இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Friday 1 July, 2011

ATM மெஷின்கள் பயன்படுத்துப்வரா?எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதைங்க!

இன்று  முதல் வங்கி ATM களில்,அதாங்க தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில், பரிவர்த்தனை செய்யும்போது கவனமா இருங்க.   


வங்கியில் போய், நாம் சேமித்த பணத்தை எடுத்திட, கால் கடுக்க நின்றிடும், கஷ்டங்களை போக்க வந்த புண்ணியாத்மாதான் ATM  இயந்திரங்கள். வங்கிகளில்  நிரம்பி வழிந்த கூட்டங்கள் கட்டுக்குள் வந்தன. பணம் தேவைபடுவோர் தெருவிற்குத் தெரு புதிதாய் முளைத்த தானியங்கி இயந்திரங்களில் பணம்  எடுத்து சென்றனர். 
முதல் ஆப்பு: முதலில், எந்த வங்கியின் ATM  இயந்திரங்களில் இருந்தும், நமக்கு கணக்கு உள்ள வங்கியின் டெபிட் கார்டை வைத்து எத்தனை முறை வேண்டுமானாலும்(நம் கணக்கில் பணம் இருந்தால்!), பணம் எடுக்கலாம் என்றிருந்த நடைமுறையினை மாற்றி, கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ATM இயந்திரங்களில் மட்டுமே, எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம். மற்ற வங்கியின் இயந்திரங்களிலிருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே, பண பரிவர்த்தனை பண்ணலாம் என்றும், கூடுதல் பண பரிவர்த்தனை நடந்தால், ரூபாய் இருபது அவர்தம் கணக்கில் இருந்து கழிக்கப்படும் என்றும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. 
முடிந்தவரை ஆப்பு: இன்று முதல், பண பரிவர்த்தனை மட்டுமல்ல, பண பரிவர்த்தனை அல்லாத பிற பரிவர்த்தனைகள், அதாகப்பட்டதாவது, கணக்கில் இருக்கும் இருப்பு அறிந்து கொள்வது, கடைசியாக நடந்த ஐந்து பரிவத்தனைகள் குறித்த அறிக்கையினை பிரிண்ட் எடுப்பது போன்றவற்றையும், பிற வங்கிகளின் இயந்திரங்களில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே மேற்கொள்ளலாம். அதற்கு மேல் ஒரு முறை கூடினாலும், ரூபாய் இருபது நமது வங்கி கணக்கில் இருந்து கழிக்கப்படும்.
சின்ன சந்தோசம்: இந்த நிபந்தனைகள் யாவும், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் இயந்திரங்களில் பண்ணும் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது. என்ன, நீங்கள் வெளியூர் சென்றால், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் இயந்திரங்களைத் தேடி ஓடவேண்டும், அவ்வளவுதான்! 
டிஸ்கி:  'விக்கி உலகம்', 'நாய் குட்டி மனசு'  ஆகியவற்றில் வங்கி பற்றி வந்த பதிவுகளின்  தாக்கம்தான், இந்த முயற்சி.
Follow FOODNELLAI on Twitter

20 comments:

ம.தி.சுதா said...

////நீங்கள் வெளியூர் சென்றால், கணக்கு வைத்திருக்கும் வங்கியின் இயந்திரங்களைத் தேடி ஓடவேண்டும், அவ்வளவுதான்! ////

மிகச் சரியுங்க..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

Unknown said...

தகவலுக்கு நன்றிங்கன்னே!

நிரூபன் said...

பயனுள்ள, ஓர் விழிப்புணர்வுத் தகவலைத் தந்திருக்கிறீங்க. நன்றி பாஸ்.

சக்தி கல்வி மையம் said...

useful post..

Carfire said...

இதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை...
நம்மவர்கள் AC காற்று வாங்கவும் balance செக் பண்ணவும் தான் ATMக்கு போறாங்க.....
மாதம் 5 முறை வேறு வங்கி ATMகளை உபயோகபடுத்திக் கொள்ளலாமே???

MANO நாஞ்சில் மனோ said...

இந்த கர்மத்துக்குதான் நான் ஒரு கார்டுமே வச்சிக்கிறது இல்லை ஆபீசர்...!!

MANO நாஞ்சில் மனோ said...

சூதனமா இல்லைன்னா ஆப்பு மேலே ஆப்பு வந்து நம்மை சேரும் ஜாக்கிரதை...

சென்னை பித்தன் said...

ATM இல் பணம் எடுத்ததே இல்லை!
பயன் படுத்துவோர் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

செங்கோவி said...

இப்படி மாத்துனதைப் பத்தி எதுவும் அறிவிப்பு வந்த மாதிரியே தெரியலையே..

செங்கோவி said...

என்னமோ தெரியலை சார்..உங்க பதிவு என் டேஷ்போர்டுல உடனே வர மாட்டேங்குது..அதான் லேட்டு..சரி, பார்க்கிரேன்..

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி தான் இதுக்கு காரணமா? அவனை உதைக்கனும் முதல்ல ஹா ஹா

ஷர்புதீன் said...

thanks for the info sir!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி ஆப்பீசர்.......

தமிழ்வாசி பிரகாஷ் said...

சார் இன்னொரு முக்கியமான விஷயம்.
ஆக்சிஸ் பேங்க்கில் savings account வைத்திருப்பவர்கள் பணம் போட, பணம் எடுக்க மாதம் ஐந்து முறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்யலாம். அதற்கு மேல் உபயோகிப்பவர்கள் ஆயிரத்திற்கு ரூ.2.50 அல்லது ரூ.90 இதில் எது அதிகமோ அத்தொகை வசூலிக்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்திருக்கிறார்கள்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பண பரிவர்த்தனை அல்லாத பிற பரிவர்த்தனைகள்,ஒரு மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே மேற்கொள்ளலாம். அதற்கு மேல் ஒரு முறை கூடினாலும், ரூபாய் இருபது நமது வங்கி கணக்கில் இருந்து கழிக்கப்படும்.//
மிகவும் உபயோகமான தகவல்

கூடல் பாலா said...

One more useful post

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

சாகம்பரி said...

அதனால்தான் மொபைல் பாங்கிற்கு மாறிவிட்டேன். ஆனால் அதற்கு எப்போது 'ஊழிகாலம்' என்று தெரியவில்லை.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

நானானி said...

நல்ல பயனுயுள்ள பகிர்வு. நன்றி.
நான் எப்போதும் வேறு வங்கி ஏடிஎம் தேடி ஓட மாட்டேனே!