இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 21 July, 2011

தரமான தண்ணீர் தரக்கேட்டு தவிக்கின்ற மக்கள்.

            தரமான தண்ணீர் தரக்கேட்டு தவிக்கின்ற மக்கள்.
                            தரம் கெட்ட தண்ணீரை நிதம் வழங்கும் வேன்கள்.

           ஆறு குளங்களிலுள்ள நீர் அப்படியே குடிப்பதற்கு ஏற்றதல்ல. அவற்றில் பல வகையான அசுத்தங்கள் கலந்திருக்கும். நம் கண்ணிற்குத் தெரிபவை சில. தெரியாதவை பல. தண்ணீரில் மிதக்கும் தூசிகள் கரைந்திருக்கும் மண் படிவங்கள்&மனிதக் கழிவுகள் இவையே நீரைக் கலங்கலாக்கும் காரணிகள். இவை தவிர, மண்ணிலுள்ள தாதுக்கள் தண்ணீரில் கரைந்திருக்கும். அவை தண்ணீருக்குச் சுவையளிக்கும். இந்நீரை அப்படியே பருகினால் நீரினால் பரவும் நோய்கள் நம்மைத் தாக்கும்.

காசு கொடுத்து வாங்கி

 கவலையின்றி அருந்தும் 

மாசுபட்ட நீர்  மஞ்சள் காமாலை,

 டைபாய்டு போன்ற நோய்கள் கொடுக்கும்.

மாசுபட்ட நீர்  மட்டுமல்ல 

மண்ணிலுள்ள தாதுக்களும் நீரில் கரைந்து 

மனிதர்க்கு நோய்கள் தரும்.

 நைட்ரஜன் கலந்த நீர் ரத்தத்தை பாழ்படுத்தி

 நம் உடலெங்கும் நீல நிறமாக்கும்.

 இரும்பு போன்ற தாதுக்கள் அதிகமிருந்தால், 

விரும்பி நாம் உண்ணும் உணவை 

செறிக்காதிருக்கச் செய்து

 நம்மை செயலிழக்கச்செய்யும். 

புளுரைட் மிகுந்திருந்தால், 

பற்களும் எலும்பும் பலமிழந்து போகும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், உணவுக்கலப்பட தடைச்சட்டத்தில், பாக்கட் குடிநீருக்கு ஐம்பத்தொரு வகை ஆய்வுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
             முத்திரை பெற இத்தனை கஷ்டங்களா?இத்திரை அகற்ற எத்தர்கள் கண்டு பிடித்தனர். மூலிகைத் தண்ணீர். ஐ.எஸ்.ஐ தர முத்திரை வேண்டாம். ஐம்பத்தொரு வகை டெஸ்டும் வேண்டாம்.எச்சரிக்கை தேவை.கிணற்று நீரைப்பிடித்து நறுமண திரவியம் கலந்து  மூலிகை நீரென்று நம் முன் வைக்கின்றனர்.
             நாம் வாங்கும் ஒவ்வொரு குடிநீர்  பாட்டிலில்>பாக்கட்டில் இருக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள் என்னென்ன?

    தயாரிப்பு தேதி        

    பேட்ச் எண்

    ஐ.எஸ்.ஐ. தர முத்திரை        

    தயாரிப்பாளாரின் முழு விலாசம்.

    எந்த தேதி வரை பயன்படுத்த உகந்தது
           இந்திய தர அமைவனத்தின் வலைதளத்திலும், தரமுத்திரை பெற்ற நிறுவனங்களின் பட்டியல் காணலாம். பார்த்து அறிந்து தரமான தண்ணீரைத் தேர்ந்தெடுத்து அருந்துவோம். தொல்லைகள் களைவோம்.
டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு. இனி வருவது புதுப்புது படங்கள். 
              கடந்த திங்களன்று> ’நாஞ்சில் புயல்   நெல்லை வந்தது. உடன் வந்தவர், ’நினைவில் நின்றவை’ கே.ஆர்.விஜயன்.  இம்சை அரசன் பாபுவும் வந்து சேர, இனிய பொழுதாய்க் கழிந்தது அன்றைய நாள். ஆம், அன்று இரண்டாம் பதிவர் சந்திப்பு நெல்லையில் நிகழ்ந்தது.  அரசியல், ஆன்மிகம், பதிவுலக பரபரப்புகள் என பற்றிக்கொண்டது. சந்திப்பில் ’கிளிக்’கிய பட்ங்கள் சில உங்கள் பார்வைக்கு. 

நாஞ்சில் மனோ&கே.ஆர்.விஜயன்.

சங்கரலிங்கம்,மனோ,விஜயன்&பாபு.

என்ன கேட்கிறார் என்று எனக்குத் தெரியாது!

சங்கரலிங்கம், மனோ & விஜயன்

சங்கரலிங்கம் & விஜயன் உணவருந்தும் வேளை.

இரு நாட்டு வேந்தர்கள்.

சுவாமி ’திவானந்தா’வுடன் நாஞ்சில் புயல்
                                      உணவு ஏற்பாடு என் நண்பர் திவான். அவர் பற்றித் தனீஈஈஈஈ பதிவில் கூறுகிறேன்.  மறுநாள் காலை, நாகர்கோயில்- மும்பை எக்ஸ்பிரசில், மும்பை புறப்பட்ட நாஞ்சில் புயலுடன் மதுரை வரை நானும் சென்றேன். வழியெல்லாம் பின்னூட்டப் புயலிற்கு வரவேற்பு பலமாக இருந்தது. விருதுநகர் சந்திப்பில், தங்கை கல்பனா, பாசமிகு சகோதரனைப் பார்க்க வந்தார். உடன் வந்த பதிவர் யாரென்று பார்த்து நான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு .... தளத்தில் பதில் சொல்பவருக்கு, பரிசு கொடுப்பதாக தங்கை கல்பனா அறிவித்துள்ளார்.(ஆஹா செலவு வச்சாச்சா!)
                             ஈரோட்டில் வந்து சந்திப்பதாகச் சொன்ன இந்த பதிவர்.  அப்படியே அப்பீட்டாம். ஒற்றர் கொடுத்த செய்தி-அவர் உருப்படாத வேலையில் (அலுவலக நண்பியுடன்)இருந்ததால், சந்திக்க வரவில்லையென்பதற்கு காரணமாம்!
Follow FOODNELLAI on Twitter

41 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

குட் மார்னிங் ஆபிஸர்,
(நைட்டா இருந்தாலும் இதான்..)

Unknown said...

ஒற்றர் கொடுத்த செய்தி-அவர் உருப்படாத வேலையில் (அலுவலக நண்பியுடன்)இருந்ததால், சந்திக்க வரவில்லையென்பதற்கு காரணமாம்!//
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காசுப்பார்க்கும் கூட்டத்திடம் வியாதி மக்கள் நலம் என்று எவ்வளவு சொன்னாலும் அவர்கள் அதை காதில் போட்டுகொள்ள மாட்டார்கள்...

மக்களும் சில விஷயங்களில் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள மறந்துவிடுகிறார்கள...

இரு சாரருக்கும் எற்ற பதிவு... மீள் பதிவாயினும் பராவயில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
ஈரோட்டில் வந்து சந்திப்பதாகச் சொன்ன இந்த பதிவர். அப்படியே அப்பீட்டாம். ஒற்றர் கொடுத்த செய்தி-அவர் உருப்படாத வேலையில் (அலுவலக நண்பியுடன்)இருந்ததால், சந்திக்க வரவில்லையென்பதற்கு காரணமாம்!//////


பப்ளிக்... பப்ளிக்...

இதெல்லாம் அரசியல் சகஜமப்பா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதிவர் சந்திப்பின் இறுதி அத்தியாயத்திற்க்கு வந்துவிட்டீர்கள் போல...

Kousalya Raj said...

குடி தண்ணீர் பற்றிய நல்ல தகவல்கள் !மக்கள் அவசரத்தில் இதை எல்லாம் பார்த்து வாங்குவார்களா என தெரியவில்லை. நான் இனி கவனமாக இருப்பேன். நன்றி அண்ணா

ஆமாம் வெறும் திவானாக இருந்தவர் எப்போ 'சுவாமி திவானந்தா'வா மாறினார் ? ம்...ஆசி வாங்க வரணும் !!? :))

மனோ, விஜயன், பாபு,கல்பனா,...இன்னொரு பதிவர் சந்திப்பு இனிதே நடந்தேறியது.

இம்சைஅரசன் பாபு.. said...

சுவாமி திவானந்தா அவர்களின் சாப்பாடு இன்னும் அப்படியே நாக்குல ஒட்டிகிட்டு நிக்குது .சாமி ..

கூடல் பாலா said...

\\\என்ன கேட்கிறார் என்று எனக்குத் தெரியாது!\\\ இதுகூடவா தெரியல ...அண்ணாச்சி புட்டி கேக்குறாரு ...

Unknown said...

தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு பகிர்வு அருமை!

Unknown said...

//என்ன கேட்கிறார் என்று எனக்குத் தெரியாது!//
கை வச்சிருக்கிற பொசிஷனப்பாத்தா.....இது அதில்ல!
:-)

Unknown said...

தண்ணீர் பற்றிய செய்தி அருமை

என்ன சட்டம் கொண்டு வந்தாலும், அதுல ஒரு ஓட்டையை கண்டுபுடுச்சுடுறான்களே!! நாம தான் உசாரா இருக்கணும் போல.

அது சரி அது போலி லேபில்-லா இருந்தா என்ன பண்ணுறது?

அதுவும் இல்லாம அந்த தண்ணிய குடிச்சு தான் வயிறு கேட்டு போச்சுன்னு எப்பிடி ப்ரூப் பண்ணறது !!??

பேசாம வீட்டுலேயே தண்ணிய சுட வச்சு எடுத்துட்டு போறது தான் நல்லதுன்னு தோணுது

ஆனா தூர பயணம் போகும் போது சாத்தியமாகாது... ஏன்னா அண்டா நெறையா ...

டாய் நிறுத்து...

வந்தோமா படிச்சோமா ஓட்டு போட்டமா சின்னதா கருத்து சொன்னோமா ஓடிப்போனோமான்னு இருக்கணும் புரிஞ்சதா?? - ஆபிசர் கத்துறது இங்க வரை கேக்குது (சும்மா சொன்னேன் சார்.. கோவிச்சுகிடாதீக)

செங்கோவி said...

அருமையான தகவல்கள் சார்..முக்கியமாக பயணத்தின்போது நம் மக்கள் இதையெல்லாம் கவனிப்பதேயில்லை. அவசரத்தில் கொடுப்பதை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.

படங்கள்.............பயங்ங்ங்ங்கரம்!

அம்பாளடியாள் said...

இரண்டு நல்ல தகவலை வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி சகோ ....

Ram said...

ஈரோட்டில் வந்து சந்திப்பதாகச் சொன்ன இந்த பதிவர். அப்படியே அப்பீட்டாம். ஒற்றர் கொடுத்த செய்தி-அவர் உருப்படாத வேலையில் (அலுவலக நண்பியுடன்)இருந்ததால், சந்திக்க வரவில்லையென்பதற்கு காரணமாம்!//

3 மணி வண்டிக்கு 5 மணிக்கு காத்திருந்த உண்மையான நேர்மையான பதிவர் அவர் என்பதை இங்கு தெளிவுபட விளக்குகிறேன்.

சக்தி கல்வி மையம் said...

வணக்கம் ...

அருமையான தகவலுடன்,

பதிவர்கள் போட்டோக்களும் அருமை..
நன்றி..

rajamelaiyur said...

//
# கவிதை வீதி # சௌந்தர் said...

காசுப்பார்க்கும் கூட்டத்திடம் வியாதி மக்கள் நலம் என்று எவ்வளவு சொன்னாலும் அவர்கள் அதை காதில் போட்டுகொள்ள மாட்டார்கள்...

மக்களும் சில விஷயங்களில் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள மறந்துவிடுகிறார்கள...

//


உண்மைதான்

rajamelaiyur said...

அருமையான பதிவு

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி கூர்மதியன் said...

ஈரோட்டில் வந்து சந்திப்பதாகச் சொன்ன இந்த பதிவர். அப்படியே அப்பீட்டாம். ஒற்றர் கொடுத்த செய்தி-அவர் உருப்படாத வேலையில் (அலுவலக நண்பியுடன்)இருந்ததால், சந்திக்க வரவில்லையென்பதற்கு காரணமாம்!//

3 மணி வண்டிக்கு 5 மணிக்கு காத்திருந்த உண்மையான நேர்மையான பதிவர் அவர் என்பதை இங்கு தெளிவுபட விளக்குகிறேன்.


அனைவரிடமும் வழக்கம் போல் ஒரு மன்னிப்பு அறிவிப்பு.. எனக்கு மனோ சொன்னது 5 மணீக்கு ட்ரெயின் ஈரோடு வரும் என்பது,. ஆனால் 3 மணீக்கே வந்துடுச்சு ஈரோடு .. அப்போ ஃபோன் பணி சொன்னார் நான் என்ன செய்ய?

இராஜராஜேஸ்வரி said...

தண்ணீர் தண்ணீர் பயனுள்ள பகிர்வு. நன்றி.

இரண்டாவது பதிவர் சந்திப்பும் சுவாரஸ்யம்.

பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தண்ணிர் பற்றிய பகிர்வுக்கு நன்றி ஆபீசர்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அன்று இரண்டாம் பதிவர் சந்திப்பு நெல்லையில் நிகழ்ந்தது. /////

என்ன ஆபீசர், முதல் பதிவு மேட்டர் போட்டு முடிஞ்சதும் அடுத்த மீட்டிங் ஸ்டார்ட்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஒற்றர் கொடுத்த செய்தி-அவர் உருப்படாத வேலையில் (அலுவலக நண்பியுடன்)இருந்ததால், சந்திக்க வரவில்லையென்பதற்கு காரணமாம்!//////

ஏதோ ஒரு புது பிட்டுப் படத்துக்கு போஸ்டர் ஒட்டுற வேலைல பிசியா இருந்தா எங்கிட்ட சொன்னாரே?

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

-ஒற்றர் கொடுத்த செய்தி-அவர் உருப்படாத வேலையில்-
டியர் சார் ,
வெளக்கம் தேவை !!!!
(உருப்படாத வேலை)
அப்படி என்ன வேலை !!!!!!!!
-சி.பி எங்கள்கு soloungal ----
நன்றி

அ. வேல்முருகன் said...

தரமான தண்ணீரெல்லாம் அமெரிக்க வளர்ப்பு நாய்களுக்கு என்று இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதாளின் புகைப் படத்தில் பார்த்தேன். என்னதான் உற்பத்தி தேதி பார்த்து வாங்கினாலும் அதை அழித்து புதிய தேதி போட நம்ம ஆட்களுக்கா தெரியாது

சென்னை பித்தன் said...

நல்ல விழிப்புணர்வுப் பதிவு.மினி பதிவர் சந்திப்பு ரிப்போர்ட் சுவாரஸ்யம்.நடக்கட்டும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆப்பீச்ர்.... நான் வேலைக்கு சென்றதால் இந்த பதிவில் இடம்பெறாமல் போய் விட்டேன் என நினைக்கிறேன்...
ம்ஹும்... இப்படியாச்சும் ஒரு விளம்பரம்... ஹா ஹா

தமிழ்வாசியில் இன்று:
அட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - இரண்டாம் பாகம்!

nellai ram said...

nice!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

காசு கொடுத்து வாங்கி

கவலையின்றி அருந்தும்

மாசுபட்ட நீர் மஞ்சள் காமாலை,

டைபாய்டு போன்ற நோய்கள் கொடுக்கும்.//

ஐயய்யோ இனி தண்ணியும் குடிக்க முடியாம போச்சா......!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்ன கேட்கிறார் என்று எனக்குத் தெரியாது!//

நான் ஒன்னும் கேக்கலிங்கோ.........

சிபி'எல்லாம் ஒரு மனுஷனா'ன்னு கேட்ட போது கிளிக் பண்ணிட்டாயிங்க.....

MANO நாஞ்சில் மனோ said...

சங்கரலிங்கம் & விஜயன் உணவருந்தும் வேளை//

சாப்பிடுட்டு மூணாவது ரவுண்டுக்கு ரெடி ஆகிறார் விஜயன், ஏன்னா சாப்பாடு அம்புட்டு ருசி......!!!

MANO நாஞ்சில் மனோ said...

இரு நாட்டு வேந்தர்கள்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சிபி பாத்தாம்னா கண்ணுலேயே குத்திற போறான்....

MANO நாஞ்சில் மனோ said...

சுவாமி ’திவானந்தா’வுடன் நாஞ்சில் புயல்//

ரஞ்சித"மான சந்திப்பு........!!!!

நமீதா நமக, சினேகா நமக, அசின் பிசின் நமக, 9 தாரா நமக, குஷ்பு நமக [[ஐய்யய்யோ குஷ்பு இஸ் ஓல்டு ]]

MANO நாஞ்சில் மனோ said...

உணவு ஏற்பாடு என் நண்பர் திவான். அவர் பற்றித் தனீஈஈஈஈ பதிவில் கூறுகிறேன். //

அவர் பண்ணி தந்த சாப்பாடும் தனி ரகம்'தான் என்பதை சிம்பாலிக்கா சொல்றீங்களா ஹே ஹே ஹே ஹே....??

அதென்னா தனி"ஈஈஈ" பதிவு....??? யோவ் திவான் நோட் பண்ணிக்கிங்கோ....

MANO நாஞ்சில் மனோ said...

விருதுநகர் சந்திப்பில், தங்கை கல்பனா, பாசமிகு சகோதரனைப் பார்க்க வந்தார். உடன் வந்த பதிவர் யாரென்று பார்த்து நான் இரசித்தவை ..ரசிக்க வாருங்கள் என்னோடு .... தளத்தில் பதில் சொல்பவருக்கு, பரிசு கொடுப்பதாக தங்கை கல்பனா அறிவித்துள்ளார்.(ஆஹா செலவு வச்சாச்சா!)//

அழுகாச்சி ஆரம்பிச்சிரும் ஜாக்கிரதை.....

MANO நாஞ்சில் மனோ said...

ஈரோட்டில் வந்து சந்திப்பதாகச் சொன்ன இந்த பதிவர். அப்படியே அப்பீட்டாம். ஒற்றர் கொடுத்த செய்தி-அவர் உருப்படாத வேலையில் (அலுவலக நண்பியுடன்)இருந்ததால், சந்திக்க வரவில்லையென்பதற்கு காரணமாம்!//

அந்த மூதேவி ராஸ்கல் உருப்படாத வேலையெல்லாம் பாக்குறானா...??? கர்மம் கர்மம்.....

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை வீதி # சௌந்தர் said...
குட் மார்னிங் ஆபிஸர்,
(நைட்டா இருந்தாலும் இதான்..)//

பிடிச்சி பத்து நாள் கொரில்லா ஜெயில்ல போடுங்க ஆபீசர்.....

Unknown said...

அண்ணே பதிவு அருமை...அப்படியே கும்மப்பட்ட பதிவருக்கு அனுதாபங்கள் ஹிஹி!

Sivakumar said...

யார் அந்த புதுப்பதிவர் மனோ?

நிரூபன் said...

தண்ணீரின் முக்கியத்துவத்தை, விளக்கும் அருமையான பதிவு,

பதிவர் சந்திப்பு...சிபியை பிசியாகி இருந்ததால் தப்பிச்சிட்டார் போல இருக்கே.

பதிவர் சந்திப்பினை மெச்சும் கலக்கலான படங்கள்.

நம்ம நாஞ்சில் அண்ணாச்சி, எங்கே போனாலும் சாப்பாட்டை மறக்க மாட்டார் போல இருக்கே.

சாந்தி மாரியப்பன் said...

தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு இடுகை அருமையாயிருக்கு..