இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 25 August, 2011

புகையிலை போடு, பூமிக்குப் புண்ணியம் தேடு!

                
புகையிலைப் பழக்கம் சிலரை மட்டுமே அடிமையாக்கி வைத்திருந்த காலம் மாறி, புகையிலைப் பழகா இளம் சந்ததியினரே இல்லையென்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புகை - பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் நிற்பவர்களுக்கும் பகைதான்.
                          
புகை பிடிக்கும் பழக்கத்தால், நாள்தோறும்  இரண்டாயிரத்து ஐநூறு பேர் இறப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்.  ஆறு விநாடிக்கு ஒருவர் புகையிலையின் புண்ணியத்தால், பூமியைவிட்டே செல்கின்றனர். மக்கள்தொகை பெருக்கம் மனம் கலங்க செய்கிறதென்றால், புகையிலைப் பழக்கம், பல உயிகளைப் பலி வாங்கி, பூமிக்குப் புண்ணியம் தேடிக்கொடுக்கின்றது. 
                                       புகையிலை என்றதும் நம் நினைவிற்கு வருவது, சிகரெட் என்ற ஒன்றுதான். ஆனால், ’புகையில்லாப் புகையிலை’யின்  பயன்பாடு சத்தமின்றி நம்  சந்ததியை எதிர்த்து, யுத்தம் ஒன்றைத் துவக்கிவிட்டது. இளைய சமுதாயத்தினர் மத்தியில், ஸ்டைலிற்காக  ஆரம்பமாகும் இப்பழக்கம், நாளடைவில் நம்மை அடிமையாக்கி,  இது இல்லையென்றால், இனி உயிர் வாழப்போவதில்லையென்ற விரக்தி மனப்பான்மைக்கு வித்திடுகின்றது. 
ஆண் பெண் அடிமைகள்:  
                         சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஆண்களுக்கே உரியது என்று மட்டும் எண்ணிட வேண்டாம். 51 சதவிகித ஆண்கள் புகை பிடித்தலுக்கு அடிமை என்றால், 11 சத்விகித பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையானவர்களே. பத்து வயதிற்குள், புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் 37 சதவிகிதம் பேர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 55 சதவிகித இளைஞர்களும், 32 சதவிகித இளைஞிகளும் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.
                           ஒரு சிகரெட்டில், நான்காயிரம் வேதிப்பொருட்கள் உள்ளன. அதில் நாற்பத்திமூன்று, புற்று நோயை உருவாக்கும் ஆற்றல் படைத்தவை. ஆண்டொன்றில், அறுபது லட்சம் பேர், மெல்லும் புகையிலையினாலும், புகைக்கும் சிகரெட்டினாலும் உயிர் துறக்கின்றனர். அடுத்த இருபது ஆண்டுகளில், இது ஒரு கோடியாகுமென்று உலக சுகாதார நிறுவனத்தால்,உத்திரவாதமளிக்கப்படுகின்றது.  
                               புகை பிடிக்கும் சிலர் கொஞ்சம், கொஞ்சமாக அந்த பழக்கத்தை நிறுத்தி வருவதாகச் சொல்வர். இது தவறு. நிறுத்த விழைந்து விட்டால், உடனடியாக நிறுத்திவிட வேண்டும். பக்க விளைவுகள் ஏற்படாது.  
நிறுத்துவதால் விளையும் நன்மைகள்

  • ரத்த அழுத்தம் சீரடையும்.
  • இருதய துடிப்பு சீரடையும்.
  • இரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவு சீராகும்.
  • இரத்தத்தில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும்.
  • நுரையீரல் சுத்தமடைகிறது.
  • உடலிலுள்ள நிக்கோடின் வெளியேறும்.
  • சுவைக்கும், நுகரும் திறன் கூடும்.
  • நுரையீரலின் செயல்பாடு அதிகரிக்கும். 
    சட்டம் தன் கடமையை செய்யும்:
                           புகைக்கும் புகையிலை மட்டுமல்ல மெல்லும் புகையிலை பயன்பாட்டைக் குறைத்திடவும், எச்சரிக்கை வாசகங்கள் சிகரெட் பாக்கெட்கள் மீதும், புகையிலை பாக்கெட்கள் மீது தேள் படங்களைப் போடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ந்தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு, புகையிலையின் பாதிப்புகள் எடுத்துரைக்கப்படுகின்றது. இருந்தும் என்ன, திருந்தும் மனம்தான் வேண்டும்.
    என்றும் அன்புடன்,
    காந்திமதி சங்கரலிங்கம்.
    Follow FOODNELLAI on Twitter

    44 comments:

    உணவு உலகம் said...

    தமிழ்மணம் இணைப்பு ப்ளீஸ்.

    Unknown said...

    தேவையான பதிவு!!!நிறுத்துங்கள் புகைப்பதை!!

    Unknown said...

    புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.

    இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்

    - குழந்தைகள் நல மருத்துவர்கள் மாநாட்டில் ஒரு குதூகல உரை.
    - பதிவுலகில் புதிர் போட்டி-புத்திசாலிகளுக்கு மட்டும்.
    - பெண் சிசுக்களைக் கொல்லும் பேய்கள்.
    - இளம் இயக்குநருடன் ஒரு இனிய சந்திப்பு
    - நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    சன்னலை மூடு

    உணவு உலகம் said...

    நன்றி சகோ.

    Unknown said...

    உங்கள் விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!

    தினேஷ்குமார் said...

    இன்றைய சமூகத்திற்க்கு தேவையான பதிவு பகிர்வுக்கு நன்றி சார்..

    நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    விரிவான அலசல் .விழிப்புணர்வு பதிவு .வாழ்த்துக்கள் .

    settaikkaran said...

    ஹிஹி! புகைபிடிக்கிறதைப் பத்தி நான் பேசுறது விஜய் மல்லையா ’குடி குடியைக் கெடுக்கும்,’னு சொல்லுற மாதிரி இருக்குமுங்க! அப்படியே ’எஸ்’ ஆயிடறேன். :-)

    J.P Josephine Baba said...

    மிகவும் பயனுள்ள கட்டுரை. பகிர்வுக்கு நன்றி சகோதரா!

    இராஜராஜேஸ்வரி said...

    ஆறு விநாடிக்கு ஒருவர் புகையிலையின் புண்ணியத்தால், பூமியைவிட்டே செல்கின்றனர்.//

    விழிப்புணர்வு பகிர்வு.

    Chitra said...

    விழிப்புணர்வு பதிவு.

    இம்சைஅரசன் பாபு.. said...

    ஹையோ ..ஹையோ .....

    இம்சைஅரசன் பாபு.. said...

    நான் வரலை இந்த ஆட்டத்துக்கு ...

    Krishna said...

    Good post.
    I need answer for "How to stop the smoking and other tobacco?" by medical and mental way.
    Thank you. I think next post may be the answer.

    Unknown said...

    Good Post Mam

    Unknown said...

    மக்கள் தொகை குறைப்பில் புகையிலையின் தொண்டு அளப்பறியது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்.................. அது போலதான் இதுவும்.

    Anonymous said...

    சார் இப்படி தலைப்பு வெச்சிருக்காரேன்னு மிரண்டு போய் வந்தேன்...அசரடிக்கும் உண்மைகள்

    Unknown said...

    தலைப்பை பார்த்து கொஞ்சம் பயந்துட்டேன், என்னடா நம்ம ஆபிசர் புகையிலைய போட சொல்றாரேன்னு..

    அப்புறம் பார்த்தா ஆபிசெரம்மா எழுதி இருக்காங்க, நல்ல விஷயம் தான்

    நல்லா இருக்கு

    sathishsangkavi.blogspot.com said...

    சார்., இந்த பதிவ படிக்கும் போது சிகரெட் குடிப்பவனுக்கு பாதி உயிர் போயிடும்....

    அனைவரும் அறிய வேண்டிய பதிவு....

    சாந்தி மாரியப்பன் said...

    சிகரெட் பிடிக்கிறவங்களை விட அதன் புகையை சுவாசிக்கும் மத்தவங்களுக்குத்தான் அதன் பாதிப்பு அதிகம்ன்னு சொல்றாங்க.

    ஆயிரம்தான் தேள் படங்களைப் போட்டாலும், அவரவர் மனசு வெச்சாத்தான் திருந்துவாங்க.

    நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

    துபாய் ராஜா said...

    வணக்கம் சித்தி. அருமையான பதிவு. என் அருகில் தெரிந்தவர், தெரியாதவர் யார் புகை பிடித்தாலும் இதற்கு பதில் ஏதாவது ஒரு பழம் வாங்கி சாப்பிடலாமே என்பேன்.

    தமிழ்வாசி பிரகாஷ் said...

    சிகரெட் பிடிக்றவங்களுக்கு இது உரைக்கனும்...

    கூடல் பாலா said...

    இதோ ...மறு படியும் வந்துட்டேன் ....போராட்டத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் ...

    Prabu Krishna said...

    நல்ல பதிவு அம்மா...

    ஆனால் அரசாங்கம் நினைத்தால் இதை தடை செய்து, இதையே தொழிலாய் கொண்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும்.

    எல்லாம் அரசியல்.

    Unknown said...

    அவசியமான பதிவு பாஸ்!

    aotspr said...

    விழிப்புணர்வு தகவல்.
    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    சி.பி.செந்தில்குமார் said...

    good morning officer hi hi

    virutcham said...

    பள்ளி மாணவர்களை இது எப்படி கவருகிறது? விரலிடுக்கில் நீட்டிக் கொண்டு புகை விட்டு மாட்டிக் கொள்ள வேண்டியதில்லை. வாயில் புகையிலை குதப்பி துப்ப வேண்டியதில்லை. மறைவிடங்கள் தேட வேண்டியதில்லை. ரொம்ப சுலபம். விலை ஐந்தே ரூபாய். சின்ன சாட்ஷே. பத்து சின்ன வில்லைகள். மேல் உதட்டில் ஒன்றை இடுக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எந்த சந்தேகமும் வராமல் வகுப்பில் பாடம் கவனிக்கும் மாணவன் போல் அமர்ந்து கொள்ள முடியும்.
    http://www.virutcham.com/2011/07/பள்ளி-பள்ளி-மாணவர்களை-போ/

    சென்னை பித்தன் said...

    இவர்களெல்லாம் அடையார் கேன்சர் ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கிருக்கும் படங்களையும் அங்கு வரும் நோயாளிகளையும் பார்த்த் விட்டு வர வேண்டும்.
    நன்று!

    S.முத்துவேல் said...

    அருமையான தகவல் நன்றி....

    செங்கோவி said...

    நானும் என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ரொம்ப நாளா இதைச் சொல்றேன்..கேட்க மாட்டேங்கிறாங்களே..

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    மிகவும் தேவையான பதிவு. இன்னும் விழிப்புணர்ச்சி சென்றடைய வேண்டியது அதிகம்.......

    சக்தி கல்வி மையம் said...

    மிகவும் அவசியமான பதிவு . விழிப்புணர்வு பதிவு ..
    டெம்ப்ளேட் சூப்பர்

    Unknown said...
    This comment has been removed by the author.
    கோகுல் said...

    புகை - பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் நிற்பவர்களுக்கும் பகைதான்./

    உரியவர்கள் உணர வேண்டும்!

    Anonymous said...

    மிகவும் பயனுள்ள கட்டுரை... பகிர்வுக்கு நன்றி ...

    MANO நாஞ்சில் மனோ said...

    சரியான விழிப்புணர்வு பதிவு.....!!!

    MANO நாஞ்சில் மனோ said...

    எலேய் சிகரெட் குடிக்கிற பசங்களா ஜாக்கிரதை, ஆபீசர்னி கையில பெல்ட் கைமாறி இருக்குலேய்.....!

    செல்ல நாய்க்குட்டி மனசு said...

    கல்லூரி காலங்களில் பார்வதி தியேட்டரில் சேலை முந்தானையால் வாயையும் மூக்கையும் சேர்த்து பொத்திய படியே படம் பார்த்த நினைவு. இன்று புகை பிடித்தல் எவ்வளவோ குறைந்திருக்கிறது. மக்கள் சட்டத்திற்கு மட்டும் தான் பயப்படுகிறார்கள். சட்டத்திற்கு பயப்படாத சிலர் இன்னும் புகைத்து தான் உடலை கெடுத்தபடியே

    rajamelaiyur said...

    இன்று என் வலையில் ..

    பல்சுவை வலைதளம் விருது

    Selvaraj said...

    அய்யா, இங்க்லாந்தில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக புகைபிடிக்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன! அதை கண்கூடாகவே பார்க்கிறோம்.

    நிரூபன் said...

    வணக்கம் பாஸ்,

    ஓட்டுப் போட்டேன், விரிவான கருத்துக்களோடு பின்னர் வருகிறேன்.
    மனசிற்கு கொஞ்சம் கஸ்டமா இருக்கு.வணக்கம் பாஸ்,

    Sivakumar said...

    ஆபீசர் சார். அலமாரில பதுக்கி வச்சிருக்குற சிகரட் பாக்கெட்டை அண்ணிகிட்ட குடுத்துருங்க!!

    அம்பாளடியாள் said...

    பயனுள்ள நல்ல செய்திக்கு வாழ்த்தோடுகூடிய ஓட்டும் போட்டாச்சு சார்.....