இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday, 17 October, 2011

விவேகானந்தா கேந்திரத்தில் ஒரு நாள்.
விவேகானந்தர் கேந்திரத்திலுள்ள விவேகானந்தர் சிலை.

               முதல் பகுதி: வார இறுதியில் ஒரு டே-அவுட்.
                            முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில்,கடல் நடுவிலிருந்த பாறை மீது, சுவாமி விவேகானந்தர் 1892ல், டிசம்பர்-25,26&27 தேதிகளில், தியானத்தில் இருந்துள்ளார்.
         ஒளிமயமான இந்தியாவை உருவாக்கிட வேண்டுமென்ற உத்வேகம், அவருள் பிறந்தது இந்த இடத்தில்தான். அந்த இடத்தில், 1970ல் சுவாமி விவேகானந்தருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. அதற்கு அயராது உழைத்தவர், மானனீய ஏக்னாத்ஜி ரானடே என்பவர்.
                      நினைவிடம் அமைத்தது மட்டுமே அவருக்கு மனநிறைவைத் தரவில்லை. விவேகானந்தரின் கொள்கைகளைப் பரப்பி, ஒளிமயமான இந்தியாவை உருவாக்கிட 1971ல் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டதுதான் விவேகானந்தா கேந்திரம். கன்னியாகுமரியினை தலைமை இடமாகக்கொண்டு, இந்தியா முழுவதும் 250 கிளைகளுடன் இயங்கி வருகிறது,இந்த கேந்திரம். இதில் ஆயுள் கால உறுப்பினர்கள், முழுநேர பணியாளர்கள் எனப் பலரும் பங்கு கொண்டு, பல்வேறு முகாம்களை நடத்தி, யோகா, கிராமப்புற மேலாண்மை, கல்வி கற்பித்தல், இளைஞர் நலம் மற்றும் இளம் பெண்டிர் முன்னேற்றம் ஆகியவற்றில் உதவி வருகின்றனர். 

கேந்திர வளாகத்தில்-ஏக்நாத்ஜி சாமாதி.               விவேகானந்தர் நினைவிடமும், கேந்திரமும் அமைந்திட அயராது உழைத்திட்ட, ஏக்நாத்ஜியின் சமாதி, கேந்திரத்தின் உள்ளே நிறுவப்பட்டுள்ள விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு எதிரிலேயே இருக்கின்றது. 

வள்ளுவர் சிலை - போட்டிலிருந்து

           விவேகானந்தர் பாறையிலுள்ள நினைவிடத்தில், விவேகானந்தரின் முழு உருவ சிலை காண்பவர் கண்களைக் கொள்ளை கொள்கின்றது. அங்குள்ள தியான மண்டபத்தில், சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தால், மனதில் அமைதி வந்து குடி கொள்கிறது. அருகிலேயே, அடுத்த பாறை மீது, வான்புகழ் வள்ளுவனுக்கு, வடிவாய் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக, கப்பல் போக்குவரத்து இல்லையென்று சொல்லிவிட்டனர்.


             நாங்கள் கன்னியாகுமரி சென்ற நாளின் மற்றொரு சிறப்பு, அன்று காந்தி ஜெயந்தி என்பதே. கடற்கரையிலுள்ள காந்தி மண்டபத்தில், சரியாக நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு, காந்திஜியின் அஸ்தி கலசம் வைத்த இடத்தில், சூரிய ஒளி விழும்.  


இரவில் ஒளிரும் விவேகானந்தர் பாறை&வள்ளுவர் சிலை                                                                                                                     தொடரும் . . . . . . . 

Follow FOODNELLAI on Twitter

34 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் சீடன்

சி.பி.செந்தில்குமார் said...

ஆஃபீசர் ரெகுலரா போஸ்ட் போடற டைம் இது இல்லையே!!!!

சி.பி.செந்தில்குமார் said...

ரொம்ப சின்ன பதிவா இருக்கு, அண்ணன் 5 பதிவா இழுத்துடப்போறாரோ/அவ்வ்வ்வ்வ்வ்வ்

துபாய் ராஜா said...

படங்களும், பகிர்வும் அருமை.

siva said...

present sir..


அழகான அனுபவம்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

விக்கியுலகம் said...

அண்ணே வணக்கம்னே...அழகா சொல்லி இருக்கீங்க...அது சரிண்ணே உங்க கழுத்துல இருக்குற பாம்பு எந்த ஊருதுன்னே ஹிஹி!

Rathnavel said...

நீங்கள் கன்னியாகுமரி சென்று வந்தது மகிழ்ச்சி.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Very nice Round-up of Vivekananda Rock trip.Thanks for sharing.

சேட்டைக்காரன் said...

விரைவில் நானும் குமரியன்னையைத் தரிசிக்கப் போகிறேன். :-)

இராஜராஜேஸ்வரி said...

ஒளிமயமான இந்தியாவை உருவாக்கிட வேண்டுமென்ற உத்வேகம், அவருள் பிறந்தது இந்த இடத்தில்தான்/

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

வைரை சதிஷ் said...

அழகான அனுபவம் அழகான பகிர்வு

அமைதிச்சாரல் said...

எத்தனை தடவை விசிட் அடிச்சாலும் அலுக்காத இடமாச்சே கன்யாகுமரி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆபிசர் கவசத்தோட ரெடியா இருக்காரே....?

Prabu Krishna said...

கல்லூரி காலத்தில் சென்ற நினைவுகள் மலர்கிறது. மிக அருமையான இடம். அதுவும் எனக்கு மிகவும் பிடித்த விவேகானந்தர் வேறு இருக்கிறார்.

சே.குமார் said...

படங்களும்... பகிர்வும்... அருமை.

koodal bala said...

நம்ம ஏரியா ....

koodal bala said...

ஆபீசருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் .

சென்னை பித்தன் said...

ஒரு இனிய பகிர்வு.

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

சார் .....
உங்கள் பயணம் இந்த
பதிவ் மூலம்
உலக பயணம் ஆகி விட்டது .
வரலாற்றில் பதிவு பதிய பட்டது .
(ஹி !!!ஹி !!! ஒரு தொலை நோக்கு பார்வை )
அடுத்த பதிவர் திருவிழா
விவேகானந்தர் பாறை
தானோ !!!!
கலக்கல் ......
வாழ்த்துக்கள்

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...

சார் .....
உங்கள் பயணம் இந்த
பதிவ் மூலம்
உலக பயணம் ஆகி விட்டது .
வரலாற்றில் பதிவு பதிய பட்டது .
(ஹி !!!ஹி !!! ஒரு தொலை நோக்கு பார்வை )
அடுத்த பதிவர் திருவிழா
விவேகானந்தர் பாறை
தானோ !!!!
கலக்கல் ......
வாழ்த்துக்கள்

Cpede News said...

தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

MANO நாஞ்சில் மனோ said...

எங்கள் ஊரைப்பற்றி வாசிக்கும் போது மனது உவகை கொள்கிறது...!!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஏக்நாத்'ஜி பற்றி சொன்னது எனக்கு புதிய தகவல்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் ஆபீசர் எப்பவும் பெல்ட்டோடு வருவார்னு தெரியும், இதென்ன இன்னைக்கு கர்ணன் கவசகுண்டலத்தோட வர்றமாதிரி வாரார் ஒடுங்கலேய் ஒடுங்கலேய்.....

நிரூபன் said...

வணக்கம் ஆப்பிசர், நலமா?


விவேகானந்தர் கேந்திரம் பற்றிய தகவல்கள் அனைத்தும் அசத்தல்.

வள்ளுவர் சிலை, கன்னியாகுமரி பற்றிய அழகான படத்தினை இணைத்து கன்னியாகுமரிக்குப் போக வேண்டும் எனும் ஆவலைத் தூண்டியிருக்கிறீங்க.

செங்கோவி said...

ஆசையைத் தூண்டும் பதிவு...சும்மா இருங்க சார்..பொறாமையா இருக்கு.

Cpede News said...

தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/

நிலாமகள் said...

ப‌ட‌ங்க‌ளும் த‌க‌வ‌ல்க‌ளும் அருமை.

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

அருமையான பயண அனுபவம்

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

நான் இன்னும் அங்கு போனதில்லை.இப்ப ஆசைய ரொம்ப தூண்டிவிட்டுட்டீங்க

அம்பாளடியாள் said...

படங்களும் பகிர்வும் அருமை வாழ்த்துக்கள் .நன்றி
பகிர்வுக்கு .........

! ஸ்பார்க் கார்த்தி @ said...

நல்லாருக்கு சார்!!!!!!!!