கடந்த ஐந்து நாட்களாக என் அன்னை நோய்வாய்ப்பட்டு, நெல்லையிலுள்ள, எனக்கு மிகவும் வேண்டப்பட்ட மருத்துவரின் மருத்துவ மனையில், சிகிச்சை பெற்றுவருகிறார். என் அன்னைக்கு வயது எண்பதை நெருங்குகிறது.
அந்தக் கால உடம்பு. அறுபது வயது வரை, ஓடியாடி உழைத்ததினாலோ என்னவோ, எழுபதின் தொடக்கம்வரை, வாழ்க்கைத்துணை சொல்லும் வார்த்தைகளை மட்டுமே மந்திரச்சொல்லாய் மதித்து, என் தந்தைக்கு ஓடியாடித் துணையாயிருந்தவர். தனக்குத் தலைவலி, காய்ச்சல் என்று என் தாய் சொல்லி நான் கேட்டதில்லை.
ஐம்பது வருடங்களுக்கும் மேலாய், மனமொத்த தம்பதியராய் மணவாழ்க்கை வாழ்ந்த என் தந்தை, எண்பத்தியோரு வயதில், எழுபத்தியோரு வயதான என் அன்னையை மறந்து, விண்ணுலகம் சென்ற நாளில், என் அன்னை அழுத அழுகையினை வெறும் வார்த்தைகளால் விளங்க வைக்க இயலாது. அன்று தொடங்கியது என் அன்னையின் உடல்நல பாதிப்புகள்.
பிரிந்து சென்ற தன் உயிரை நினைத்து, உணவை வெறுத்து, உறக்கம் துறந்த நாட்களை எண்ணிவிட இயலாது. சிறிது சிறிதாய், நோய்கள் அவளை நோக்கி வந்தன. அவ்வப்போது உடல்நலக்கோளாறுகள் வந்து சென்றாலும், அன்பு மகன்களையும், அவர்கள் பெற்றெடுத்த பேரக்குழந்தைகளையும் பார்த்துத் தன் உடல்நலக்கோளாறுகளை உதறி வந்தாள். உடல் நலம் தேறி வந்தாள். வீட்டிற்குள் மட்டும் நடமாடி வந்தாள்.
கடந்த திங்களன்று, வலது காலை எடுத்து வைக்க வரவில்லையென்று வருத்தப்பட்டார். அவசர சிகிச்சைக்கென மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். உணவை உண்ண முடியாமல், ஒவ்வொரு நாளும் அவஸ்த்தை. எழுந்து சென்று, இயற்கை உபாதைகளை கழிக்க முடியாதென்பதால், சிறுநீரை வெளியேற்ற 'யூரோ பேக்'.
இத்தனை அவஸ்தைகளுக்கு நடுவில், மூளையில் ரத்தக்குழாய்களில் பாதிப்பு உள்ளதா என்று பார்க்க, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க மருத்துவர் பரிந்துரைத்தார். கூடவே, வயிற்றுப் பகுதியிலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து வந்தால், நல்லதென்றார். பிற்பகல் மூன்று மணியிலிருந்தே, சிகிச்சை எடுத்த மருத்துவ மனையிலிருந்து,நெல்லையின் பேர் சொல்லும் நதியின் பெயர் கொண்ட ஸ்கேன் சென்டரைத் தொடர்பு கொண்டதில், ஆறு மணிக்குத்தான் அப்பாயின்மென்ட் என்றனர்.
ஆறு மணிக்கு ஆம்புலன்ஸூம் வந்தது. ஸ்கேன் எடுக்க இடையூறாய் இருக்குமென்பதால், சிறுநீர் வெளியேறி வந்த சிறு குழாயினையும் அடைத்து வைத்தனர். ஸ்கேன் சென்டர் சென்றவுடன், பணம் பெற்றுக்கொள்ள பல்லிளித்தனர். பணம் செலுத்திய பின்னர், அவர்களின் நடவடிக்கைகளில் நல்லதொரு மாற்றம் கண்டேன். அவசரமாய்ப் புறப்பட்டு ஸ்கேன் சென்டரை அடைந்தவுடன், அரை மணி நேரத்தில், ஒரு லிட்டர் தண்ணீரை அருந்தி, சிறுநீரகங்கள் தாங்குமளவிற்கு பொறுத்து இருந்தால் மட்டுமே, சரியாக ஸ்கேன் எடுக்க முடியுமென்றனர். அரைமணியென்று சொன்னவர்கள், மூன்று மணி நேரம் முழுதாய் சென்ற பின்னரும் ஸ்கேன் எடுக்க அழைத்த பாடாயில்லை. ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில் என் அன்னை.
அந்த ஸ்கேன் சென்டரில் அத்தனை வசதி. காற்றோட்டம் என்பது கானல் நீர் போல் இருந்தது. மூன்று பக்கம், கான்க்ரீட் சுவர்கள். முன்பக்கம், கண்ணாடித் தடுப்பு. ஓடிக்கொண்டிருந்த மின் விசிறிகளையும், தியேட்டரில் படம் போட்டவுடன், மின் விசிறிகளை அணைத்து விடுவது போல், சென்று சில நேரம் கழித்தவுடன், ஓய்வு கொடுத்தே வைத்திருந்தனர். அப்படி புழுங்கிக்கொண்டிருந்த அறையினில், சுமார் ஐம்பது பேர்கள் காத்திருந்தனர்.
ஏன் காலதாமதமாகிறது என்று கேட்டால், இதோ அடுத்து உங்களுக்குத்தான் எடுக்கப்போகிறோம் என்று போக்கு காட்டி வந்தனர். அதிகளவில் தண்ணீர் அருந்தியதால், என் அன்னைக்கு, சிறு நீர் கழிக்க முடியாமல் அவஸ்த்தை ஒருபுறம். நேரம் செல்ல செல்ல, பசி வந்து பட்ட அவஸ்த்தைகள் மறுபுறம். எங்களை இந்த சென்டருக்கு அனுப்பி வைத்த மருத்துவருக்கு(அவரும் என் உற்ற நண்பர்தான்), தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன். அவரும், சென்டரை தொடர்பு கொண்டு உடனே ஸ்கேன் முடித்து அனுப்பி வைக்க அறிவுறுத்தினார். ஸ்கேன் சென்டர் வைத்திருப்பவர்கள், அருகிலுள்ள மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்பதால், அந்த மாவட்டத்தில் அரசுத் துறையில் பணிபுரியும் என் மருத்துவ நண்பர் ஒருவர் மூலமும், ஸ்கேன் சென்டர் மருத்துவரிடம் சொல்ல சொன்னேன்.
வந்து சிக்கி விட்டார்கள், ஸ்கேன் எடுத்து விட்டுத்தானே செல்ல வேண்டும் என்ற உதாசீனம் அவர்களிடம். எண்பது வயதை நெருங்கும் என் அன்னை அடைந்த துன்பங்கள் அப்பப்பா! ஸ்கேன் மெஷினில் கோளாறாம். ஒவ்வொரு நபரையும், ஒரு முறைக்கு பல முறை அழைத்து ஸ்கேன் எடுத்துக கொண்டிருந்தனர். காத்துக்கிடப்பவர்கள் காத்தே கிடந்தனர். அதனை சரி செய்ய, வல்லுநர் எவரும் அழைக்கபடாமலே, அங்கிருந்த மருத்துவ நிபுணர்களே(!), இயந்திரங்களுடன் மல்லாடிக்கொண்டிருன்தனர்.
எனக்கு தெரிந்த மருத்துவர்கள் இருவர், விரைவில் அனுப்பி வைக்க பரிந்துரை செய்ததினால்தானோ என்னவோ, இரவு பத்து மணிக்கு, எங்கள் முறை வந்தது. முக்கால் மணி நேரத்தில், ஸ்கேன் முடித்து வெளியில் வந்தால், அங்கிருந்த ஆம்புலன்சில் ஏறி, பணியிலிருந்த மருத்துவர் பறந்து விட்டார். அவர் ஆம்புலன்சில் ஏறச் செல்லும்போதே, அன்னையின் நிலையினைக் கூறி, மருத்துவரை மாற்று வாகனத்தில் அழைத்துச் செல்ல கேட்டுக்கொண்டேன்.
மருத்துவரல்ல அவர் மனிதம் மரத்துப் போனவர் என்று நான் அறிந்து கொண்டேன். சென்ற வாகனம் அரைமணி நேரம் திரும்பவில்லை. அந்த இரவு வேளையில், அடுத்த ஆம்புலன்ஸ் வரவைக்கவும் முடியாமல், ஆட்டோவில் ஏற்றி செல்ல, அன்னையின் உடல்நிலை ஒத்துழைக்காததினாலும், பட்ட அவஸ்த்தை சொல்லி மாளாது. விசாரித்ததில், வீட்டுக்கு செல்லும் வழியில், மருத்துவர் தன மனைவி, மக்களுக்கு ஷாப்பிங் முடித்து சென்றதில், சுணக்கம் என்றார் ஓட்டுனர்.
அந்த ஸ்கேன் சென்டரின் உரிமையாளரும் ஒரு மருத்துவர்தான்.அவரிடம் சென்று முறையிட்டேன். 'இப்ப வந்திரும்' என்ற இரு வார்த்தைகள் மட்டுமே இயந்திரத்தனமாய் வந்து விழுந்தது அவர் வாயிலிருந்து. செவிடன் காதில் ஊதிய சங்கென்று, என்னை நானே நொந்துகொண்டு, வந்து சேர்ந்த ஆம்புலன்சில், மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன் என் அன்னையை.
1 . மருத்துவமனையில் உள்நோயாளிகளாய் இருப்பவர்களை அழைத்து வரும் போது, இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப, சரியான நேரத்திற்கு அழைத்து வரலாம். அதிலும், நோய்வாய் பட்ட, வயதானவர்கள் என்றால் அதிக கவனம் எடுத்து காக்க வைக்காது இருந்திருக்கலாம்.
2 .மருத்துவர்களை விட, நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கலாம்.
3.அந்த மர(ரு)த்துவரை, ஒரு காரிலோ, ஆட்டோவிலோ வீட்டிற்கு அனுப்பிருக்கலாம்.
4. அவசர அவசரமாய் ஆம்புலன்சில் ஏறிப்பறந்த மர(ரு)த்துவர், நோயாளியின் நிலையை சற்றே சிந்தித்து பார்த்திருக்கலாம்.
டிஸ்கி: வாய் விட்டு புலம்பிய பின்னரும், காது கொடுத்து கேட்காத அந்த மருத்துவர்கள் மீது, நுகர்வோர் சேவை குறை பாட்டின் கீழ் குற்றச்சாட்டு செய்ய முயற்சிகள் தொடங்கிவிட்டேன் .
மருத்துவரல்ல அவர் மனிதம் மரத்துப் போனவர் என்று நான் அறிந்து கொண்டேன். சென்ற வாகனம் அரைமணி நேரம் திரும்பவில்லை. அந்த இரவு வேளையில், அடுத்த ஆம்புலன்ஸ் வரவைக்கவும் முடியாமல், ஆட்டோவில் ஏற்றி செல்ல, அன்னையின் உடல்நிலை ஒத்துழைக்காததினாலும், பட்ட அவஸ்த்தை சொல்லி மாளாது. விசாரித்ததில், வீட்டுக்கு செல்லும் வழியில், மருத்துவர் தன மனைவி, மக்களுக்கு ஷாப்பிங் முடித்து சென்றதில், சுணக்கம் என்றார் ஓட்டுனர்.
அந்த ஸ்கேன் சென்டரின் உரிமையாளரும் ஒரு மருத்துவர்தான்.அவரிடம் சென்று முறையிட்டேன். 'இப்ப வந்திரும்' என்ற இரு வார்த்தைகள் மட்டுமே இயந்திரத்தனமாய் வந்து விழுந்தது அவர் வாயிலிருந்து. செவிடன் காதில் ஊதிய சங்கென்று, என்னை நானே நொந்துகொண்டு, வந்து சேர்ந்த ஆம்புலன்சில், மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன் என் அன்னையை.
1 . மருத்துவமனையில் உள்நோயாளிகளாய் இருப்பவர்களை அழைத்து வரும் போது, இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப, சரியான நேரத்திற்கு அழைத்து வரலாம். அதிலும், நோய்வாய் பட்ட, வயதானவர்கள் என்றால் அதிக கவனம் எடுத்து காக்க வைக்காது இருந்திருக்கலாம்.
2 .மருத்துவர்களை விட, நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கலாம்.
3.அந்த மர(ரு)த்துவரை, ஒரு காரிலோ, ஆட்டோவிலோ வீட்டிற்கு அனுப்பிருக்கலாம்.
4. அவசர அவசரமாய் ஆம்புலன்சில் ஏறிப்பறந்த மர(ரு)த்துவர், நோயாளியின் நிலையை சற்றே சிந்தித்து பார்த்திருக்கலாம்.
டிஸ்கி: வாய் விட்டு புலம்பிய பின்னரும், காது கொடுத்து கேட்காத அந்த மருத்துவர்கள் மீது, நுகர்வோர் சேவை குறை பாட்டின் கீழ் குற்றச்சாட்டு செய்ய முயற்சிகள் தொடங்கிவிட்டேன் .

56 comments:
முதல் சிகிச்சை
செய்ய வேண்டும் சில மருத்துவர்களுக்கு!
>>மருத்துவரல்ல அவர் மனிதம் மரத்துப் போனவர் என்று நான் அறிந்து கொண்டேன்.
ஆம்.. இவர் மாதிரி ஆட்கள் மூன்றாம் தரத்தவர்
ஆஃபீசர் அண்ணே.. உங்களுக்குத்தெரியாததல்ல.. 2 குழந்தைகளுக்கு நடுவே, 2 பேராக்களுக்கு இடையே போதிய இடை வெளி விடவும் ஹி ஹி
சரி செய்து விட்டேன் நண்பரே.
அப்பா வயசுல இருந்துக்கிட்டு அண்ணே என்பதா என்னை? கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் ஹி ஹி
சரிங்க சார், உள்ளேய நடங்க. உங்க பாணில மன்னிச்சு. தமிழ்மணம் இணைப்புக்கு ஒரு நன்றியும் கூட.
/// என்னை நானே நொந்துகொண்டு, வந்து சேர்ந்த ஆம்புலன்சில், மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன் என் அன்னையை. ////
தங்கள் நிலை உணர்க்கிறேன் சகோதரா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சாருவின் ஆபாச அரட்டை உண்மையா? பொய்யா? ஆதார பதிவு
உணவுஉலகம்: மனிதம் மரத்த மர(ரு)த்துவர்கள்.//
வலிநிறைந்த அனுபவம்..
வாய் விட்டு புலம்பிய பின்னரும், காது கொடுத்து கேட்காத அந்த மருத்துவர்கள் மீது, நுகர்வோர் சேவை குறை பாட்டின் கீழ் குற்றச்சாட்டு செய்ய முயற்சிகள் தொடங்கிவிட்டேன் //
பொறுப்பான நடவடிக்கைகளுக்குப் பாராட்டுக்கள்.
அண்ணே சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க....இவனுங்கள மாதிரி ஆளுங்களுக்கு சுளுக்கு எடுக்கனும்னே...
அப்போதான் வலின்னா என்னன்னு தெரியும்...!
இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஒருவேளை அவர்களுக்கு இது பழக்கமாகி போய் இருக்கலாம்...
வலிநிறைந்த அனுபவப் பகிர்வு. இந்தநிலை மாறவேண்டும்.
அந்த மரத்துப்போன மருத்துவர்களுக்கு
காலரா வந்து
ஊசி போடாமல் நாள் கணக்கா காக்க வைக்க வேண்டும்
அப்போதுதான் வலி புரியும்
நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுபோல அனுபவம் கண்டு இருக்கிறேன்.
அரசு மருத்துவ மனைகளில் அவர்கள் சொல்லுவதுதான் எல்லாமே..
கண்டிப்பாக இது மாதிரி ஆட்களை தண்டிக்க வேண்டும் சார்..அம்மா நலம்பெற வேண்டுகிறேன்.
அம்மா விரைவில் பூரண குணம் அடைய இறைவனை பிராத்திக்கிறேன்... பிற அலுவலகங்களில் மெத்தனம் இருப்பது பெரிதாக ஒன்றும் பாதித்திடாது... ஆனால் மருத்துவமனைகளில் கண்டிப்பாக இது பெரும் பிரச்சினையை விளைவிக்கும்.... இவர்களெல்லாம் காட்டெருமைகள்...
intha mathiri scane centr da NAME payapudama publish panunga, apo than mathawangalum anga powama irupanga
இது போன்ற ஆட்கள் அதிகரித்து வருவது வருத்தமான விஷயம், இதற்கு சட்டரீதியான அல்லது துறைரீதியான நடவடிக்கை தேவை, அப்போதுதான் அடங்குவார்கள்!
சேவை மனப்பான்மையுடன் மனிதாபிமானத்தையும் முற்றாக இழந்து பணம் கண்ணை மறைக்கும் இத்தகையவர்களை எப்படியாவது தண்டித்தே ஆகவேண்டும். அம்மா நலம் திரும்ப எங்கள் பிரார்த்தனைகள்.
//வாய் விட்டு புலம்பிய பின்னரும், காது கொடுத்து கேட்காத அந்த மருத்துவர்கள் மீது, நுகர்வோர் சேவை குறை பாட்டின் கீழ் குற்றச்சாட்டு செய்ய முயற்சிகள் தொடங்கிவிட்டேன் . //
கட்டாயம் செய்யத்தான் வேண்டும்.இது ஒரு இயக்கமாக வளர்ந்தால்தான் இவர்கள் திருந்துவார்கள்.
உங்கள் அன்னை விரைவில் பூரண நலமடைய என் பிரார்த்தனைகள்.
தாயை கவனித்துக் கொள்ளுங்கள். தனியார்மயம் ஆனதிலிருந்து பணம் ஒன்றுதான் குறிக்கோள். மனம் மரத்துதான் போனது.
என் தந்தைக்கான மருத்துவ அனுபவம். ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்தின் அனுபவமும் அதுதான். அப்பலோ மட்டும் என்னவாம். அதேதான். காசுக்கு பல்லிளிக்கும் கார்பேரேட் மருத்துவம்
1 கோடி கொடுத்து மருத்துவம் படிப்பவன் மனநிலை இப்படிதான்
வளர்க்கப்படுகிறது
மீண்டும், தாயை பார்த்துக் கொள்ளுங்கள்
பதிவில் பதிவரின் வேதனையையும், அவர் தம் தாயின் வேதனையையும் முழுமையாக உணர்கிறேன்
இப்படியும் சில மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
மிகவும் வருத்தாமாய் இருக்கிறது சார்
அம்மா விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
உங்களது அன்னை அவர்களின் உடல் நலத்திற்காக பிரார்த்திக்கிறோம்.
ச்சே .......இப்படி எல்லாம் கூட இருப்பாங்களா ....தாங்கள் கண்டிப்பாக அவர்கள் தவறை உணர வைக்கவேண்டும் ..
தங்கள் தாயார் விரைவில் பூரண நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ...
நிச்சயமாக இப்படி பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
வந்து மருத்துவர்களை வாழ்த்தி(!)யதற்கும், அன்னை நலம் பெற வேண்டியவர்களுக்கும் நன்றி.
http://tirunelveli.justdial.com/diagnostic-centre-scan_Tirunelveli.html
எந்த நிறுவனம் என்று சொல்லுங்கள்
சுகாதார துறை அல்லது திரு நைனார் நாகேந்திரன் மூலம் நடவடிக்க எடுக்க செய்வோம்
நண்பரே, இது போலவே என் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்பட்டபோதும் நிகழ்ந்தது. இந்த இடுகையை வாசிக்கும்போது, அந்த அனுபவங்களை என்னால் உடனுக்குடன் கோர்வையாக நினைவுகூர முடிந்தது. என்னத்தைச் சொல்ல, உங்களது தலைப்புடன் முழுமையாக ஒத்துப்போகிறேன். விரைவில் உங்கள் தாயார் நலனடைய பிரார்த்திக்கிறேன்.
எல்லோருக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஆதங்கம்....
பொருப்பு உணர்ந்து செயல்பட்டால் சரி...
இப்போது நடப்பவை எல்லாமே இப்படித்தானே..
கவலையாக இருக்கிறது..இவர்கள் திருந்த மாட்டார்கள்.
நீங்கள் அன்னைமீது கொண்ட அதிதமான அக்கறை,அன்பு,அத்தனையும் நினைக்க வருத்தமாய் இருக்கிறது..
உங்கள் அன்னை நல்ல நிலைக்குவர இறைவனை வேண்டுகின்றேன்..
present
நிச்சயம் அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கி தர வேண்டும்.நல்லவர்கள் உங்களுக்கு உதவுவர்
நிச்சயம் அவர்களுக்கு சரியான தண்டனை வாங்கி தர வேண்டும்.நல்லவர்கள் உங்களுக்கு உதவுவர்
மிகவும் வேதனையான ஒரு சம்பவம் இது. பலரும் இது போன்ற ஒன்றை சந்தித்து இருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்...!
என் அம்மாவிற்கு ஆபரேசன் செய்த போது இது போன்றதொரு மிக மோசமான ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டது. இப்போது அதை நினைத்தாலும் மனம் கலங்குவேன்.
இது போன்றவர்களை சும்மா விட கூடாது அண்ணா. நீங்கள் உங்கள் முயற்சியில் சிறிதும் பின் வாங்காது இருங்கள்.
விவரம் தெரிந்த நமக்கே இந்த நிலை என்றால், படிக்காத கிராம மக்கள் நிலை மிகவும் பரிதாபம். :(
ஊழலுக்கு அடுத்து சரிசெய்யப்படவேண்டிய ஒன்று மருத்துவம் .
விரைவில் இதற்கான போராட்டம் தேவை.
தாங்களுக்கு ஏதேனும் சட்டரீதியான உதவிகள் வேண்டுமெனில் நான் உதவ தயார் .
எனது அலை பேசி எண் :9486135426
என
நண்டு@நொரண்டு ,ஈரோடு .
//ராம்ஜி_யாஹூ said...
http://tirunelveli.justdial.com/diagnostic-centre-scan_Tirunelveli.html
எந்த நிறுவனம் என்று சொல்லுங்கள்
சுகாதார துறை அல்லது திரு நைனார் நாகேந்திரன் மூலம் நடவடிக்க எடுக்க செய்வோம்//
நன்றி நண்பரே. அது பரணி ஸ்கேன் செண்டர்,திருச்செந்தூர் ரோடு, பாளையங்கோட்டை.
//நண்டு@நொரண்டு -ஈரோடு said...
ஊழலுக்கு அடுத்து சரிசெய்யப்படவேண்டிய ஒன்று மருத்துவம் .
விரைவில் இதற்கான போராட்டம் தேவை.
தாங்களுக்கு ஏதேனும் சட்டரீதியான உதவிகள் வேண்டுமெனில் நான் உதவ தயார் .
எனது அலை பேசி எண் :9486135426//
நன்றி நண்பரே. நாளை காலை உங்களை அலைபேசியில் தொடர்புகொள்கிறேன்.
கொடுமை. அந்த மருத்துவருக்கு தனக்கு இப்படி நேர்ந்தால் மட்டுமே புரியும். நம் ஊரில் இந்த மாதிரி மர(ரு)த்துவவர்கள் ஏராளம். காசு வாங்கிக்கொண்டு செய்யும் சேவையே இப்படியென்றால் அரசு இலவச மருத்துவமனைகளில் எப்படியிருக்கும்?
அதைக் கேட்கப் போனால் அதிகாரம் செய்வார்கள். இவர்கள் போன்றோர் மீது மிக மிக கடுமையான சட்ட நடவடிக்கை தேவை. உயிருடன் விளையாடும் இவர்கள் மிக கடுமையாக தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.
தங்கள் தாயார் விரைவில் பூரண நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
சரியான சவுக்கடி..
தங்கள் தாயார் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
சாட்டை அடி வரிகள்
ஐயய்யோ ஆபீசர் இப்போ அம்மாவுக்கு எப்பிடி இருக்கு...???
இப்பிடி பட்டவனுகளை அடி பின்னி எடுக்கணும் ஆபீசர் நானும் வரவா...???
செவிடன் காதில் ஊதிய சங்கென்று,//
செவியிலே நாலு சாத்து சாத்தி இருந்தா சந்தோஷபட்டுருப்பேன்....
மருத்துவரல்ல அவர் மனிதம் மரத்துப் போனவர் என்று நான் அறிந்து கொண்டேன். சென்ற வாகனம் அரைமணி நேரம் திரும்பவில்லை. அந்த இரவு வேளையில், அடுத்த ஆம்புலன்ஸ் வரவைக்கவும் முடியாமல், ஆட்டோவில் ஏற்றி செல்ல, அன்னையின் உடல்நிலை ஒத்துழைக்காததினாலும், பட்ட அவஸ்த்தை சொல்லி மாளாது. விசாரித்ததில், வீட்டுக்கு செல்லும் வழியில், மருத்துவர் தன மனைவி, மக்களுக்கு ஷாப்பிங் முடித்து சென்றதில், சுணக்கம் என்றார் ஓட்டுனர். ///
அந்தாளு டாக்டர் அல்ல மிருகம்...!!!
டிஸ்கி: வாய் விட்டு புலம்பிய பின்னரும், காது கொடுத்து கேட்காத அந்த மருத்துவர்கள் மீது, நுகர்வோர் சேவை குறை பாட்டின் கீழ் குற்றச்சாட்டு செய்ய முயற்சிகள் தொடங்கிவிட்டேன் .//
சரிதான் ஆபீசர் பிடிச்சி உள்ளே தூக்கி போடுங்க அந்த ராஸ்கல.....
வணக்கம் ஆப்பிசர், மனிதம் மரத்துப் போன சுய நல மருத்துவர்களைப் பற்றிய மனதில் கோபத்தினை உண்டாக்கக் கூடிய ஒரு இடுகையினைத் தந்திருக்கிறீங்க. இதற்கான ஒரே வழி,
உங்கள் அன்னைக்கு நிகழ்ந்தது போன்று, இனிமேல் எவருக்கும் நிகழக் கூடாது என்றால், இம் மருத்துவர்களையும், நோயாளிகளை உதாசீனம் செய்து காக்க வைக்கும் மனிதாபிமானமற்ற, பொறுப்பற்ற மனிதர்களையும் தண்டித்துப் பாடங் கற்பிக்கும் வண்ணம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது தான் சிறந்த செயல் என்பேன் நான்.
பொதுவாக சென்னை போன்ற மாநகரங்களில் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. நெல்லையில் அரிது.
இருந்தாலும் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கதே.
பொய் பித்தலாட்டங்கள் நிறைந்த மனிதநேயம் மறந்த -மரத்த இவ்வுலகில் மருத்துவரிடம் மட்டும்
அதை எதிர்பார்ப்பது .......!!!!(என்ன சொல்ல)
என் போன்ற மருத்துவர்கள் மனிதர்களை மட்டுமே சம்பாதிக்க முடிகிறது. பணத்தை அல்ல .
அருமையான விழிப்புணர்வுப் பதிவு சகோ..
தங்கள் தாயார் விரைவில் பூரண நலமடைய வேண்டும்
ஏங்கள் தாயார் நலமடைய பிரார்த்தனை செய்தவர்களுக்கும் , நலமடைய வேண்டியவர்களுக்கும் எங்கள் நன்றி !
ஸ்கேன் சென்டர் வைத்திருப்பவர்கள் மருத்துவர்களுக்கு 50 முதல் 70 சதவீத்ம் வரை கமிஷன் கொடுக்கிறார்கள்.எனவே எந்த மருத்துவரை பார்த்தாலும் முதலில் ஸ்கேன் பிறகு தான் சிகிட்சை... எனது மருந்து பிரதிநிதி வாழ்க்கையில் நிறைய கசப்பான சம்பவங்கள் பார்த்திருக்கிறேன்
அன்பின் சங்கரலிங்கம் - இது மாதிரி மருத்துவர்கள் எங்கும் இருக்கிறார்கள். என்ன செய்வது ...... அவர்களாகத் திருந்த மாட்டார்கள் - திருத்த வேண்டும். எனக்கும் ஜூலை 31 அன்று மதுரையில் உள்ள ஒரு பிரபல எம் ஆர் ஐ ஸ்கேன் செண்டரில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அங்கிருக்கும் பணியாளர்களும் சரி - மேலதிகாரிகளான மருத்துவர்களூம் சரி - நமது பிரச்னையினைக் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள். அவர்கள் சொல்வதுதான் வேத வாக்கு. ம்ம்ம்ம்ம்ம்ம்
அன்னை விரைவினில் பூரண நலமடைய பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா
Post a Comment