தங்கத்தின் விலை தறிகெட்டுப் பறக்குது. தங்கம் என்ற பெயரை, தாளில் எழுதி வைத்துத்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை, தாலிக்குத்தங்கமென்று வாங்க நினைக்கும் காலம் மாறி, தங்கமென்று பெண் பிள்ளைகளுக்கு பெயர்சூட்டி மட்டுமே மகிழவேண்டும் போல! சராசரி இந்திய்க் குடும்பங்கள் நிலையென்ன?பரிதாபம்தான்.
தங்கத்தில் செய்யப்படும் கலப்படம்தான் இப்போதைய ஹாட் சப்ஜக்ட். அதான், சுத்தத் தங்கத்தை திடப்படுத்த, செம்பு போன்ற உலோகங்கள் கலப்பாங்களே, அது எங்களுக்குத் தெரியாதான்னு கேட்டீங்கன்னா, இப்ப சொல்லப்போற விஷயத்தை படிச்சிட்டு சொல்லுங்க பார்ப்போம்!
2005ம் ஆண்டின் இறுதியில், ஒரு சவரனுக்கு ரூபாய் ஐந்தாயிரமாய் இருந்த நிலை மாறி, 2008ல்,எட்டாயிரம் ஆனது. 2010ல், பனிரெண்டாயிரத்தில் தொடங்கி, பதினான்காயிரம் வரை சென்றது. இன்றோ, தங்கத்தின் விலை, பல மடங்காகி, ஒரு கிராம் தங்கமே ரூபாய் மூன்றாயிரத்தை தொட முனைப்புடன் நிற்கிறது.
கேரளாவே இந்த விஷயத்திலும் விழித்துக்கொண்டது முதலில். கொச்சியை சேர்ந்த சங்கரமேனன் என்பவர், கேரள உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பிய இ-மெயில் ஒன்றை தாமாகவே முன் வந்து வழ்க்காக எடுத்துக்கொண்ட நீதிமன்றம், “தங்க நகைகளில், ருதேனியம், இரிடியம் போன்ற அளவுக்கதிகமாக சேர்க்கப்படுவதாகவும், அதில் அடங்கியுள்ள பொருட்கள், புற்று நோய்கள் உள்ளிட்ட நோய்கள் உருவாக காரணமாகிறதெனவும், சில சான்றுகள் சமர்பிக்கப்பட்டிருப்பதால், தங்க நகைகளின் தரம் நிர்ணயம் செய்யும், ‘பியூரோ ஆஃப் இண்டியன் ஸ்டாண்டர்ட்ஸ்’ (BIS) நிறுவனத்தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, நீதியரசர்கள் பர்க்கத் அலி, பஷீர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, விஞ்ஞானி உண்ணி கிருஷ்ணன், உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜாராகி, தங்க நகை தயாரிப்பில் ப்யன்படுத்தப்படும் உலோகக்கலவை, அதில் கலக்கப்படும் மூலப்பொருட்கள் மற்றும் அதில் தவிர்க்க வேண்டிய பொருட்கள் குறித்து அரசு சில சட்ட திட்டங்கள் வகுத்து அதன் மூலம் தங்க நகை தயாரிப்பில் சில கட்டுபாடுகள் கொண்டு வரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்து அவர் சொன்ன செய்திதான், தங்க நகை பிரியர்களை தலை கிறு கிறுக்க வைத்துள்ளது.
இப்பத்தான் கம்யூட்டரெல்லாம் வைச்சு, தங்கத்தின் தரத்தை நாமே கண்டுபிடிச்சுக்கலாம்னு, கடை கடையா விளம்பரம் செய்றாங்களேன்னு கேட்கலாம். இந்தக் கலப்படம், கண்டுபிடிப்பது கடினம். இரிடியம் மற்றும் ருதேனியம் போன்றவற்றை சுத்தத் தங்கத்தில் கலப்படம் செய்யும்போது, அவை தங்கதின் ஓர் அங்கமாக மாறிவிடுகிறது. செம்பைப்போல் இவற்றைப் பிரித்தறிய இயலாது. செம்பு சேர்த்தவுடன் தங்கத்தின் திடத்தன்மை அதிகரிக்கும். அது வேண்டாமென்றால், தங்கத்தை உருக்கி புடம் போட்டால், செம்பு பிரிந்துவிடும். ஆனால், நாம பேசுற இரிடியமும், ருதேனியமும் தங்கத்தில் ஒரு அங்கமாகி, தனியே பிரித்தறிய முடியாமல் செய்து, தங்கத்தின் தரத்தைக் குறைக்கின்றது.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், மருத்துவர்கள் சிலரோ, இரிடியம், ருதேனியம் கலந்துள்ள தங்க நகைகள் அணிவதால், உடல் நலம் பாதிக்கும் என்கிறனர். மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் திரு,கே.வி.தாமஸ், தாம் கலந்து கொண்ட விழா ஒன்றில், இரிடியம் போன்ற உடலிற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய மூலப்பொருட்கள் தங்கத்தில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதெனக் கூறியுள்ளார்.
டிஸ்கி: அண்மையில், குமுதம் ரிப்போர்டரில் நான் படித்த, ‘தங்கம் அணிந்தால் கேன்சர்’ என்ற கட்டுரை எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பினால் விளைந்த பகிர்வு. நன்றி:குமுதம் ரிப்போர்டர்.அதனைத்தொடர்ந்து, விஞ்ஞானி உண்ணி கிருஷ்ணன், உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜாராகி, தங்க நகை தயாரிப்பில் ப்யன்படுத்தப்படும் உலோகக்கலவை, அதில் கலக்கப்படும் மூலப்பொருட்கள் மற்றும் அதில் தவிர்க்க வேண்டிய பொருட்கள் குறித்து அரசு சில சட்ட திட்டங்கள் வகுத்து அதன் மூலம் தங்க நகை தயாரிப்பில் சில கட்டுபாடுகள் கொண்டு வரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்து அவர் சொன்ன செய்திதான், தங்க நகை பிரியர்களை தலை கிறு கிறுக்க வைத்துள்ளது.
“நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில்தான், ஹால்மார்க் முத்திரையைப் பதிக்கிறார்களே தவிர அது எங்களது துறைக்கு கட்டுப்பட்டது அல்ல” என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார். ஆனால், நகைக்கடை உரிமையாளர் ஒருவரோ, ஹால்மார்க் தங்க நகைகளில்,அப்படிக் கலப்படம் சாத்தியமில்லை எனவும்,ஹால்மார்க் தங்கநகைகள், அரசுத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம், ஆய்வு செய்யப்படுவதாகவும், அவற்றில் ருதேனியமோ, இரிடியமோ கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அந்த நகைக்கடை மற்றும் ஹால்மார்க் மையத்தின் உரிமம் ரத்து செய்துவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், மருத்துவர்கள் சிலரோ, இரிடியம், ருதேனியம் கலந்துள்ள தங்க நகைகள் அணிவதால், உடல் நலம் பாதிக்கும் என்கிறனர். மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் திரு,கே.வி.தாமஸ், தாம் கலந்து கொண்ட விழா ஒன்றில், இரிடியம் போன்ற உடலிற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய மூலப்பொருட்கள் தங்கத்தில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதெனக் கூறியுள்ளார்.
”எப்படியோ போங்கப்பா, தங்கம் விலை எப்ப இறங்குமப்பா?” என்கிறீர்களா?
அன்புடன்,
காந்திமதிசங்கரலிங்கம்.

40 comments:
தங்கமான பதிவு .
தங்கமான எச்சரிக்கைப் பதிவு.
ஐ ஜாலி, எங்கண்ணனும் நம்ம C P மேட்டர்ல ஐக்கியம் ஆகிட்டார்
பொன்னான பகிர்வு! :-)
பல தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றிங்க அண்ணே!
குட் போஸ்ட் ..உண்மை தான் நானும் கேள்வி பட்டு இருக்கிறேன்
நல்ல விழிப்புணர்வு பதிவு ...தங்க மோகம் குறையாத வரை இந்த பித்தலாட்டத்தை தடுக்க முடியாது....
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு
ஸலாம் சகோ.FOOD.
விழிப்புணர்வூட்டும் பதிவு. நன்றி.
ஆக,
இனி...
"மின்னுவதெல்லாம் இரிடியமும் ருதேனியமும்..?"
தங்கத்தின் விலை தறிகெட்டுப் பறக்குது. தங்கம் என்ற பெயரை, தாளில் எழுதி வைத்துத்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை, தாலிக்குத்தங்கமென்று வாங்க நினைக்கும் காலம் மாறி, தங்கமென்று பெண் பிள்ளைகளுக்கு பெயர்சூட்டி மட்டுமே மகிழவேண்டும் போல! சராசரி இந்திய்க் குடும்பங்கள் நிலையென்ன?பரிதாபம்தான்.
உள்ள வரதட்சணைக் கொடுமை போதாதென்று இப்படித் தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டு போனால் ஏழைப் பெண்களின் நிலை என்னவாகும் ..!!!
பரிதாபம்தான் .மிக்க நன்றி சகோ பயனுள்ள பகிர்வுக்கு ....
இதனால் இந்த தேவையில்லாத தங்க மோகம் குறைந்தால் சரி....
செம காட்ஸிலியான பதிவு...
வாங்கு திறனும் மக்களின் தேவை குறைத்துக் கொள்ளும் வரை தங்கத்தின் விலை குறை வாய்ப்பில்லை....
கலப்படம் என்பதிநாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் நம் கண்களை ஏமாற்றிவிடுவார்கள்...
அனைவரும் தெரிந்து கொள்ள ுவேண்டிய விஷயங்கள...
வாழ்த்துக்கள்..தல...
இதுக்குதான் நான் விளம்பரத்தில் கூட பார்ப்பது இல்லை. ஹி ஹி ஹி
ஆனால் நல்ல விழிப்புணர்வு. தங்கம் தங்கம்னு அலையறவங்க இதை புரிஞ்சா சரி.
பொன்னகை என்றால் பெண்களுக்கு புன்னகை வந்த காலம் போய் இப்போழுது பீதிதான் மிஞ்சியிருக்கிறது விலையாலும் நீங்க சொன்னமாதிரி வணிகர்களின் செயலாலும்.
தங்கமான வைரமான முத்தான பொண்ணான பதிவு
அசத்தல் நண்பா
எதுல வேணாலும் கலப்படம் பண்ணலாம்னு தெரியுது சார் :)
ஆனா BIS க்கு என்ன விரிவாக்கம்னு தெரிஞ்சிக்கிட்டேன். நன்றி :)
//“நகைக்கடை உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில்தான், ஹால்மார்க் முத்திரையைப் பதிக்கிறார்களே தவிர அது எங்களது துறைக்கு கட்டுப்பட்டது அல்ல” என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார். ஆனால், நகைக்கடை உரிமையாளர் ஒருவரோ, ஹால்மார்க் தங்க நகைகளில்,அப்படிக் கலப்படம் சாத்தியமில்லை எனவும்,ஹால்மார்க் தங்கநகைகள், அரசுத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம், ஆய்வு செய்யப்படுவதாகவும், அவற்றில் ருதேனியமோ, இரிடியமோ கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அந்த நகைக்கடை மற்றும் ஹால்மார்க் மையத்தின் உரிமம் ரத்து செய்துவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.//
//நாம பேசுற இரிடியமும், ருதேனியமும் தங்கத்தில் ஒரு அங்கமாகி, தனியே பிரித்தறிய முடியாமல் செய்து, தங்கத்தின் தரத்தைக் குறைக்கின்றது.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், மருத்துவர்கள் சிலரோ, இரிடியம், ருதேனியம் கலந்துள்ள தங்க நகைகள் அணிவதால், உடல் நலம் பாதிக்கும் என்கிறனர். மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் திரு,கே.வி.தாமஸ், தாம் கலந்து கொண்ட விழா ஒன்றில், இரிடியம் போன்ற உடலிற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய மூலப்பொருட்கள் தங்கத்தில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்க, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதெனக் கூறியுள்ளார்.//
அறியாத தகவல்களை அறியக் கொடுத்தமைக்கு நன்றி சித்தி.
”எப்படியோ போங்கப்பா, தங்கம் விலை எப்ப இறங்குமப்பா?” என்கிறீர்களா?//
அய்யய்யோ விலை இறங்கிரக்கூடாதுன்னு நான் வேண்டிகிட்டு இருக்கேன்...!!!
தங்கமான தங்கத்த தகவல்கள், நன்றி ஆபீசர்னி.......
விக்கியுலகம் said...
பல தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றிங்க அண்ணே!//
நீ பதிவை படிச்சியா ராஸ்கல், பதிவு போட்டுருக்கிறது திருமதி ஆபீசர்....
நன்றி ஆபீசர்......
நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை!
என்ன கலந்து இருந்தாலும் ஒரு கடையில் நூறு ரூபாய் குறைவு என்றால் அங்கு தானே செல்கிறோம்.!
எப்படியோ விலை குறைந்தால் சரி
பிற்பாடு பயன்படும்
நன்றி பகிர்வுக்கு
அம்மாவிடம் இருந்து ஒரு விழிப்புணர்வு பதிவு...
இப்பிடி பயமுறுத்துனாலாவது தங்கத்தின் மேல் இருக்கும் மோகம் குறையுமா பார்க்கலாம்...
அன்புடன்,
காந்திமதிசங்கரலிங்கம்.
//
அதான் தங்கமான பதிவு...
தங்கமான வலைபூ வில்
பூத்த தங்கமான பூ ...
வாழ்த்துக்கள்
யானைக்குட்டி
அடப்பாவிங்களா இத கூட விடலியா இது தெரியாம என் தான் இந்த தங்க மோகத்தில் அடிமை பட்டு கிடக்கிரார்களோ மக்கள்
தங்கத்தைப் பற்றி தகவல் தந்த காந்திமதிக்கு நல்வாழ்த்துக்கள் !
தங்கம் பற்றிய முக்கியமான பகிர்வு.
நன்றி.
நல்ல பயனுள்ள பதிவு.
நன்றி.
ஆனாலும் நம்மாட்கள் தங்கத்தை விட மாட்டாங்க..
வந்து கருத்துக்கள் அளித்த, அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
அடடா ,ஹால் மார்க் ரொம்ப நல்ல மார்க்குன்னு,வாங்கி தொலசேனே
பெத்தவங்க கட்டி வச்ச பொண்ண எனக்கு பிடிக்கல - கார்த்திக் - பர பர பேட்டி
both are radioactive elements,அதனால் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும்...
very useful post
ஆச்சர்ய மாக இருக்கிறது..
தங்கத்துல ஏகப்பட்ட வேலை நடக்கும்போல
ஆப்பிசர்,
எனக்கு இந்த ஹாஸ்மார்க் முத்திரை பற்றிய தகவல் புதிதாக இருக்கிறது.
தங்கத்தில் இடம் பெறும் கலப்படம் பற்றிய அருமையான விளக்கப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.
kdm endru, irudium kalandu, idiyai tooki pootuvitanar
Post a Comment