஆளா இருக்கீங்க!//
உங்ககிட்ட நெருங்க முடியுமா பாஸ்!
//MANO நாஞ்சில் மனோ said...
arumai'yaa irukku sir....!!!//
என்ன இன்னைக்கு ஆங்கில கமெண்ட்? மறுபடியும் கீ போர்ட்ல டீ கொட்டிடுத்தா!
//MANO நாஞ்சில் மனோ said...
உங்க ஒவ்வொரு பதிவும் நாளுக்கு நாள் மெருகேறுது வாழ்த்துக்கள் ஆபீசர்....!!!//
டிஸ்கி படிக்கலயா?
//MANO நாஞ்சில் மனோ said...
ஆபீசர், சிபி பய என்னமோ பதிவர் சந்திப்பு பற்றி பதிவு போடபோறேன்னு கமெண்ட்ஸ் போட்டுருக்கான் கவனத்தில் கொள்ளவும்.//
பச்ச புள்ளைக்கு தங்க ரூம் வேணுமாம். நல்ல வேளை வேற ஒண்ணும் கேட்கல!
//மொக்கராசா said...
உங்களை மாதிரி அன்பான, கண்டிப்பான அரசாங்க அதிகாரி எல்லா துறைகளிலும் அமைந்து விட்டால் கலாமின் 2020 கனவு விரைவில் மலரும்....//
தங்கள் கனவு விரைவில் நனவாகும்.
//விக்கி உலகம் said...
தல பதிவும் உங்க பகிர்வுகளும் அருமை!//
நன்றி நண்பரே!
நல்ல பதிவு, எல்லோருக்கும் விழிப்புணர்ச்சி வரணும். தொடர்ந்து எழுதுங்க அண்ணே. (எப்பிடி ஆபிசர்-அ கட் பண்ணிட்டேன) அண்ணே ஓகே தானே?
நல்ல தகவல்கள். ஜுரத்துக்கு, வழிகளுக்கு உடனடி தீர்வாக கை வைத்திய ரேஞ்சுக்கு பெரியவர்கள் மற்றும் குழைந்தைகளுக்குக் கூட கொடுக்கபப்டும் பாராசிடமால் புற்று நோய் வரக் காரணமாகுமா? அதைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதுங்க.
அனைத்தையும் படித்து மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் போல...
தங்கள் அனுபவத்தோடு கூடி இந்த விஷயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
பகிர்வுக்கு நன்றி..
உங்கள் அனுபவ பகிர்வு அருமை சார் .
பாடம் நடத்துவது ஒரு கலை சார் . இனிது இனிது கற்பித்தல் இனிது . வாழ்த்துக்கள் சார்
Super!!! Super!!! Super!!! Super!!! Super!!! Super!!!
தொடரட்டும் உங்கள் பணி .... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
//ஜ.ரா.ரமேஷ் பாபு said...
நல்ல பதிவு, எல்லோருக்கும் விழிப்புணர்ச்சி வரணும். தொடர்ந்து எழுதுங்க அண்ணே. (எப்பிடி ஆபிசர்-அ கட் பண்ணிட்டேன) அண்ணே ஓகே தானே?//
நீங்க பதிவ முழுசா படிச்சிருக்கீங்க!
வயச மறைக்க முடியுமா சகோதரரே! ok ok
//virutcham said...
நல்ல தகவல்கள். ஜுரத்துக்கு, வழிகளுக்கு உடனடி தீர்வாக கை வைத்திய ரேஞ்சுக்கு பெரியவர்கள் மற்றும் குழைந்தைகளுக்குக் கூட கொடுக்கபப்டும் பாராசிடமால் புற்று நோய் வரக் காரணமாகுமா? அதைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதுங்க.//
நிச்சயம் நண்பரே!
//# கவிதை வீதி # சௌந்தர் said...
அனைத்தையும் படித்து மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் போல...
தங்கள் அனுபவத்தோடு கூடி இந்த விஷயங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
பகிர்வுக்கு நன்றி..//
அனைத்தையும் படித்து மனப்பாடம் செய்து வைங்க, வந்து கேள்வி கேட்கிறேன்.
//Mahan.Thamesh said...
உங்கள் அனுபவ பகிர்வு அருமை சார்.பாடம் நடத்துவது ஒரு கலை சார் . இனிது இனிது கற்பித்தல் இனிது . வாழ்த்துக்கள் சார்//
நன்றி சகோதரரே!
//Chitra said...
Super!!! Super!!! Super!!! Super!!! Super!!! Super!!!
தொடரட்டும் உங்கள் பணி .... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!//
நன்றி சித்ரா!
தங்களின் அனுபவ பதிவு நன்றாக இருந்தது சார். பாரசிட்டமால் குறித்து நீங்களே ஒரு பதிவு எழுதுங்க!!
எழுதுகிறேன்.
நான் ரொம்ப லேட் ..
கற்றலை விட கற்பித்தல் இனிது இதை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் ..
அனுபவப் பகிர்வைப் படங்களுடன், அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்.
உங்கள் பணி இன்னும் சிறக்கட்டும் சகோ!
Post a Comment