சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை எல்லோரும் பார்ப்பது போல் நானும் பார்த்தேன் என்றாலும், தேர்வு முடிவுகள் குறித்த பத்திரிக்கை மற்றும் ஊடகச் செய்திகளில் என்னைத திரும்பி பார்க்க வைத்த இரு விஷயங்கள் இவை.
ஐநூறு மதிப்பெண்களில் நானூற்று தொண்ணூற்று ஆறு, கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு, மாநில அளவில் ஐந்து மாணவர்கள் முதலிடம், பதினோரு பேர் இரண்டாமிடம், இருபதுக்கும் மேற்பட்டோர் மூன்றாமிடம் என்று வந்த செய்திகளுக்கு நடுவில், நெல்லை மாவட்டத்தில் உள்ள இரு பள்ளி மாணவர்களின் வித்யாசமான சாதனைகள், அப்பள்ளிகளைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள என் ஆவலைத் தூண்டியது.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரும், விடுதலைக் கவி பாரதியும் பயின்ற பள்ளி என்ற சிறப்பு ஒரு புறமிருக்க, நெல்லை மாவட்டத்திலேயே, முதல் நல்லாசிரியர் விருதினை, அப்போதைய ஜனாதிபதி மரியாதைக்குரிய திரு,வி.வி.கிரி அவர்களின் பொற்கரங்களால் பெற்ற ஆசிரியர் திரு.வேலாயுதம் பிள்ளை பணி புரிந்த பள்ளி என்பதும் கூடுதல் சிறப்பு. இவை தவிர, இந்நாள், முன்னாள் நீதிபதிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பலர் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள். இப்பளியிலும் கணக்கு பாடத்தில் இரு மாணவர்களும்,சமூக அறிவியலில் ஒரு மாணவரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர்.
அதிலென்ன விஷேசம் என்கிறீர்களா?மாதிரித் தேர்வுகளில் மதிப்பெண் குறைந்தாலே, மனசாட்சியின்றி வெளித்துரத்தும் ஆங்கிலவழி போதனைப் பள்ளிகள் நடுவே, பிற பள்ளிகளில் குறைவான மதிப்பெண் எடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள் பலருக்கும் சரணாலயம் இப்பள்ளி. அப்படி தேர்ந்தெடுத்து(!) சேர்க்கப்படும் மாணவர்களைக் கொண்டு, இந்த வருடம், 485,484,483,482 மதிப்பெண்கள் பெற்ற நான்கு மாணவர்களை இப்பள்ளி உருவாக்கியுள்ளது பெரும் சாதனையே!
இப்பளியின் முன்னாள் மாணவர்கள் அமைத்துள்ள மன்றம், இப்பள்ளியில், தற்போது பயிலும் மாணவர்களுக்கென, 1.5 லட்சத்தில் கணினி வசதி செய்து கொடுத்துள்ளதும், எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ள, நூற்றைம்பதாவது ஆண்டு நிறைவு விழாவிற்கென, ஆறு லட்ச ரூபாய் செலவில், அலங்கார வளைவு அமைத்துள்ளதும் கூடுதல் செய்திகள்.
பாரதி பயின்ற பள்ளி என்பதால், பள்ளிக்கருகிலேயே, பாரதிக்கோர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில், வ.உ.சிக்கும் இப்பள்ளியில் சிலை நிறுவப்பட உள்ளது.
கடைசியாக ஒன்று. பள்ளியின் பெயர் ம.தி.தா.பள்ளி.
இப்படி வாசிக்கலாமோ: மதி- தா அதாவது அறிவைத் தா.அறிவை ஊட்டும் பள்ளி.
அரும்பெரும் சேவைகள் செய்து வரும் அமர் சேவா சங்கம்: கடைசியாக ஒன்று. பள்ளியின் பெயர் ம.தி.தா.பள்ளி.
இப்படி வாசிக்கலாமோ: மதி- தா அதாவது அறிவைத் தா.அறிவை ஊட்டும் பள்ளி.
ஆய்க்குடி என்னும் ஓர் அருமையான கிராமம், நெல்லை மாவட்டம், குற்றாலதிற்கருகில் உள்ளது. அங்கு, சர்வதேச மாற்றுதிரனாளிகள் ஆண்டான, 1981 ம் ஆண்டில், திரு.ராமகிருஷ்ணன் என்பவர் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து துவக்கியதுதான் அமர்சேவா சங்கம்.
1975ம் ஆண்டு, கடற்படை அதிகாரிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த பொறியியல் படிப்பின் நான்காம் ஆண்டு மாணவர் ராமகிருஷ்ணன் ஒரு விபத்தில் சிக்கி ஊனமுற்றார். ஐந்து வருட, சுய முயற்சியில், ஊனத்தை வெல்லும் மனோதைரியம் பெற்று, தன வாழ்நாளினை, அர்த்தமுள்ளதாக கழிக்கும் நோக்கத்தில் துவக்கியதுதான் அமர்சேவா சங்கம். அமர் சவா சங்கம்- அதற்கும் ஓர் அர்த்தம் உண்டு:
இங்கு, மறுவாழ்வு மையம், மாற்று திறனாளிகளுக்கான விடுதி, மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்கள் தயாரிக்குமிடம் என பல வசதிகள் உள்ள வளாகத்தில், சிவா சரஸ்வதி உயர்நிலை பள்ளி ஒன்றும் உள்ளது. அப்பள்ளியிலிருந்து முதல் முறையாக, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 23 மாணவர்கள், நூறு சதவிகித தேர்ச்சி பெற்றதுடன், பல சாதனைகளும் படைத்துள்ளனர்.

34 comments:
my hearty wishes for all those who passed the examinations
கண்டிப்பா பாராட்டலாம்.
//நூற்றைம்பதாவது ஆண்டு நிறைவு விழாவிற்கென, ஆறு லட்ச ரூபாய் செலவில், அலங்கார வளைவு அமைத்துள்ளதும் கூடுதல் செய்திகள்//
இவ்வளவு செலவு செய்து அலங்கார வளைவு செய்ததற்கு பதிலா கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்னும் தொழில்நுட்ப வசதிகள் அதிகம் செய்து கொடுத்து இருக்கலாம்.
பரீட்சையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாஸ்
பரீட்சையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாஸ்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரும், விடுதலைக் கவி பாரதியும் பயின்ற பள்ளி என்ற சிறப்பு//
மிக அருமையான சிறப்பான பகிர்வுக்கு பாரட்டுக்கள் ஐயா.
மாணவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அவர்கள் வாழ்வில் மேலும் சிறப்புபெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
வெற்றி பெற்ற அனைத்து மாணவ மணிகளுக்கும் வாழ்துக்கள். இதுபோன்ற செய்திகள் ஊடங்களில் அதிகம் பேசப்படுவது இல்லை. நீங்கள் ஒரு பதிவாக இங்கு அளித்துள்ளது சிறப்பு.
அண்ணன் ரெகுலரா 4 மணிக்கு எந்திரிச்சிடறார்.. 5.10 டூ 5.20 க்குள்ள பதிவு போட்டுடரார்.. நீதி..அதிகாலையில் துயில் எழுக.. ஹி ஹி
வெற்றி பெற்ற அதிலும் எல்லோரும் நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகி இருக்காங்க ..அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
சிறப்பான பகிர்வு, அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தலைவரே வாழ்த்துக்கள்! தேர்வில் ஜெயித்து காட்டிய குழந்தைகளுக்கும் அதை பதிவாக்கிய தங்களுக்கும் நன்றி!
பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், விசேட தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ.
அவர்களின் எதிர்காலம் வளமானதாக அமைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
உள்ளூர் மாணவர்களை இணையம் மூலம் எங்களுக்கு அறிமுகம் செய்த உங்களின் நற் பணிக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் ஐயா.
ஐநூறு மதிப்பெண்களில் நானூற்று தொண்ணூற்று ஆறு, கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு, மாநில அளவில் ஐந்து மாணவர்கள் முதலிடம், பதினோரு பேர் இரண்டாமிடம், இருபதுக்கும் மேற்பட்டோர் மூன்றாமிடம் என்று வந்த செய்திகளுக்கு நடுவில், நெல்லை மாவட்டத்தில் உள்ள இரு பள்ளி மாணவர்களின் வித்யாசமான சாதனைகள், அப்பள்ளிகளைப்பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள என் ஆவலைத் தூண்டியது.
உண்மையில் அருமையான சாதனை சார்! எல்லா மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்! உங்கள் ஊரின் நிலைமைகளை இவ்வளவு அழகாக சொல்லிவருகிறீர்கள்!
நீங்கள் இணையத்தில் ஆற்றும் இப்பணி,ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியுமா? அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
உண்மையில் இளவயதினரிடையே படிக்கம் ஆர்வம் வழந்து வருகிறது
நல்லதொரு எதிர்காலம் அவர்களுக்கு அமையட்டும்
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
நாமே ராஜா, நமக்கே விருது-8
http://speedsays.blogspot.com/2011/05/8.html
சாதனை செய்திருக்கும் வித்தியாசமான பள்ளிகளின் நல்ல அறிமுகம்!சம்பந்தப் பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்!
பாராட்டுவது மாத்திரம் அல்ல ஆபீசர் இப்படிபட்ட பள்ளிகளை ஊக்குவிக்கவும் வேண்டும்...
அப்பள்ளியினருக்கு வாழ்த்துகள்....
உங்களுக்கும் நன்றி ஆபீசர்....
பாராட்டுகள் நண்பரே.
எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்
வெற்றிப்பெற்ற அனைவருக்கும் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்...
ம.தி.தா. பள்ளி பற்றி மிகவும் பெருமையாக இருக்கிறது. இப்பள்ளியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அமர் சேவா சங்கம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன்...முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அத்தனை மாணவர்களும் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மாணவி விசாலினி திறமை வியக்க வைக்கிறது.
இத்தனையும் நம்ம நெல்லையில் என்கிறபோது சந்தோசம் அதிகமாகிறது.
எல்லா செய்திகளையும் அக்கறையாக, ஆர்வமாக சேகரித்து வெளியிட்ட உங்களுக்கு என் நன்றிகள் +பாராட்டுகள் அண்ணா .
மாணவர்களுக்கு பாராட்டுகள்! உங்களுக்கும் தான்! மனம் நெகிழவைக்கும் பதிவு, சோம்பேறிகளாய் திரிந்து கொண்டு, பெற்றவர்கள் செய்து தரும் வசதிகளை கூட ஏதோ போல அனுபவித்து வாழும் பல மாணவர்களுக்கும் ஒரு பாடம் இது..
http://karadipommai.blogspot.com/
சிறப்பான பகிர்வு, அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
பாரட்ட வார்த்தைகள் இல்லை
கண்களில் கண்ணீர் முட்டுகிறது
அணைத்து மாணவகண்மணிகளுக்கு
வாழ்த்துக்களும்
வேண்டுதலும்
வாழ்க வளமுடன்
சிறப்பான பகிர்வு,....repeatu...
25th vadai enakkey..:)
பிற பள்ளிகளில் குறைவான மதிப்பெண் எடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள் பலருக்கும் சரணாலயம் இப்பள்ளி.//
ithu thaan migach chirappu
மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..
திறமையான மாணவர்கள் குறித்த உருப்படியான பதிவு. நன்றி!!
DEAR SIR,
உங்கள் எழுதுக்களை வாசித்து மிக பயன் பெறுகிறேன் ...குறிப்பாக நெல்லை மண் சார்ந்த செய்திகள் ...என்னை போன்ற சொந்த மண்ணை விட்டு அயல் தேசத்தில் வசிக்கின்றவர்களுக்கு ஊர் சார்ந்த செய்திகள் கிடைக்க உதவி யாக
உள்ளீர்கள்...நன்றி வாழ்த்துக்கள்
அன்புடன்
ஹசன்கனி
//அண்ணன் ரெகுலரா 4 மணிக்கு எந்திரிச்சிடறார்.. 5.10 டூ 5.20 க்குள்ள பதிவு போட்டுடரார்.. நீதி..அதிகாலையில் துயில் எழுக..//
agreeeeeeeeeeeeed
பரீட்சையில் வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....இவர்கள் மென்மேலும்
சாதனைகள்புரிய இறையருள் கிட்டட்டும்!...நல்ல பகிர்வு
பகிர்வுக்கு நன்றி.
நல்ல பதிவு ... வாழ்த்துக்கள்.. !
Sir, This is a very good attempt in blog world. please enable Feed burner "Email Subscription" widget in your website. in this way we can read all our posts on time.
Thanks
வந்து வாழ்த்திய உள்ளங்கள், கருத்துக்கள் வழங்கியமைக்கு நன்றி.
Post a Comment