இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday 28 December, 2011

பாம்பாறு வழி வாணதீர்த்தம்

கதிரவனின் கதிர்களின் பிண்ணனியில் வாணதீர்த்தம்                  
                    கடந்த வாரத்தில் ஒரு நாள். காலை நேரத்தில் களை கட்டியது எங்கள் பயணம். நண்பர்கள் நால்வர் சேர்ந்து போட்ட திட்டத்தின்படி, அவரவர் வீட்டில், அழகாய் ஒரு (பொய்க்)காரணம் சொல்லிவிட்டு, சந்திக்க ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதிகாலையில் அனைவரும் சந்தித்தோம்.


கடல்போல் காட்சியளிக்கும் காரையாறு அணை.
        எங்கு செல்வது என்று திட்டமிடாமலே, பயணம் செல்லவேண்டுமென மட்டும் முடிவெடுத்தது அப்போதுதான் உரைத்தது. நால்வரில் ஒருவர் பாபநாசம் பகுதியிலிருக்கும் அவரது நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு, அங்கு நண்பர்கள் நான்கைந்து பேர் வருவதாகச் சொன்னார். எதிர்முனையிலிருந்து இன்முக வரவேற்பு என்பது பேசியவரின் முகத்தில் தெரிந்தது.
                                 காலை உணவை நண்பர் சுதனின் கடையில் தயார் செய்து புறப்பட மணி பத்தானது. சோதனை சாவடி அருகிலேயே எங்களை அழைக்க வந்த நண்பர் காத்திருந்தார். சோதனை சாவடி கடந்து, காரையாரை நாங்கள் அடையும்போதே மணி 12. அங்கிருந்து அணைக்குள் படகில் பயணம். பதினைந்து நிமிடபயணத்தில், பக்கத்தில் ஒரு பங்களா(!) அருகில் சென்று நின்றது. 

முதலில் உணவருந்த அணைக்குள் ஓரிடம்


உணவருந்திய பின் சற்றே ஓய்வு.
சுடலையாண்டி சார், காளிமுத்து,
 நான்.

                            ஆம், அது ஒரு ஒற்றை ஓட்டு வீடு. முன் பக்கம், அணையில் அலையடிக்கும் தண்ணீர். சுற்றிலும், அடர்ந்த காடு. அமர்வதற்கு ஒரு அழகிய மர பெஞ்ச். அனைவரும் பயணக்களைப்பு தீர உணவருந்தி, சற்றே ஓய்வெடுத்தோம்.  அப்பப்பா, சொர்க்கம் இதுதானடா என்று சொக்கியது தூக்கம். அங்கிருந்த காவலர், அடிக்கடி மிருகங்கள் இங்கு வருமென்று சொன்னதும், வந்த தூக்கம், சென்ற வழி தெரியவில்லை.

                                  
                                 மீண்டும் படகில் பயணம். சுற்றிலும் உள்ள இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே சென்றோம். படகு வாணதீர்த்தத்தை தாண்டியும் பயணித்தது. கேட்டபோதுதான் நண்பர் சொன்னார். இங்கு விடுமுறை நாளென்பதால், கூட்டம் அதிகமிருக்கும். அருமையான இடம் ஒன்று, சற்றே அருகில் இருக்கிறது. சென்றபின் சொல்லுங்கள் உங்கள் கருத்தையென்றார். 

படகிலிருந்து வாணதீர்த்தம்
                                         அடுத்த பத்து நிமிடத்தில், படகு நின்றது. வாவ்! அழகிய ஆற்றின் கரையது. வெள்ளிப்பனியுருகி அங்கே, வீறு கொண்டு சென்று கொண்டிருந்தது.  அதில் குளிப்பதற்கென்று ஒரு இடம் உள்ளதென அங்கு அழைத்துச் சென்றார். ஆர்ப்பரித்து வந்த ஆறு, அங்கே அமைதியான நீரோட்டமாக சென்றுகொண்டிருந்தது. ஆற்று நீரில் முகம் பார்க்கலாம். அத்தனை தெளிவு.  அருகில் குளிப்பதற்கு ஒரு சிறிய அருவி. 

நாங்கள் சென்ற பாம்பாறு.
                        குளித்து முடித்ததும் உடலும்,மனமும் லேசானது. வீடு நோக்கிய எங்கள் பயணமும் தொடங்கியது. அடுத்தமுறை வாருங்கள், அணைக்கு மேலே ஒரு தனியார் எஸ்டேட்டும், அங்கு ஆனந்தமாய்க் குளித்திட அருவியொன்றும் இருக்கிறது, அழைத்துச்செல்கிறேன் என்று சொல்லியுள்ளார். அன்றைய பொழுதை இனிமையாக்கியதற்கு நன்றி சொல்லி புறப்பட்டோம்.

                                 
நாங்கள் குளித்த பாம்பாற்றின் கரையில்
நண்பர்கள் சுதன்,பழனி,முத்துகிருஷ்ணனுடன் நான்

        டிஸ்கி-1:இனிமை நிறைந்த இந்த பயணங்கள், இயந்திர வாழ்வின் இன்னல்கள் மறக்கத் தேவைதான்.

புன்னகையுடன் படகு பயணத்தில் பழனி

                டிஸ்கி-2:புத்தாண்டில், பன்னிரெண்டாம் வயதில், பலர் புருவம் உயர்த்த வைக்கும் சிறுமியின் அறிமுகத்தோடு சந்திக்கின்றேன்.
             அனைவருக்கும் இதயம் கனிந்த இனிய                       
                     புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 


Follow FOODNELLAI on Twitter

49 comments:

நிரூபன் said...

வணக்கம் ஆப்பீசர்,
நல்லா இருக்கிறீங்களா?

பாம்பாறினதும், வாணத் தீர்த்தத்தினதும் இயற்கை அழகு கொஞ்சம் படங்களைப் பகிர்ந்தும்,
உங்கள் பயண அனுபவக் குறிப்புக்களைத் தந்தும் எம்மையும் பாம்பாறிற்குப் போக வேண்டும் எனும் ஆவலைத் தூண்டியிருக்கிறீங்க.

நன்றி,

உணவு உலகம் said...

வாங்க நிரூ. ஏப்ரல் மாத்த்தில் என்மகளின் திருமணத்திற்கு வருகை தாருங்கள். பாம்பாறு சென்று வர ஏற்பாடு செய்திடுவோம்.

Unknown said...

அண்ணே பாம்பாறு அருமயா இருக்கு...நல்லா என்ஜாய் பண்ணீங்க போல!

Prabu Krishna said...

இந்த மாநகர வாழ்க்கையில் மண்டை காயும் போது தான் தெரிகிறது இயற்கையின் அருமை. எங்கேனும் செல்ல வேண்டும் அடுத்த விடுமுறையில்.

நினைவுபடுத்தியமைக்கு நன்றி அப்பா. !

தினேஷ்குமார் said...

புகைப்படக்காட்சிகளே வர்ணிக்கின்றன இயற்கை அழகை ...

இராஜராஜேஸ்வரி said...

:இனிமை நிறைந்த இந்த பயணங்கள், இயந்திர வாழ்வின் இன்னல்கள் மறக்கத் தேவைதான்.

Very informative..

செல்வா said...

அருமையானதொரு பயணம் போயிருப்பீங்க போல. புகைப்படங்கள் அருமை. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆபிசர் ரொம்ப அருமையான இடங்களுக்கு சென்று வந்திருக்கிறீர்கள். பார்க்கும்போதே மனதை கொள்ளை கொள்கிறது. ஊருக்கு வந்து ஒருதடவை போயிட்டு வரணும். பகிர்வு அருமை.

arun said...

Sir,
Refreshing Location, Can you give Location details and How to reach, Does it need any Spl Permissions..

சி.பி.செந்தில்குமார் said...

என்னை விட்டுட்டு டூர் போன நெல்லை பதிவர்.. இனி தொல்லை பதிவர் ஹி ஹி எப்படி டைட்டில் தாக்கி ஒரு போஸ்ட்

சி.பி.செந்தில்குமார் said...

அன்புள்ள ஆஃபீசர். சும்மா ஜாலிக்கு ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

வாண தீர்த்தம் [[பாணதீர்த்தம்னு படிச்சிருக்கேன்]] அருவிக்கு நானும் குடும்பமாய் போனதுண்டு, காரையார் படகு பயணம் சூப்பர்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

கடுமையான வேலைப்பளு நடுவில், இப்படி ரிலாக்ஸ் ஆவது மனசுக்கு இதம் அருமை...!

MANO நாஞ்சில் மனோ said...

படங்கள் எல்லாம் அருமை ஆபீசர், திவான் எங்கே..?

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
என்னை விட்டுட்டு டூர் போன நெல்லை பதிவர்.. இனி தொல்லை பதிவர் ஹி ஹி எப்படி டைட்டில் தாக்கி ஒரு போஸ்ட்//

உன்னை அருவியில இருந்து கீழே தள்ளுனாதான் சரிப்படுவே மூதேவி...

சக்தி கல்வி மையம் said...

புகைப் படங்களுடன்,பயண அனுபவமும் சேர்த்து பதிவு களை கட்டிவிட்டது..

உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

முத்தரசு said...

படங்கள் - இயற்கை எழில்.

அனுபவம் புதுமையாக்கும் உண்மை

கோவை நேரம் said...

எப்படி போகணும்ன்னு சொல்லி இருந்தா நாங்களும் போவோம்ல ..உங்க உல்லாச பதிவு மனதை கொள்ளை கொண்டது ...

Unknown said...

ஆகா என்ன ஒரு அழகான அமைதியனா இடம்
ஒரு முறையாவது பார்க்க வேண்டும்
பகிர்வுக்கு நன்றி ஆபிசர்

Anonymous said...

படங்கள் கொள்ளை அழகு..

//இனிமை நிறைந்த இந்த பயணங்கள், இயந்திர வாழ்வின் இன்னல்கள் மறக்கத் தேவைதான்.//

உண்மைதான் அதும் நண்பர்களுடன் என்றால் அந்த சந்தோசமே தனிதான்...

இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.

Kousalya Raj said...

சுவாமிஜியை விட்டுட்டு போனது மட்டும் அல்லாமல் போட்டோ போட்டு வெறுப்பு ஏற்படுத்துற மாதிரியே இருக்கு ! :)

கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள்...நாங்கள் பல முறை சென்று இருக்கிறோம் என்றாலும், மறுபடியும் போக வேண்டும் போல ஆசையை ஏற்படுத்தி விட்டது.

விரைவில் அடுத்த டூர் அரேஞ்ச் பண்ணுங்க அண்ணா...

அம்பாளடியாள் said...

//இனிமை நிறைந்த இந்த பயணங்கள், இயந்திர வாழ்வின் இன்னல்கள் மறக்கத் தேவைதான்//

நிட்சயாமாக இன்றைய சமூகத்தினர் இதை நினைத்துப்பார்ப்பதுகூட அரிதாகி வருகின்றது .சந்தோசமாக நீங்கள்
அனுபவித்த இந்தப் பயணம்போல் எம் உறவுகளுக்கும் கிட்டட்டும் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆபீசர் உங்க இளமை ரகசியம் இப்பத்தான் புரியுது...... அடிக்கடி இப்படி மனச ரிலாக்ஸ் பண்ணனும்....!

தாராபுரத்தான் said...

அவசர வாழ்க்கையில் ஒரு அமைதி பயணம் அவசியம் தேவைதானுங்க..

உணவு உலகம் said...

// விக்கியுலகம் said...
அண்ணே பாம்பாறு அருமயா இருக்கு...நல்லா என்ஜாய் பண்ணீங்க போல!//
ஆமா எல்லாம் உங்க பாணிதான். வார இறுதி டே அவுட்.

உணவு உலகம் said...

// Prabu Krishna said...
இந்த மாநகர வாழ்க்கையில் மண்டை காயும் போது தான் தெரிகிறது இயற்கையின் அருமை. எங்கேனும் செல்ல வேண்டும் அடுத்த விடுமுறையில்.நினைவுபடுத்தியமைக்கு நன்றி அப்பா.!//
உடம்பும் மனசும் லேசாயிடும்.

உணவு உலகம் said...

// தினேஷ்குமார் said...
புகைப்படக்காட்சிகளே வர்ணிக்கின்றன இயற்கை அழகை ...//
நீங்களும் வாங்க. ஒருமுறை சென்று வரலாம் நண்பரே.

உணவு உலகம் said...

// இராஜராஜேஸ்வரி said...
:இனிமை நிறைந்த இந்த பயணங்கள், இயந்திர வாழ்வின் இன்னல்கள் மறக்கத் தேவைதான்.

Very informative..//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

// Selvakumar selvu said...
அருமையானதொரு பயணம் போயிருப்பீங்க போல. புகைப்படங்கள் அருமை. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.//
நன்றி செல்வா. எல்லாம் செல்படங்கள்தான்.

உணவு உலகம் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஆபிசர் ரொம்ப அருமையான இடங்களுக்கு சென்று வந்திருக்கிறீர்கள். பார்க்கும்போதே மனதை கொள்ளை கொள்கிறது. ஊருக்கு வந்து ஒருதடவை போயிட்டு வரணும். பகிர்வு அருமை.//
நன்றி.அடுத்தமுறை ஊருக்கு வரும்போது அவசியம் திட்டமிடுங்கள்.

உணவு உலகம் said...

// arun said...
Sir,
Refreshing Location, Can you give Location details and How to reach, Does it need any Spl Permissions..//
வாணதீர்த்தம் வரை செல்ல போட் வசதி உண்டு. அம்பாசமுத்திரம்-பாபநாசம்-காரையார்-வாணதீர்த்தம்.

உணவு உலகம் said...

// சி.பி.செந்தில்குமார் said...
என்னை விட்டுட்டு டூர் போன நெல்லை பதிவர்.. இனி தொல்லை பதிவர் ஹி ஹி எப்படி டைட்டில் தாக்கி ஒரு போஸ்ட்//
ஸ் ஸ் அப்பா, இந்த புலம்பல் ஜாஸ்தியா இருக்கே!

உணவு உலகம் said...

// MANO நாஞ்சில் மனோ said...
வாண தீர்த்தம் [[பாணதீர்த்தம்னு படிச்சிருக்கேன்]] அருவிக்கு நானும் குடும்பமாய் போனதுண்டு, காரையார் படகு பயணம் சூப்பர்...!!!//
வாணதீர்த்ட்ம்-பாணதீர்த்தம் ஒன்றுதான். நன்றி மனோ.

உணவு உலகம் said...

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
புகைப் படங்களுடன்,பயண அனுபவமும் சேர்த்து பதிவு களை கட்டிவிட்டது..
உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு
வாழ்த்துக்கள்...//
நன்றி கருண்.

உணவு உலகம் said...

// மனசாட்சி said...
படங்கள் - இயற்கை எழில்.

அனுபவம் புதுமையாக்கும் உண்மை//
நன்றி நண்பரே.

உணவு உலகம் said...

//கோவை நேரம் said...
எப்படி போகணும்ன்னு சொல்லி இருந்தா நாங்களும் போவோம்ல ..உங்க உல்லாச பதிவு மனதை கொள்ளை கொண்டது ...//
நெல்லையிலிருந்து காரையாருக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. நெல்லை-அம்பாசமுத்திரம்-பாபநாசம்-காரையாறு-வாணதீர்த்தம். நெல்லையிலிருந்து சுமார் 50கி.மீ தூரம். வனப்பகுதியென்பதால் முறையான அனுமதியுடன் செல்ல வேண்டும்.

உணவு உலகம் said...

// siva sankar said...
ஆகா என்ன ஒரு அழகான அமைதியனா இடம்
ஒரு முறையாவது பார்க்க வேண்டும்
பகிர்வுக்கு நன்றி ஆபிசர்//
நன்றி நண்பரே.

உணவு உலகம் said...

//எனக்கு பிடித்தவை said...
படங்கள் கொள்ளை அழகு..

உண்மைதான் அதும் நண்பர்களுடன் என்றால் அந்த சந்தோசமே தனிதான்...//
நூறு சதவிகிதம் உண்மைதான்.

உணவு உலகம் said...

// Rathnavel said...
நல்ல பதிவு.
மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.//
நன்றி அய்யா.

உணவு உலகம் said...

// Kousalya said...
சுவாமிஜியை விட்டுட்டு போனது மட்டும் அல்லாமல் போட்டோ போட்டு வெறுப்பு ஏற்படுத்துற மாதிரியே இருக்கு ! :)

கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள்...நாங்கள் பல முறை சென்று இருக்கிறோம் என்றாலும், மறுபடியும் போக வேண்டும் போல ஆசையை ஏற்படுத்தி விட்டது.

விரைவில் அடுத்த டூர் அரேஞ்ச் பண்ணுங்க அண்ணா...//
கண்டிப்பாக தங்கச்சி.

உணவு உலகம் said...

// அம்பாளடியாள் said...
//இனிமை நிறைந்த இந்த பயணங்கள், இயந்திர வாழ்வின் இன்னல்கள் மறக்கத் தேவைதான்//

நிட்சயாமாக இன்றைய சமூகத்தினர் இதை நினைத்துப்பார்ப்பதுகூட அரிதாகி வருகின்றது .சந்தோசமாக நீங்கள்
அனுபவித்த இந்தப் பயணம்போல் எம் உறவுகளுக்கும் கிட்டட்டும் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .//
உயர்ந்த எண்ணம், ஈடேறட்டும்.

உணவு உலகம் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆபீசர் உங்க இளமை ரகசியம் இப்பத்தான் புரியுது...... அடிக்கடி இப்படி மனச ரிலாக்ஸ் பண்ணனும்....!//
ஆஹா ரகசியம் தெரிஞ்சுபோச்சே. அவ்வ்வ்வ்.

உணவு உலகம் said...

// தாராபுரத்தான் said...
அவசர வாழ்க்கையில் ஒரு அமைதி பயணம் அவசியம் தேவைதானுங்க..//
சென்று வந்தபின் உடலும்,மனமும் மிக லேசானது உண்மைதான் அய்யா.

சாந்தி மாரியப்பன் said...

//இனிமை நிறைந்த இந்த பயணங்கள், இயந்திர வாழ்வின் இன்னல்கள் மறக்கத் தேவைதான்//

ரொம்பச் சரி.. அடிக்கடி இப்படி எங்கியாவது போயிட்டு வந்தா நம்ம எனர்ஜி லெவலும் கூடுது :-)

உணவு உலகம் said...

//அமைதிச்சாரல் said...
//இனிமை நிறைந்த இந்த பயணங்கள், இயந்திர வாழ்வின் இன்னல்கள் மறக்கத் தேவைதான்//

ரொம்பச் சரி.. அடிக்கடி இப்படி எங்கியாவது போயிட்டு வந்தா நம்ம எனர்ஜி லெவலும் கூடுது :-)//
சந்தேகமின்றி சகோதரி.

கே. பி. ஜனா... said...

அருமையான தகவல்களுடன் ரசிக்கவைக்கிற பதிவு!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
எனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com/2011/12/2012-gaiety-and-happiness-new-day.html

குறையொன்றுமில்லை. said...

நானும் நெல்லையை சேர்ந்தவதான் சின்னவயசுல பாண தீர்த்தம் பாவனாசம் அஹஸ்தியர் அருவி எல்லாம் போயிருக்கேன் அதையெல்லாம் நினைவு படுத்தியது இந்தப்பதிவு நன்றி

உணவு உலகம் said...

// Lakshmi said...
நானும் நெல்லையை சேர்ந்தவதான் சின்னவயசுல பாண தீர்த்தம் பாவனாசம் அஹஸ்தியர் அருவி எல்லாம் போயிருக்கேன் அதையெல்லாம் நினைவு படுத்தியது இந்தப்பதிவு நன்றி//
தங்கள் வருக்கைக்கும், கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி.