இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday, 30 July, 2011

இந்தியாவில் தீவிரமடையும் உணவு பாதுகாப்பு சட்ட அமலாக்கம்.

                      உணவு பொருள்களில் கலப்படம் செய்யப்படுவதை முற்றிலும் ஒழித்திட, மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 05.08.2011ல், இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு வருகிறது. அன்று, இந்தியா முழுவதிலுமுள்ள உணவு ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்களாக அறிவிக்கப்படுவார்கள். 

                       உணவு மற்றும் மருந்து கட்டுபாடு ஆகிய இரு முக்கிய துறைகள் உணவு பாதுகாப்பு ஆணையரின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, சில உணவு பொருட்களை, மருந்துப் பொருட்களென்றும், சில மருந்து பொருட்களை, உணவு பொருள் என்றும் எண்ணி, இரு துறை சார்ந்த அலுவலர்களும்(உணவு ஆய்வாளர் & மருந்து ஆய்வாளர்), தத்தம் துறை சாராதது என்றெண்ணி விட்டு வைத்த பொருள்களும், கலப்படத்தை ஆய்வு செய்வதிலிருந்து இனி தப்பாது.
                                       அரசிற்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில், நாம் அனைவரும் நம் கடமையை உணர்ந்து செயல்பட்டால், அது உணவென்றாலும் சரி, மருந்தென்றாலும் சரி, கலப்படத்தை கண்களில் படாமல் ஒழித்தே விடலாம்.
Follow FOODNELLAI on Twitter

22 comments:

tamilvaasi said...

முதல் வருகை

tamilvaasi said...

கலப்படத்தை முற்றிலும் ஒழிக்க நாமும் ஒத்துழைக்க வேண்டும்.

tamilvaasi said...

ஆபீச்சர்..... திரட்டியில் இணைக்காமல் ரைடுக்கு போயிட்டாரா?

Unknown said...

ஆபீசர் ரைடுக்கு போயிட்டார்!

tamilvaasi said...

எல்லா திரட்டியிலும் இனச்சுட்டேன் ஆபீச்சர்...

Unknown said...

அண்ணே கலப்படம் ஒழியனும்...அதுக்கு எல்லோரும் கலந்து கட்டி வுழைக்கணும்!

உணவு உலகம் said...

Sorry friends, certain technical problems. Meet u all later.

Unknown said...

மத்த விசயம் மாதிரி இல்ல இது.உணவு.குழந்தைகளும் வயதானவர்களும் சாப்பிடும் உணவில் இப்படி அநியாயம் பண்றாங்களே

கூடல் பாலா said...

தேவையான சட்டம் ...சரியாக செயல் படுத்தப்பட்டால் மக்களுக்கு மிக்க நன்மையுடையது ...

குணசேகரன்... said...

மிக மிக தேவையான சட்டம்..யார் யார் மாட்டப் போறாங்களோ??

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உணர்ந்து செயல்படுவோம்...
தேவையான சட்டம்...

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
நன்றி.

Kousalya Raj said...

முக்கியமான சட்டம்...ஆவலாக எதிர்பார்கிறேன்.

செங்கோவி said...

நேத்தும் இதானே எழுதி இருந்தீங்க?..ஒரே குழப்பமா இருக்கே..

! சிவகுமார் ! said...

முக்கியமான தகவல். நன்றி!

நிரூபன் said...

வரவேற்கப் பட வேண்டிய விடயம் ஆப்பிசர், நாட்டிற்கும், உடல் நலத்திற்கும், சுகாதாரத்திற்கும் நன்மையளிக்கும் திட்டம்.
தகவற் பகிர்விற்கு நன்றி.

erodethangadurai said...

நல்ல திட்டம் தான், இதை சரியாக அரசும் நாமும் பயன்படுத்த வேண்டும். வாழ்த்துக்கள் ஆபீசர்....!

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி said...

நேத்தும் இதானே எழுதி இருந்தீங்க?..ஒரே குழப்பமா இருக்கே..


ந்நாளைக்கும் இதான் எழுதுவார் ஹி ஹி

அ. வேல்முருகன் said...

சட்டம் இருக்கிறது. செயலாக்கதான் அதிகாரிகள் தவறி விடுகிறார்கள். நீங்களே மேற்சொன்னவாறு எனது வரம்புக்குட்பட்டதா? என்று

செயல்படுத்தும்போதும் எதிர்நோக்கும் வினைகள் .........

அதையும் தாண்டி சில அதிகாரிகள் இருக்கதான் செய்கிறார்கள். எனது கடமை என்ற உணர்வோடு தங்களைபோல்

மக்கள்தான் அவர்களுக்கு ஆதரவு
உங்களுக்கு என் ஆதரவு

செய்திக்கு நன்றி

sakthi said...

we are very eager to work under fssai and to follow your advisories.thank you.

Thangasivam said...

thank you sir

vetrivel dindigul said...

eppa pa list announce pannuvanga?
nenga epa than net la viduveenga