இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 28 July, 2011

முதல் போட்டு வாங்கின மோட்டார் சைக்கிளா? அப்ப படிங்க!

                   திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர்  ராணுவ வீரர் திரு.சங்கரநாராயணன். இவரது கண்டுபிடிப்பு ஒன்று, திருவில்லிபுத்தூரை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆம், மோட்டார் வாகனக்களுக்கு, செக்யூரிட்டி வெஹிகிள் ஸ்டார்ட்டரைக் கண்டுபிடித்துள்ளார். உணவு உலகம்

                        
              இவரது கல்வித் தகுதியெல்லாம், ஐ.டி.ஐ. எலெக்ட்ரிக்கல்தான். ராணுவவீரராகப் பணி புரியும் இவருக்கு எதையேனும் சாதிக்கப் பிறந்த ஆசைதான் இப்படியோர் கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்துள்ளது.உணவு உலகம்
                                இவர் கண்டுபிடித்துள்ள செக்யூரிட்டி வெஹிகிள் ஸ்டார்ட்டரில், ’செக்யூரிட்டி கோடு’ மட்டுமே பயன்படுத்தப்படும். வாகனத்தை ஸ்டார்ட் பண்ண பயன்படுத்தப்படும் சாவி பொருத்தப்படும் இடத்திற்கு கொண்டு வரப்படும் ஒயரை, இந்த செக்யூரிட்டி வெஹிகிள் ஸ்டார்ட்டருக்கு கொண்டுவரவேண்டும்.உணவு உலகம்
                               அந்த கோடு பாக்ஸில், ஒன்பது இலக்கம்  டிஸ்பிளே கொண்ட கீ-போர்ட் இருக்கும். சாவியை பயன்படுத்துவதற்குப் பதில், இதில் நமக்கு மட்டுமே தெரிந்த எண்ணை அழுத்திய பிறகு, வாகனத்தை ஸ்டார்ட் செய்தால், வாகனம் ஸ்டார்ட் ஆகும். அதே கீ போர்டில் உள்ள ஏதேனும் ஒரு எழுத்தை அழுத்தி, இன்ஜின் ஓட்டத்தை நிறுத்த முடியும். உணவு உலகம்
                                  இந்த  சாதனத்தை, மோட்டார் சைக்கிள் மட்டுமின்றி, கார்களுக்கும் பயன்படுத்தலாம். திருடர்கள் இந்த சாதனத்தின் ஒயர் இணைப்பைத் துண்டித்து, வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தாலும், இயந்திரத்தோடு இணைக்கப்பட்டிருப்பதால், இன்ஜினை ஸ்டார்ட் செய்யவே முடியாது. இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, வாகனத்தின் முன் பக்க சக்கரமும், இந்த ஸ்டார்டருடன் இணைக்கப்பட்டு விடுவதால், திருட்டு சாவி போட்டுக் கடத்தும் பேச்சுக்கே இடமில்லை. உணவு உலகம்
                                  விலை ரொம்ப அதிகமில்லை. இரு சக்கர வாகனங்களுக்கு 1200 ரூபாயிலும், கார்களுக்கு 5000 ரூபாயிலும் இந்த சாதனத்தைப் பொருத்த இயலும். கிண்டியிலுள்ள, இந்திய அறிவு சார்  சொத்துரிமை அலுவலகம் இவருக்கு இதற்கான பேடண்ட் உரிமை வழங்கியுள்ளதாகவும் ஒரு பத்திரிக்கை பேட்டியில் இந்த வித்யாசமான வீரர் கூறியிருந்தார். உணவு உலகம்
                             இவரது விலாசம்:  திரு. சங்கரநாராயணன், மஞ்சப்பூ தெரு, திருவில்லிபுத்தூர். வித்யாசமான ஆனால் பயனுள்ள கண்டுபிடிப்பைச் செய்துள்ள இவரை பாராட்டலாம்தானே! உணவு உலகம்
                       இனி வருவது, என் கையில் மிச்சமிருந்த நெல்லை பதிவர் சந்திப்பின் இறுதிப் பகுதி காணொளி. கண்டு மகிழுங்கள். நன்றி நண்பர்களே.


Follow FOODNELLAI on Twitter

38 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் ஆப்பிசர்,

நிரூபன் said...

அருமையான கண்டு பிடிப்பு ஆப்பிசர், சங்கரநாராயணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நிரூபன் said...

சிபி அடிச்சு தூள் கிளப்பியிருக்கிறார்.
செல்வா கதைகளுக்கு நிச்சயமாக ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்பது தான் எனது கருத்தும்,

தமிழ்வாசி...கம்பீரமான முறுக்கு மீசையோடு பேசுறார்.

நிரூபன் said...

சிபி அடிச்சு தூள் கிளப்பியிருக்கிறார்.
செல்வா கதைகளுக்கு நிச்சயமாக ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்பது தான் எனது கருத்தும்,

தமிழ்வாசி...கம்பீரமான முறுக்கு மீசையோடு பேசுறார்.

நிரூபன் said...

தமிழ்வாசி பிரகாஷின் விஜயகாந்த் வீடியோவிற்காக, நாஞ்சில் மனோ அண்ணாவின் மச்சினன் தீவிரமாகத் தேடுவதாக தகவல்கள் உலவுகின்றனவே;-))

Unknown said...

அண்ணே கண்டுபிடிப்பு சூப்பர்!....வீடியோ கலக்கல்!...பகிர்வுக்கு நன்றி!

Unknown said...

அருமையான கண்டுபிடிப்பு பாஸ்!
ஊக்கப்படுத்தணும் இவங்கள ரொம்ப இன்னும் சாதிக்க!

Unknown said...

அருமையான கண்டுபிடிப்பு பாஸ்!
ஊக்கப்படுத்தணும் இவங்கள ரொம்ப இன்னும் சாதிக்க!

Unknown said...

ஹிஹி வீடியோ கலக்கல்!!

சி.பி.செந்தில்குமார் said...

TM 7

சி.பி.செந்தில்குமார் said...

என் கிட்டே ஓ சி பைக் தான் இருகு அண்ணே

MANO நாஞ்சில் மனோ said...

பாராட்டு என்ன பாராட்டு ஆபீசர், அந்த வீரரை தலையில் வச்சி கொண்டாடனும்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

நிரூபன் said...
தமிழ்வாசி பிரகாஷின் விஜயகாந்த் வீடியோவிற்காக, நாஞ்சில் மனோ அண்ணாவின் மச்சினன் தீவிரமாகத் தேடுவதாக தகவல்கள் உலவுகின்றனவே;-))//

ஹா ஹா ஹா ஹா ஆமாய்யா ஆமா, ஆனால் பயபுள்ள ஓடி ஒளிஞ்சிகிட்டான் தம்பி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
என் கிட்டே ஓ சி பைக் தான் இருகு அண்ணே//

என்னாது ஒ சி பைக்கா...?? டேய் அண்ணா அது என்ன புது வகை பைக்கா...???

rajamelaiyur said...

Very useful invention. . .

rajamelaiyur said...

Thanks for sharing

MANO நாஞ்சில் மனோ said...

ஹி ஹி தமிழ்மணம் ஏழாவது ஓட்டு.....

இராஜராஜேஸ்வரி said...

வித்யாசமான ஆனால் பயனுள்ள கண்டுபிடிப்பைச் செய்துள்ள இவரை பாராட்டலாம்தானே!--

அவரை வெளிச்சத்திற்க்குக் கொண்டுவந்த பகிர்வுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

பதிவர் சந்திப்பில் எங்களையும் பங்கு கொள்ள் வைத்த மகிழ்வு தநத வீடியோ பகிர்வுக்கு நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல கண்டுபிடிப்பு. வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒரு வழியா வீடியோ முடிஞ்சிருச்சு. நன்றி ஆபீசர்

sathishsangkavi.blogspot.com said...

வித்யாசமான ஆனால் பயனுள்ள கண்டுபிடிப்பு...

சசிகுமார் said...

உண்மையில் பயனுள்ள கண்டுபிடிப்பு தான் ஆனால் இது வெளிவருவந்த சில நாட்களிலேயே இதை செயலிழக்க வைக்கும் முறை வந்து விடுகிறது திருடர்கள நம்மை விட வேகமாக உள்ளனர். வீடியோ நல்லா இருந்தது.

செல்வா said...

நான் சொல்ல நினைச்சதை அப்படியே சசிகுமார் அண்ணன் சொல்லிட்டார் :-))

Anonymous said...

நல்ல கண்டுபிடிப்பு அவருக்கு பாராட்டுக்கள் ...

அ. வேல்முருகன் said...

நிச்சயமாக நல்ல கண்டுபிடிப்பு, சந்தைபடுத்தும் போது நிச்சயம் அவர்நிலை உயரும். வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பாராட்டுக்கள்..
அவருக்கும் அவரை அறிமுகம் செய்த தங்களுக்கும்...

கூடல் பாலா said...

பயனுள்ள கண்டுபிடிப்பு .......ஆச்சரியமான தகவல் !

செங்கோவி said...

நல்ல கண்டுபிடிப்பு தான் பாஸ்..வீடியோவை அப்புறம் பார்க்கிறேன்.

சென்னை பித்தன் said...

இந்த நல்ல கண்டுபிடிப்பு அதிக அளவில் விரைவில் பயனுக்கு வர வேண்டும்.நன்றி.

சக்தி கல்வி மையம் said...

நன்றி ஆபிசர் ..
அறிமுகத்திற்கு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான கண்டுபிடிப்பு ஆப்பீசர், அவர் இதை மார்க்கெட்டிங் பண்ண ஏதாவது செய்திருக்கிறாரா?

டக்கால்டி said...

Nalla Thagaval...Pagirthalukku nandri...

Rathnavel Natarajan said...

நன்கு ரசித்தோம்.
வாழ்த்துக்கள்.

ரா: அரசகுமாரன் said...

அருமையான பதிவு
இதையும் பார்க்கவும்
http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html

erodethangadurai said...

நல்ல கண்டு பிடிப்பு ... ! வாழ்த்துக்கள் உங்களுக்கும் திரு. சங்கரநாராயணன் அவர்களுக்கும் . ! பதிவர் சந்திப்பு வீடியோ அருமை

Thangasivam said...

உபயோகமான கண்டுபிடிப்பு

J.P Josephine Baba said...

பயனுள்ள கட்டுரை வாழ்த்துக்கள் சகோதரா!

Unknown said...

முயற்ச்சி இருந்தால் கல்வி அதற்க்கு தடையல்ல. இன்னும் நிறைய சாதித்து வாழ்க்கையில் பெரிய அளவில் வளம்பெற வாழ்த்துக்கள்.