கடல்வழிப்பயணத்தினை முடித்துக்கொண்டு,முற்பகல் 11.30 மணியளவில், காந்தி மண்டபத்தை வந்தடைந்தோம். கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், காந்தி ஜெயந்தி விழா ஏற்பாடுகள் விமரிசையாக செய்யப்பட்டிருந்தன.
அக்டோபர் 2 ஒருநாள் மட்டும், நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு, அஸ்தி கலசம் மேல் சூரிய ஒளி விழும் வண்ணம் காந்தி மண்டபத்தின் மேற்கூறையை வளைவாக அமைத்து, அதில் ஒரு சிறு துவாரமும் அமைத்துள்ளனர். குமரி அனந்தன் உள்ளிட்ட சில பிரமுகர்கள் வந்திருந்தனர். மண்டபத்தின் ஒரு பக்கத்தில், ராட்டையில் இரு பெண்டிர் ராட்டையில் நூல் நூற்று அண்ணலை நினைவு கூர்ந்து கொண்டிருந்தனர்.
 |
படத்தைக் கூர்ந்து கவனித்தால், மேலிருந்து சூரிய ஒளி அஸ்தி கலசத்தின் மீது விழுவது தெரியும். |
சரியாக 11.50க்கெல்லாம், மவட்ட ஆட்சித்தலைவர் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடலை முதியவர் ஒருவர் பாட, அங்கிருந்த அனைவரும் பின் தொடர்ந்தனர். சூரிய ஒளி, சரியாக நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு, அஸ்திக்கலசம் மீது விழுகிறது. அதை அனைவரும் கண்டு களித்திட,அஸ்திக்கலசம் அருகிலிருந்து பத்தியைப் பொறுத்தி, புகை மூலம் சூரிய ஒளி தெரிந்திடவும், ஒரு சிகப்பு பட்டுத்துணியினை ஒளிக்கெதிரே, பிடித்தும் காட்டுகின்றனர். கீழே, என் மகள் எடுத்த செல் படத்தில், பட்டுத்துணி மீது விழும் சூரிய ஒளியையும், பிண்ணனியில், காந்தி குல்லாவுடன் வீற்றிருக்கும், சில தியாகிகளையும் பார்க்கலாம்.
 |
அஸ்திக் கலசத்தின் மீது விழும் சூரிய ஒளி. |
அந்த கண் கொள்ளாக் காட்சியின் இறுதியில், கவிதை, கட்டுரை போட்டிகளில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்சியும் நடைபெற்றது. சிறிது நேரம், கேந்திரத்தில் ஓய்வு. பின்னர், மாலை வேளை, கடற்கரை வந்தோம். ஆர்ப்பரிக்கும் அலையைக் கண்டு ரசித்தோம். மொத்தத்தில், அன்றைய ஞாயிறுப்பொழுது, உடலிலும், மனதிலும் உற்சாகம் பிறக்க வழி வகுத்தது.
36 comments:
Beautiful!
கன்னியாகுமரியின் கடற்கரைக்கு காந்தி நினைவகம் பெருமை சேர்க்கிறது. உங்கள் இடுகை காந்தி நினைவகத்தின் பெருமையை உணர்த்துகிறது.
குட்மார்னிங்க் ஆஃபீசர்!!!குட் போஸ்ட்..
சூரியனின் தன் கதிர்களால் ஆசி பெறுகிறானோ?
நல்ல பகிர்வு!
அழகான புகைப்படம் .
ரசித்த விசயங்கள் மிக அருமை .
நம் அருகில் உள்ள ஓர் ஊரின் ...
தகவல்கள் சமயங்களில்
புதிதாக தோன்றுவது ....உங்கள்
எழுத்தின் ஆளுமை வெளிபடுகிறது.
(இன்னும் தாங்கள் குமரிமுனை விட்டு
நம் ஊர்க்கு வர வில்லையா ???? )
காந்தி குல்லாவுடன் வீற்றிருக்கும், சில தியாகிகளையும் பார்க்கலாம்.
அட நீங்கள் எல்லாம் இங்குதான் உள்ளீர்களா ????
உள்ளாட்சி அமைப்பு இல் போட்டி போடாமல் உங்களக்கு அங்கு என்ன வேலை!!!!
காந்தி குல்லாவுடன் வீற்றிருக்கும், சில தியாகிகளையும் பார்க்கலாம்.
அட நீங்கள் எல்லாம் இங்குதான் உள்ளீர்களா ????
உள்ளாட்சி அமைப்பு இல் போட்டி போடாமல் உங்களக்கு அங்கு என்ன வேலை!!!!
அழகு
மண்டபத்தின் ஒரு பக்கத்தில், ராட்டையில் இரு பெண்டிர் ராட்டையில் நூல் நூற்று அண்ணலை நினைவு கூர்ந்து கொண்டிருந்தனர்.
இன்னுமா???????????
என்னத்த சொல்ல ...அந்த மனுசனிடம் சொல்லணும் . இப்போது எங்களிடம் மிஜ்ஜியது இது மட்டும் தான் என்று . கால கொடுமை சார் ....
மண்டபத்தின் ஒரு பக்கத்தில், ராட்டையில் இரு பெண்டிர் ராட்டையில் நூல் நூற்று அண்ணலை நினைவு கூர்ந்து கொண்டிருந்தனர்.
இன்னுமா???????????
என்னத்த சொல்ல ...அந்த மனுசனிடம் சொல்லணும் . இப்போது எங்களிடம் மிஜ்ஜியது இது மட்டும் தான் என்று . கால கொடுமை சார் ....
இயற்கையின் அற்புதங்களுக்கு எதுவும் நிகர் இல்லை சார்.
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
அசத்தலான அனுபவம்...
நான் இன்னும் கன்னியாகுமரியின் அழகை இன்னும் ரசிக்கவில்லை.. விரைவில் கண்டிப்பாக வள்ளூவரையும் காந்தி மண்டபம் விவேகானந்தர் பாறை, சூரிய உதயம் பார்ப்பேன் என்று நம்புகிறேன்...
மண்டபத்தின் ஒரு பக்கத்தில், ராட்டையில் இரு பெண்டிர் ராட்டையில் நூல் நூற்று அண்ணலை நினைவு கூர்ந்து கொண்டிருந்தனர்/
ராட்டை சுழற்றிய மலரும் நினைவுகளை அழகாய் மலரச்செய்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
இனிய பயணம் !
கீழே, என் மகள் எடுத்த செல் படத்தில், பட்டுத்துணி மீது விழும் சூரிய ஒளியையும், பிண்ணனியில், காந்தி குல்லாவுடன் வீற்றிருக்கும், சில தியாகிகளையும் பார்க்கலாம்.
கண்கொள்ளா அற்புதக்காட்சி. வாழ்த்துக்கள்.
சூரியனும் செலுத்தும் நினைவஞ்சலி.. அற்புதமான காட்சி.
Interesting Post and neat write-up.Arumaiyaka Iyarkaiyin Azhakinai ezhuthi Uleerkal.Nantri.
இனிய அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
இனிமையான பதிவு
ஒரு நல்ல அனுபவம்,
பகிர்ந்ததற்கு நன்றிகள்..
நமது கட்டிடக்கலைக்கு இது ஒரு சிறந்த உதாரணம்
எங்கள் ஊரை அருமையா சுற்றி பார்த்து பதிவு போட்டுருக்கீங்க....!!!!
சூர்ய அஸ்தமனம் பார்க்கலையா...???
மியூசியம் போனீங்களா...??
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
பதிவும் புகைப்படங்களும் அருமை
இன்று என் வலையில்
அரசியல்வாதி ஆவது அப்படி ?
ரொம்ப நாளைக்கு அப்பறம் எனக்கும் காந்தி மண்டபம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கடலுக்கும் மண்டபத்துக்கும் இடையே கற்களால் நிரப்பி இருந்தது எனக்கு கண்ணனை, கார் முகில் வண்ணனை அடைத்து வைத்தது போல இருந்தது
கடல்வழிப் பயணத்தை முடித்துக் கொண்டா?? இது எங்கே ?
அஸ்திகலசம்..சூரிய ஒளி..சிறந்த கட்டிட கலைக்கு சான்று
நல்ல அனுபவம் ஆபீசர், காந்தி ஜெயந்தி அன்று அங்கு சென்றது சிறப்பு....!
அருமை
வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.
சித்ரா
சேட்டைக்காரன்
சி.பி.
கோகுல்
யானைக்குட்டி
ஆமினா
ஜ்.ரா.ரமேஷ் பாபு
க.வீ.சௌந்தர்
ராஜேஸ்வரி
அமைத்திசாரல்
My kitchen Flavours
சென்னை பித்தன்
தமிழ்வாசி
கருண்
உங்கள் நண்பன்
மனோ
ரத்னவேல்
ராஜபாட்டை ராஜா
ரூஃபினா ராஜ்குமார்
சதீஷ்குமார்
பன்னிகுட்டி ராம்சாமி
விக்கிஉலகம்
அழகு-அருமை-அசத்தல்.
நன்றி சார்.
படங்களும் பகிர்வும் அருமை.
Post a Comment