’அட்ரா சக்கை’ அதிபனே,
அட்டகாச சைட்களின் அரசனே!
’எட்றா அந்த அருவாளை’
என்ற மனோவின் நேசனே!
லட்டு ஃபிகர்களைப் போட்டு, மிக
லட்சணமாய்ப் பதிவுகளைப் போட்டு
எட்டுத் திக்கும் புகழ் பெற்றாய்,
எட்டாத ‘கனி’க்கெல்லாம் ஆசைப்பட்டாய்!
திருப்பதி உண்டியல் நோட்டுக்கள் போல்
தினம் உன் பதிவிலே ஓட்டுக்கள்,எனினும்,
திருப்தி இன்றி தினம் மூன்று பதிவிட்டாய்!
தி(க)ட்டத் தி(க)ட்ட, பதிவர் சந்திப்பில் பேசிவிட்டாய்!
இண்ட்லி, தமிழ்-10 , தலை மறைவான தமிழ்மணத்திலும்
இருக்கின்ற போட்டிகளுக்கு நடுவில்
அலெக்ஸா ரேங்கிங் எனக்கு ஆசையென்று
அல்லும் பகலும் அரும்பாடு படுவாய்
கண்ணாடி அணிந்த உன் முகம்
கள்ளத்தனம் மறைக்கவோ! இல்லை
கண்களைப் பார்த்தே கள்வனை அறியும்
பெண்களைத் தவிர்க்கவோ!
’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!
உற்ற நண்பர் குழாம் உனக்கதிகம்!
உரலுக்கு ஒரு புறமென்றால்,
உடுக்கைக்கு இருபுறமும் அடி,
உனக்கோ செல்லும் இடமெல்லாம் அடி!
உதறித்தள்ளிவிட்டு ஃபீனிக்ஸ் பறவையாய்
பெண்கள் படமென்றால் பேயாய் அலைந்தாய்
பேசும்போதோ பெண்கள் என் தெய்வம் என்பாய்!
திருந்த மனமின்றி, பதிவர் சந்திப்பில், பல
திட்டுக்கள் பெற்றாய், இருந்தும்
மலர்ந்த உன் முகம் கண்டு பதிவுலகம் உன்
மனதைப் படித்தது, மலரைச் சொரிந்தது!
கணக்குப் பாடம் படித்ததாலோ, பல மனங்களைக்
கணக்குப் பண்ணக் கற்றுக்கொண்டாய்.
’விருந்தாளி’யில் தொடங்கியது உன் விறுவிறு விமரிசங்கள்,
சினிப்பிரியன் என்றொரு தளம், சினிமாவின் மீதொரு கரிசனம்.
தொடங்கிய ஆண்டில், பதிவுகள், இருநூறைத் தொட்டன
தொடர்ந்த ஆண்டில் நானூறைத் தாண்டி விட்டன!
தலைப்பு வைப்பதில் தன்னிகரில்லாத் தலைவன்,
தனித்தே ரசிப்பது, வெள்ளிகிழமை விடிகாலைப் படங்கள்!
நினைவாற்றலில் நீ தனித்து நின்றாய்,
நிச்சயம் நீ ஜெயித்திடுவாய்!
இரண்டாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்தாய்,
இனியெல்லாம் உனக்கு ஏற்றம், இனியவனே!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
இனிதே வந்து நீங்களும் வாழ்த்துங்கள்.

106 comments:
முதல் மொட்டு மலர்ந்ததே
அட்ராசக்க'வுக்கு பொறந்த நாள் வாழ்த்துக்கள்.
இல்ல, இது அவருக்கு இரண்டாம் ஆண்டு.
வரும் ஆண்டில் இன்னும் பல மொக்கைகளும், புது புது டிஸ்கிகளும், பல்புகளும், போட, வாங்க வாழ்த்துக்கள்.
FOOD said...
இல்ல, இது அவருக்கு இரண்டாம் ஆண்டு.>>>>
ரைட்டு ஆபீசர்...
இரண்டாம் மொட்டு மலர்ந்ததே...
இன்னும் திரட்டியில் இணைக்கலியா?
சி பி அவர்கள் மேலும் பல பதிவுகள் எழுத வாழ்த்துகள்
சிபிக்கு வாழ்த்துக்கள்
’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!//
சிபிக்கு சூடு சுரணை எதுவும் இல்லை என்று கூறிய ஆபீசர் அவர்களை கண்டிக்கிறேன்...நாராயணா நாராயணா
//தமிழ்வாசி - Prakash said...
இன்னும் திரட்டியில் இணைக்கலியா?//
இணைச்சாச்சு நண்பரே.
இதை முன்னிட்டு சிபி அனைவருக்கும் ட்ரீட் கொடுப்பார்..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!
>>>>>>>>
சிபிக்கு சூடு சுரணை எதுவும் இல்லை என்று கூறிய ஆபீசர் அவர்களை கண்டிக்கிறேன்...நாராயணா நாராயணா//
வாங்க பதிவுலக நாரதரே!
வாவ் ...வாவ் ...வாவ் ...கவிதை அட்டகாசம் .என்டர்டைன்மென்ட் பதிவர்களின் முன்னோடி அண்ணன் CPS க்கு வாழ்த்துக்கள் .....
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!
>>>>>>>>
சிபிக்கு சூடு சுரணை எதுவும் இல்லை என்று கூறிய ஆபீசர் அவர்களை கண்டிக்கிறேன்...நாராயணா நாராயணா//
வாங்க பதிவுலக நாரதரே!
//தமிழ்வாசி - Prakash said...
அட்ராசக்க'வுக்கு பொறந்த நாள் வாழ்த்துக்கள்.//
நன்றி பிரகாஷ்.
ஆஹா..இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிபிக்கு வாழ்த்துகள்.
//இம்சைஅரசன் பாபு.. said...
சி பி அவர்கள் மேலும் பல பதிவுகள் எழுத வாழ்த்துகள்//
நன்றி, பாபு.
ஏன் சார், நீங்க அவரைப் பாராட்டுறீங்களா..இல்லே திட்டுறீங்களா?(ஹி.ஹி..ஏதோ நம்மால முடிஞ்சது)
//ரமேஷ்- ரொம்ப ல்லவன்(சத்தியமா) said...
இதை முன்னிட்டு சிபி அனைவருக்கும் ட்ரீட் கொடுப்பார்..//
அவர் நல்லா அல்வா கொடுப்பார். வருகைக்கு நன்றி, ரமேஷ்.
இண்ட்லில இணைச்சாச்சு!
//koodal bala said...
வாவ் ...வாவ் ...வாவ் ...கவிதை அட்டகாசம் .என்டர்டைன்மென்ட் பதிவர்களின் முன்னோடி அண்ணன் CPS க்கு வாழ்த்துக்கள் .....//
நன்றி பாலா.
//செங்கோவி said...
ஏன் சார், நீங்க அவரைப் பாராட்டுறீங்களா..இல்லே திட்டுறீங்களா?(ஹி.ஹி..ஏதோ நம்மால முடிஞ்சது)//
அதான் ஏற்கனவே ஒருத்தர்(ரமேஷ்) பத்த வச்சுட்டு போயிட்டாரே! வருகைக்கு நன்றி.
//செங்கோவி said...
இண்ட்லில இணைச்சாச்சு!//
ஏற்கனவே இணைச்சிருந்தனே!
வாழ்த்துக்கள் சிபி!
////// திருந்த மனமின்றி, பதிவர் சந்திப்பில், பல
திட்டுக்கள் பெற்றாய், ////////
ஹஹஹஹா......... வெளங்கிருச்சு!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாழ்த்துக்கள் சிபி!//
வெறும் வாழ்த்துக்கள் மட்டும்தானா? மொய் எப்போ?
////கண்ணாடி அணிந்த உன் முகம்
கள்ளத்தனம் மறைக்கவோ! இல்லை
கண்களைப் பார்த்தே கள்வனை அறியும்
பெண்களைத் தவிர்க்கவோ!///////
உண்மையைச் சொன்ன ஆப்பீசரை பாராட்டுகிறேன்!
///////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாழ்த்துக்கள் சிபி!//
வெறும் வாழ்த்துக்கள் மட்டும்தானா? மொய் எப்போ?
///////////
விருந்து சாப்புட்ட உடனே அடுத்து மொய்தானே?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//திருந்த மனமின்றி, பதிவர் சந்திப்பில், பல
திட்டுக்கள் பெற்றாய், ////////
ஹஹஹஹா......... வெளங்கிருச்சு!//
இன்னும் புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா மாதிரி தெரியலயே!
////// ’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!///////
வேற வழி?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாழ்த்துக்கள் சிபி!//
வெறும் வாழ்த்துக்கள் மட்டும்தானா? மொய் எப்போ?
///////////
விருந்து சாப்புட்ட உடனே அடுத்து மொய்தானே?//
>>>>>>>>>>
அப்ப விருந்து வெப்பாருங்கறீங்க!
////// லட்டு ஃபிகர்களைப் போட்டு, மிக
லட்சணமாய்ப் பதிவுகளைப் போட்டு
எட்டுத் திக்கும் புகழ் பெற்றாய்,/////////
சிபி எத்தனை படம் போட்டாலும் அந்த பிகர்களின் பேர், விபரம் போடுவதே இல்லை, அதையும் சொல்லி இருக்கலாம்!
////// FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாழ்த்துக்கள் சிபி!//
வெறும் வாழ்த்துக்கள் மட்டும்தானா? மொய் எப்போ?
///////////
விருந்து சாப்புட்ட உடனே அடுத்து மொய்தானே?//
>>>>>>>>>>
அப்ப விருந்து வெப்பாருங்கறீங்க!
///////
வெச்சா மொய் உண்டுன்னு வேணா சொல்லிப்பார்ப்போமே?
/பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!///////
வேற வழி?
>>>>>>>>
அவருக்கு முதுகும் கொஞ்சம் அகலமுங்கோ!
/பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!///////
வேற வழி?
>>>>>>>>
அவருக்கு முதுகும் கொஞ்சம் அகலமுங்கோ!
///// பெண்கள் படமென்றால் பேயாய் அலைந்தாய்///////
இப்பல்லாம் டைரக்டா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போய்டுறாராமே?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// லட்டு ஃபிகர்களைப் போட்டு, மிக
லட்சணமாய்ப் பதிவுகளைப் போட்டு
எட்டுத் திக்கும் புகழ் பெற்றாய்,/////////
சிபி எத்தனை படம் போட்டாலும் அந்த பிகர்களின் பேர், விபரம் போடுவதே இல்லை, அதையும் சொல்லி இருக்கலாம்!
>>>>>>>>>>>>>>>
தப்புத்தேன். சரி சரி ரொம்ப அடிச்சா பொறந்த நாளும் அதுவுமா அழுதுரும் புள்ளன்னு விட்டுட்டேன்.
//////கணக்குப் பாடம் படித்ததாலோ, பல மனங்களைக்
கணக்குப் பண்ணக் கற்றுக்கொண்டாய்.///////
அதுக்காக ஊருக்கு ஒண்ணுன்னா எப்படி?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// பெண்கள் படமென்றால் பேயாய் அலைந்தாய்///////
இப்பல்லாம் டைரக்டா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே போய்டுறாராமே?
<>>>>>>>>>>>>>
எதுக்கு அங்கேயே கணக்கு பண்ணவா?
//// இரண்டாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்தாய்,
இனியெல்லாம் உனக்கு ஏற்றம், இனியவனே!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
இனிதே வந்து நீங்களும் வாழ்த்துங்கள்.///////
வழிமொழிகிறேன்!
//கண்ணாடி அணிந்த உன் முகம்
கள்ளத்தனம் மறைக்கவோ! இல்லை
கண்களைப் பார்த்தே கள்வனை அறியும்
பெண்களைத் தவிர்க்கவோ!///
சூப்பர் பாஸ்!!!! :-)
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கணக்குப் பாடம் படித்ததாலோ, பல மனங்களைக்
கணக்குப் பண்ணக் கற்றுக்கொண்டாய்.///////
அதுக்காக ஊருக்கு ஒண்ணுன்னா எப்படி?
>>>>>>>>>>>>>>>
இல்லையே இன்னும் கொஞ்சம் அதிகமே!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// இரண்டாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்தாய்,
இனியெல்லாம் உனக்கு ஏற்றம், இனியவனே!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
இனிதே வந்து நீங்களும் வாழ்த்துங்கள்.///////
வழிமொழிகிறேன்!
>>>>>>>>
நன்றி நண்பரே.
//மலர்ந்த உன் முகம் கண்டு பதிவுலகம் உன்
மனதைப் படித்தது, மலரைச் சொறிந்தது!//
அது சொரிந்தது தான்!
வாழ்த்துக்கள் சிபிக்கு!
//ஜீ... said...
//கண்ணாடி அணிந்த உன் முகம்
கள்ளத்தனம் மறைக்கவோ! இல்லை
கண்களைப் பார்த்தே கள்வனை அறியும்
பெண்களைத் தவிர்க்கவோ!///
சூப்பர் பாஸ்!!!! :-)
>>>>>>>
நன்றி நண்பரே!
கவிதா ஸாரிங்க கவிதை (சிபின்னாலே இப்புடி ஆவுதுங்க) சூப்பருங்கோ!
ஆமா...பாராட்டித்தானே எழுதியிருக்கீங்க? :-)
//ஜீ... said...
கவிதா ஸாரிங்க கவிதை (சிபின்னாலே இப்புடி ஆவுதுங்க) சூப்பருங்கோ!
ஆமா...பாராட்டித்தானே எழுதியிருக்கீங்க? :-)
>>>>>>>>>>>>
அதிலென்ன சந்தேகம்?
என்னா கவிதை !! அண்ணா சூப்பர் !! அடிக்கடி இப்படி கவிதையும் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் !
செந்தில் சார் கொடுத்துவைத்தவர், இப்படி ஒரு சிறந்த பாராட்டு கிடைக்க !!
அவருக்கு என் வாழ்த்துக்கள் !
ஐயய்யோ முடியலையே......
காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!//
இன்னும் இன்னும் உங்ககிட்டே இருந்து எதிர் பார்க்குறேன் ஹா ஹா ஹா ஹா...
உரலுக்கு ஒரு புறமென்றால்,
உடுக்கைக்கு இருபுறமும் அடி,
உனக்கோ செல்லும் இடமெல்லாம் அடி!//
ஹா ஹா ஹா ஹா சிபி நாறிபோனான்....ஹி ஹி எனக்கு ஜாலி ஜாலி....
பெண்கள் படமென்றால் பேயாய் அலைந்தாய்//
ராஸ்கல் வசமா மாட்னான் இன்னைக்கு....ஹே ஹே ஹே ஹே...
தனித்தே ரசிப்பது, வெள்ளிகிழமை விடிகாலைப் படங்கள்!//
மூதேவி இப்பிடியும் பண்ணுரானா...?
//Kousalya said...
என்னா கவிதை !! அண்ணா சூப்பர் !! அடிக்கடி இப்படி கவிதையும் உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன் !
செந்தில் சார் கொடுத்துவைத்தவர், இப்படி ஒரு சிறந்த பாராட்டு கிடைக்க !!
அவருக்கு என் வாழ்த்துக்கள் !//
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி! நன்றி, கௌசல்யா.
இனியெல்லாம் உனக்கு ஏற்றம், இனியவனே!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
இனிதே வந்து நீங்களும் வாழ்த்துங்கள்.//
நல்லா இருடே மக்கா வாழ்த்துக்கள்....
//MANO நாஞ்சில் மனோ said...
ஐயய்யோ முடியலையே......//
Any Help?
வாழ்த்தியதுக்கு வாழ்த்துக்கள் அண்ணே!
//MANO நாஞ்சில் மனோ said...
காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!
>>>>>>>>>>>>>
இன்னும் இன்னும் உங்ககிட்டே இருந்து எதிர் பார்க்குறேன் ஹா ஹா ஹா ஹா...//
இன்னும் கொஞ்சம் எடுத்து விட்டுடுவோம்!
//விக்கியுலகம் said...
வாழ்த்தியதுக்கு வாழ்த்துக்கள் அண்ணே!//
நீங்க வந்து வாழ்த்தியதற்கு நன்றிங்கோ!
சூப்பர் வாழ்த்துக் கவிதை சார்!
சிபிக்கு வாழ்த்துச் சொல்லி விட்டேன்!
//சென்னை பித்தன் said...
சூப்பர் வாழ்த்துக் கவிதை சார்!
சிபிக்கு வாழ்த்துச் சொல்லி விட்டேன்!//
நன்றி அய்யா.
கவிதை கலக்கல் பாஸ் நெசமாவே சி பியை அனுபவித்து எழுதி இருக்கீங்க ஹிஹி
கவிதை கலக்கல் பாஸ் நெசமாவே சி பியை அனுபவித்து எழுதி இருக்கீங்க ஹிஹி
அடங்கோ.....
>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!//
சிபிக்கு சூடு சுரணை எதுவும் இல்லை என்று கூறிய ஆபீசர் அவர்களை கண்டிக்கிறேன்...நாராயணா நாராயணா
ராஸ்கல். இதோ வர்றேன். சென்னைக்கு.
கவிதையைப்பார்த்தால் அண்ணன் ரொம்ப அலசி ஆராஞ்சிருக்கார் போல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...
////கண்ணாடி அணிந்த உன் முகம்
கள்ளத்தனம் மறைக்கவோ! இல்லை
கண்களைப் பார்த்தே கள்வனை அறியும்
பெண்களைத் தவிர்க்கவோ!///////
உண்மையைச் சொன்ன ஆப்பீசரை பாராட்டுகிறேன்!
iwdhaaLUkku இந்தாளூக்கு லொள்ள ப்பார்ய்யா
>FOOD said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////கணக்குப் பாடம் படித்ததாலோ, பல மனங்களைக்
கணக்குப் பண்ணக் கற்றுக்கொண்டாய்.///////
அதுக்காக ஊருக்கு ஒண்ணுன்னா எப்படி?
>>>>>>>>>>>>>>>
இல்லையே இன்னும் கொஞ்சம் அதிகமே!
நல்ல நண்பர்கள்யா.. நல்ல வேளை எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.. இல்லை.. ஒரு பய பொண்ணு குடுக்க மாட்டான்
அட்டகாசம்.. அமர்களம்..
வணக்கம் ஆப்பிசர், ஆப்பிசருக்குள்ளும், ஒரு கவிஞன் ஒளிந்திருக்கிறார் என்பதை நிரூபிக்கும் இரண்டாவது கவிதை இது.
அட்ராசக்க சிபி அவர்களுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துக் கவிதை ஒன்றை பகிர்ந்திருக்கிறீங்க.
உங்கள் கவிதையோடு இணைந்து நாமும் சிபியை வாழ்த்துவோம்.
’அட்ரா சக்கை’ அதிபனே,
அட்டகாச சைட்களின் அரசனே!///
ஹா....ஹா...யாருங்க அந்த அட்டகாச சைட்கள்...
முதல்ல சிபியோடை வீட்டுக்காரம்மாவிற்குப் போன் பண்ணிப் போட்டுக் குடுக்கனும்;-))
’எட்றா அந்த அருவாளை’
என்ற மனோவின் நேசனே!//
நம்ம மனோ எப்போதும் அருவாளைப் பின்னாடியா கொண்டு பொவார்....
ஹா..ஹா..
லட்டு ஃபிகர்களைப் போட்டு, மிக
லட்சணமாய்ப் பதிவுகளைப் போட்டு//
இருங்க, இந்த வரிக்காக, ஆப்பிசர் வீட்டுக்கு ஒரு போன் பண்ணிட்டு வாரேன்.
எட்டுத் திக்கும் புகழ் பெற்றாய்,
எட்டாத ‘கனி’க்கெல்லாம் ஆசைப்பட்டாய்!//
ஆனால் ஆப்பிசர், சிபிக்கு எட்டாத கனியென்று ஏதும் இல்லை என நினைக்கிறேன். காரணம் அவர் தான் எல்லாவற்றையும் விரைவாக எட்டிப் பிடிக்கும் ஆளாச்சே.
நான் அவரோடை உயரத்தைச் சொல்லலை.
திருப்தி இன்றி தினம் மூன்று பதிவிட்டாய்!
தி(க)ட்டத் தி(க)ட்ட, பதிவர் சந்திப்பில் பேசிவிட்டாய்!//
வெகு விரைவில் சிபி அவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து பதிவுகள் போடுவதற்குத் தயாராகுவதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
கண்ணாடி அணிந்த உன் முகம்
கள்ளத்தனம் மறைக்கவோ! இல்லை
கண்களைப் பார்த்தே கள்வனை அறியும்
பெண்களைத் தவிர்க்கவோ!//
மாப்பிளைகளா, ஓடிவாங்க, நம்ம ஆப்பிசருக்கு கூலா ஒரு கோலா ஆடர் பண்ணுங்க.
நம்ம சிபியை இப்படிப் போட்டுத் தாக்கிட்டாரே.
கண்ணாடி அணிந்திருப்பது, நான் நினைக்கிறேன் பிகருங்களுக்குத் தெரியாமல், திருட்டு லுக்கு விட என்று;-)))
’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!//
ஹா...ஹா....
எத்தினை பேரிடம் நம்மாளு மன்னிப்புக் கேட்டிருப்பாரு.
இவர் எவ்ளோ அடிச்சாலும் தாங்கிறாரே.
ஹி...ஹி....
கவிதைக்கு வாழ்த்துக்கள் ..ஆனாலும் எங்க சிபியை இப்படி வாரி இருக்ககூடாது ..ஹி..ஹி..ஹி..
உரலுக்கு ஒரு புறமென்றால்,
உடுக்கைக்கு இருபுறமும் அடி,
உனக்கோ செல்லும் இடமெல்லாம் அடி!//
ஆப்பிசரின் மேற்படி வரிகளில் தொக்கி நிற்கும் அல்லது மறைந்திருக்கும் கருத்து யாதெனில்,
சிபிக்கு ப்ளாக்கில் மட்டுமல்ல, ரோட்டில், வீட்டில், போகுமிடங்களிலும் அடி என்று.
ஹி..ஹி....
பெண்கள் படமென்றால் பேயாய் அலைந்தாய்
பேசும்போதோ பெண்கள் என் தெய்வம் என்பாய்!//
இது தான் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் சிபியின் உத்தியோ((((:
பீனிக்ஸ் பறவையாய்
எழுந்து நின்றாய், என்றும் ஜெயித்து நிற்பாய்//
ரிப்பீட்டு...........
கணக்குப் பாடம் படித்ததாலோ, பல மனங்களைக்
கணக்குப் பண்ணக் கற்றுக்கொண்டாய்.//
ஓ இதுக்கு ஆப்பிசர் வேறு உடந்தையா?
சிபியின் வீட்டுக்கார அம்மாகிட்ட சொல்லிட வேண்டியது தான்.
சிபி கணக்குப் பண்ண, ஆப்பிசர் உதவி செய்கிறார் என்று.
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
இனிதே வந்து நீங்களும் வாழ்த்துங்கள்.//
ஆப்பிசரோடு இணைந்து நானும் வாழ்த்துகிறேன்.
ஆமா ஆப்பிசர், நமக்கெல்லாம் ரீட் கிடையாதா?
வாழ்த்துக் கவிதை கலக்கல் ஆப்பிசர், விழிப்புணர்வுப் பதிவுகளோடு வாரம் ஒரு கவிதையும் தந்தால் கலக்கலாக இருக்கும் ஆப்பிசர்.
//மைந்தன் சிவா said...
கவிதை கலக்கல் பாஸ் நெசமாவே சி பியை அனுபவித்து எழுதி இருக்கீங்க ஹிஹி//
அவரு ஆம்பிளையப்பா!
//சி.பி.செந்தில்குமார் said...
அடங்கோ.....//
என்னாங்கோ!
//சி.பி.செந்தில்குமார் said...
கவிதையைப்பார்த்தால் அண்ணன் ரொம்ப அலசி ஆராஞ்சிருக்கார் போல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
இல்ல, பிரிச்சு மேய்ஞ்சாச்சு!
//நபூ.சௌந்தர் said...
அட்டகாசம்.. அமர்களம்..//
நன்றி நண்பரே.
//நிரூபன் said...
வணக்கம் ஆப்பிசர், ஆப்பிசருக்குள்ளும், ஒரு கவிஞன் ஒளிந்திருக்கிறார் என்பதை நிரூபிக்கும் இரண்டாவது கவிதை இது.//
காதலித்த பருவத்தில், என்னுள் கருக்கொண்டது கவிதை.
//நிரூபன் said...
1. ’அட்ரா சக்கை’ அதிபனே,
அட்டகாச சைட்களின் அரசனே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஹா....ஹா...யாருங்க அந்த அட்டகாச சைட்கள்...
முதல்ல சிபியோடை வீட்டுக்காரம்மாவிற்குப் போன் பண்ணிப் போட்டுக் குடுக்கனும்;-))
2.லட்டு ஃபிகர்களைப் போட்டு, மிக
லட்சணமாய்ப் பதிவுகளைப் போட்டு//
இருங்க, இந்த வரிக்காக, ஆப்பிசர் வீட்டுக்கு ஒரு போன் பண்ணிட்டு வாரேன்.//
இப்படி போட்டுக்கொடுக்க அலையுறீங்களே!
//நிரூபன் said...
திருப்தி இன்றி தினம் மூன்று பதிவிட்டாய்!
தி(க)ட்டத் தி(க)ட்ட, பதிவர் சந்திப்பில் பேசிவிட்டாய்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வெகு விரைவில் சிபி அவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து பதிவுகள் போடுவதற்குத் தயாராகுவதாக தகவலகள் வெளியாகியுள்ளன.//
அட்ரா சக்க!
//நிரூபன் said...
கண்ணாடி அணிந்த உன் முகம்
கள்ளத்தனம் மறைக்கவோ! இல்லை
கண்களைப் பார்த்தே கள்வனை அறியும்
பெண்களைத் தவிர்க்கவோ!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மாப்பிளைகளா, ஓடிவாங்க, நம்ம ஆப்பிசருக்கு கூலா ஒரு கோலா ஆடர் பண்ணுங்க.
நம்ம சிபியை இப்படிப் போட்டுத் தாக்கிட்டாரே.
கண்ணாடி அணிந்திருப்பது, நான் நினைக்கிறேன் பிகருங்களுக்குத் தெரியாமல், திருட்டு லுக்கு விட என்று;-)))//
அப்ப சரிதான்!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
இனிதே வந்து நீங்களும் வாழ்த்துங்கள்.//
ஆப்பிசரோடு இணைந்து நானும் வாழ்த்துகிறேன்.
ஆமா ஆப்பிசர், நமக்கெல்லாம் ரீட் கிடையாதா?
17 July 2011 7:05 PM
Delete
Blogger நிரூபன் said...
வாழ்த்துக் கவிதை கலக்கல் ஆப்பிசர், விழிப்புணர்வுப் பதிவுகளோடு வாரம் ஒரு கவிதையும் தந்தால் கலக்கலாக இருக்கும் ஆப்பிசர்.
நிச்சயம் முயற்சிக்கிறேன், நண்பரே.
//கோவை நேரம் said...
கவிதைக்கு வாழ்த்துக்கள் ..ஆனாலும் எங்க சிபியை இப்படி வாரி இருக்ககூடாது ..ஹி..ஹி..ஹி..//
மண் பாசமா?
ஃபீனிக்ஸ் பறவையாய்
எழுந்து நின்றாய், என்றும் ஜெயித்து நிற்பாய்//
வாழ்க! வளர்க!!
கவிதை அழ்கு.
கவிதையின் நாயகனுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பகிர்வு நன்றி சகோதரரே .
என் முதற்ப்பாடல் வலைத்தளத்தில்
உங்கள் கருத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றது வாருங்கள் உங்கள் பொன்னான கருத்தினைக் கூறுங்கள்
சகோதரரே....
//இராஜராஜேஸ்வரி said...
ஃபீனிக்ஸ் பறவையாய்
எழுந்து நின்றாய், என்றும் ஜெயித்து நிற்பாய்
வாழ்க! வளர்க!!
கவிதை அழ்கு.
கவிதையின் நாயகனுக்கு வாழ்த்துக்கள்.//
நன்றி சகோ.
//Blogger அம்பாளடியாள் said...
அருமையான பகிர்வு நன்றி சகோதரரே .
என் முதற்ப்பாடல் வலைத்தளத்தில்
உங்கள் கருத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றது வாருங்கள் உங்கள் பொன்னான கருத்தினைக் கூறுங்கள்
சகோதரரே....//
நன்றி சகோ.
வாழ்க! வளர்க! நாயகனுக்கு வாழ்த்துக்கள்
சிபிக்கு வாழ்த்துக்கள்!
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
’காப்பி, பேஸ்ட் கதாநாயகன்’ என்றே
கதறக் கதற அடித்தாலும்
உதறித்தள்ளுவது உன் குணம்!//
சிபிக்கு சூடு சுரணை எதுவும் இல்லை என்று கூறிய ஆபீசர் அவர்களை கண்டிக்கிறேன்...நாராயணா நாராயணா//
ஆமாம்..நானும் கண்டிக்கிறேன்! இந்த வார்த்தைக்கு உரியவர் போலிஸ் மட்டுமே!
கவிதையில் வாழ்த்தா ? வாழ்க ....
நன்றி:
நெல்லை ராம்,
வைகை
என் ராஜ பாட்டை ராஜா.
கவிதையால் ஒரு வாழ்த்துக் கனமாக சிந்தித்து உள்ளதை உள்ளபடி உரைத்தார் இதுவே நல்லதோர்
நட்புக்கு இலக்கணம். உணவுலக நாயகன் உரைத்த நல் வாழ்த்தோடு எனது வாழ்த்தும் உரித்தாக அன்பர்
சிபிக்கு இன்னும் பல ஆண்டுகள் இரட்டிப்பாய்ப் பெருகிட இத்தருணம் வாழ்த்துகின்றேன் வாழ்க வளர்க நின்பணியது என்றும் பனைமரம்போல!...
சிபி... மேலும் பல பதிவுகள் எழுத வாழ்த்துகள்.
Post a Comment