இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 7 July, 2011

ஈ டிக்கெட் சேவை-இது ரொம்ப தேவை!

                               ஓரிடத்திலிருந்து, மற்றோர் இடத்திற்கு பயணம் செய்வதென்றால், பணம் இருந்தும், பயணம் செய்திட டிக்கெட்  கிடைக்காது திண்டாடும் நம்மில் பலரைப்  பார்க்கையில்,பணம் பத்தும் செய்திடும் ( பணம் இருந்தால் மட்டுமே, எல்லாம் முடிந்துவிடும்), என்று சொல்வதில் அர்த்தம் இல்லை என்றே எண்ணுகிறேன். 

                                   முன்பெல்லாம், தென் மாநிலங்களில் இருந்து, சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு,  கோடை விடுமுறை பயணமென்றால் மட்டுமே, முன் பதிவு கிடைப்பது, குதிரைக்கொம்பாக இருந்தது. அது ஒரு கனாக்காலமாக மாறி, வருடத்தின் அனைத்து நாட்களிலும், ரயில் பயணம் என்றாலே, ரணமாய் ஆகிவிடுகிறது. முன் பதிவு வரிசையில் நின்று, முண்டியடித்து, கணினிக்கு அருகில் செல்லும்போது, காத்திருப்போர் பட்டியல் அல்லது RAC மட்டுமே இருப்பதாக, அங்குள்ள அலுவலர் சொல்வார்.
                                         ரணங்களுக்கு மருந்து பூச, ரயில்வே நிர்வாகம், புது முடிவு ஒன்று எடுத்துள்ளது. கொஞ்ச நாள் முன்பு வரை, IRCTC தளம் வழியாக, தனி நபர் மட்டுமின்றி, முகவர்களும், ரயில் பயண முன் பதிவு டிக்கெட்டுகள் எடுக்க அனுமதித்திருந்தனர். இதனால், தட்கல் டிக்கெட்கள் எடுக்க ரயில் நிலையங்களில், முன் பதிவு செய்திட காத்திருப்போர், கால் கடுக்க நின்று, ஏமாந்து திரும்பிய சம்பவங்கள் தொடர்ந்ததால்,  IRCTC முகவர்கள், தட்கல் டிக்கெட்களை காலை எட்டு மணிக்கு எடுக்கும் முறையை மாற்றினர். 
                                தற்போது, பயணிகள்   நலனைப் பாதுகாக்க, ரயில்வே நிர்வாகம், புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. பயணிகள் மட்டுமே, டிக்கெட் முன் பதிவு செய்திடும் வகையில்,இந்த வலைத்தளம் வசதி அளிக்க உள்ளது. தனி நபர்கள், தங்கள் விபரங்களைப் பதிவு செய்து கொண்டு, நண்பகல் 12 .30 மணி முதல், இரவு 11.30 மணி வரை இந்த சேவையைப்  பயன்படுத்தி, டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளலாம்.  தற்போது IRCTC தளம் மூலம் டிக்கெட் எடுக்கும்போது, தூங்கும் வசதி முன் பதிவிற்கு பத்தும், இதர வகுப்புகளுக்கு,இருபது ரூபாய் சேவை கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. புதிய தளத்தின் மூலம் டிக்கெட் எடுக்கும்போது, தூங்கும் வசதி முன் பதிவிற்கு, ரூபாய் ஐந்தும், இதர வகுப்புகளுக்கு பத்து ரூபாயும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். மாதம் ஒன்றிற்கு,தனி நபர் ஒருவர், எட்டு முறை இந்த சேவையை பயன்படுத்தி, டிக்கெட் எடுக்கலாம்.
                                  விரைவில் வரட்டும் இந்த சேவை.
டிஸ்கி: இதுவரை இந்த செய்தியை, பொறுமையுடன் படித்த உங்களுக்குப்  பரிசாக, பதிவர் சந்திப்பு காணொளி ஒன்று, கண்டு களித்திட :


Follow FOODNELLAI on Twitter

61 comments:

மொக்கராசா said...

thanks for your information

உணவு உலகம் said...

வாங்க ராசா, அதிகாலை வணக்கமுங்க.

மொக்கராசா said...

வீடியோ பார்த்து "ஐய்யோ நான் கலந்து கொள்ளவில்லையே "என்று என்னை நானே நொந்து கொண்டேன்.....

MANO நாஞ்சில் மனோ said...

என்னை போன்ற கைபிள்ளைகளுக்கு இது பயனுள்ள பதிவு ஆபீசர் தேங்க்யூ....!!!

கோவை நேரம் said...

சிபி அண்ணன் சவுண்ட் ரொம்ப பலமா இருக்கே ...

MANO நாஞ்சில் மனோ said...

மொக்கராசா said...
வீடியோ பார்த்து "ஐய்யோ நான் கலந்து கொள்ளவில்லையே "என்று என்னை நானே நொந்து கொண்டேன்.....//

ஆபீசர்'கிட்டே சொன்னீங்கன்னா இன்னொரு சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணிருவார்...!!!

Unknown said...

அண்ணே பயனுள்ள பதிவு...நன்றிங்கோ!

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
என்னை போன்ற கைபிள்ளைகளுக்கு இது பயனுள்ள பதிவு ஆபீசர் தேங்க்யூ....!!!//
நன்றி, என்னாது கைப்பிள்ளையா!

உணவு உலகம் said...

//கோவை நேரம் said...
சிபி அண்ணன் சவுண்ட் ரொம்ப பலமா இருக்கே ...//
பதிவர் சந்திப்பிற்கு பின், சிபி சத்தமெல்லாம் குறைஞ்சு போச்சு.

இராஜராஜேஸ்வரி said...

மிகப் பயனுள்ள பகிர்வுக்கும், வீடியோவிற்கும் மிக்க நன்றி ஐயா.

உணவு உலகம் said...

//மொக்கராசா said...
வீடியோ பார்த்து "ஐய்யோ நான் கலந்து கொள்ளவில்லையே "என்று என்னை நானே நொந்து கொண்டேன்.....//

//Blogger MANO நாஞ்சில் மனோ said...
//1.மொக்கராசா said...
வீடியோ பார்த்து "ஐய்யோ நான் கலந்து கொள்ளவில்லையே "என்று என்னை நானே நொந்து கொண்டேன்.....//
2. @Mano:
//ஆபீசர்'கிட்டே சொன்னீங்கன்னா இன்னொரு சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணிருவார்...!!!
ஏற்பாடு பண்ணிடலாம். ஆனா,அதுக்கு மனோ இன்னோரு வாட்டி வரனுமே!

உணவு உலகம் said...

//விக்கியுலகம் said...
அண்ணே பயனுள்ள பதிவு...நன்றிங்கோ!//
நன்றி, குமார்.
இன்னைக்கு, தங்கள் ப்ளாக்கில், சக்தியா, சிவமா?

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
மிகப் பயனுள்ள பகிர்வுக்கும், வீடியோவிற்கும் மிக்க நன்றி ஐயா.//
வருகைக்கு நன்றி, சகோ.

கூடல் பாலா said...

ரயில்வேயின் புதிய தளத்திற்கு வரவேற்புக்கள் அதே வேளையில் தளமானது வேகமாக இயங்கும் வகையில் இருக்கவேண்டும் .சில வேளைகளில் IRCTC மூலம் டிக்கட் புக் செய்ய ரயில் நிலையத்தில் காத்துக்கிடக்கும் நேரத்தை விட அதிக நேரம் ஆகிறது

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இன்டர்நெட் இன்றைய உலகின் ராஜ சேவை !

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பதிவர் சந்திப்பிற்கு பின், சிபி சத்தமெல்லாம் குறைஞ்சு போச்சு. //
ஏஏஏஏஏஏஏன் ????

தமிழ்வாசி பிரகாஷ் said...

வீடியோ பகிர்வுக்கு நன்றி....

சி.பி.செந்தில்குமார் said...

>>நாய்க்குட்டி மனசு said...

பதிவர் சந்திப்பிற்கு பின், சிபி சத்தமெல்லாம் குறைஞ்சு போச்சு. //
ஏஏஏஏஏஏஏன் ????


hi hi ஹி ஹி கும்மு கும்முனு கும்மிட்டாங்க ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>ஈ டிக்கெட் சேவை-இது ரொம்ப தேவை!

aNNee.. அண்ணே, மலையாள ஆளுங்க இந்த டைட்டிலை படிச்சா தப்பா நினைப்பாங்களே? ஹி ஹி

உணவு உலகம் said...

//koodal bala said...
ரயில்வேயின் புதிய தளத்திற்கு வரவேற்புக்கள் அதே வேளையில் தளமானது வேகமாக இயங்கும் வகையில் இருக்கவேண்டும் .சில வேளைகளில் IRCTC மூலம் டிக்கட் புக் செய்ய ரயில் நிலையத்தில் காத்துக்கிடக்கும் நேரத்தை விட அதிக நேரம் ஆகிறது//
அது கணினி மற்றும் இண்டர்நெட் வேகத்தைப் பொருத்தது.இருந்தாலும்,கவலை தரும் விஷயம்தான், நண்பரே.

செங்கோவி said...

இந்தப் பதிவு மூலமான உங்கள் சேவை, எங்களுக்குத் தேவை..வீடியோ இலவச இணைப்பா? நல்ல ஐடியாவே இருக்கே.

உணவு உலகம் said...

//நாய்க்குட்டி மனசு said...
இன்டர்நெட் இன்றைய உலகின் ராஜ சேவை !//
ரைட்டு! இருந்தாலும் இது தொழில் பக்தி.

உணவு உலகம் said...

//நாய்க்குட்டி மனசு said...
பதிவர் சந்திப்பிற்கு பின், சிபி சத்தமெல்லாம் குறைஞ்சு போச்சு. //
ஏஏஏஏஏஏஏன் ????//
ஆடிய ஆட்டம் என்னன்ன்ன்ன? அதான் இப்படி!

உணவு உலகம் said...

//தமிழ்வாசி - Prakash said...
வீடியோ பகிர்வுக்கு நன்றி....//
அப்போ, நீங்க பதிவப் படிக்கலயா?

சக்தி கல்வி மையம் said...

Thanks for sharing...

சக்தி கல்வி மையம் said...

nanbare eppo intha vasathi varukirathu..

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>நாய்க்குட்டி மனசு said...
பதிவர் சந்திப்பிற்கு பின், சிபி சத்தமெல்லாம் குறைஞ்சு போச்சு. //
ஏஏஏஏஏஏஏன் ????
hi hi ஹி ஹி கும்மு கும்முனு கும்மிட்டாங்க ஹி ஹி//
ஹி ஹி, அந்த குற்றாலம்-பெண் போலீஸூ-மேட்டரை மட்டும் சொல்லிடாதீங்க.

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>ஈ டிக்கெட் சேவை-இது ரொம்ப தேவை!
aNNee.. அண்ணே, மலையாள ஆளுங்க இந்த டைட்டிலை படிச்சா தப்பா நினைப்பாங்களே? ஹி ஹி//
பதினோரு மணி காட்சி பார்த்து பார்த்து, இப்படி ஆகிட்டீங்களே!

உணவு உலகம் said...

//செங்கோவி said...
இந்தப் பதிவு மூலமான உங்கள் சேவை, எங்களுக்குத் தேவை..வீடியோ இலவச இணைப்பா? நல்ல ஐடியாவே இருக்கே.//
வீடியோவை தனித் தனி பதிவா போட்டா, சி ன்ன பி ள்ளை, கோச்சுக்குது!

உணவு உலகம் said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
1. Thanks for sharing...

2.nanbare eppo intha vasathi varukirathu..//
விரைவில் அறிமுகம் ஆகப்போகுது இந்த சேவை.

Unknown said...

ஈ- சேவை நமக்கு மிகவும் தேவை.

ராம்ஜி_யாஹூ said...

ஈ- சேவை நமக்கு மிகவும் தேவை.

Thanks for sharing

ராம்ஜி_யாஹூ said...

ஈ- சேவை நமக்கு மிகவும் தேவை.

Thanks for sharing

ராம்ஜி_யாஹூ said...

ஈ- சேவை நமக்கு மிகவும் தேவை.

Thanks for sharing

அம்பாளடியாள் said...

அண்ணே பயனுள்ள பதிவு.நன்றிங்கோ!

சென்னை பித்தன் said...

மிகத்தேவையான தகவல்!
காணொளி கண்டேன்!களிப்புற்றேன்!

K.S.Muthubalakrishnan said...

பயனுள்ள பதிவு, நன்றி.

செல்வா said...

எனக்கு இது புதிய தகவல் சார் :-) நன்றி! அப்புறம் இங்க ஸ்பீக்கர் இல்லாததால இந்த காணொளிக்காட்ச்சிய பார்க்க மட்டுமே முடிகிறது!

rajamelaiyur said...

நல்ல தகவல் நன்றி



வலைசரத்தில் இன்று ...
கண்ணை நம்பாதே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மிகவும் பயனுள்ள தகவல் ஆபீசர்.........

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

சார் ,
மிகவும்..... நல்ல பதிவு ...
சகோதரி வீடியோ ;-
பதிவர் சந்திப்பு மீண்டும் எப்போ வரும்
என்ற ஆவல் உண்டயாயிற்று ....
மீண்டும் ஒரு திபாவளி பதிவர் கலக்கல் சந்திப்பு
(நெல்லை மாவட்டம்) வருமா ?
நண்பர்களை சந்திக்க சிந்திக்க ஒரு வாய்பு
கிடைக்கு மா ???
அன்புடன்
யானைக்குட்டி ......

Thangasivam said...

தேவையான மற்றும் பயனுள்ள தகவல் நன்றி..........

உணவு உலகம் said...

//கே. ஆர்.விஜயன் said...
ஈ- சேவை நமக்கு மிகவும் தேவை.//
ஆமாம், உங்கள் பதிவும் எங்களுக்குத் தேவை.சீக்கிரம் போடுங்க.

உணவு உலகம் said...

//ராம்ஜி_யாஹூ said...
ஈ- சேவை நமக்கு மிகவும் தேவை.
Thanks for sharing//
என்ன சார் இன்றைக்கு ரஜினி பாணில!

உணவு உலகம் said...

//அம்பாளடியாள் said...
அண்ணே பயனுள்ள பதிவு.நன்றிங்கோ!//
வாங்க சகோ.

உணவு உலகம் said...

//சென்னை பித்தன் said...
மிகத்தேவையான தகவல்!
காணொளி கண்டேன்!களிப்புற்றேன்!//
உங்கள் கமெண்ட் கண்டு, நானும் களிப்புற்றேன்.

உணவு உலகம் said...

//K.S.Muthubalakrishnan said...
பயனுள்ள பதிவு, நன்றி.//
முதல் வருகை. காலையில் வந்து கற்றுக்கொண்டு,கமெண்டும் போட்டாச்சு. நன்றி, நண்பரே.

உணவு உலகம் said...

//கோமாளி செல்வா said...
எனக்கு இது புதிய தகவல் சார் :-) நன்றி! அப்புறம் இங்க ஸ்பீக்கர் இல்லாததால இந்த காணொளிக்காட்ச்சிய பார்க்க மட்டுமே முடிகிறது!//
ஊமைப்படம் பார்த்தத ஒத்துக்கிட்டீங்க!

உணவு உலகம் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல தகவல் நன்றி//
வாருங்கள், வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியரே!

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மிகவும் பயனுள்ள தகவல் ஆபீசர்....//
நன்றி, தங்கள் வருக்கைக்கும் வாழ்த்திற்கும்.

உணவு உலகம் said...

//யானைகுட்டி said...
சார் ,
மிகவும்..... நல்ல பதிவு ...
சகோதரி வீடியோ ;-
பதிவர் சந்திப்பு மீண்டும் எப்போ வரும் என்ற ஆவல் உண்டயாயிற்று
மீண்டும் ஒரு திபாவளி பதிவர் கலக்கல் சந்திப்பு(நெல்லை மாவட்டம்) வருமா ?
நண்பர்களை சந்திக்க சிந்திக்க ஒரு வாய்பு கிடைக்கு மா ???
அன்புடன்
யானைக்குட்டி //
கனவுகள் மெய்ப்படும். நன்றி.

உணவு உலகம் said...

//Thangasivam B.Pharm,M.B.A,DPH said...
தேவையான மற்றும் பயனுள்ள தகவல் நன்றி..........//
வாங்க, உலகத்திலயே விலை உயர்ந்த உலோகம் இருக்கு உங்க பேரிலே!

நிரூபன் said...

வணக்கம் ஆப்பிசர்,

இன்றைய காலத்தில் பயணங்களினை இலகுவாக மேற்கொள்ளவும், டிக்கட் முன்பதிவினைச் சிரமம் இன்றித் தொடர்வதற்கும் ஏற்ற ஒரு பயனுள்ள வலைத் தளத்தினைப் பற்றிய தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.

பகிர்விற்கு நன்றி.

நிரூபன் said...

சிகப்பு கலர் சட்டையுடன் பேசுறவர் ரொம்ப காமெடியாக பேசுறார் ஆப்பிசர்.

அவர் யார் என்று தெரியவில்லை.

அவரின் நகைச்சுவை கலந்த உணர்வுப் பகிர்வுகளை ரசித்தேன்.

நிரூபன் said...

நம்ம சிபி அண்ணாச்சி, பேசத் தொடங்கும் போது... வீடியோ முடிவடைகிறது,

அடுத்த பாகத்தில் அவரின் உரையினைக் கேட்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

உணவு உலகம் said...

//நிரூபன் said...
வணக்கம் ஆப்பிசர்,
இன்றைய காலத்தில் பயணங்களினை இலகுவாக மேற்கொள்ளவும், டிக்கட் முன்பதிவினைச் சிரமம் இன்றித் தொடர்வதற்கும் ஏற்ற ஒரு பயனுள்ள வலைத் தளத்தினைப் பற்றிய தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.//
நன்றி நிரூ.

பகிர்விற்கு நன்றி.

உணவு உலகம் said...

//நிரூபன் said...
சிகப்பு கலர் சட்டையுடன் பேசுறவர் ரொம்ப காமெடியாக பேசுறார் ஆப்பிசர்.
அவர் யார் என்று தெரியவில்லை.
அவரின் நகைச்சுவை கலந்த உணர்வுப் பகிர்வுகளை ரசித்தேன்.//
அவர் மிகவும் அறியப்படாத சீனியர் பதிவர் ஸ்டார் ஜான்.

உணவு உலகம் said...

//நிரூபன் said...
நம்ம சிபி அண்ணாச்சி, பேசத் தொடங்கும் போது... வீடியோ முடிவடைகிறது,
அடுத்த பாகத்தில் அவரின் உரையினைக் கேட்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
சிபி பேசத் தொடங்கும்போது, கரண்ட் கூட கட் ஆயிடுச்சு!

rajamelaiyur said...

வலைசரத்தில் தங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

உணவு உலகம் said...

அறிமுகத்திற்கு நன்றி நண்பரே.

குணசேகரன்... said...

நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க..
என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க