கடந்த ஒரு மாதமாக நெல்லையில் மையம் கொண்டிருந்த சிரிப்புப் புயல்,அமெரிக்காவை நோக்கி அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆம், இன்று தன குடும்பத்துடன்,சித்ரா வானில் பறந்து கொண்டிருக்கிறார்.
இந்த நெல்லை பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று விருட்சமாக வளர்ந்து பரவிட, விதை இட்டவர் அன்பு தங்கை சித்ரா. அமெரிக்காவிலிருந்து புறப்படும் முன்னரே, அண்ணா, பதிவர் சந்திப்பு எப்போ, எப்போ என்று கேட்டு நாளும் ஒரு மெயில் அனுப்பி வைப்பார்.
சித்ராவின் இனிய குணமே, சிரிப்புத்தான். அவர், பதிவர் சந்திப்பு முன்னேற்பாடு கூட்டத்திற்காக வந்த போதுதான், முதல் முதலாக நேரில் சந்தித்து கொண்டோம். ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் மத்தியில் இருக்கும் பாசத்தை மிஞ்சும் நேசம் காட்டினார், சக பதிவர்களிடம். அந்த சிரிப்பு புயலின் இதயம் கூட, சோகத்தில் மூழ்கிய சம்பவங்களும் நெல்லையில் நடந்தது.
ஆம், பதிவர் சந்திப்பு முடிந்த அடுத்த வாரம், நெல்லையில் உள்ள அன்பு ஆசிரம குழந்தைகளுக்கு, உணவு தயாரிக்கும் பாத்திரங்களும், புத்தக பைகளும் வழங்க சென்றபோது, சிரிப்பு புயல் முகத்தில், முதல் முதலாக சோகம் சொந்தம் கொண்டாடியது. அந்த பிஞ்சு உள்ளங்கள் உண்ணும் உணவிற்கே திண்டாடிய காட்சிகள், அவர் மனதில் பல மாற்றங்களை கொண்டு வந்ததை நான் கவனிக்க தவறவில்லை.
பைகள் வழங்கி வெளியில் வந்ததும், சித்ராவும், கௌசல்யாவும் என்னிடம் கேட்ட கேள்வி: அண்ணா, நம் வீட்டு குழந்தைகள், நட்சத்திர உணவகங்களில், நாசூக்காய் உணவருந்தி, நாவிற்கு ருசியில்லை என்று உணவை உதாசின படுத்துகின்றனர். இங்கோ, ஒரு வேளை உணவிற்கும், உடுக்கும் உடைகளுக்கும், படுக்கை விரிப்புகளுக்கும் பரிதவித்து போகின்றனரே, வேலை முடித்து, வெளியிலிருந்து வரும் அப்பா, இன்று என்ன தின்பண்டம் வாங்கி வந்துள்ளார் என்று எதிர்பார்க்குமே குழந்தைகள். இந்த பிள்ளைகளுக்கு, தின்பண்டம் கூட வேண்டாம், உண்ண உணவு கொடுக்க உற்றார், உறவினர் கூட இல்லையே, என்ன கொடுமை இது என்று சொன்னபோது அவர்கள் விழிகளில், சிறு துளி நீர், சிதறிடக் கண்டேன். எனவேதான், பதிவர் சந்திப்பின் தொடர்ச்சியாக, அந்த பள்ளியின் தரத்தை உயர்த்துவதை லட்சியமாக எடுத்து கொண்டோம்.
நேற்று மாலை, நெல்லையிலிருந்து விடை பெற வந்தபோது, இரண்டாவது முறையாக, அந்த சிரிப்பு புயலின் முகத்தில், சோகம் சிறிது இளையோடியதைக்கண்டேன். எனது விழிகளும், அந்த நிமிடங்களில் பனித்தன. பெற்றெடுத்த அன்னை வேறென்றாலும், உற்ற தங்கையை, உடன் பிறந்த சகோதரியை, கரம் பிடித்த கணவன் வீட்டிற்கு, வழியனுப்பும் மன நிலையே என்னிடமும் இருந்தது.

பதிவர் சந்திப்பு அறிமுக உரைகள் இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து பதிவர்கள் தத்தம் வலைப்பூ குறித்தும், வலைதள அனுபவங்கள் குறித்தும் பேசிய பதிவுகளை, யூ டியூப் மூலமோ, மாற்று முறைகளிலோ, ஒரே பதிவில் காணும் வகையில் பதிவேற்றம் செய்ய முயல்கிறேன்.அதற்காக, அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.

30 comments:
super!
காட்சிகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்திய பகிர்வுக்குப் பாரட்டுக்கள். பள்ளியைத் தரமுயர்த்தும் உயர்ந்த மனதிற்கு வாழ்த்துக்கள்.
சித்ரா நல்ல மனிதராகவும்,நட்புக்கு மரியாதை தருபவராகவும் இருக்கிறார்
பதிவர்கள் மாநாட்டில் நானும் கலந்துகொண்டமாதிரி
ஒரு உணர்வு அவ்வளவு அழகாக தகவலைத் தந்துள்ளீர்கள்.
சித்ரா அவர்களின் இளகிய மனதிற்க்கும் என் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் அருமையான பதிவை பகிர்ந்துகொண்ட
உங்களுக்கு மனமார்ந்த நன்றி சகோதரரே......
Thank you sir and our beloved chitra madam wish her a happy journey.
சித்திரா மேடம் பற்றிய பகிர்வு, எங்கள் கண்களிலும் கண்ணீரை வர வைக்கிறது.
அவரது கல கலப்பான பேச்சும், அவர் பேசிக் கொண்டிருக்கையில் சிபியின் பின்னணிக் குரலையும் இந்த வீடியோவில் பார்த்து மகிழ்ந்தேன்.
சந்திப்பை நேரில் பார்த்தது போன்ற உனர்வு தந்தது வீடியோ! நன்றி சார்!
அருமை ஆப்பீசர், பதிவர் சித்ரா பற்றிய தகவலகள் நெகிழ்வு! மிக்க மகிழ்ச்சி!
இது அண்ணன் தங்கை செண்டிமெண்ட் சீன்.......சினிமா பாத்தது மாதிரியே இருக்கே ..
//அதற்காக, அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.//
ஓக்கே பாஸ்! காத்திருக்கிறோம்! :-)
nice, வீடியோ பகிர்வுக்கு நன்றிங்க சார்
வீடியோ பகிர்வுக்கு நன்றி சார். முழுமையான் வீடியோ வுக்கு காத்திருக்கேன்
அருமை அருமை ஆபீசர்....சித்ரா மேடத்தின் சிரிப்பு முகத்தில் கவலைஎன்றால் அந்த ஆசிரமத்தின் நிலை நன்றாக புரிகிறது ஆபீசர்...!!
பதிவர் சந்திப்பின் தொடர்ச்சியாக, அந்த பள்ளியின் தரத்தை உயர்த்துவதை லட்சியமாக எடுத்து கொண்டோம்.//
நல்ல முயற்ச்சி ஆபீசர் வாழ்த்துக்கள்...
விக்கியுலகம் said...
super!//
டேய் அண்ணா தமிழ்ல கமெண்ட்ஸ் போடு ராஸ்கல் ஹி ஹி.....
வீடியோ பதிவை பார்க்க ஏற்பாடு செய்திருக்கீறீர்கள் நன்றி சங்கரலிங்கம் சார், சித்ராவை பார்த்தால் கொஞ்சம் பொறாமை வருகிறது. எப்பொழுதுமே சிரிப்பு. எப்படி சித்ரா?
//@ விக்கியுலகம்
@இராஜராஜேஸ்வரி
@ஆர்.கே.சதீஷ்குமார்
@ அம்பாளடியாள்
@ Thangasivam
@ நிரூபன்
@ சென்னை பித்தன்
@ பன்னிக்குட்டி ராம்சாமி
@ koodal bala
@ ஜீ..
@ மாணவன்
@ தமிழ்வாசி - Prakash
@ நாஞ்சில் மனோ
நன்றி அனைவருக்கும்.
@ரூஃபினா மேடம்:
நன்றி
அருமையான பதிவு.
திரும்ப திரும்ப போட்டு பார்க்க, கேட்க வேண்டும்.
நன்றி.
இணைய வழியில் இத்தனை உறவுகளா? நன்றி...கூகுள்
நன்றி ரத்னவேல் சார்,
நன்றி குணசேகரன்.
Good.,
சித்திராக்கா சிலிர்க்க வச்சிட்டார்...
தங்கை சித்ராவைப் பற்றிய இனிய பகிர்வு அழகு!
good
ஒவ்வொரு காணொளியையும் பார்க்கறச்சே நேர்ல கலந்துக்கிட்ட உணர்வு..
மிக அருமை.. :))
உங்களுக்கு என் உளமார்ந்த பாரட்டுக்கள்.
யாதும் ஊரே. யாவரும் கேளிர் என்பதனை தாங்களும் தங்களைபோன்றோரும் பதிவுலகிலும் மற்றெங்கும் அவ்வப்போது மெய்ப்பித்து வருகின்றனர்.
வாழ்த்துக்கள்.
God Bless You.
உங்களுக்கு என் உளமார்ந்த பாரட்டுக்கள்.
யாதும் ஊரே. யாவரும் கேளிர் என்பதனை தாங்களும் தங்களைபோன்றோரும் பதிவுலகிலும் மற்றெங்கும் அவ்வப்போது மெய்ப்பித்து வருகின்றனர்.
வாழ்த்துக்கள்.
God Bless You.
சித்ரா மூலம் உங்கள் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இனி தொடர்கிறேன்.
Post a Comment