வாரம் முழுவதும் வேலை. வார இறுதியில் ஒரு டே- அவுட். அதிக வேலைப்பளு, உடலையும் , மனதையும் ஒரு சேர களைக்க வைத்த சனிக்கிழமை(01.10.11) மாலை. சட்டென்று எடுத்த முடிவில், திட்டமிடாப் பயணமாய் குடும்பத்துடன் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டேன்.(பதிவர் விஜயன் மன்னிப்பாராக-இது திடீர் பயணமென்பதால், சொல்லவும்,சந்திக்கவும் இயவில்லை)
நெல்லை நண்பர் திரு.சங்கர் அவர்கள், விவேகானந்தா கேந்திரத்தில் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார். திரு.சங்கர் ஒரு இயற்கை விவசாயப் பிரியர். இவர் பற்றி ஒரு தனிப்பதிவே எழுதலாம். சொந்த ஊரில், இயற்கை உரமிட்டு, பயிர்களை வளர்ப்பதுடன், இயற்கை உரமிட்டு வளர்த்த புல்லை அளித்து, பல பசுக்களையும் பேணிக்காத்து வருகிறார்.
விவேகானந்தா கேந்திரத்தில் எங்க வீட்டு வாண்டு-ஸ்ரீ சரண் |
மறுநாள் காலை, மனதிற்கு இதமாய், மலர்ந்திட்டது பொழுது. அதிகாலையில் எழும்பி, சூரியோதயம் காண, சுறுசுறுப்பாய்க் கிளம்பினோம். கேந்திரத்தின் உள்ளேயே, சூரியோதயம் காணத் தனி இடம் உள்ளது. நல்ல நடைப்பயிற்சியாயும் அமைந்தது. நடந்து போகும்போது, அந்த இயற்கை சூழலை ரசித்துச் சென்றோம். செல்லும் வழியிலேயே, மயில்களின் சரணாலயம், மனங்களைக் கவர்ந்தது.
அதிகாலை வேளை -ஆர்ப்பரிக்கும் கடலலை
|
சூர்யோதயத்தை காமிராவின் கண்களில் கவர்ந்து வந்து பகிர்ந்துள்ளேன். பார்த்து ரசியுங்கள். கேந்திரம் பற்றி இங்கு சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். இயற்கை எழில் மாறா சூழலில், ஏறக்குறைய 150 ஏக்கரில் அமைந்துள்ளது இந்த கேந்திரம். நகரின் நடுவில்,கடலின் கரையில், வனங்கள் சூழ்ந்த குடியிருப்புகள், மன இறுக்கங்களைத் தளர்த்திடும்.
சூர்யோதய காலம் |
மேகங்களின் பிண்ணனியில் சூரியன் |
கேந்திரத்தின் உள்ளேயே, மனதிற்கு மட்டுமல்ல, வயிற்றிற்கும் வகையாய் அளித்திட, நியாய விலை உணவகம் உண்டு. சூர்யோதயம் பார்த்து வந்து, சூடாய் ஒரு கப் காஃபி. சோம்பலெல்லாம் பறந்து போக, இதமாய் ஒரு குளியல். சுவையான காலை உணவருந்திவிட்டு, விவேகானந்தர் பாறைக்கு காலை நேரத்தில் ஒரு கடல்வழிப் பயணம்.
சிங்கத்தின் அருகே ஒரு தங்கம்
தொடரும் . . .
|

43 comments:
இனிய காலை வணக்கம் (/\)
அண்ணே குடும்பத்துடன் குதூகல டூர் போல..என்சாய்...நீங்க பார்த்ததை எங்க கண்களுக்கு கேமரா வடிவில் அளித்ததுக்கு நன்றி....வாழ்த்துக்கள்!
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!
-----சூரியோதயப் படங்களைப் பார்த்ததும் தோன்றியது.
சுட்டிப்பையனுக்கு சுற்றிப் போடுங்க! செம கியூட்! :-)
அருமையான பயணம்.
தொடரும் பகிர்வுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
பகிர்வுக்கு நன்றி .
ம்ம ...எங்க ஊருக்கு போய் இருக்கீங்க ....
வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க.வாரம் ரெண்டு நாள் இயற்கையை ரசிக்க,
கொண்டாடுங்க சார்!
சிங்கத்தின் அருகே ஒரு தங்கம்
சிங்கக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பகிர்வும் படங்களும். பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் சார், ஆரவாரமில்லாம அமைதியா இயற்கையை அனுபவிச்சிருக்கீங்க........!
சூர்யோதயம் படங்கள் அருமை.
சிங்கத்தின் அருகே தங்கம்.... அழகு... சுத்திப் போடுங்க.
கேந்திரத்தில் யார் வேண்டுமானாலும் போய் தங்கலாமா? அல்லது வேறெதாவது அனுமதி தேவைப்படுமா?
இனிய காலை வணக்கம் ஆப்பிசர்,
நலமா?
உங்களின் சிறு வாண்டு ரொம்ப அழகா இருக்கான்.
இயற்கை காட்சிகளை ரசித்தது மாத்திரமின்றி, நாமும் பார்த்து இன்புற வேண்டும் எனும் நோக்கில் விளக்கப் படங்களோடு அழகுறப் பதிவிட்டிருக்கிறீங்க.
ரசித்தேன்.
பயண கட்டுரை ஆபிசர்கிட்ட இருந்து நல்லா இருக்கு சார் தொடருங்க.
த.ம.12
இனிமையான வீக்கெண்ட்!
தொடருங்கள்
//சிங்கத்தின் அருகே ஒரு தங்கம்//
ஹா ஹா ஹா இதான் சூப்பர். சுத்திப் போடுங்க அப்பா ஹி ஹி ஹி
ம்... தொடருங்கள்
ஆஹா விஜயனை கூட்டிட்டு போயிருந்தால், இன்னும் அழகா இருந்துருக்கும் ஹி ஹி பாவம்...
எங்க ஊரை எங்களுக்கே சுத்தி காட்டுரீங்களா ஹா ஹா ஹா ஹா...
என்ன ஒற்றுமை...!!! இன்னைக்கு நானும் கன்னியாகுமரி பதிவுதான் போட்டுருக்கேன் ஹி ஹி...
பக்கத்தில் இருக்கும் வட்டகோட்டைக்கும் போனீங்களா???
படங்கள் எல்லாம் மனதை கொள்ளை கொள்ளுது ஆபீசர், சூப்பர்...!!!
வாண்டு ஸ்ரீ சரண், வாவ் அழகு, உங்களுக்கு நல்ல டைம் பாஸ் ஆக இருப்பான்னு நினைக்கிறேன் வாழ்த்துக்கள்.....
கேட்க்கும்போதே மனதிற்கு மகிழ்ச்சியாய் உள்ளது .நான் ஒருமுறைதான்
சென்றேன் கன்னியாகுமரிக்கு .இன்னும் ஒருமுறையேனும் அந்த வாய்ப்புக்
கிட்டாதா என்று என் மனம் ஏங்குகின்றது .உங்கள் பயண அனுபவப் பகிர்வுக்கு
மிக்க நன்றி சகோ .வாழ்த்துக்கள் .......
படங்கள் அருமை சார். பையன் செம அழகு . சேட்டைக்காரன் சொன்னதுமாதிரி சுத்திப்போடுங்க :))
படங்கள் அருமை..
சிங்கத்தின் அருகே இன்னொரு குட்டி சிங்கம்.
சூப்பர் பாஸ்! படங்கள் எல்லாம் அருமை!
ஸ்ரீ சரணுக்கு எங்களது மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.
அற்புதமான படங்கள்.
மிக்க நன்றி.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html
கன்னியாகுமரி எப்போதுமே ஒரு மகிழ்ச்சியூட்டும் இடம் ...
கன்னியாகுமரி... பார்க்க ஏற்ற இடம் ஆபீசர்... பகிர்வுக்கு நன்றி.
வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி.
அந்த வாண்டு, என் மனைவியின் மூத்த சகோதரி மகள் வழிப்பேரன்.
படங்கள் சூப்பர். நீண்ட கட்டுரைத் தொடராய் பகிர்வீர்கள் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.
போட்டோஸ் சூப்பர்.காலையில் மனதிற்கு இதமான பதிவு.. தொடருங்கள்..
எங்கள் ஊரில் நீங்கள் வந்தும் உங்களை சந்திக்கமுடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.இருந்தாலும் ஒரு போன் பண்ணியிருந்தால் நான் வந்திருப்பேன் என்பதையும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
Hi,I'm a Food-blogger from Tamilnadu and from Tirunelveli Dist.Nice to know abt ur blog Food.Luvd reading ur informative posts.Following U.
என் அருகே அச்சிறுவனை நிறுத்த உங்களுக்கு துணிவு வந்ததை பாராட்ட வேண்டும்!!
ஆ சிங்கம்.
சரண் என்னை போல அழகு
இன்று என் வலையில்
சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
சரண் என்னை போல அழகு//
ராசான்னா ராசாதான்!
சார் .....
உங்கள் பயணம் இந்த
பதிவ் மூலம்
உலக பயணம் ஆகி விட்டது .
வரலாற்றில் பதிவு பதிய பட்டது .
(ஹி !!!ஹி !!! ஒரு தொலை நோக்கு பார்வை )
அடுத்த பதிவர் திருவிழா
விவேகானந்தர் பாறை
தானோ !!!!
கலக்கல் ......
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
சார் .....
உங்கள் பயணம் இந்த
பதிவ் மூலம்
உலக பயணம் ஆகி விட்டது .
வரலாற்றில் பதிவு பதிய பட்டது .
(ஹி !!!ஹி !!! ஒரு தொலை நோக்கு பார்வை )
அடுத்த பதிவர் திருவிழா
விவேகானந்தர் பாறை
தானோ !!!!
கலக்கல் ......
வாழ்த்துக்கள்
தங்களுடன் நாங்களும் கன்யாகுமரிக்கு வந்தது போன்ற உணர்வு எழுந்தது. செல்லக்குட்டி ஸ்ரீசரணுக்கு திருஷ்டி சுற்றி போடுங்கள். அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டான்.
குட்மார்னிங்க் ஆஃபீசர்..
Post a Comment