இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 12 July, 2011

உடல் நலக் குறிப்புகள் உங்களுக்கே!



 பழம்:நம்மில்பலர், உணவருந்தியதும்,  வாழைப்பழங்கள் உண்பதை, வழக்கமாக்கி வைத்துள்ளோம். அது பற்றிய சிறு தகவல் ஒன்று. பழங்கள் உடல் நலனிற்கு உகந்தவைதான். ஆனால், அவற்றை எடுத்துக்கொள்ளும் நேரத்தைப் பொருத்து, அவை நம் உடல் நலனிற்கு உற்ற துணையாவதும், ஊறு விளைவிப்பதும் நடைபெறும். 

நாம் உணவருந்துவதற்கு, அரை மணி நேரம் முன்பு, பழங்கள் உண்பது, நமது ஜீரண் சக்தியை, நன்கு உயர்த்திட வழிவகுக்கும். மாறாக, உணவு உண்டவுடன், பழங்களை உண்பது, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். ஏனெனில், பெரும்பாலும், நாம் உண்ணும் உணவைவிட, பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியவை என்பதால், உணவு உண்டவுடன் பழங்களை உண்ணும்போது, முதலில் ஜீரணமாகும் பழத்துடன், முழுவதும் ஜீரணமாகாத உணவும், ஜீரண மண்டலத்தின் அடுத்த பகுதிக்கு நகர்ந்துவிடும். அதன் காரணமாக, அஜீரணக்கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கும்.எனவே, உணவு அருந்துவதற்கு அரை மணி நேரம் முன்பு பழங்கள் உண்பதும்,தவிர்க்க முடியாத தருணங்களில், உணவு உண்ட பின், அரை மணி நேரம் கழித்தோ, பழங்கள் சாப்பிடுவது சாலச் சிறந்தது.

உணவுடன் தண்ணீர்:அதேபோல், உணவு உண்ணும்போது, உணவை, நம் உமிழ்நீருடன் கலந்து, நன்கு சுவைத்து உண்ணவேண்டும். நாம் உண்ணும் உணவு செறித்திட,நம் உடலில் சுரக்கின்ற உமிழ்நீரைப்போல், உற்ற நண்பன் வேறில்லை. உணவு உண்ணும்போது, உணவுடன் சேர்த்து, தண்ணீர் அருந்துதல் கூடாது. உணவு அருந்துவதற்கு அரை மணி நேரத்திற்குள்ளும், உணவு உண்ணும் போதும்,உணவு உண்ட பின், அரை மணி நேரத்திற்குள்ளும், தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பது நலம்.இதனால்,நாம் உண்ணும் உணவு, நம் ஜீரண மண்டலத்தில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் மூலம் நன்றாய் செறித்திட துணை புரியும். உணவு உண்டு அரை மணி நேரம் கழித்து, சிறிது சிறிதாக, தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம், பன்னிரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தவேண்டும்.
                           இந்த நடைமுறைகளைக் கடை பிடித்துத்தான் பாருங்கள். இதிலுள்ள சூட்சுமம் புரியும்.
 இவை பிடித்திருந்தால் . . . . . . . .                                                                                                                                                                                                இன்னும் வரும் . . . . . . . . . 
காணொளி: நெல்லை பதிவர் சந்திப்பின் இரண்டாவது பாகம். இதில் நான்கு பகுதிகள் உள்ளன. இதன் முதல் தொகுதி காண இங்கே சுட்டவும். மீதமுள்ள இரு தொகுதிகள், அடுத்தடுத்த பதிவுகளுடன் வெளிவரும். நன்றி.

                                         
Follow FOODNELLAI on Twitter

26 comments:

சி.பி.செந்தில்குமார் said...

வணக்கம் டாக்டர்

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் ஆப்பிசர் & நமீதா நாயகன் சிபி!

நிரூபன் said...

நாம் உணவருந்துவதற்கு, அரை மணி நேரம் முன்பு, பழங்கள் உண்பது, நமது ஜீரண் சக்தியை, நன்கு உயர்த்திட வழிவகுக்கும். மாறாக, உணவு உண்டவுடன், பழங்களை உண்பது, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.//

நன்றி ஆப்பிசர்,

உண்மையில் இப்படியான பின் விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்று தெரியாமலே உணவு உண்ட பின்னர் அவுக் அவுக் என்று வாழைப் பழத்தை எடுத்து விழுங்கியிருக்கிறேன்.
இன்று முதல் என் பழக்கத்தை சேஞ் பண்ணிக்கிறேன் ஆப்பிசர்.

நிரூபன் said...

தண்ணீரின் முக்கியத்துவத்தையும், உணவு உண்ட பின் எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் அழகாக விளக்கியிருக்கிறீங்க.

நன்றி ஆப்பிசர்.

நிரூபன் said...

வீடியோ பற்றிய குறிப்பினை பின்னர் வந்து பார்க்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபா.. ராம்சாமி உங்களை வெட்ட ப்போறாரு

சி.பி.செந்தில்குமார் said...

ஆஃபீசர் அண்ணே.. பழம் சாபிடுவது பற்றிய தகவல் புதுசு.. நன்றி


நீதி - நான் இந்த பதிவை முழுசா படிச்சுட்டேன் ஹி ஹி

Unknown said...

என்னய்யா நேர காலம் எல்லாம் போட்டு தண்ணீர் பழம் எல்லாம் தாறீங்க??

Kousalya Raj said...

சாதாரணமாக பலரும் மேற்கொள்ளும் பழக்கம் சாப்பிட்டதும் பழம் எடுத்து கொள்வதும் , சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதும்...

இதை படிச்சதும் இனி செய்யகூடாது என்று முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.

நல்லதொரு பகிர்வு அண்ணா நன்றி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மிகவும் உபயோகமான தகவல்கள். மதிய உணவுக்கு பின் உடனே தண்ணீர் அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. கால் மணி நேரம் கழித்து அருந்தினால் தொப்பையை தவிர்க்கலாம் ஆண்களும், பெண்களும்

Unknown said...

நல்ல தகவல்கள் உடலை பேணுவதற்கு கொடுத்தற்க்கு நன்றி!

சக்தி கல்வி மையம் said...

மிகவும் உபயோகமான தகவல்கள்...
Thanks for sharing..

செங்கோவி said...

இங்க எல்லாருமே சாப்பிட்டு முடிச்சிட்டு பழம் சாப்பிடுறவங்க தானே சார்..நல்ல வேளை சொன்னீங்க.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

உடல் நலக் குறிப்புகள் உங்களுக்கே!
இவை பிடித்திருந்தால் ...........இன்னும் வரும்.
பிடிசிருக்கு....(மணிரத்தினம் பாணி )
காணொளி: நேர்ல கலந்துகிட் டாலும் இப்ப பார்க்க ரொம்ப
இண்டேறேச்ட தா ன் இருக்கு .......
அன்புடன்
குட்டி யானை

இராஜராஜேஸ்வரி said...

பொதுவாக இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உண்டு நம் நாட்டில்.

காலையில் சாப்பிட்டால் தங்கம்
மாலையில் சாப்பிட்டால் வெள்ளி
இரவில் சாப்பிட்டால் ஈயம் --போன்ற பலன்களை நல்கும் அம்மா -எது வேண்டுமோ தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று மனதில் தைக்கும் படியாக மகன் கூறியது மனதில் வந்தது.
மிக்க நன்றி ஐயா அருமையான பயனுள்ள பகிர்வுக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆபீசர்னா ஆபீசர்தான்.........! நல்லவேளை இந்தப் பழக்கங்களை ஏற்கனவே நான் பின்பத்திட்டு இருக்கேன்............!

rajamelaiyur said...

Very useful post. . Thanks

கூடல் பாலா said...

பழம் சாப்பிடுவதில்கூட இவ்வளவு விஷயம் உள்ளதா .....இன்னும் உணவு சம்மந்தமாக அறிந்துகொள்ள ஆவல்தான்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அறிய விஷயங்கள் தெரிந்துக் கொண்டேன்..

இனிமேல் கவனித்துதான் சுவைக்கவேண்டும் போல...

நிகழ்காலத்தில்... said...

தெரிந்த தகவல்கள் ஆனாலும் உங்கள் வாயிலாக கேட்கும்போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.,

நிகழ்காலத்தில் சிவா

Sivakumar said...

என்னால் நேரில் வரமுடியாவிடினும், பதிவர் சந்திப்பு வீடியோ அந்த குறையை போக்கிவிட்டது.

ADMIN said...

அற்புதமான தகவல்கள்..!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நல்ல ஒளிபரப்பு
நன்றி.

முத்தரசு said...

நல்ல தகவல் நன்றி - முயற்சிக்கிறேன்

vidivelli said...

நீங்க இப்பிடியெல்லாம் சொல்லுவீங்களென்று நினைச்சுக்கூடப் பார்க்கேல்லை...
இனி தொடர்ந்து வருவேன் டொக்ரர்...

பதிவிற்கு வாழ்த்துக்கள்...



உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது ...http://sempakam.blogspot.com/

Unknown said...

உங்களது இணையதளத்தில் உள்ள உடல் நலக் குறிப்புகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. நான் சமீபத்தில் தமிழ் மருத்துவம் பற்றி இணையத்தில் தேடி கொண்டிருந்த போது http://www.valaitamil.com/medicine_women-only என்ற இணைய முகவரியை பார்த்தேன் அதில் மகளிர் மருத்துவம் குறித்து சில தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்களும் சென்று பாருங்களேன்.