இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 19 July, 2011

மகளுக்கு பத்து மாமரம்.

பெண் குழந்தைகள் பிறந்தாலே, அது சாபமெனக்  கருதி, சட்டென்று அந்த உயிரைக் கொன்றுவிடும் சண்டாளர்கள் மத்தியில், வரமென்று வாழ்த்தி வரவேற்கவும், வாரி அணைக்கவும்,இந்திய நாட்டிலும் ஓர் கிராமம் இருக்கிறதென்றால் ஆச்சரியமாகத்தான் உள்ளது.

ஆம், பீஹார் மாநிலம்தான் இன்று பெண் குழந்தைகள் பிறப்பதை ஊக்குவிப்பதில் முன்னோடியாகத் திகழ்கிறது. அந்த மாநிலத்தின், பகல்பூர் மாவட்டத்திலுள்ள குக்கிராமம் ஒன்றுதான் தஹ்ரா. இங்கு, யார் வீட்டிலாவது பெண் குழந்தை பிறந்து விட்டால், ஒரே குதூகலம்தான். 
                        இந்தியாவில், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகக் குறைவு. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 914 பெண் குழந்தைகளே உள்ளனர். ஏனிந்த நிலைமை? பெண் சிசுக்கொலை எனும் இரக்கமற்ற இழிசெயல்தான் இதற்கெல்லாம் காரணமெனலாம்.
                     முன்னேறிய பல மாநிலங்களே, பின் தங்கிய குணமுடைய மக்களைக் கொண்டிருக்கையில், பின் தங்கிய மாநிலத்தில் உள்ள ஓர் குக்கிராமமான தஹ்ராவில் ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்து விட்டால், அந்தக் குடும்பத்தினர் குறைந்தது பத்து மாமரங்களை அந்தக் கிராமத்தில் நடுகின்றனர். இது இன்று நேற்றல்ல, பரம்பரை பரம்பரையாக நடந்து வரும் ஓர் நடைமுறை.
                             இதன் காரணமாக, இன்று இந்த கிராமத்தைச் சுற்றி இருபதாயிரம் மாமரங்கள் வளர்ந்து செழித்து நிற்கின்றன. இந்த கிராமத்தில், பெண் குழந்தைகளை, கடவுளின் பரிசாக எண்ணிப்போற்றுகின்றனர். மாம்பழங்கள் விற்று அதன் மூலம் ஈட்டும் வருவாயில் பெண் குழந்தைகளை மணம் முடித்துக் கொடுப்பது இவ்வூர் மக்களின் பழக்கம். 
                                   பசுமை நிறைந்த இந்த கிராமத்தில், விரைவில் பெண்கள் பள்ளி ஒன்றும் திறக்கப்பட உள்ளது. இது அந்த கிராம மக்களுக்கு, அம்மாநில முதல்வரின் அன்புப் பரிசு. பிறந்தது பெண் என்றால், நெல்லைக் கொடுத்து கொல்வதை விட்டு, நாமும், இது போல் நல்ல விஷயங்களைச் சிந்திக்கலாமே!
டிஸ்கி:  இந்த வார இலவச இணைப்பு- பதிவர் சந்திப்பின் மூன்றாம் பாகம். நிறைவுப் பகுதி விரைவில் வரும்.Follow FOODNELLAI on Twitter

37 comments:

சரியில்ல....... said...

வட ...

உணவு உலகம் said...

S. Its for you.

சரியில்ல....... said...

நிஜமாவே ஆப்படி ஒரு கிராமம் இருக்குன்னு இப்ப தான் அறிகிறேன்... நன்றி...

சரியில்ல....... said...

நம்ம எல்லோரும் யோசிக்கவேண்டிய விஷயம்... அதிலும் மரம் நடுதல் என்பது கட்டாயமாக்க வேண்டும்... நல்ல பதிவு ஆபிசர்...

Unknown said...

நண்பரே நலமா
அருமையான புது தகவல்கள்

இராஜராஜேஸ்வரி said...

பெண் குழந்தைகளை, கடவுளின் பரிசாக எண்ணிப்போற்றுகின்றனர்/

மனம் நிறைந்த தகவல் பகிர்வுக்கு நன்றி.பாராட்டுக்கள்.

ஆனந்தி.. said...

புரட்சி தாரகை...பட்டாசு பேச்சுக்கு சொந்தக்காரி...பதிவுல புன்னகை அரசி...பிரபல சூப்பர் ஸ்டாரினி பதிவர் சித்ரா பேச்சு செம சூப்பர் அண்ணா...ஆமாம்...அதென்ன சி பி சார் அங்கயும் நோட்ஸ் எடுத்துட்டே இருக்கார்:))....(சி பி உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போச்சு..:)))...) சூப்பர் ஷங்கர் அண்ணா...மிக்க நன்றி...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

தஹ்ரா கிராமத்தை ரெண்டு காரணங்களுக்காக வாழ்த்துவோம்.
ஒன்று மரம் நட்டு பூமியை காப்பதற்கு.
மற்றொன்று பெண்களை சந்தோஷமாக வளர்ப்பதற்கு.தட்டுப்பாடு தான் மதிப்பை உணர்த்தும் என்பது மற்றும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது
சங்கரலிங்கம் சார் வீட்டில மேடம் ட்ட சொல்லி சுத்திபோட சொல்லுங்க, இவ்வளவு அழகா ஏற்பாடுகள் செய்ததற்கு கண் விழுந்திடப் போகுது.

சி.பி.செந்தில்குமார் said...

சித்ரா மேடம் ரொம்பத்தான் உணர்ச்சி வசப்பட்டூட்டாங்கனு நினைக்கறேன். ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

ஆனந்தி.. said...

புரட்சி தாரகை...பட்டாசு பேச்சுக்கு சொந்தக்காரி...பதிவுல புன்னகை அரசி...பிரபல சூப்பர் ஸ்டாரினி பதிவர் சித்ரா பேச்சு செம சூப்பர் அண்ணா...ஆமாம்...அதென்ன சி பி சார் அங்கயும் நோட்ஸ் எடுத்துட்டே இருக்கார்:))....(சி பி உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போச்சு..:)))...) சூப்பர் ஷங்கர் அண்ணா...மிக்க நன்றி...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Mahi_Granny said...

மாமரங்களின் தகவலுக்கும் , குறிப்பாக தங்களது இலவச இணைப்புக்கும் நன்றி .

சி.பி.செந்தில்குமார் said...

pi vi eS சீக்கிரம் கட்சி ஆரம்பிச்சுடுவார்னு நினைக்கிறேன்.. ஹா ஹா

ம.தி.சுதா said...

சகொதரம் எப்பவும் அவதானிச்சுப் பாருங்கள் வீட்டுக்கு மூத்த பெண் பிள்ளையென்றாலே அந்த வீட்டில் ஒரு செல்வாக்கிருக்கும்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

செங்கோவி said...

சித்ராக்காவின் சொற்பொழிவு அருமை..

செங்கோவி said...

சித்ராக்காவின் சொற்பொழிவு அருமை..

செங்கோவி said...

பீகாரிலா இப்படி ஒரு பழக்கம்..ஆச்சரியம் தான்.

Unknown said...

பகிர்வு மனதை தொட்டது..வீடியோ அருமை!

கூடல் பாலா said...

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பெறும் அந்த பெருமக்கள் .ஓன்று பெண் குழந்தைகளை பேணுவது ,இரண்டாவது மரம் வளர்ப்பது .ரியலி கிரேட் ...!

Unknown said...

வட(அந்த வட இல்லையா) மாநிலத்தில் ஒரு வீட்டில் ஆண் குழந்தைகள் பிறந்துவிட்டால் திருநங்கைகள் வந்து அந்த குழந்தைகளை வாழ்த்திப்பாடி(டோலக்) போன்ற வாத்தியங்களுடன்) ஒரு கணிசமான தொகையை கண்டிப்புடன் வாங்கி செல்வார்கள். ஆனால் பெண்குழந்தைகள் பிற்ந்தால் அவர்கள் தொந்திரவு செய்வதில்லை.
அரிய தகவல் தந்த ஆபீசர் ஐயாவுக்கு நன்றி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த விழிப்புணர்வு நாடு முழுவதும் வரவேண்டும்...

R.Gopi said...

பின்னூட்ட புயலாகவே பார்த்து பழக்கமான சித்ரா அவர்களின் பேச்சும் மிக அருமை...

Unknown said...

இந்த மாதிரி விழிப்புணர்வு இந்தியா முழுவதும் வரணும் அண்ணா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான தகவல் ஆப்பீசர்........ வீடியோ ஈவ்னிங்தான் பார்க்கனும்!

GEETHA ACHAL said...

பகிர்வுக்கு நன்றி...நல்ல கிராமம்...

Krishna said...

புதுமை படைக்கும் பெண் உலகத்துக்கு இந்த கிராமம் பழையது.

பெண் குழந்தையை பெற்றவளும் பெண் தானே.........
இந்த பதிவை பார்த்தாவது ஜனங்க திருந்தினா சரி.........

சக்தி கல்வி மையம் said...

நண்பரே,,
நலமா?
புதிய தகவலுக்கு நன்றிகள்..

Unknown said...

தகவல் புதுசு..ஹிஹி சித்திராக்கா ராக்ஸ்!!

சென்னை பித்தன் said...

எல்லோரும் பின் பற்ற வேண்டிய கிராமம்தான்.தகவலுக்கு நன்றி!

ராஜி said...

FOOD கூறியது...

மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ.
>>>>
தங்கள் வருகைக்கும், மகளை வாழ்த்தி பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிகள் சகோ.

ராஜி said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

இந்த மாதிரி விழிப்புணர்வு இந்தியா முழுவதும் வரணும் அண்ணா.
ripppeett

தமிழ்வாசி பிரகாஷ் said...

விழிப்புணர்வு தேவை தான்... இன்னமும் சந்திப்பு முடியலையா

Unknown said...

அருமையான பதிவு பாஸ்! :-)

செல்வா said...

உண்மைலயே இது எனக்கு ரொம்ப புதுமையான தகவல் சார்.

அதிலும் பெண் குழந்தைகள் பிறப்பதை ஊக்குவிக்கும் கிராமம் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது :-)

அம்பாளடியாள் said...

இருபதாயிரம் மாமரங்கள் வளர்ந்து செழித்து நிற்கின்றன. இந்த கிராமத்தில், பெண் குழந்தைகளை, கடவுளின் பரிசாக எண்ணிப்போற்றுகின்றனர். மாம்பழங்கள் விற்று அதன் மூலம் ஈட்டும் வருவாயில் பெண் குழந்தைகளை மணம் முடித்துக் கொடுப்பது இவ்வூர் மக்களின் பழக்கம்.
இந்த ஊர்மண்ணைத் தொட்டுக் கும்புட்டாலே உள்ள பாவம் எல்லாம் தீர்ந்துவிடும்.
இருவகையான பசுமைப் புரட்சி இங்கே ஈன்றவளும் செழிப்புற்று வாழ இட்டமரமும்
செழிப்புற்று வாழ்க்கை கொடுக்கின்றது பெண்களுக்கு.அருமையான இந்தத் தகவலைத்
தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ.பதிவர்கள் மாநாடும் அருமை!...

உணவு உலகம் said...

வந்து கருத்துப் பதிவு செய்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.

நிரூபன் said...

வணக்கம் ஆப்பிசர், சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்.
எப்படி இருக்கிறீங்க.

மாம்பழத்தின் மூலம் வருமானம் ஈட்டித் தம் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக, தம் பெண் பிள்ளைகளைக் கரை சேர்ப்பதற்காக உழைக்கும் பெற்றோரினைப் பற்றியும், பீஹார் மாநில மக்கள் பற்றியும் ஒரு அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

விழிப்புணர்வு நிறைந்த, நாமெல்லாம் இதனை அடிப்படையாக வைத்து முன்னேற வேண்டும் எனும் உணர்வினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய அருமையான பதிவு.

நிரூபன் said...

சித்திரா மேடம் காத்திரமான கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறா.