இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 25 June, 2011

பதிவர் சந்திப்பு-சமூக சேவையொன்றை சற்றே சிந்திப்போமா!

வரவேற்புரை:சங்கரலிங்கம்.
                                பதிவர்கள்  சந்திப்பு குறித்து நம் பதிவுலக சகோதர சகோதரிகள்,  பல பதிவுகளை போட்டு, சந்திப்பு தித்தித்த விதம் குறித்து விளக்கி வருவதால், முக்கிய நிகழ்வுகளை மட்டும் நானிங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

பாபா ஜோஸ்பின்,கல்பனா,திருமதி&;திரு.ரத்னவேல் நடராஜன்.

            சந்திப்பின்போது, சக பதிவர்களிடம் நுழைவுக்  கட்டணம் வசூலிக்கக்கூடாது, சந்திப்பை, சற்றே வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டுமென்பது  சகாக்களின் கட்டளை. முதல் சந்திப்பில், மனோவின் இளைய தளபதி இம்சை அரசன் , நெல்லை நண்பன்,  கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டு, எனக்கு பல ஆரோக்கியமான ஆலோசனைகள் வழங்கினர். 

வெடிவால் சகாதேவன்,ராமலிங்கம்,  தங்கசிவம்
                                 இரண்டாவது முறையாக, இருபதாம் தேதி மாலை, எனது அலுவலகத்தில் நடந்த சந்திப்பில், சிரிப்பு புயல் சித்ராவும் கலந்து கொண்டு, சற்றே மூச்சு விட்டிருந்த, என் அலுவலகக் கட்டிடத்தை சிரித்தே சிதிலமடையச் செய்துவிட்டார்.அப்பப்பா,இணைய வழி இணைந்திருந்த  இரு சகோதரிகளின் சந்திப்பில், சந்தோசம் கரை புரண்டு ஓடியதை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தேன். நிஜம்தான், அடுத்த ஓரிரு  நாட்களில், நானிருந்த அலுவலக கட்டிடத்தை விட்டு, அடுத்த கட்டிடத்திற்கு மாற வேண்டியதாயிற்று. 

அரங்கம் நிறைந்த பதிவர் சந்திப்பு.
                 பதிவர் சந்திப்பு , பாங்குற நடைபெற்றது.  மதிய உணவு மகத்தாய் அமைந்தது.  நண்பர்கள் அனைவரும், பல நூறு ஆண்டுகள் பழகியது போல, விடை பெற்று சென்றனர். 

நாஞ்சில் மனோ,சங்கரலிங்கம்,சீனா அய்யா,ஷங்கர்.
சிபி மட்டும், குற்றாலம் சென்று, குரங்குகளிடம் மாட்டி, உடுத்த வைத்திருந்த  உடைகளை இழந்து, பணியிலிருந்த பெண் காவலரிடம், பல்பு வாங்கியது பற்றி நாஞ்சில் மனோ தனிப் பதிவு போட உள்ளார். அதனால், அது பற்றி நான் விரிவாக சொல்ல போவதில்லை. 
சீனா அய்யா,ஷங்கர்,மணிஜி,ஷர்புதீன், சண்முகவேலாயுதம்,ஞானேந்திரன்.
                       
சித்ரா,மனோ,சங்கரலிங்கம்,சீனா அய்யா,ஷங்கர்,சண்முகவேலாயுதம்.

சித்ராவின் சிரிப்பு மழை.
சரி, சந்திப்பின்போது சமூக சேவை என்று ஒன்று செய்ய திட்டமிட்டோம் அல்லவா. அன்று கலந்து கொண்ட பதிவர்கள் அனைவரும்  அள்ளி அள்ளி வழங்கியதில் சேர்ந்த ரூபாய் ஐயாயிரத்து  அறுநூற்று பதினைந்தை, அநாதை குழந்தைகள் நலனிற்கு செலவிட முடிவெடுத்தோம்.
அன்பு ஆசிரமம்
இது அந்த ஆச்சிரமத்தின் கட்டிடம். இங்குதான் அந்த குழந்தைகள் வசிக்கிறார்கள்! ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம். ஆங்காங்கே பழுதுபட்டு பஞ்சர் ஒட்டப்பட்டிருந்தது. ஆசிரமத்தின் உள்ளே சென்று பார்த்தால், துள்ளி விளையாட வேண்டிய பள்ளி வயது பிள்ளைகள், உண்ணவும், உறங்கவும்,உடுத்த நல்ல உடையுமின்றி உலவிக் கொண்டிருந்தனர். 
அந்த ஆசிரமத்தின் பொறுப்பாளர்களிடம் என்ன வேண்டும் இந்த பிள்ளைகளுக்கு என்று கேட்டு அறிந்து கொண்டோம். அன்பு  ஆசிரமத்தில், ஆதரவற்ற, தாய் அல்லது தந்தையை இழந்த,வறுமை கோட்டிற்கு கீழ் வாழும்,  முப்பத்தியொரு குழந்தைகள் பராமரிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து வெள்ளிகிழமை காலை அங்கு நெல்லையிலிருந்த பதிவர்கள் சென்றோம். 
டெல்லி, பத்திரிகைத்  துறையில், கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக, தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்து வரும் என் நண்பர் திரு.சுந்தரராஜ்(JKP) அவர்கள்  சொந்த வேலையாக நெல்லை வந்திருந்தார். அவரையும் அழைத்து சென்றிருந்தோம். அவர் செய்த உதவி குறித்து பதிவின் பிற்பகுதியில்  தெரிவிக்கிறேன். 
பள்ளிக்கு வழங்கிய பாத்திரங்கள்
நெல்லை பதிவர் சந்திப்பின்போது சமூக சேவைக்கென பிரிக்கப்பட்ட பணத்திலிருந்து,அங்கிருந்த குழந்தைகளுக்கு, பள்ளி புத்தகங்கள் கொண்டு செல்ல, புத்தகப் பைகளையும், உணவு சமைத்திட உபயோகப்படும் சமையல் பாத்திரங்களையும் உங்கள் அனைவரின் சார்பாக வழங்கினோம். புதிய புத்தக பைகளை பெற்றுக்கொண்டபோது, அந்த பிள்ளைகளின் முகத்தில் பிறந்த மகிழ்ச்சியினை வார்த்தைகளில் வர்ணித்திட முடியாது. ஒரு நிமிடம் நினைத்து பார்த்தால், நெஞ்சம் கலங்குகிறது. அன்றாடம் நாம் வேலைகள் முடித்து வீடு திரும்பும்போது, தினம் ஒரு பண்டம் அல்லது பரிசுப்  பொருள் கொண்டு செல்லாவிட்டால், நம் குழந்தைகள் எப்படி தவித்துப் போவார்கள் என்பது நாம் நாளும் காணும் நிதர்சனம். இந்த குழந்தைகளுக்கு, பண்டமும் பரிசும் தினம் வழங்கிட நம்மால் முடியாதெனினும், இவர்கள் வாழும் சூழ்நிலையினை சீர்படுத்திட, நம்மால் மாற்ற முடியும் என்று மட்டும் உணர்ந்தோம். 
பள்ளிக்கு வழங்கிய புத்தக பைகள்.
நிகழ்ச்சியின் முடிவில், மேலும் அந்த பள்ளிக்கு என்னென்ன வசதிகள் தேவை என்பதை கேட்டு அறிந்து கொண்டோம்.இந்த இடத்தில் என் நண்பர் திரு.சுந்தர்ராஜ்(JKP) அவர்களின் பங்களிப்பு பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.அவர் தனது பத்திரிகை துறை நட்பினை பயன்படுத்தி, அந்த பள்ளி சம்பந்தப்பட்ட அரசு துறையின் உயர் அலுவலரிடம் உடனே தொடர்பு கொண்டு, ஆவன செய்ய கேட்டுகொண்டார். அந்த உயர் அலுவலரும், பள்ளியின் தேவைகள் குறித்து, விரிவான அறிக்கை ஒன்று அனுப்பக் கேட்டு கொண்டுள்ளார். விரைவில், நெல்லை பதிவர் சந்திப்பின் மூலம், நாம் தொடங்கி வைத்துள்ள இந்த பணி தொடரும், உங்கள் அனைவர் நல்லாசிகளோடும், ஒத்துழைப்போடும்.
பாத்திரங்கள் வாங்கிய பில்.

புத்தக பைகள் வாங்கிய பில்.

                                                        வீடியோ-ஒரு டிரைலர்.
டிஸ்கி-1: வீடியோ டிரைலர் மட்டுமே இன்று ரிலீஸ். தொடர்ந்து வீடியோ பதிவுகள் வெளிவரும். 
டிஸ்கி-2: அடுத்த வீடியோ பதிவில், சிபியின் சிந்தனைகள்.சிரிக்க வைக்குமா? சற்றே பொறுத்திருங்கள்!
Follow FOODNELLAI on Twitter

87 comments:

தினேஷ்குமார் said...

அடுத்த வீடியோ பதிவு பார்க்க ஆவல் ... பதிவுலகம் சார்பில் குழந்தைகளுக்கு உதவி செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது ... அடுத்த முறை எங்களோடும் தொடர்பு கொண்டால் நாங்களும் எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம் ...

இம்சைஅரசன் பாபு.. said...

விடியோவா ...அண்ணா ..அண்ணா ..பார்த்து என் முகம் தெரியாமல் ..அல்லது கருப்பு அடிச்சு ..முடிஞ்சா கொஞ்சம் சாணி தெளிச்சு கூட மறைச்சுருங்கோ ....

காவேரிகணேஷ் said...

அருமை திரு.சங்கரலிங்கம்.

பெருமையாக இருக்கிறது..

வாழ்த்துக்கள்...

சென்னை பித்தன் said...

பதிவர் சந்திப்பு ஒரு மகிழ்ச்சி என்றால், அதன் விளைவாகப் பிறந்த சேவை மேலும் மகிழ்ச்சி அல்லவா? ஒரு நல்ல துவக்கம்!வாழ்க,வளர்க!

Unknown said...

நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க பாஸ்..
வாழ்த்துக்கள் நம்ம சக பதிவர்களுக்கு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர் ஆப்பீசர்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
விடியோவா ...அண்ணா ..அண்ணா ..பார்த்து என் முகம் தெரியாமல் ..அல்லது கருப்பு அடிச்சு ..முடிஞ்சா கொஞ்சம் சாணி தெளிச்சு கூட மறைச்சுருங்கோ ....///////

ஏற்கனவே அப்படித்தானே இருக்கு?

இராஜராஜேஸ்வரி said...

பதிவுலகம் சார்பில் வழ்ங்கப்பட்ட உதவிகள் மனநிறைவைத் தருகின்றன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

அருமையான பணி...நேர்த்தியான தொகுப்பு

சக்தி கல்வி மையம் said...

நல்ல விஷயத்திக்கு இந்த பதிவர் சந்திப்பை உபயோகப் படுத்தி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

Unknown said...

அருமை பாஸ்! வாழ்த்துக்கள்! :-)

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மிகச் சிறந்த சேவை செய்திருக்கிறீர்கள் sir , நமது நேர்மையை நிரூபிக்க பில்லை செராக்ஸ் செய்து போட வேண்டி இருக்கிறது, இது வேதனை தரும் விஷயம்

சௌந்தர் said...

good one நல்ல வேளை அவங்க படத்தை வெட்டிடீங்க இல்ல எல்லாம் பயந்து இருப்பாங்க :))

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
விடியோவா ...அண்ணா ..அண்ணா ..பார்த்து என் முகம் தெரியாமல் ..அல்லது கருப்பு அடிச்சு ..முடிஞ்சா கொஞ்சம் சாணி தெளிச்சு கூட மறைச்சுருங்கோ ..////

ஆமா அப்படியே இவர் முகத்த காடிட்டாலும்.... ராசு குட்டி வீடியோ நான் ரீலீஸ் பண்றேன் போதுமா..!!!

dheva said...

அன்பின் சங்கரலிங்கம்,

பிள்ளைகளுக்கு புத்தகப்பையும் மேலும் உணவு சமைத்திட பாத்திரங்களையும் வழங்கியிருப்பதும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

வாழ்வின் அர்த்தங்கள் பூர்த்தியாவது இது போன்ற ஆத்மார்த்த நிகழ்வுகளைத் தொட்டு நகரும் போதுதான். புத்தம் புது புத்தகப்பையை பெற்றிருக்கும் பிஞ்சு நெஞ்சுகளின் மகிழ்வு என்னவாயிருக்கும்? நெகிழ்ச்சியை வார்த்தைப் படுத்த இயலவில்லை...கண்கள் கலங்கி நிற்கிறேன்.

நீங்கள் தொடங்யிருக்கும் இந்த சமுதாயப் பணி எங்கும் நெருப்பாய் பற்றிப் பரவி...இது போன்ற ஆஸ்ரமங்களுக்கு உதவும் போக்கு தன்னிச்சையாக நிகழ்த்தப் பெற வேண்டும்.

இதை சுட்டிக்காட்டி தொடங்கியிருக்கும் உங்களுக்கு எனது அன்பான நமஸ்காரங்கள்.

இது போன்ற உதவிகளில் கட்டாயம் என்னை ஈடுபடுத்திக் கொள்வதை நான் கடமையாக நினைக்கிறேன்....

எதிர்வரும் காலங்களில் எல்லா உதவிகளும் செய்ய காத்திருக்கிறேன்...! என்னை எந்நேரமும் நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

Mail: dheva2000@gmail.com

மீண்டும் வாழ்த்துக்கள் சங்கரலிங்கம் சார்!

குணசேகரன்... said...

அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல விசயங்கள் பதிவுலகில் நடைபெறுகிறது.
நினைக்கவே ஆனந்தம்.

மணிஜி said...

மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும் சங்கரன்..

Unknown said...

மிக்க நன்றி சார்

இளங்கோ said...

உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

J.P Josephine Baba said...

பதிவு எழுத்திலும் அர்த்தம் உள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கின்றது!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ட்ரைலரை பார்த்தாச்சி
மெயின் பிச்சர் எப்ப வரும்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பதிவர்களின் சமூகசேவையினை மனதாரப் பாராட்டுகிறேன்! இனி இப்படி ஒரு சேவை செய்யப்படும் போது கண்டிப்பாக எனக்கு அறிவிக்கவும் ஆஃபீசர்! நானும் எனது பங்களிப்பை வழங்குவேன்!

அப்புறம் ட்ரைலர் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது! உங்கள் குரலைக் கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!

அடுத்த வீடியோவை சீக்கிரமே வெளியிடுங்கள்! ( சாத்தியமென்றால் நாளைக்கு )

காத்திருக்கிறோம்!

செல்வா said...

நன்றிகள் சார் :-) உண்மைலேயே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!

Murugeswari Rajavel said...

பாங்காய் நடந்த பதிவர் சந்திப்பு பயனுள்ளதாகவும் அமைந்தது குறித்து உங்களோடு சேர்ந்து எங்களுக்கும் மகிழ்ச்சி.

காதர் அலி said...

குழந்தைகளுக்கு புத்தக பையை கொடுத்து அவர்களை திக்குமுக்காட வைத்துவிட்டிர்கள்.மிக்க நன்றி.

Unknown said...

நடத்துனர் எப்படி அழகாக நடந்து கொள்ளவேண்டும் என்பதை காண முடிகிறது....கலக்கல் அண்ணே அருமையான பதிவு!

Unknown said...

பதிவர் சந்திப்பினை ஆக்கபூர்வமாக முடித்து வைத்துள்ளீர்கள் சார், உங்கள் அனைவருக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும், இதனால் அடுத்து வரும் பதிவர் சந்திப்புகள் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை

Thangasivam said...

உதவி செய்த அனைத்து நல் இதயங்களுக்கும் எனது நன்றிகள்,இந்த பணி தொடர எனது வாழ்த்துக்கள்.....

ஷர்புதீன் said...

:-)

ஜெட்லி... said...

நல்ல விஷயம்....
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

தமிழ்வாசி பிரகாஷ் said...

நன்றி.... நன்றி...

Kousalya Raj said...

அந்த குழந்தைகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி இன்னும் என் கண்களில் தங்கி இருக்கிறது அண்ணா ! இது போன்று பல செய்யவேண்டும் என்ற உந்துதல் அந்த நிமிடம் இன்னும் அதிகமாக ஏற்பட்டது என்பதை ஆத்மார்த்தமாக உணருகிறேன்.

@தேவா

//இது போன்ற ஆஸ்ரமங்களுக்கு உதவும் போக்கு தன்னிச்சையாக நிகழ்த்தப் பெற வேண்டும்.//

விழிப்புணர்வு தூண்டுதல் போன்றது இந்த விளக்கமான அண்ணனின் பதிவு . பலரையும் சிறிதளவாவது யோசிக்க வைத்திருக்கும் என்பது நிச்சயம். வரும் காலங்களில் தன்னிச்சையாக நிகழ்த்தப்டும் என்பதில் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

//இது போன்ற உதவிகளில் கட்டாயம் என்னை ஈடுபடுத்திக் கொள்வதை நான் கடமையாக நினைக்கிறேன்....//

உங்களை பற்றி ஓரளவிற்கு தெரியும் என்பதால் இவை வெறும் வார்த்தைகள் அல்ல சத்தியம். மகிழ்கிறேன்.

//எதிர்வரும் காலங்களில் எல்லா உதவிகளும் செய்ய காத்திருக்கிறேன்...!//

அண்ணா இதை கண்டிப்பா நோட் பண்ணிக்கோங்க...நமக்கு உற்சாகமாக உதவி செய்ய ஒருத்தர் வாக்கு கொடுத்திருக்கிறார். :))

தேவா உங்களுக்கு அண்ணனின் சார்பில் என் நன்றிகள்.

@@அண்ணா பல வேலைகளுக்கு மத்தியிலும் இந்த வேலையையும் சிரமேற்கொண்டு செய்த உங்களின் செயல் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள் அண்ணா.

MANO நாஞ்சில் மனோ said...

சிபி மட்டும், குற்றாலம் சென்று, குரங்குகளிடம் மாட்டி, உடுத்த வைத்திருந்த உடைகளை இழந்து, பணியிலிருந்த பெண் காவலரிடம், பல்பு வாங்கியது பற்றி நாஞ்சில் மனோ தனிப் பதிவு போட உள்ளார். அதனால், அது பற்றி நான் விரிவாக சொல்ல போவதில்லை. //

அது உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா ஆபீசர் ஹா ஹா ஹா...

MANO நாஞ்சில் மனோ said...

பதிவர் சந்திப்பின் மூலம், நல்ல ஒரு சேவையை செவ்வனே ஆரம்பிச்சிட்டீங்க ஆபீசர் வாழ்த்துக்கள் நன்றிகள்....

MANO நாஞ்சில் மனோ said...

பதிவர் சந்திப்புகளுக்கு நல்லதொரு முன்னுதாரணமா நெல்லை சந்திப்பு நடந்திருப்பதை பார்த்து மனம் உவகை கொள்கிறது...

நிரூபன் said...

வணக்கம் ஆப்பிசர், படித்து விட்டு வருகிறேன்.

நிரூபன் said...

அப்பப்பா,இணைய வழி இணைந்திருந்த இரு சகோதரிகளின் சந்திப்பில், சந்தோசம் கரை புரண்டு ஓடியதை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தேன். நிஜம்தான், அடுத்த ஓரிரு நாட்களில், நானிருந்த அலுவலக கட்டிடத்தை விட்டு, அடுத்த கட்டிடத்திற்கு மாற வேண்டியதாயிற்று. //

ஆஹா....இம்புட்டு ரகளை பண்ணியிருக்காங்களா..
என்ன வெறித்தனம்?
என்ன ஒரு டெரர் காமெடி பண்ணியிருப்பாங்க...
நம்ம ஆப்பிசரின் ஆப்பிஸை இடம் மாற்றும் அளவிற்கு காமெடியா....
ஹி....ஹி...

நிரூபன் said...

சிபி மட்டும், குற்றாலம் சென்று, குரங்குகளிடம் மாட்டி, உடுத்த வைத்திருந்த உடைகளை இழந்து, பணியிலிருந்த பெண் காவலரிடம், பல்பு வாங்கியது பற்றி நாஞ்சில் மனோ தனிப் பதிவு போட உள்ளார். அதனால், அது பற்றி நான் விரிவாக சொல்ல போவதில்லை.//

இது வேறையா...
ஐயோ! ஐயோ!

நல்ல வேளை மற்ற எல்லோரும் தப்பிச்சிட்டாங்க...

ஹி...ஹி..

நிரூபன் said...

சரி, சந்திப்பின்போது சமூக சேவை என்று ஒன்று செய்ய திட்டமிட்டோம் அல்லவா. அன்று கலந்து கொண்ட பதிவர்கள் அனைவரும் அள்ளி அள்ளி வழங்கியதில் சேர்ந்த ரூபாய் ஐயாயிரத்து அறுநூற்று பதினைந்தை, அநாதை குழந்தைகள் நலனிற்கு செலவிட முடிவெடுத்தோம்.//

அருமையான முயற்சி அண்ணாச்சி,

பதிவர்களால் வெறுமனே மொக்கை போட்டு, இணையத்தில் தாம் விரும்பியதை கண்ட படி தாறு மாறாக எழுதுவார்கள் என அறிக்கை விடும் பலருக்கு,
இச் செயல் மூலம் பதிவர்களால்
எப்படியெல்லாம் செயலாற்ற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறீங்க.

உங்களின் இச் செயலுக்கு தலை தாழ்த்துகிறேன்.

நிரூபன் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பதிவர்களின் சமூகசேவையினை மனதாரப் பாராட்டுகிறேன்! இனி இப்படி ஒரு சேவை செய்யப்படும் போது கண்டிப்பாக எனக்கு அறிவிக்கவும் ஆஃபீசர்! நானும் எனது பங்களிப்பை வழங்குவேன்!//

ஆப்பிசர், ஓட்ட வடையின் கருத்துக்களை நானும் வழி மொழிகிறேன்,

அடுத்த முறை எனக்கும் சொல்லுங்கள். நானும் என்னாலான உதவிகளை வழங்குகிறேன்,

நிரூபன் said...

வீடியோ ட்ரெயிலர் கலக்கல், வரவேற்பு உரை அருமையாக இருக்கிறது. பதிவர் அறிமுகத்தோடு, ஆப் ஆக்கி விட்டீங்களே...

அடுத்த பாகத்தினைப் பார்ப்பதற்காலய் ஆவலோடு காத்திருக்கிறேன்.

Anonymous said...

எங்களையும் கூட்டத்தில் சேர்த்துக்கலாமா ?
வின்மணி

சி.பி.செந்தில்குமார் said...

வீடியோ பதிவில் என்னை அழகாக காட்டவும் ஹி ஹி

உணவு உலகம் said...

//தினேஷ்குமார் said...
அடுத்த வீடியோ பதிவு பார்க்க ஆவல் ... பதிவுலகம் சார்பில் குழந்தைகளுக்கு உதவி செய்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது ... அடுத்த முறை எங்களோடும் தொடர்பு கொண்டால் நாங்களும் எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம் //
நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன், நண்பரே.

உணவு உலகம் said...

//இம்சைஅரசன் பாபு.. said...
விடியோவா ...அண்ணா ..அண்ணா ..பார்த்து என் முகம் தெரியாமல் ..அல்லது கருப்பு அடிச்சு ..முடிஞ்சா கொஞ்சம் சாணி தெளிச்சு கூட மறைச்சுருங்கோ ....//
வாக்குறுதிகள் காப்பாற்றப்படும்.

உணவு உலகம் said...

//காவேரிகணேஷ் said...
அருமை திரு.சங்கரலிங்கம்.
பெருமையாக இருக்கிறது..
வாழ்த்துக்கள்...//
நன்றிகளோடு.

உணவு உலகம் said...

//சென்னை பித்தன் said...
பதிவர் சந்திப்பு ஒரு மகிழ்ச்சி என்றால், அதன் விளைவாகப் பிறந்த சேவை மேலும் மகிழ்ச்சி அல்லவா? ஒரு நல்ல துவக்கம்!வாழ்க,வளர்க!//
நன்றி அய்யா.

உணவு உலகம் said...

//மைந்தன் சிவா said...
நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க பாஸ்..
வாழ்த்துக்கள் நம்ம சக பதிவர்களுக்கு...//
அப்ப வாழ்த்து எனக்கில்லையா?

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////இம்சைஅரசன் பாபு.. said...
விடியோவா ...அண்ணா ..அண்ணா ..பார்த்து என் முகம் தெரியாமல் ..அல்லது கருப்பு அடிச்சு ..முடிஞ்சா கொஞ்சம் சாணி தெளிச்சு கூட மறைச்சுருங்கோ ....
ஏற்கனவே அப்படித்தானே இருக்கு?/////
நீங்க சொன்னா சரிதான்!

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
பதிவுலகம் சார்பில் வழ்ங்கப்பட்ட உதவிகள் மனநிறைவைத் தருகின்றன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
அருமையான பணி...நேர்த்தியான தொகுப்பு//
நன்றி நண்பரே.

உணவு உலகம் said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said.
நல்ல விஷயத்திக்கு இந்த பதிவர் சந்திப்பை உபயோகப் படுத்தி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..//
நன்றி. அடுத்த முறை உங்கள் பங்களிப்பும் இருக்கும்.

உணவு உலகம் said...

//ஜீ... said...
அருமை பாஸ்! வாழ்த்துக்கள்! :-)//
நன்றி பாஸ்.

உணவு உலகம் said...

//நாய்க்குட்டி மனசு said...
மிகச் சிறந்த சேவை செய்திருக்கிறீர்கள் sir , நமது நேர்மையை நிரூபிக்க பில்லை செராக்ஸ் செய்து போட வேண்டி இருக்கிறது, இது வேதனை தரும் விஷயம்//
பொதுக் காரியம் என்றால்,அதற்கென்று சில விதிகளை நாம் வகுத்தல் தவறன்று.

உணவு உலகம் said...

//சௌந்தர் said...
good one நல்ல வேளை அவங்க படத்தை வெட்டிடீங்க இல்ல எல்லாம் பயந்து இருப்பாங்க :))//
அதற்கும் என்னை படுத்தி எடுத்தது உங்களுக்கு தெரிஞ்சிடுச்சா!

உணவு உலகம் said...

//dheva said...
அன்பின் சங்கரலிங்கம்,
பிள்ளைகளுக்கு புத்தகப்பையும் மேலும் உணவு சமைத்திட பாத்திரங்களையும் வழங்கியிருப்பதும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்வின் அர்த்தங்கள் பூர்த்தியாவது இது போன்ற ஆத்மார்த்த நிகழ்வுகளைத் தொட்டு நகரும் போதுதான். புத்தம் புது புத்தகப்பையை பெற்றிருக்கும் பிஞ்சு நெஞ்சுகளின் மகிழ்வு என்னவாயிருக்கும்? நெகிழ்ச்சியை வார்த்தைப் படுத்த இயலவில்லை...கண்கள் கலங்கி நிற்கிறேன்.
நீங்கள் தொடங்யிருக்கும் இந்த சமுதாயப் பணி எங்கும் நெருப்பாய் பற்றிப் பரவி...இது போன்ற ஆஸ்ரமங்களுக்கு உதவும் போக்கு தன்னிச்சையாக நிகழ்த்தப் பெற வேண்டும்.
இதை சுட்டிக்காட்டி தொடங்கியிருக்கும் உங்களுக்கு எனது அன்பான நமஸ்காரங்கள்.
இது போன்ற உதவிகளில் கட்டாயம் என்னை ஈடுபடுத்திக் கொள்வதை நான் கடமையாக நினைக்கிறேன்....
எதிர்வரும் காலங்களில் எல்லா உதவிகளும் செய்ய காத்திருக்கிறேன்...! என்னை எந்நேரமும் நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
Mail: dheva2000@gmail.com
மீண்டும் வாழ்த்துக்கள் சங்கரலிங்கம் சார்!//
இது எனது தனிப்பட்ட செயல் அல்ல. இது ஒரு கூட்டு முயற்சி. பதிவர்கள் அனைவரும் மனமுவந்து அளித்ததை, கொண்டு கொடுக்கும் பாக்கியம், நான் பெற்றேன்.
இதே பள்ளிக்கு இன்னும் நிறைய உதவிகள் செய்திட நாங்கள்(நான்,கௌசல்யா,சித்ரா,பாபு) திட்டமிட்டு, செயல்பட துவங்கியுள்ளோம். அதற்கு, உங்கள் உதவை தேவைப்படும். பயன்படுத்திகொள்கிறோம்.

உணவு உலகம் said...

//குணசேகரன்... said...
அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல விசயங்கள் பதிவுலகில் நடைபெறுகிறது.
நினைக்கவே ஆனந்தம்.//
நன்றி. இது ஒரு துவக்கம்.

உணவு உலகம் said...

//மணிஜி...... said...
மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்.//
நன்றியோடு ஏற்றுக்கொள்கிறேன்.

உணவு உலகம் said...

//நா.மணிவண்ணன் said...
மிக்க நன்றி சார்//
உங்களுக்கு நீங்களே நன்றி சொன்னா எப்பூடி? இதில் உங்கள் பங்கும் இருக்குதில்லா!

உணவு உலகம் said...

//இளங்கோ said...
உதவி செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.//
நன்றி சார்.

உணவு உலகம் said...

//J.P Josephine Baba said...
பதிவு எழுத்திலும் அர்த்தம் உள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கின்றது!//
நிச்சயம் நாளை உலகம் நம்மை வாழ்த்தும்.

உணவு உலகம் said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
ட்ரைலரை பார்த்தாச்சி
மெயின் பிச்சர் எப்ப வரும்...//
அடுத்து எடுத்து விட்டுடுவோம்!

உணவு உலகம் said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பதிவர்களின் சமூகசேவையினை மனதாரப் பாராட்டுகிறேன்! இனி இப்படி ஒரு சேவை செய்யப்படும் போது கண்டிப்பாக எனக்கு அறிவிக்கவும் ஆஃபீசர்! நானும் எனது பங்களிப்பை வழங்குவேன்!
அப்புறம் ட்ரைலர் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது! உங்கள் குரலைக் கேட்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!
அடுத்த வீடியோவை சீக்கிரமே வெளியிடுங்கள்! ( சாத்தியமென்றால் நாளைக்கு )
காத்திருக்கிறோம்!//
நிச்சயம் உங்கள் பங்களிப்பை அடுத்த முறை பயன்படுத்திக் கொள்வோம்.
விடியோ பதிவுகள் அப்லோட் ஆக சிறிது கால அவகாசம் தேவைப்பட்டுகிறது. விரைவில், வெகு விரைவில் தொகுத்து வழங்குகிறேன்.

உணவு உலகம் said...

//கோமாளி செல்வா said...
நன்றிகள் சார் :-) உண்மைலேயே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!//
சந்தோஷம் அனைவருக்கும்.

உணவு உலகம் said...

//Murugeswari Rajavel said...
பாங்காய் நடந்த பதிவர் சந்திப்பு பயனுள்ளதாகவும் அமைந்தது குறித்து உங்களோடு சேர்ந்து எங்களுக்கும் மகிழ்ச்சி.//
நன்றி

உணவு உலகம் said...

//kadhar24 said...
குழந்தைகளுக்கு புத்தக பையை கொடுத்து அவர்களை திக்குமுக்காட வைத்துவிட்டிர்கள்.மிக்க நன்றி.//
இது ஒரு துவக்கம் மட்டுமே.

உணவு உலகம் said...

//விக்கியுலகம் said...
நடத்துனர் எப்படி அழகாக நடந்து கொள்ளவேண்டும் என்பதை காண முடிகிறது....கலக்கல் அண்ணே அருமையான பதிவு!//
கண்-டாக்டர் ஆக்கியிருந்தா கூட பரவாயில்லே!

உணவு உலகம் said...

//இரவு வானம் said...
பதிவர் சந்திப்பினை ஆக்கபூர்வமாக முடித்து வைத்துள்ளீர்கள் சார், உங்கள் அனைவருக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும், இதனால் அடுத்து வரும் பதிவர் சந்திப்புகள் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை//
நிச்சயமாக நண்பரே.

உணவு உலகம் said...

//Thangasivam B.Pharm,M.B.A,DPH said...//
உதவி செய்த அனைத்து நல் இதயங்களுக்கும் எனது நன்றிகள்,இந்த பணி தொடர எனது வாழ்த்துக்கள்....//
உங்களின் ஆதரவோடு இந்த பணி நன்று தொடரும்.

உணவு உலகம் said...

//ஷர்புதீன் said...
:-) //
:))))

உணவு உலகம் said...

//ஜெட்லி... said...
நல்ல விஷயம்....
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...//
நன்றி. இது ஒரு கூட்டு முயற்சி.

உணவு உலகம் said...

//அன்புடன் அருணா said...
பூங்கொத்து!//
அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உணவு உலகம் said...

//தமிழ்வாசி - Prakash said...
நன்றி.... நன்றி...//
ஒரு முறைதானே சொல்லவேண்டும்.

உணவு உலகம் said...

//nellai ram said...
thanks!//
வந்து கொண்டிருக்கிறது, உங்கள் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ பதிவு.

உணவு உலகம் said...

//Kousalya said...
அந்த குழந்தைகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி இன்னும் என் கண்களில் தங்கி இருக்கிறது அண்ணா ! இது போன்று பல செய்யவேண்டும் என்ற உந்துதல் அந்த நிமிடம் இன்னும் அதிகமாக ஏற்பட்டது என்பதை ஆத்மார்த்தமாக உணருகிறேன்.
@தேவா
//இது போன்ற ஆஸ்ரமங்களுக்கு உதவும் போக்கு தன்னிச்சையாக நிகழ்த்தப் பெற வேண்டும்.//
விழிப்புணர்வு தூண்டுதல் போன்றது இந்த விளக்கமான அண்ணனின் பதிவு . பலரையும் சிறிதளவாவது யோசிக்க வைத்திருக்கும் என்பது நிச்சயம். வரும் காலங்களில் தன்னிச்சையாக நிகழ்த்தப்டும் என்பதில் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
//இது போன்ற உதவிகளில் கட்டாயம் என்னை ஈடுபடுத்திக் கொள்வதை நான் கடமையாக நினைக்கிறேன்....//
உங்களை பற்றி ஓரளவிற்கு தெரியும் என்பதால் இவை வெறும் வார்த்தைகள் அல்ல சத்தியம். மகிழ்கிறேன்.
//எதிர்வரும் காலங்களில் எல்லா உதவிகளும் செய்ய காத்திருக்கிறேன்...!//
அண்ணா இதை கண்டிப்பா நோட் பண்ணிக்கோங்க...நமக்கு உற்சாகமாக உதவி செய்ய ஒருத்தர் வாக்கு கொடுத்திருக்கிறார். :))
தேவா உங்களுக்கு அண்ணனின் சார்பில் என் நன்றிகள்.
@@அண்ணா பல வேலைகளுக்கு மத்தியிலும் இந்த வேலையையும் சிரமேற்கொண்டு செய்த உங்களின் செயல் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள் அண்ணா.///
>>>>>
நன்றி கௌசல்யா. பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற, குழந்தைகளுக்கு பைகள் வழங்கிட என ஒவ்வொரு நிகழ்விலும் உங்கள் பங்களிப்பும், சித்ரா,பாபு ஆகியோர் பங்களிப்பும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்றாகும்.
தேவா சாருக்கு மெயிலிலும் நன்றி தெரிவித்துள்ளேன். நிச்சயம் அவர் பங்களிப்பை பயன்படுத்துவோம்.

//MANO நாஞ்சில் மனோ said...
சிபி மட்டும், குற்றாலம் சென்று, குரங்குகளிடம் மாட்டி, உடுத்த வைத்திருந்த உடைகளை இழந்து, பணியிலிருந்த பெண் காவலரிடம், பல்பு வாங்கியது பற்றி நாஞ்சில் மனோ தனிப் பதிவு போட உள்ளார். அதனால், அது பற்றி நான் விரிவாக சொல்ல போவதில்லை.
>>>>>>>>>
அது உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா ஆபீசர் ஹா ஹா ஹா...//
ஆமா, என்னிடம் ஃபோன் போட்டு சொன்னாங்க, அந்த சகோதரி.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
பதிவர் சந்திப்புகளுக்கு நல்லதொரு முன்னுதாரணமா நெல்லை சந்திப்பு நடந்திருப்பதை பார்த்து மனம் உவகை கொள்கிறது...//
எல்லாம் உங்களைப்போன்ற நண்பர்களின் ஊக்கமும் உற்சாகமுமே.

உணவு உலகம் said...

//நிரூபன் said...
அப்பப்பா,இணைய வழி இணைந்திருந்த இரு சகோதரிகளின் சந்திப்பில், சந்தோசம் கரை புரண்டு ஓடியதை ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தேன். நிஜம்தான், அடுத்த ஓரிரு நாட்களில், நானிருந்த அலுவலக கட்டிடத்தை விட்டு, அடுத்த கட்டிடத்திற்கு மாற வேண்டியதாயிற்று.
>>>>>>>>>>>>>>>>>>>>
ஆஹா....இம்புட்டு ரகளை பண்ணியிருக்காங்களா..
என்ன வெறித்தனம்?
என்ன ஒரு டெரர் காமெடி பண்ணியிருப்பாங்க...
நம்ம ஆப்பிசரின் ஆப்பிஸை இடம் மாற்றும் அளவிற்கு காமெடியா....
ஹி....ஹி...//
நெசமாலுமே நிரூபன்.

உணவு உலகம் said...

//நிரூபன் said...
சரி, சந்திப்பின்போது சமூக சேவை என்று ஒன்று செய்ய திட்டமிட்டோம் அல்லவா. அன்று கலந்து கொண்ட பதிவர்கள் அனைவரும் அள்ளி அள்ளி வழங்கியதில் சேர்ந்த ரூபாய் ஐயாயிரத்து அறுநூற்று பதினைந்தை, அநாதை குழந்தைகள் நலனிற்கு செலவிட முடிவெடுத்தோம்.
>>>>>>>>>>>>>>>>>
அருமையான முயற்சி அண்ணாச்சி,
பதிவர்களால் வெறுமனே மொக்கை போட்டு, இணையத்தில் தாம் விரும்பியதை கண்ட படி தாறு மாறாக எழுதுவார்கள் என அறிக்கை விடும் பலருக்கு,
இச் செயல் மூலம் பதிவர்களால்
எப்படியெல்லாம் செயலாற்ற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறீங்க.
உங்களின் இச் செயலுக்கு தலை தாழ்த்துகிறேன்.//
சரிங்க தம்பி. உங்கள் ஊக்குவிப்பும் ஒரு காரணமல்லவோ!

உணவு உலகம் said...

//நிரூபன் said...
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பதிவர்களின் சமூகசேவையினை மனதாரப் பாராட்டுகிறேன்! இனி இப்படி ஒரு சேவை செய்யப்படும் போது கண்டிப்பாக எனக்கு அறிவிக்கவும் ஆஃபீசர்! நானும் எனது பங்களிப்பை வழங்குவேன்!
>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆப்பிசர், ஓட்ட வடையின் கருத்துக்களை நானும் வழி மொழிகிறேன்,
அடுத்த முறை எனக்கும் சொல்லுங்கள். நானும் என்னாலான உதவிகளை வழங்குகிறேன்,//
நிச்சயம் பயன்படுத்திக்கொள்கிறேன். அதான், அடுத்த வருட சந்திப்பில் நீங்கள் கலந்து கொள்ள வருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளீர்களே.

உணவு உலகம் said...

//நிரூபன் said...
வீடியோ ட்ரெயிலர் கலக்கல், வரவேற்பு உரை அருமையாக இருக்கிறது. பதிவர் அறிமுகத்தோடு, ஆப் ஆக்கி விட்டீங்களே...
அடுத்த பாகத்தினைப் பார்ப்பதற்காலய் ஆவலோடு காத்திருக்கிறேன்.//
வருது வருது நாளை சிபி புயல் வருது.

உணவு உலகம் said...

//winmani said...
எங்களையும் கூட்டத்தில் சேர்த்துக்கலாமா ?
வின்மணி//
பதிவர்கள் அனைவரையும் எப்போதும் வரவேற்க தயாராய் இருக்கிறோம்.

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
வீடியோ பதிவில் என்னை அழகாக காட்டவும் ஹி ஹி//
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!

Paleo God said...

இந்தச் சந்திப்பின் ஹைலைட் இதுதான் என்று நம்புகிறேன். இல்லையென்றால் பத்தோடு பதினொன்றாக ஒரு பதிவர் சந்திப்பாக ஆகி இருக்கும். ஓய்வு நேரம் அலுவல்களை விட்டுவிட்டு வரும் மக்களுக்கும் இது ஒரு பெரிய ஆத்ம திருப்தி தரும் விஷயம்.

உதவும் உள்ளங்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!

மகிழ்ச்சி சார். :)

தருமி said...

வாழ்த்தும், நன்றியும் ...