இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 13 June, 2011

பதினேழாம் தேதி பதினெட்டுப் பட்டியும் கூடுதாக்கும்!


பதிவிடுதல்,பதிவுகளைப் படித்தல், பின்னூட்டம் இடுதல், பிடித்தால் ஓட்டும் இடுதல் என்றிருந்த நாம், நெல்லையில் ஒரு நாள், நம் பதிவுலக சொந்தங்களை நேரில் கண்டு, நம் நெஞ்சார்ந்த  நட்புகளைப் பரிமாறிக்  கொள்ளலாம் என்று வந்த எண்ணங்களின் வடிவமே, நெல்லையில், 17.06.2011இல், பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கான அடித்தளம் அமைத்தது.
                              பஹ்ரையினிலிருந்து, பதிவுலக தாதா சாரி பாபா, நாஞ்சில் மனோ  மற்றும் 'அமெரிக்கா ஓ அமெரிக்கா'விலிருந்து  பின்னூட்ட புயல் கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா ஆகியோர் தாய்நாடு வருவதை அறிந்ததும் தீவிரம் அடைந்தது  இந்த  முடிவு. (வாங்க, வெளிநாட்டிலிருந்து கொண்டா வீர வசனம் பேசுறீங்க!)
சரி நெல்லையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஒரு பத்து பேர் தேறுவோமா என்று எண்ணிக்கொண்டு, எனக்கு அறிமுகமான நண்பர்களுக்கெல்லாம் மெயில் அனுப்பி, அதனை அவர்கள் நண்பர்களுக்கும் சுற்றுக்கு அனுப்பக் கேட்டுக்  கொண்டேன். 
அதன் எதிரொலியாய் வந்த மெயில்களைக் கண்டு மலைத்துப்  போனேன். கடந்த வாரம், இம்சை அரசன் பாபுஉருவிய வாளோடும் உற்ற துணைக்கு இல்லாளோடும்  நெல்லைக்கு வந்து சேர்ந்தார் .  மனதோடு மட்டும் சகோ கௌசல்யா, நெல்லை நண்பன்  ராம்குமார் ஆகியோரும் ஒரு இனிய மாலை  வேளையில் சந்தித்து, பதிவர் சந்திப்பிற்கான முன்னேற்பாடுகள் குறித்து சிந்தித்தோம். 
தொடர்ந்து, அமெரிக்க புயல் சித்ரா நெல்லையில் மையம் கொண்டவுடன், கடந்த வெள்ளியன்று  மாலை,  மூத்த சகோதரர் வெடிவால் சகாதேவன், சகோ கௌசல்யா ஆகியோர் கலந்து பேசி நிகழ்ச்சிக்கான இறுதி வடிவம் கொடுத்துள்ளோம். 
17 .06 .11  காலை சரியாக பத்து மணிக்கு, நெல்லை சந்திப்பிலுள்ள, ஜானகிராம் ஹோட்டலின்  மிதிலா ஹால்  A/C யில் நடை பெற உள்ள நிகழ்ச்சி நிரல்: 

காலை 10.00 மணி           -       சந்திப்பு நிகழ்ச்சி. 

                                                        பதிவர்கள் அறிமுகம். 

  காலை 11.00 மணி                வரவேற்கும் குளிர்பானம்.

                                                        கோமாளி செல்வா நிமிடங்கள்.   

  காலை 11.15 மணி                கலந்துரையாடல். (மட்டுமே)


 பிற்பகல் 1 .00 மணி                உணவு உலகம்.
                                                        சூடான சூப், சுவையான அல்வா 
                                                        பஃபே உணவு, ஐஸ் கிரீம்.
                 (மெனு தெரிந்துகொள்ள,  தனி மெயிலில் கேட்கலாம்)
பதிவர்கள் குறிப்பெடுக்க,பதிவுலக சொந்தங்களின் விபரங்கள் குறித்திட, ஓலைச்சுவடியும், எழுத்தாணியும் மேஜை மேல் வைக்கபட்டிருக்கும். பதிவர்கள் பதிவு செய்யும் கருத்துக்களை(அளும்பைப்)பதிவு செய்ய, புகைப்படக்கலைஞர்  வகையாய் வலம் வருவார். புகைப்படத்திற்கு முகம் காட்ட சிலர் விரும்பாமல் இருந்தால், அவர்கள் அமர, சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும்.  
நிகழ்வுகளை நம் பதிவுலக நண்பர்கள் Online இல் கண்டு களித்திட, நாற்று. நிரூபன் ஏற்பாடு செய்துள்ளார்.   இது தொடர்பாக நிரூபன் அனுப்பியுள்ள மெயில்:
பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய பதிவுலக உறவுகளே!
நெல்லையில் வரும் 17.06.2011 அன்று இடம் பெற உள்ள பதிவர் சந்திப்பினை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான விபரங்கள்,
நேரடி ஒளிபரப்பினை http://www.livestream.com/tamilnadubloggers எனும் முகவரியூடாக உறவுகள் அனைவரும் கண்டு களிக்கலாம்.
அனைத்துலகெங்கும் பரந்து வாழும் உள்ளங்களிற்கு விருந்தளிக்கும் நோக்கிலும், பதிவர் சந்திப்பிற்கு வருகை தர முடியாத உறவுகளிற்கு நேரடித் தரிசனம் கிடைக்கும் வண்ணமும், இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளோம்,
நேரஞ்சலானது இந்திய நேரம் காலை 6.00 AM இல் இருந்து ஆரம்பமாகும், நேரடி அஞ்சல் மூலமும் பதிவர் சந்திப்பினைத் தரிசிக்க முடியாத உறவுகள், இந்த முகவரியில் SAVE பண்ணப்பட்டிருக்கும் சந்திப்பின் தொகுப்புக்களைப் பார்த்து மகிழலாம்!
தமிழால் தமிழோடு தரணியெங்கும் இணைந்திருப்போம்,
நேசமுடன்,
நிரூபன்.
 பதிவர்களுக்கு அனுமதி இலவசம்.
பதிவர் சந்திப்பிற்கு வருகை புரிந்திட இசைவு தெரிவிதுள்ளவர்கள்வலைச்சரம்- சீனா ஐயா.  
அட்ரா சக்க.    -  செந்தில்.
வெடிவால்-சகாதேவன்.

ஜோஸபின் பாபா  

நிலா அது வானத்து மேல!- ஸ்டார் ஜான்
 இவர்களுடன், நாமெல்லாம் எதிர்பார்க்காத, பிரபல  பதிவுலக சீனியர் ஒருவரும், சென்னையிலிருந்து, சில சீனியர் பதிவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்களென்று  உளவுத்துறை தகவல்கள் உலா வருகின்றன.  சரியான விடை முதலில் வந்து சொல்பவருக்கு, பதிவர் சந்திப்பில், கூடுதல் அரை கிலோ அல்வா.
வர மனதில் ஆசையிருந்தும், பணிச்சுமை,  பக்கத்தில் இல்லாமை காரணமாய், வாழ்த்து செய்தி அனுப்பியுள்ள நெஞ்சங்கள்: 
பன்னிக்குட்டி ராம்சாமி
கூட்டாஞ்சோறு 
                         வாழ்த்துக்கள் வாஞ்சனையுடன் ஏற்கப்படும்.
டிஸ்கி-1:புதிதாய் வர இருப்பவர்கள்,13.06.11குள்,unavuulagam@gmail.com மின்னஞ்சலில் பதிவு செய்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்திட உதவிடும்.  டிஸ்கி-2:நெல்லை, குற்றாலம் சுற்றி பார்க்க,  அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும். 
டிஸ்கி-3: இந்த சந்திப்பை  சரித்திரமாக்கிட,பங்கேற்கும் பதிவர்கள் சார்பில்,  சிறு சமூகசேவை ஒன்று செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாம் சந்திக்கும்போது அது பற்றி சிந்திக்கலாம்!
டிஸ்கி-4 :"நாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க.!" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு (எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா! பின்னூட்டம்  பார்க்க ), இந்த பதிவின் ஹிட்ஸ் அத்தனையும் சமர்ப்பணம்.
வேண்டுகோள்:  இது ஒரு குடும்ப விழா. குதூகலத்திற்கு ’எல்லைகள் நமக்கு இல்லை’-அடுத்தவர் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்காதவரை!. அரங்கினுள் அன்பு மட்டுமே அனுமதிக்கப்படும், வம்பு விலக்கியே வைக்கப்படும். 
Follow FOODNELLAI on Twitter

91 comments:

சி.பி.செந்தில்குமார் said...

மொத ஓசி சோறு

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில் வைக்கறதுல அண்னனை அடிக்க ஆள் இல்லை.. அண்ணன் நல்லாதான் வெச்சுக்கறாரு ஹி ஹி

உணவு உலகம் said...

அண்ணே வணக்கம்னே! பதிவர் சந்திப்பில் உங்கள் பங்கு நிறைய இருக்குங்க. அதனால, ஓசி சோறுன்னு நினைக்காதீங்க. வாங்க, வந்து உங்கள் ஆசிகளை வழங்குங்க.

சி.பி.செந்தில்குமார் said...

>>குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.

haa haa ஹா ஹா இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஒரு பண்ணையைக்காரர் இப்படி சொல்லலாமா? ஒரு ஊரையே “வெச்சு” வாழ்றவர் நீங்க ஹி ஹி

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
டைட்டில் வைக்கறதுல அண்னனை அடிக்க ஆள் இல்லை.. அண்ணன் நல்லாதான் வெச்சுக்கறாரு ஹி ஹி//
டைட்டில் உபயம் பன்னிகுட்டி ராம்சாமிங்கோ! டிஸ்கி டிஸ்கி பாருங்கோ.

சக்தி கல்வி மையம் said...

முதல் வாழ்த்து சொல்லலாம்னு வந்தா மாப்ள சிபி முந்திகிட்டாரே? இவரு தூங்கறாரா# டவுட்டு.

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.
haa haa ஹா ஹா இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஒரு பண்ணையைக்காரர் இப்படி சொல்லலாமா? ஒரு ஊரையே “வெச்சு” வாழ்றவர் நீங்க ஹி ஹி//
வாங்க, உங்களுக்கு தனி அறை, கும்ம போடப்பட்டுள்ளது. ஹே ஹே

சக்தி கல்வி மையம் said...

FOOD said...

//சி.பி.செந்தில்குமார் said...
டைட்டில் வைக்கறதுல அண்னனை அடிக்க ஆள் இல்லை.. அண்ணன் நல்லாதான் வெச்சுக்கறாரு ஹி ஹி//
டைட்டில் உபயம் பன்னிகுட்டி ராம்சாமிங்கோ! டிஸ்கி டிஸ்கி பாருங்கோ.// மாப்ள என்னிக்கு படிச்சுபார்த்து கமென்ட் போட்டு இருக்கு ?

உணவு உலகம் said...

//* வேடந்தாங்கல் - கருன் *! said...
முதல் வாழ்த்து சொல்லலாம்னு வந்தா மாப்ள சிபி முந்திகிட்டாரே? இவரு தூங்கறாரா# டவுட்டு.//
அவர் இன்னிக்கு மார்னிங்க் ஷிஃப்டாம்.

உணவு உலகம் said...

//* வேடந்தாங்கல் - கருன் *! said...
FOOD said...
//சி.பி.செந்தில்குமார் said...
டைட்டில் வைக்கறதுல அண்னனை அடிக்க ஆள் இல்லை.. அண்ணன் நல்லாதான் வெச்சுக்கறாரு ஹி ஹி//
டைட்டில் உபயம் பன்னிகுட்டி ராம்சாமிங்கோ! டிஸ்கி டிஸ்கி பாருங்கோ.// மாப்ள என்னிக்கு படிச்சுபார்த்து கமென்ட் போட்டு இருக்கு ?//
வேணாம், விட்ருங்க!

சி.பி.செந்தில்குமார் said...

மத்திய அரசு நிதி உதவில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் மாநில அரசு தன்னால தான் என சொல்லுவதில்லையா? அந்த மாதிரி தான்.. ஐடியா யாருதா இருந்தா என்ன? காப்பிரைட்ஸ் அண்னனுது ஹா ஹா #சமாளிஃபிகேஷன்ஸ்

நிரூபன் said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

நிரூபன் said...

வரவேற்கும் குளிர்பானம்.

கோமாளி செல்வா நிமிடங்கள்//

அதென்ன வரவேற்கும் குளிர்பானம்?
ஓ...நாஞ்சிலார் குளிர்பானத்தைக் கண்டால் நகர மாட்டரே,
ஒரு பிடி பிடிப்பார் போல இருக்கே.

ஹி...ஹி...

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

நிரூபன் said...

:நெல்லை, குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.//

நல்ல வேளை நீங்க டிஸ்கியைப் போட்டீங்க,
இல்லேனா ஆப்பிசர் ஓசியில் அறை வழங்குறார் வாங்க குற்றாலம் போவம் என்று எல்லோரும் கிளம்பியிருப்பாங்க;-)))

Unknown said...

ஹிஹி ஆன்லயினில் வேறு பார்க்கலாமா?
ஆபோ நாமெல்லாம் வேர்ல்டு பேமஸ் எண்டுறீங்க??அப்ப சரி ஹிஹி
பதிவர் சந்திப்பில் மெனுவா??

Unknown said...

அண்ணே வாழ்த்துக்கள்....அட்டகாசமான விழாவுக்கு ஏற்ப்பாடு செய்தமைக்கு நன்றிகள்...இனிதே நடக்க வாழ்த்துக்கள்....என்னை ஞாபகம் வச்சிக்கங்க ஹிஹி!

உணவு உலகம் said...

//நிரூபன் said...
முதலில் பதிவர் சந்திப்பு இனிதே இடம் பெற வாழ்த்துக்கள்!
வாழ்த்துச் செய்தியினை மெயிலில் அனுப்பியிருந்தேன்,
ஆனாலும் என் வாழ்த்தினைத் தவற விட்டு வீர்கள் போல
ஹி..ஹி...//
மன்னிக்கவும், நிரூபன். தவறு சரி செய்துவிட்டேன்.
ஆன்லைன் உபயம் நீங்கள் என்பதால், நீங்கள் எங்களுடனே இருப்பதாக ஒரு ஃபீலிங்க். அதனால், வாழ்த்தியோர் பட்டியலில் சேர்க்கவில்லை.

இராஜராஜேஸ்வரி said...

பதிவர் சந்திப்பு இனிதே வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்!

உணவு உலகம் said...

//cheena (சீனா) said...
பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா//
பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள மெயில் அனுப்பியதற்கு நன்றி.
வந்து எங்களை வழி நடத்திட வரவேற்கிறோம்.

உணவு உலகம் said...

//நிரூபன் said...
வரவேற்கும் குளிர்பானம்.
கோமாளி செல்வா நிமிடங்கள்
அதென்ன வரவேற்கும் குளிர்பானம்?
ஓ...நாஞ்சிலார் குளிர்பானத்தைக் கண்டால் நகர மாட்டரே,
ஒரு பிடி பிடிப்பார் போல இருக்கே.
ஹி...ஹி...//
WELCOME FRESH LEMON JUICE TO BLOGGERS.
பாவம் மனோ, பஹ்ரைன்ல பண்ணுன சேட்டைக்கெல்லாம் இன்னும் பாம்பேல பாவ மன்னிப்பு வாங்கி முடியலயாம்!

//கோமாளி செல்வா நிமிடங்கள்//
17.06.11 வரை சஸ்பென்ஸ்!

உணவு உலகம் said...

//உலக சினிமா ரசிகன் said...
எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.//
வந்திட்டா போச்சு.

உணவு உலகம் said...

//நிரூபன் said...
:நெல்லை, குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.//
நல்ல வேளை நீங்க டிஸ்கியைப் போட்டீங்க,
இல்லேனா ஆப்பிசர் ஓசியில் அறை வழங்குறார் வாங்க குற்றாலம் போவம் என்று எல்லோரும் கிளம்பியிருப்பாங்க;-)))//
டிஸ்கி போட்டதே சிபிக்குத்தான்னு கண்டு பிடிச்சிட்டீங்களே!
இருந்தும் சலுகை கட்டணத்தில் சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உணவு உலகம் said...

//மைந்தன் சிவா said...
ஹிஹி ஆன்லயினில் வேறு பார்க்கலாமா?
ஆபோ நாமெல்லாம் வேர்ல்டு பேமஸ் எண்டுறீங்க??அப்ப சரி ஹிஹி
பதிவர் சந்திப்பில் மெனுவா??//
ஆன்லைன்ல பொண்ணு கொடுப்பாங்கன்னு, ஃபோட்டவ மாத்திப்புட்டு, இது வேறயா?

கூடல் பாலா said...

எடுடா மேளம் ....அடிடா தாளம் ..இனிதான் கச்சேரி ஆரம்பம் ...

உணவு உலகம் said...

//விக்கி உலகம் said... அண்ணே ாழ்த்துக்கள்....அட்டகாசமான விழாவுக்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றிகள்...இனிதே நடக்க வாழ்த்துக்கள்....என்னை ஞாபகம் வச்சிக்கங்க ஹிஹி!//
விக்கியை மறந்தால், வீண் பழி வந்திடுமே!

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
பதிவர் சந்திப்பு இனிதே வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்!//
வாழ்த்துக்களுக்கு நன்றி, சகோ. வருகையும் இருந்தால், நலமே.

எல் கே said...

வேலை நாளில் நடக்கிறது மேலும் ஜூன் மாதம் எங்கள் அலுவலகத்தில் பிசியான மாதம். சந்திப்பு நன்றாக நடக்கட்டும்

காவேரிகணேஷ் said...

சந்திப்பு இனிதே நடந்தேற என் இனிய வாழ்த்துக்கள்..

இம்சைஅரசன் பாபு.. said...
This comment has been removed by the author.
இம்சைஅரசன் பாபு.. said...

வணக்கம் சங்கரலிங்கம் சார் ..எல்லாம் இனிதாய் அமையும் ..இன்னொரு பதிவர் சகோதரி கல்பனா அவர்களும் வருவதாக சொல்லி இருக்கிறார்கள் .பாப்போம் ..என்னால் முடிந்த அளவு எனக்கு தெரிந்த பதிவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு இருக்கிறேன் ...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என் பெயரைக் காணோமே ? 17 ஆம் தேதியை ஆவலுடன் எதிர் நோக்கி நாய்க்குட்டி மனசு
பதிவர் ச(சி )ந்திப்பு சிறப்புற அமைய வாழ்த்துக்கள் !!

உணவு உலகம் said...

//எல் கே said...
வேலை நாளில் நடக்கிறது மேலும் ஜூன் மாதம் எங்கள் அலுவலகத்தில் பிசியான மாதம். சந்திப்பு நன்றாக நடக்கட்டும்//
வரமுடியாவிட்டாலும், வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு நன்றி.

உணவு உலகம் said...

//koodal bala said...
எடுடா மேளம் ....அடிடா தாளம் ..இனிதான் கச்சேரி ஆரம்பம் ...//
வந்து நெல்லை சந்திப்பில் கச்சேரிய ஆரம்பிங்க!

உணவு உலகம் said...

//காவேரிகணேஷ் said...
சந்திப்பு இனிதே நடந்தேற என் இனிய வாழ்த்துக்கள்..//
நன்றி.

உணவு உலகம் said...

//இம்சைஅரசன் பாபு.. said...
வணக்கம் சங்கரலிங்கம் சார் ..எல்லாம் இனிதாய் அமையும் ..இன்னொரு பதிவர் சகோதரி கல்பனா அவர்களும் வருவதாக சொல்லி இருக்கிறார்கள் .பாப்போம் ..என்னால் முடிந்த அளவு எனக்கு தெரிந்த பதிவர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு இருக்கிறேன் ...//
அனைவரையும் வரவேற்க நெல்லை தயாராக இருக்கிற்து நண்பரே! சகோ கல்பனா பெயர் வருவோர் பட்டியலில் சேர்த்துவிட்டேன்.

உணவு உலகம் said...

//நாய்க்குட்டி மனசு said...
என் பெயரைக் காணோமே ? 17 ஆம் தேதியை ஆவலுடன் எதிர் நோக்கி நாய்க்குட்டி மனசு
பதிவர் ச(சி )ந்திப்பு சிறப்புற அமைய வாழ்த்துக்கள் !!//
பட்டியலில் தகுந்த திருத்தங்கள் செய்துவிட்டேன். உடனே சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

உணவு உலகம் said...

@நாய்க்குட்டி மனசு:
பதிவர் சந்திப்பு குறித்து இன்று பதிவிட்டமைக்கு நன்றி.
http://venthayirmanasu.blogspot.com/2011/06/17.html

ஷர்புதீன் said...

//வம்பு விலக்கியே வைக்கப்படும்.//

அப்ப நாஞ்சில் மனோ, சிபி செந்தில், ரசிகன் , இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையா?

உணவு உலகம் said...

//ஷர்புதீன் said...
வம்பு விலக்கியே வைக்கப்படும்.
அப்ப நாஞ்சில் மனோ, சிபி செந்தில், ரசிகன் , இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையா?//
நாஞ்சில் மனோ, சிபி, ரசிகன் இல்லாம் ஒரு பதிவர் சந்திப்பா? நினைச்சுக்கூட பார்க்க முஇட்யாது.
நாரதர் கலகம் நன்மையில் முடியட்டும்.

பெசொவி said...

அழைப்பிற்கு நன்றி, அவசியம் வருகிறேன்!

பெசொவி said...

//"நாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க.!" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு//

பன்னிகுட்டிக்கு பதினாறு பேறுகளும் உண்டாவதாக!

Anonymous said...

வம்ப வெலைக்கு வாங்குவோம்ல பதிவர் வருகிறார் என்று சொல்கிறீர்கள்.
வம்பு விலக்கியே வைக்கப்படும் என்றும் சொல்கிறீர்கள்? என்ன நியாயம் இது? மனோ - சி.பி. மல்யுத்த போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டும். எவ்ளோ செலவானாலும் பரவா இல்லை. (நீங்க தந்துடுங்க)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம் இப்பவே களைகட்டிருச்சு, கலக்குங்க ஆப்பீசர்..........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி-4 :"நாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க.!" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு (எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா! பின்னூட்டம் பார்க்க ), இந்த பதிவின் ஹிட்ஸ் அத்தனையும் சமர்ப்பணம்.///////

ஏன் இந்த வெளம்பரம்.....?

Anonymous said...

எனக்கும் வர ஆசைதான்..வேலை பளு அதிகம்..முடிந்தவரை பார்க்கிறேன்..நீங்க கும்மியடிக்க போறதை நினைச்சா,பொறாமையா இருக்குல்ல..நண்பர்களை பார்க்க ஆசையா இருக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
மொத ஓசி சோறு///////

இவருக்கு மட்டும் அங்க மாவாட்டறதுக்கு ஏற்பாடு பண்ணி வைங்க........!

Unknown said...

பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள், என்னால் வரமுடியாவிட்டாலும் என்னுடைய மனமும் அங்கேதான் இருக்கும்,ம்ம்ம்ம்ம் பொறாமைதான் லைட்டா

sathishsangkavi.blogspot.com said...

வந்துருவோம்... வந்து சந்திச்சிருவோம்....

சென்னை பித்தன் said...

சந்திப்பைப் பற்றிய நினைப்பே இருட்டுக்கடை அல்வா போல் இனிக்கிறதே!என் செய்வேன்?வர இயலாத நிலை!என்னையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள்!நன்றாகவே நடக்கும் என்பது நிச்சயம்!வாழ்த்துகள்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

>>குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.

haa haa ஹா ஹா இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஒரு பண்ணையைக்காரர் இப்படி சொல்லலாமா? ஒரு ஊரையே “வெச்சு” வாழ்றவர் நீங்க ஹி ஹி>>>

உணவு சார் சி.பி, கருத்தை நான் வழி மொழிகிறேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

குளிர்பானம்னு சொல்லியிருக்கிங்களே.... ஹி..ஹி.... லெமன் ஜூஸ் தானே அது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

கலந்துரையாடல். (மட்டுமே)>>>>

அப்ப கும்மிக்கு தனியா ஏற்பாடு பண்ணியிருகிங்களா.... மனோ, சி.பி இருக்காங்களே,,,

செல்வா said...

/// கோமாளி செல்வா நிமிடங்கள். //

இத நினைச்சாதான் அண்ணா பயமா இருக்கு :-) ஹி ஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கம் பண்ணையார் அவர்களே!
பதிவர் சந்திப்பு இனிமையாய், மகிழ்ச்சியாய் நடந்தேற வாழ்த்துக்கள்!

நாம எல்லாம் கலந்துகொள்வது பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது!

சந்திப்பு பற்றிய, இந்த முன்னோட்டப் பதிவே, மிக இனிமையாக இருக்கிறது!

நிருபன் நேரடி ஒளிபரப்பில், வர்ணனையும் சேர்த்து வழங்குவாரா? # டவுட்!

சி பி டெயிலி மோணு பதிவு போடுறவர் ஆச்சே! அப்டீன்னா அன்னிக்கு, அங்க வச்சே, பதிவு போட்டுக்கிட்டு இருப்பாரா?

ஆன் லைன்ல பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தாலோ, ஏதேனும் கருத்துக்கள் சொன்னாலோ அவற்றை உடனடியாகவே சந்திப்பில், வாசித்துக் காட்டுவதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் உள்ளனவா?

சி பி பத்து நிமிடங்கள் ஸ்ராண்ட் அப் காமெடி வழங்குவாரா?

ஹா ஹா ஹா ஹா வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சிறிய திருத்தம்/

“ சி பி டெயிலி மூணு பதிவு போடுறவர் ஆச்சே! அப்டீன்னா அன்னிக்கு, அங்க வச்சே, பதிவு போட்டுக்கிட்டு இருப்பாரா?”

சௌந்தர் said...

சிறப்பாக ஏற்பாடு செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்...நீங்கள் இல்லாவிட்டால் இப்படி ஒரு சந்திப்பு சாத்தியம் இல்லை...


பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்..!!!

சௌந்தர் said...

கோமாளி செல்வா said...
/// கோமாளி செல்வா நிமிடங்கள். //

இத நினைச்சாதான் அண்ணா பயமா இருக்கு :-) ஹி ஹி///

உன்னால முடியும் டா ... கலக்கு..

மாலதி said...

பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

குணசேகரன்... said...

வலைப்பதிவில் இத்தனை உறவுகளா? ஆச்சர்யம். நன்றி google.

Thangasivam said...

பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள்
அன்புடன்
மு.தங்கசிவம்
சுசீந்திரம்

உணவு உலகம் said...

//பெசொவி said...
அழைப்பிற்கு நன்றி, அவசியம் வருகிறேன்!//
வருக, வருக. உங்கள் வரவு நல்வரவாகுக.

உணவு உலகம் said...

//பெசொவி said...
//"நாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க.!" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு//
பன்னிகுட்டிக்கு பதினாறு பேறுகளும் உண்டாவதாக!//
பதினாறாயிரம் பேறுகளும் உண்டாகட்டும்.

உணவு உலகம் said...

//! சிவகுமார் ! said...
வம்ப வெலைக்கு வாங்குவோம்ல பதிவர் வருகிறார் என்று சொல்கிறீர்கள்.
வம்பு விலக்கியே வைக்கப்படும் என்றும் சொல்கிறீர்கள்? என்ன நியாயம் இது? மனோ - சி.பி. மல்யுத்த போட்டி கண்டிப்பாக நடத்த வேண்டும். எவ்ளோ செலவானாலும் பரவா இல்லை. (நீங்க தந்துடுங்க)//
சந்திப்பு நிகழ்சிக்கு பின், மல்யுத்தம், சொல்யுத்தம் எல்லாம் உண்டு.

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ம்ம் இப்பவே களைகட்டிருச்சு, கலக்குங்க ஆப்பீசர்..........!//
ஸ்ஸ்ஸ், அப்பா,எனக்கு இப்பவே கண்ண கெட்டுதே!

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
டிஸ்கி-4 :"நாட்டாம அப்போ 17ம் தேதி 18 பட்டியும் கூடுதாக்கும், பாத்து நல்ல தீர்ப்பா சொல்லுங்க.!" ன்னு எனக்கு தலைப்பு வைத்துக் கொடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு (எப்படில்லாம் வாங்கி கட்டிக்கிறாங்கப்பா! பின்னூட்டம் பார்க்க ), இந்த பதிவின் ஹிட்ஸ் அத்தனையும் சமர்ப்பணம்.
ஏன் இந்த வெளம்பரம்.....?//
எல்லாம் கல்லா பொட்டிய நெரப்பத்தான்!

உணவு உலகம் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
எனக்கும் வர ஆசைதான்..வேலை பளு அதிகம்..முடிந்தவரை பார்க்கிறேன்..நீங்க கும்மியடிக்க போறதை நினைச்சா,பொறாமையா இருக்குல்ல..நண்பர்களை பார்க்க ஆசையா இருக்கு...//
நீங்க வந்துட்டா இன்னும் நல்லாயிருக்கும், நண்பரே!

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////சி.பி.செந்தில்குமார் said...
மொத ஓசி சோறு
இவருக்கு மட்டும் அங்க மாவாட்டறதுக்கு ஏற்பாடு பண்ணி வைங்க........!//
மாவாட்றது, பத்து பாத்திரம் தேய்க்கிறதுன்னு, தெரிஞ்ச வேலை லிஸ்ட்டே கொடுத்திட்டார், சிபி.

உணவு உலகம் said...

//இரவு வானம் said...
பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள், என்னால் வரமுடியாவிட்டாலும் என்னுடைய மனமும் அங்கேதான் இருக்கும்,ம்ம்ம்ம்ம் பொறாமைதான் லைட்டா//
பொறாமப்பட்டா முடியுங்களா? ஆன்லைன்ல வாங்க, அத்தனை பேரிடமும் பேசலாம்.

உணவு உலகம் said...

//சங்கவி said...
வந்துருவோம்... வந்து சந்திச்சிருவோம்....//
வருக, வருக. உங்கள் வரவு நல்வரவாகுக.

உணவு உலகம் said...

//சென்னை பித்தன் said...
சந்திப்பைப் பற்றிய நினைப்பே இருட்டுக்கடை அல்வா போல் இனிக்கிறதே!என் செய்வேன்?வர இயலாத நிலை!என்னையும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள்!நன்றாகவே நடக்கும் என்பது நிச்சயம்!வாழ்த்துகள்!//
உங்கள் வாழ்த்துக்கள் எங்களை வளப்படுத்தும்.

உணவு உலகம் said...

//தமிழ்வாசி - Prakash said...
>>குற்றாலம் சுற்றி பார்க்க, அறைகள் முன் பதிவு செய்திட வேண்டுமாயின், என் கை பேசியில்(9442201331) தெரிவித்தால், அவரவர் செலவில் அறைகளில் தங்க உதவப்படும்.
haa haa ஹா ஹா இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. ஒரு பண்ணையைக்காரர் இப்படி சொல்லலாமா? ஒரு ஊரையே “வெச்சு” வாழ்றவர் நீங்க ஹி ஹி>>>
உணவு சார் சி.பி, கருத்தை நான் வழி மொழிகிறேன்.//
சிபி வழி தனி வழி. தப்பா போய் மாட்டிக்காதீங்க!

உணவு உலகம் said...

//தமிழ்வாசி - Prakash said...
கலந்துரையாடல். (மட்டுமே)>>>>

அப்ப கும்மிக்கு தனியா ஏற்பாடு பண்ணியிருகிங்களா.... மனோ, சி.பி இருக்காங்களே,,,//
தனி கச்சேரி, தாராளமாய் நடத்தலாம்!

உணவு உலகம் said...

//கோமாளி செல்வா said...
/// கோமாளி செல்வா நிமிடங்கள்.
இத நினைச்சாதான் அண்ணா பயமா இருக்கு :-) ஹி ஹி!//
உன்னால் முடியும் தம்பி, தம்பி.

உணவு உலகம் said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வணக்கம் பண்ணையார் அவர்களே!
பதிவர் சந்திப்பு இனிமையாய், மகிழ்ச்சியாய் நடந்தேற வாழ்த்துக்கள்!
நாம எல்லாம் கலந்துகொள்வது பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது!
சந்திப்பு பற்றிய, இந்த முன்னோட்டப் பதிவே, மிக இனிமையாக இருக்கிறது!
நிருபன் நேரடி ஒளிபரப்பில், வர்ணனையும் சேர்த்து வழங்குவாரா? # டவுட்!
சி பி டெயிலி மோணு பதிவு போடுறவர் ஆச்சே! அப்டீன்னா அன்னிக்கு, அங்க வச்சே, பதிவு போட்டுக்கிட்டு இருப்பாரா?
ஆன் லைன்ல பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தாலோ, ஏதேனும் கருத்துக்கள் சொன்னாலோ அவற்றை உடனடியாகவே சந்திப்பில், வாசித்துக் காட்டுவதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் உள்ளனவா?
சி பி பத்து நிமிடங்கள் ஸ்ராண்ட் அப் காமெடி வழங்குவாரா?
ஹா ஹா ஹா ஹா வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!//
சிபி ஸ்டாண்ட் காமெடி மட்டுமல்ல, ஸிட், பெட், . . . காமெடியும் நடத்துவார், நிகழ்ச்சி முடிந்த பின்னே.

உணவு உலகம் said...

//சௌந்தர் said...
சிறப்பாக ஏற்பாடு செய்த உங்களுக்கு பாராட்டுக்கள்...நீங்கள் இல்லாவிட்டால் இப்படி ஒரு சந்திப்பு சாத்தியம் இல்லை...
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்..!!!//
நன்றி நண்பரே!

உணவு உலகம் said...

//சௌந்தர் said...
கோமாளி செல்வா said...
/// கோமாளி செல்வா நிமிடங்கள்.
இத நினைச்சாதான் அண்ணா பயமா இருக்கு :-) ஹி ஹி
>>>>>
உன்னால முடியும் டா ... கலக்கு.///
எல்லாம், செல்வா, ஒரு பேச்சுக்கு சொன்னதுங்கோ!

உணவு உலகம் said...

//மாலதி said...
பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா//
’”நட்புடன் சீனா”-காப்பி, பேஸ்ட் குழப்படின்னு நினைக்கிறேன்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.

உணவு உலகம் said...

//குணசேகரன்... said...

வலைப்பதிவில் இத்தனை உறவுகளா? ஆச்சர்யம். நன்றி google.//
நன்றி.

உணவு உலகம் said...

//Thangasivam B.Pharm,M.B.A,DPH said...
பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள்
அன்புடன்
மு.தங்கசிவம்
சுசீந்திரம்//
வந்து கலந்து கலக்குங்க.

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
மொத ஓசி சோறு//

anne cp anne dey anne....naan vanthuttemley rascal....

ராமலக்ஷ்மி said...

சிறப்பான ஏற்பாடுகள். இனிதே நடக்க வாழ்த்துக்கள்.

Sadhu said...

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
மொத ஓசி சோறு//
>>>>>>
anne cp anne dey anne....naan vanthuttemley rascal....//
வாங்க, தனி ரூம் போட்டிருக்கேன், சிபிய கும்ம!

உணவு உலகம் said...

//ராமலக்ஷ்மி said...
சிறப்பான ஏற்பாடுகள். இனிதே நடக்க வாழ்த்துக்கள்.//
நன்றி, சகோ.

உணவு உலகம் said...

@Softy
நன்றி.

@Tamil Unicode Writer
தங்கள் (வலைப்பூவின்) பெயரையும் தமிழில் கொடுத்து, முன் மாதிரியாக இருந்திருக்கலாமே!

rajamelaiyur said...

கலந்து கொள்ள ஆசைதான் ......

Rams said...

My wishes for this குடும்ப விழா.

PRABHU RAJADURAI said...

விழா சிறப்பாக நடக்க எனது வாழ்த்துகள்...நானும் நெல்லைதான். ஞாயிறுக்கிழமை என்றால், கலந்து கொண்டிருப்பேன். விழா ஏற்பாடுகள் பிரமாதமாக உள்ளது!

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோதரரே பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன்
சென்று அனுபவியுங்கள் வாழ்த்துக்கள்...........