இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 4 July, 2011

மதிதா இந்து கல்லூரி பள்ளியில் மனம் மயங்கிய விழா.


நூற்றைம்பதாவது ஆண்டு விழா நுழைவு  வாயில்.
                 நெல்லைக்குப்  பெருமை சேர்க்கும், தொல்லைகள் களைய, துயரங்கள் தீர, எல்லையில்லாக் கல்வியை ஊட்டும், ம.தி.தா. இந்து கல்லூரி பள்ளியில், இனிதே நடைபெற்ற  நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழா கண்டு,  என் பள்ளி நாட்களை நினைத்து, மனம் மகிழ்வுற்றது. என்   மனம் மகிழ்ந்த நிகழ்ச்சி, உங்களுடன் பகிர்ந்திட:  

ம.தி.தா பள்ளி குறித்து, அம்மா, நான் பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேன்.  என்ற பதிவில் ஏற்கனவே, விரிவாக எடுத்துக்  கூறியுள்ளேன். "டில்லிக்கே ராஜான்னாலும், பள்ளிக்குப்  பிள்ளைதான்" என்றொரு வழக்கு மொழி உண்டு. அதை நான் கண்ட இடம், இந்த பள்ளி விழாதான்.
நன்றி:தினமலர்.

கற்றறிந்த சான்றோரும், கல்வியாளர்களும் வீற்றிருந்த சபையினிலே, முன்னாள், இந்நாள் ஆசிரியர்களும், முன்னாள்  மாணவர்களும், பள்ளியின் பெருமை கூறி பேசிய விதம், இந்நாளில் பயிலும்  மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாய் அமைந்தது.  முன்னாள் மாணவர்கள் பலர்,   நீதியரசர்களாகவும், மத்திய ஆட்சிப் பணியாளராகவும்,  பல்துறைகளிலும் சிறந்து விளங்கும் தொழிலதிபர்களாகவும்,இந்நாளில்  வலம் வந்து  கொண்டிருக்கின்றனர். இன்று வாழ்வில் வென்றிட, அன்று கல்வியை ஊட்டிய பள்ளியை மறவாது, சிறு பிள்ளைகள் போல், அனைவரும் வந்திருந்தனர்.
வ.உ.சியும் , பாரதியும் பயின்ற பள்ளியின் அறைகளிலே,அவர் தம் பெருமை கூறும், ஓவியக் கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் எழில்மிகு கலை நிகழ்ச்சியும், பள்ளியில் துவங்கி, முக்கிய வீதிகள் வழியே சென்று, நூற்றைம்பதாவது ஆண்டு நுழைவு வாயில் வழியே பள்ளிக்கு வந்து சேர்ந்த ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. முன்னாள் நன்கொடையாளர்களின் வாரிசுகளும், இந்நாள் நன்கொடையாளர்களும், விழாவில் கௌரவிக்கப்பட்டனர். மாநகராட்சியில், மாசற்ற பணிபுரிந்து, ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் திரு.மகாலிங்கம் அவர்கள், பள்ளி வளர்ச்சிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.
பள்ளியில் பயின்ற காலத்தில், ஒன்றாய் சேர்ந்து சுற்றி, ஊரைக் கலக்கிய முன்னாள் மாணவர்கள் பலர், மேடையில் ஏறியதும், கல்வி அறிவை ஊட்டிய, தத்தம் ஆசிரியர் பெருந்தகைகள் குறித்துப் பேசி, புளகாங்கிதம்  அடைந்தனர். பல ஆண்டுகள் சந்திக்க மறந்த பள்ளி உறவுகளை, சந்தித்து மகிழவும், பள்ளி நாட்களை அசைபோடவும், இந்த விழா இனிதே உதவிற்று. 
இப்பள்ளியில் பயின்ற திருமிகு.ராமநாதன், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  நீதியரசராகவும், அதேபோல், 1960களில், இப்பள்ளியில் பயின்ற திருமிகு.அனந்தகிருஷ்ணன், மத்திய ஆட்சிப்பணியிலும் கோலோச்சுகின்றனர். 
பள்ளியின் வளர்ச்சிக்கு, பல ஆண்டுகளாக, சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் போன்றோரின் வளர்ச்சி நிதியிலிருந்து, பெருந்தொகை பெற்றுத் தந்த பெருமையெல்லாம், கல்விக் குழு செயலாளராக உள்ள,தற்போதைய, நெல்லை  மாநகர மேயர் திருமிகு.அ.லெ.சுப்பிரமணியன் அவர்களையே  சேரும். 
மொத்தத்தில், மாலை நேரத்தில்  மனம் நெகிழ்ந்திடச் செய்த ஓர் அற்புத  விழா இது என்றால் மிகையன்று. 
டிஸ்கி-1: கடந்த முறை, இப்பள்ளி பற்றி பதிவொன்று எழுதியபோது, துபாயில் பணிபுரியும், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர், நீங்கள் இப்பள்ளியில் பயின்றவரா,இவ்வளவு விரிவாக பள்ளி பற்றி எழுதியுள்ளிர்களே என்று கேட்டார்.எந்த பள்ளியில் பயின்றாலும், பள்ளியில் பயின்ற நாட்கள், பசுமை நிறைந்த நினைவுகள் தந்திடும்தானே!
டிஸ்கி-2 : ம.தி.தா. பள்ளிக்கென, அடுத்த ஒரு வாரத்தில், வலைத்தளம் ஒன்றும்  புதிதாக துவக்கப்பட உள்ளது.
Follow FOODNELLAI on Twitter

29 comments:

Unknown said...

அண்ணே பகிர்வுக்கு நன்றி!

உணவு உலகம் said...

முதல் வருகைக்கு நன்றி தல.

சகாதேவன் said...

நானும் ஒரு பழைய மாணவன். S.S.L.C வரை, P.U.C யும் அங்குதான். மறு வருடம் கல்லூரி பேட்டைக்கு மாறியதால் சவேரியார் கல்லூரியில் சேர்ந்தேன்.
மூன்று நாட்கள் நடந்த விழாவில் முதல்நாள் நன்கொடையாளர்கள் தினம் அன்று மட்டுமே செல்ல முடிந்தது.
அந்த நிகழ்ச்சித் தொகுப்பை நான் எடுத்த போட்டோக்களுடன் பதிவிட்டிருக்கிறேன்.
பார்த்துச் சொல்லுங்களேன்.

சகாதேவன்

rajamelaiyur said...

//
ம.தி.தா. பள்ளிக்கென, அடுத்த ஒரு வாரத்தில், வலைத்தளம் ஒன்றும் புதிதாக துவக்கப்பட உள்ளது.
//

நல்ல விழயம் ....வலைசரத்தில் நான் ..
வாங்க வசமா மாட்டிகிட்டிங்களா ?

சி.பி.செந்தில்குமார் said...

>>: ம.தி.தா. பள்ளிக்கென, அடுத்த ஒரு வாரத்தில், வலைத்தளம் ஒன்றும் புதிதாக துவக்கப்பட உள்ளது.


அதற்கு டைரக்‌ஷன் மேற்பார்வை எங்க அண்ணனா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆபீசர் அருமையான பகிர்வு..

சக்தி கல்வி மையம் said...

பள்ளியில் பயின்ற நாட்கள், பசுமை நிறைந்த நினைவுகள் தந்திடும்தானே! ---- unmaithaan ..
thanks..

கூடல் பாலா said...

நான் கல்லூரியில் பயின்றபோது இப்பள்ளியில் நடந்த புத்தக கண்காட்சிக்கு வந்திருக்கிறேன் .மிகச்சிறந்த பள்ளிகளில் ஒன்று ம தி தா பள்ளி

Anonymous said...

arumaiyana pathivu sir :)

செல்விகாளிமுத்து said...

மலரும் நினைவுகள் சூப்பர் சார்.

Unknown said...

அருமையான பதிவு சார்.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

உங்களின்
"பசுமை நிறைந்த நினைவுகள்"
மிகவும் அருமை ...
தலைப்பு வைப்பதில் -சி.பி.செந்தில்குமாரை
மிஞ்சி விட்டிர்கள்--

அன்புடன்
யானைக்குட்டி

சென்னை பித்தன் said...

நல்ல பகிர்வு.நன்றி!

அம்பாளடியாள் said...

பள்ளிக்கூடம் என்று கேட்டாலே
சின்னப் பிள்ளைபோல் ஆகிவிடுகின்றோம்.
இந்த நினைப்புமட்டும் நெஞ்சில் எப்போதுமே
பசுமையான உணர்வலைகளைத் தூண்டிவிடும்.
அதனால எனக்கு சில வினாடிகள் ஒ என்று
அளச்சொல்லும்.இன்றைக்கு என்னை அழவைத்து
விட்டீர்கள் பறுவாயில்லை.பகிர்வுக்கு மிக்க
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்கள் மூலம் நெல்லை விஷயங்கள் படித்து நானும் நெல்லைக்கரன் ஆகிவிடுவேன் போல...

மகிழ்ச்சியாக இருக்கிறது...

Jana said...

அனைவரும் மீண்டும் ஒருமுறை வேண்டும் என்று ஏங்குவது தங்கள் கல்லூரி வாழ்வைத்தானே...
நெல்லை விடையங்கள் பலவற்றை உங்கள்மூலம் அறியமுடிகின்றது.

இளங்கோ said...

மதி தா.. :)

வலைத்தளம் ஒன்றும் புதிதாக துவக்கப்பட உள்ளது.
vaalthukkal

Unknown said...

வாழ்த்துக்களும் நன்றிகளும் பகிர்வுக்கு!!

செங்கோவி said...

//டில்லிக்கே ராஜான்னாலும், பள்ளிக்குப் பிள்ளைதான்// அருமை சார்..புதிய வலைத்தளம் சிறக்க வாழ்த்துகள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவரவர் பள்ளியை நினைவுபடுத்தும் அருமையான பகிர்வு தலைவரே...!

சரியில்ல....... said...

ஓ... இது தான் பள்ளியா? அது இப்பிடித்தான் இருக்குமா?

சரியில்ல....... said...

பழைய பீலிங்கை எல்லாம் கெளப்பிவுட்டிங்களே வாத்யாரே...

உணவு உலகம் said...

1.வந்து வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.
2.பதிவில் கமெண்ட் போடாமலே, படித்து ரசித்த, ம.தி.தா.முன்னாள் மாணவர்கள் மற்றும் பதிவு குறித்து மடல் அனுப்பியவர்களுக்கும் நன்றி.

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பகிர்வு.
மதிதா மாணவர்கள் சார்பில் நன்றிகள்.

முன்னாள் மாணவன்

Anonymous said...

பழைய பள்ளி நினைவுகள் மறக்க முடியுமா

இராஜராஜேஸ்வரி said...

பசுமை நிறைந்த மலரும் நினைவுகளில் திளைத்த அருமையான பகிர்வுக்கு மனநிறைந்த பாரட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Unknown said...

அருமையான பதிவு!

நிரூபன் said...

நெல்லைக்குப் பெருமை சேர்க்கும் மதிதா கல்லூரியின் ஆண்டு விழா பற்றிய தகவல்களோடு,
இக் கல்லூரி மூலம் சிறப்படைந்தோரையும் பற்றிக் குறிப்பிட்டுப் பதிவினைச் சிறப்பித்திருக்கிறீங்க.

பகிர்விற்கு நன்றி ஆப்பிசர்.

உணவு உலகம் said...

//நிரூபன் said...
நெல்லைக்குப் பெருமை சேர்க்கும் மதிதா கல்லூரியின் ஆண்டு விழா பற்றிய தகவல்களோடு,
இக் கல்லூரி மூலம் சிறப்படைந்தோரையும் பற்றிக் குறிப்பிட்டுப் பதிவினைச் சிறப்பித்திருக்கிறீங்க.
பகிர்விற்கு நன்றி ஆப்பிசர்.//
தங்கள் வருகைக்கு நன்றி.