இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Thursday 29 December, 2011

வந்த பாதையும் வழிகாட்டிய நண்பர்களும்.

 
               அன்றாடம் ஆன்மீகப் பதிவுகள் மூலம், பதிவுலகில் தனக்கென்றோர் தனியிடம் பிடித்து வரும் சகோதரி ராஜராஜேஸ்வரியின் அழைப்பை ஏற்று ”இந்த வருடத்தில் நான்” என்ன எழுதியுள்ளேன் என்று திரும்பி பார்க்கின்றேன். ‘நான்” என்ற வார்த்தை தலைப்பில் வருவதைத் தவிர்த்திடவே தலைப்பை மாற்றியுள்ளேன்.
                துறை சார்ந்த விஷயங்களை, பலரும் அறிந்து கொள்ளும் வண்ணம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையில், எறும்பு வலைப்பூவில், நீங்கள் வாங்கும் உணவுப்பொருட்கள் தரமானதா ?? என்ற தலைப்பில் முதன்முதலில் பகிர்ந்து கொண்டேன். அப்போதுதான், ஏன் நாமும் வலைப்பூ ஒன்றை தொடங்கக்கூடாதென எண்ணினேன். 
           எண்ணம் செயல் வடிவானது. நவம்பர்-2009ல், பதிவுலகில் ”உணவு உலகம்” என்ற வலைப்பூவின் மூலம் அடியெடுத்து வைத்தேன். என்னைப்போல் பணியாற்றும் சகாக்களுக்கு உதவிடும் விஷயங்களையும், கலப்படம் குறித்த விழிப்புணர்வு தகவல்களையும் மட்டுமே பகிர்ந்து வந்தேன். 
               ஒரு கால கட்டத்தில், துறை சார்ந்த தகவல்களுடன், பல்சுவைப் பதிவுகளையும் பகிர ஆரம்பித்தேன். இந்த நேரத்தில்தான், சகோதரி கௌசல்யாவின் அறிமுகம் கிடைத்தது. தினசரிகளில் நாங்கள் நடத்தும் ரெய்டு சம்பந்தமாக வரும் செய்திகளை கவனித்து வந்த அவரது கணவர் திரு.ஜோதிராஜ், என்னை மனதோடு மட்டும்... வலைப்பூவில் அறிமுகப்படுத்தச் சொல்லியுள்ளார். அதனால் தங்கை கௌசல்யா எழுதிய பதிவு: இன்று ஒரு பதிவர் - விமர்சனம் - 1 , என்னைப் பதிவுலகில் பலரும் திரும்பிப் பார்க்க வைத்தது.
சித்ரா:  இந்த நேரத்தில் சகோதரி சித்ரா பற்றி நினைக்காமலிருக்க முடியாது.  அமெரிக்காவிலிருந்து கொண்டு, தமிழ்ப் பதிவுலக சொந்தங்கள் எங்கிருந்தாலும், அவர்கள் பதிவிற்கெல்லாம் சென்று படித்து, ஓட்டுப்போட்டு அவர்களை உற்சாகப்படுத்துவதில் அலாதி இன்பம் காண்பவர். என் பதிவுகளையும் எதேச்சையாக படிக்க ஆரம்பித்தவர், நெல்லப்பதிவர் என்றதும் தனி ஆர்வத்துடன் வந்து கருத்துக்களைப் பதிவு செய்து செல்வார். பின்னாளில், நெல்லையில் முதல் முறையாக ஒரு பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நிகழ்ந்திட இந்தத் தங்கையின் அன்பு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையன்று.

நெல்லை பதிவர் சந்திப்பு: சென்ற வருடத்தில் மறக்க முடியாத நிகழ்வு நெல்லைப் பதிவர் சந்திப்பு. விளையாட்டாக ஆரம்பித்து, வெகு விமரிசையாக நடைபெற ஒத்துழைத்த மனோ,இம்சை அரசன்,  சிபி, செல்வா,சகோதரிகள் சித்ரா, கௌசல்யா,ரூஃபினா,துபாய்ராஜா, கருவாலி ராமலிங்கம், வெடிவால் சகாதேவன் சார், யானைக்குட்டி ஞானேந்திரன் மற்றும் பலர். இந்த பதிவர் சந்திப்பில் திரட்டிய நிதியில், சமூக சேவை ஒன்றை செய்து சரித்திரம் படைக்கவும் வித்திட்டது.                                                 
முதல் வருடம்: 11,000 ஹிட்ஸ்.
இரண்டாம் ஆண்டு மட்டும்:34,000 ஹிட்ஸ்.
இந்த மாதம் வரை: 50,000 ஹிட்ஸ்.
தொடர்பவர்கள்: 256
இண்ட்லியில்: 118
இது என் 325வது பதிவு.
                   வேலைப்பழுவின் காரணமாக பல நாட்கள் பதிவுலகம் பக்கம் வராமலே இருந்துள்ளேன். அல்லது எல்லோரும் பார்த்து கமெண்டிய பின்னர், காலதாமதமாக பார்வையிட்டு கருத்துக்களைப் பதிவு செய்துள்ளேன். பல வலைப்பூக்களை இன்னும் பார்க்கக்கூட நேரம் கிடைத்ததில்லை. ஒவ்வொரு பகிர்விலும் புதுப்புது நண்பர்கள் வந்து வாழ்த்தும்போது, என் எழுத்திலும் ஏதோ இருப்பதாக எண்ணிக்கொள்வேன். நட்பு நம்மை எங்கெல்லாம் அழைத்துப்போகிறது என்றெண்ணி வியந்ததும் உண்டு.
நாஞ்சில் மனோ: அவரது வலைத்தளத்தில், ”உணவு உலக ஆஃபிசரின் வலைத்தளம்” என லிங்க் கொடுத்து அதில் இவருடன் நான் மதுரைக்குப் பயணித்தபோது எடுத்த என் ஃபோட்டோவையும் போட்டு பய்முறுத்தியுள்ளார். நெல்லைப்பதிவர் சந்திப்பில் முதல் முறை பார்த்ததும் ’பச்சக்’ என்று அன்பால் ஒட்டிக்கொண்டவர்.
பன்னிகுட்டி ராம்சாமி:ஸ்டார்ட் மியூசிக் வலைப்பூவில் என் தளத்திற்கு தனியிடம் கொடுத்து என் மனதில் இடம் பிடித்த முதல்வர். இதன்மூலம்  என் தளம் வந்த பார்வையாளர்கள் அதிகம். கும்மி விஷயங்களில் நான் விலகியே இருக்கும்படி, நண்பர் இம்சை அரசன் பாபு மூலம் அக்கறையுடன் அறிவுரைகள் பல வழங்கியவர். 
பலே பிரபு:உணவு உலகம் டொமைனுக்கு மாறிட, இவர் எழுதிய பதிவொன்றே காரணம். எனது வலைப்பூவின் தலைப்பு தனியாக ஒளிர்ந்திடச் செய்தவரும் இவரே.


விக்கி உலகம்: வலைப்பூவிலும்,பதிவுலக நடைமுறைகளிலும் சந்தேகம் வரும்போதெல்லாம், பலமுறை இவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றுள்ளேன். 
சிபி:எத்தனை அடித்தாலும் தாங்கும் அகல முதுகு படைத்த இவர், பதிவில் பலமுறை என்னை இழுத்துவிட்டு,எனது தளத்திற்கு  இலவச விளம்பரம் கொடுத்தவர்.
நிரூபன்: ஒருமுறை எனது மெயில் ஐ.டியிலிருந்து,தவறான ஸ்பாம் மெயில்கள் செல்கிறதென ஒரு பதிவில் நான் புலம்பியபோது, எனக்கு அக்கறையாக் மெயில் அனுப்பி, சில மாற்றங்கள் செய்ய பரிந்துரைத்தவர். அது ஸ்பாம் மெயில் தொல்லையிலிருந்து விடுபட பெரிதும் உதவியது.
இம்சை அரசன் பாபு:இப்பல்லாம் இவர் பதிவுலகம் பக்கம் வருவதே அதிசயம். நெல்லைப்பதிவர் சந்திப்பில் நெஞ்சம் நிறைந்தவர்.
  அப்புறம் பலாபாடறை-ஷங்கர்,மணிஜீ,ஷர்புதீன்,செங்கோவி,கருண், கவிதை வீதி,செல்வா,விஜயன்,தங்கசிவம்,சிவகுமார்,கலியுகம் தினேஷ், நக்கீரன்,ஸ்டார்ஜன்,யாஹூராம்ஜி,ரத்னவேல்அய்யா,ரஹீம்கசாலி, ரஜீவன்,அன்புத்தங்கைகள் மதுரை ஆனந்தி,கல்பனா,அமைதிச்சாரல் . . . . என்று நீளும் இந்த சொந்தங்களின் நட்பு எல்லைகளற்றது. என் தாய் உடல் நலம் குன்றி, மருத்துவமனையில் இருந்தபோதும் சரி, அவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்த பொழுதும் சரி, என் உற்றார், உறவினரை விட, என்னிடம் அதிகம் அக்கறையுடன் பேசி என்னைத்தேற்றியது இந்த பதிவுலகச் சொந்தங்கள்தான்.
                      இந்த வருடத்தில் எனது புதிய முயற்சி ஆங்கில வலைப்பூ. அதில் உணவு சம்பந்தமான தகவல்கள் மட்டுமே பகிர்ந்துகொள்கிறேன். அதை எனது வலைப்பூ தொடங்க பல்வேறு வகையிலும் உதவிய நண்பரும் குருவுமான ஜோசப்(தற்போது மதுரை வாசம்) சாரின் ஊக்கத்தினாலும், பலே பிரபுவின் வழிகாட்டுதலிலும்,டொமைனிற்கு மாற்றியுள்ளேன். FOOD SAFETY
                            பிறக்கின்ற புத்தாண்டில், இணையம் நமக்கு வழங்கியுள்ள இந்த மாபெரும் வாய்ப்பினை, நமக்குத் தெரிந்தவை இந்த உலகம் தெரிந்திட நல்ல வழியில் நட்புடன் பயன்படுத்துவோமென்ற உறுதிபூண்டிட வேண்டி முடித்துகொள்கிறேன். 
                நினைத்து, நினைத்து எழுதினாலும், சிலரை எழுத மறந்திருக்கலாம். எழுதும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திய பதிவுலக சொந்தங்களுக்கு நன்றிகளுடன்.
டிஸ்கி: இந்த பதிவை, எழுத நேரம் கிடைக்கும் அனைவரும், தொடர வேண்டுகிறேன்.
Follow FOODNELLAI on Twitter

52 comments:

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துகள் ஆஃபீசர்


>>கும்மி விஷயங்களில் நான் விலகியே இருக்கும்படி, நண்பர் இம்சை அரசன் பாபு மூலம் அக்கறையுடன் அறிவுரைகள் பல வழங்கியவர்.

ஓ, அதான் மேட்டரா? ம் ம்

சி.பி.செந்தில்குமார் said...

>>பதிவில் பலமுறை என்னை இழுத்துவிட்டு,எனது தளத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்தவர்.

இனி கரெக்ட் பண்ணிக்கறேன் ஆஃபீசர் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>>>> 2012 அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்கட்டும்

Unknown said...

வணக்கம் அண்ணே உங்க அன்புக்கு நன்றி!....இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

பிறக்கின்ற புத்தாண்டில், இணையம் நமக்கு வழங்கியுள்ள இந்த மாபெரும் வாய்ப்பினை, நமக்குத் தெரிந்தவை இந்த உலகம் தெரிந்திட நல்ல வழியில் நட்புடன் பயன்படுத்துவோமென்ற உறுதிபூண்டிட வேண்டி முடித்துகொள்கிறேன். /

பொறுப்பான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

நிறைவான இனிய
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்..

இம்சைஅரசன் பாபு.. said...

வணக்கம் சார் .
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் .!!
நீங்கள் சொல்வது போல் பதிவுலகத்தில் இல்லாமல் இல்லை உங்கள் பதிவுகுளை எல்லாம் படித்து கொண்டு தான் இருக்கிறான் .

பதிவு எழுதவில்லை என்பதை ஒத்து கொள்கிறேன் .வேளை பளு மற்றும் குடும்பத்தில் சில இனிமையான சந்தோசங்கள் .அதையும் எங்கள் கும்மி குரூப் க்கு அப்புறம் உங்களிடம் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறேன் ..
குடும்ப பொறுப்பு கூடுது அவ்வளவுதான் .நிச்சயமா பதிவுலகை விட்டு போக மாட்டேன் .
நன்றி ..!!

உணவு உலகம் said...

// சி.பி.செந்தில்குமார் said...
வாழ்த்துகள் ஆஃபீசர்

>>கும்மி விஷயங்களில் நான் விலகியே இருக்கும்படி, நண்பர் இம்சை அரசன் பாபு மூலம் அக்கறையுடன் அறிவுரைகள் பல வழங்கியவர்.
ஓ, அதான் மேட்டரா? ம் ம்//
உங்களிடம் சொன்னால், ஊருக்கே சொன்ன மாதிரி. ஹா ஹா ஹா

உணவு உலகம் said...

// சி.பி.செந்தில்குமார் said...
>>பதிவில் பலமுறை என்னை இழுத்துவிட்டு,எனது தளத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்தவர்.

இனி கரெக்ட் பண்ணிக்கறேன் ஆஃபீசர் ஹி ஹி//
கரெக்ட் பண்ணுறது உங்களுக்கு கை வந்த கலையாச்சே!

உணவு உலகம் said...

// சி.பி.செந்தில்குமார் said...
>>>>>> 2012 அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்கட்டும்//
இப்பத்தாங்க பாய்ண்டுக்கு வந்திருக்கீங்க. டூ லேட்!

உணவு உலகம் said...

// விக்கியுலகம் said...
வணக்கம் அண்ணே உங்க அன்புக்கு நன்றி!....இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!//
நன்றி விக்கி.

உணவு உலகம் said...

// இராஜராஜேஸ்வரி said...
பிறக்கின்ற புத்தாண்டில், இணையம் நமக்கு வழங்கியுள்ள இந்த மாபெரும் வாய்ப்பினை, நமக்குத் தெரிந்தவை இந்த உலகம் தெரிந்திட நல்ல வழியில் நட்புடன் பயன்படுத்துவோமென்ற உறுதிபூண்டிட வேண்டி முடித்துகொள்கிறேன். /
பொறுப்பான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
நிறைவான இனிய
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்..//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

// இம்சைஅரசன் பாபு.. said...
வணக்கம் சார் .
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் .!!
நீங்கள் சொல்வது போல் பதிவுலகத்தில் இல்லாமல் இல்லை உங்கள் பதிவுகுளை எல்லாம் படித்து கொண்டு தான் இருக்கிறான்//
எங்களை மறந்துவிடக்கூடாதே என்ற ஆதங்கம்தானே தவிர,தங்களை குறை கூறவில்லை பாபு.

உணவு உலகம் said...

//// இம்சைஅரசன் பாபு.. said...
பதிவு எழுதவில்லை என்பதை ஒத்து கொள்கிறேன் .வேளை பளு மற்றும் குடும்பத்தில் சில இனிமையான சந்தோசங்கள் .அதையும் எங்கள் கும்மி குரூப் க்கு அப்புறம் உங்களிடம் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறேன் ..
குடும்ப பொறுப்பு கூடுது அவ்வளவுதான் .நிச்சயமா பதிவுலகை விட்டு போக மாட்டேன் .
நன்றி ..!!//
குடும்ப குதூகலத்திற்கு முன்னுரிமை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். பகிர்தலுக்கேற்ற நண்பராய் நானிருப்பதில் சந்தோஷம். நன்றி.

நிரூபன் said...

வணக்கம் ஆப்பீசர் அண்ணே,
நல்லா இருக்கிறீங்களா?

பதிவினைப் படிக்கையில் மெய் சிலிர்க்கிறது.

கடந்து வந்த பாதையினை மீட்டியிருக்கிறீங்க.

ரொம்ப நன்றி. என்னையும் ஒருவனாக குறிப்பிட்டதற்கு. ஹே...ஹே...

துபாய் ராஜா said...

வணக்கமும், வாழ்த்துக்களும் சித்தப்பா சார்...

சாந்தி மாரியப்பன் said...

//இணையம் நமக்கு வழங்கியுள்ள இந்த மாபெரும் வாய்ப்பினை, நமக்குத் தெரிந்தவை இந்த உலகம் தெரிந்திட நல்ல வழியில் நட்புடன் பயன்படுத்துவோமென்ற உறுதிபூண்டிட வேண்டி முடித்துக் கொள்கிறேன். //

ரொம்ப அழகா சரியாச் சொல்லியிருக்கீங்க. இந்த நல்லதொரு வாய்ப்பை நமக்கு தெரிஞ்ச நல்ல விஷயங்களை பகிர்ந்துக்க பயன்படுத்திக்கத்தான் வேணும்.

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

உணவு உலகம் said...

//நிரூபன் said...
வணக்கம் ஆப்பீசர் அண்ணே,
நல்லா இருக்கிறீங்களா?
பதிவினைப் படிக்கையில் மெய் சிலிர்க்கிறது.
கடந்து வந்த பாதையினை மீட்டியிருக்கிறீங்க.
ரொம்ப நன்றி. என்னையும் ஒருவனாக குறிப்பிட்டதற்கு. ஹே...ஹே...//
பருப்பில்லாத கல்யாணமா, நிரூபனில்லாத பாதையா!

உணவு உலகம் said...

// துபாய் ராஜா said...
வணக்கமும், வாழ்த்துக்களும் சித்தப்பா சார்...//
வாழ்த்துக்களுக்கு நன்றி ராஜா.

உணவு உலகம் said...

// அமைதிச்சாரல் said...
//இணையம் நமக்கு வழங்கியுள்ள இந்த மாபெரும் வாய்ப்பினை, நமக்குத் தெரிந்தவை இந்த உலகம் தெரிந்திட நல்ல வழியில் நட்புடன் பயன்படுத்துவோமென்ற உறுதிபூண்டிட வேண்டி முடித்துக் கொள்கிறேன். //

ரொம்ப அழகா சரியாச் சொல்லியிருக்கீங்க. இந்த நல்லதொரு வாய்ப்பை நமக்கு தெரிஞ்ச நல்ல விஷயங்களை பகிர்ந்துக்க பயன்படுத்திக்கத்தான் வேணும்.

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.//
நன்றி சகோ.

சக்தி கல்வி மையம் said...

puththaandu vaazththukkal thozhar.

Prabu Krishna said...

ஒரு சிறந்த பதிவருக்கு உதவியதில் எனக்கும் பெருமையே. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அத்தனையும் அழகு ஆபிஸர்...

தங்களுடன் நட்பு பாராட்டுவதற்கு நாங்கள் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

தங்கள் பணி தொட்ரட்டும்
வரும் ஆணடிலும்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

வாழ்த்துக்கள் சார்.. நீங்க வந்த பாதையை இன்னொரு முறை நீங்க திரும்பி பார்த்து எங்களுக்கும் சொல்லி இருக்கீங்க..

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் ...

Anonymous said...

மேலும் மேலும் நிறைய எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்..

MANO நாஞ்சில் மனோ said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும்....!

MANO நாஞ்சில் மனோ said...

கடந்து வந்தபாதைகள் அருமையாக இனிமையாக இருக்கிறது, பதிவுலக நண்பர்கள்தான் இப்போது நம் சுகதுக்கங்களில் ஆறுதலாய் இருக்கிறார்கள் என்பது சத்தியம்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஆங்கில வலைப்பதிவுக்கு என் வாழ்த்துக்கள்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
>>பதிவில் பலமுறை என்னை இழுத்துவிட்டு,எனது தளத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்தவர்.

இனி கரெக்ட் பண்ணிக்கறேன் ஆஃபீசர் ஹி ஹி//

டேய் அண்ணே நீ எதை சொல்லுறே...?

MANO நாஞ்சில் மனோ said...

நெகிழ்ச்சியான பதிவு ஆபீசர்...!!!!

Unknown said...

மிக மிக சந்தோசம்
உங்கள் முயற்சிக்கும்
உங்கள் பாசத்துக்கும் கிடைத்த வெகுமதிகள்
இன்னும் அதிக பதிவுகள் எழுதி
வாழ் வாங்கு வாழ்க என வேண்டுகிறேன்

Rathnavel Natarajan said...

எங்களையும் குறிப்பிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. நெல்லை பதிவர் சந்திப்பின் முழு முயற்சி, முழு வெற்றிக்கு நீங்கள் தான் காரணம்.
உங்களுக்கும், அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள் ஆபீசர். உங்களுடைய வலைப்பூ மேன்மேலும் சிறப்பாய் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

உணவு உலகம் said...

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
puththaandu vaazththukkal thozhar.//
நன்றி நண்பரே.

உணவு உலகம் said...

// Prabu Krishna said...
ஒரு சிறந்த பதிவருக்கு உதவியதில் எனக்கும் பெருமையே. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.//
நன்றி பிரபு.

உணவு உலகம் said...

// கவிதை வீதி... // சௌந்தர் // said...
அத்தனையும் அழகு ஆபிஸர்...

தங்களுடன் நட்பு பாராட்டுவதற்கு நாங்கள் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

தங்கள் பணி தொட்ரட்டும்
வரும் ஆணடிலும்//
நன்றி சௌந்தர் சார்.ஆசிரியர் பணிக்கு ஈடான அரும்பணி உண்டோ!

உணவு உலகம் said...

// ஜ.ரா.ரமேஷ் பாபு said...
வாழ்த்துக்கள் சார்.. நீங்க வந்த பாதையை இன்னொரு முறை நீங்க திரும்பி பார்த்து எங்களுக்கும் சொல்லி இருக்கீங்க..

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார் ...//
நன்றி நண்பரே.

உணவு உலகம் said...

//எனக்கு பிடித்தவை said...
மேலும் மேலும் நிறைய எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்..//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

// MANO நாஞ்சில் மனோ said...
கடந்து வந்தபாதைகள் அருமையாக இனிமையாக இருக்கிறது, பதிவுலக நண்பர்கள்தான் இப்போது நம் சுகதுக்கங்களில் ஆறுதலாய் இருக்கிறார்கள் என்பது சத்தியம்...!!!//
நிச்சயம் மனோ. நன்றி.

உணவு உலகம் said...

// MANO நாஞ்சில் மனோ said...
ஆங்கில வலைப்பதிவுக்கு என் வாழ்த்துக்கள்...!!!//
சிறப்பு வாழ்த்திற்கு ஸ்பெஷல் நன்றி.

உணவு உலகம் said...

// MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
>>பதிவில் பலமுறை என்னை இழுத்துவிட்டு,எனது தளத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்தவர்.

இனி கரெக்ட் பண்ணிக்கறேன் ஆஃபீசர் ஹி ஹி//

டேய் அண்ணே நீ எதை சொல்லுறே...?//
கில்மா நாயகன் எதைச் சொல்வார்!!!

உணவு உலகம் said...

//siva sankar said...
மிக மிக சந்தோசம்
உங்கள் முயற்சிக்கும்
உங்கள் பாசத்துக்கும் கிடைத்த வெகுமதிகள்
இன்னும் அதிக பதிவுகள் எழுதி
வாழ் வாங்கு வாழ்க என வேண்டுகிறேன்//
நன்றி சகோதரரே.

உணவு உலகம் said...

// Rathnavel said...
எங்களையும் குறிப்பிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. நெல்லை பதிவர் சந்திப்பின் முழு முயற்சி, முழு வெற்றிக்கு நீங்கள் தான் காரணம்.
உங்களுக்கும், அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//
அது ஒரு கூட்டு முயற்சி. மீண்டும் விரைவில் சந்திப்போம் அய்யா.

உணவு உலகம் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வாழ்த்துகள் ஆபீசர். உங்களுடைய வலைப்பூ மேன்மேலும் சிறப்பாய் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.//
நன்றி ஸ்டார்ஜன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மிக்க மகிழ்ச்சி ஆபீசர். தன்னடக்கம், எளிமை, நன்றி மறவா பண்பு என அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக திகழ்கிறீர்கள்.

பணியிலும் வலைப்பூவிலும் மென்மேலும் சிறந்து விளங்கவும் இனிய புத்தாண்டிற்கும் வாழ்த்துகள் ஆபீசர்!

Unknown said...

உங்களுக்கும் உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ.

உணவு உலகம் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
மிக்க மகிழ்ச்சி ஆபீசர். தன்னடக்கம், எளிமை, நன்றி மறவா பண்பு என அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக திகழ்கிறீர்கள்.
பணியிலும் வலைப்பூவிலும் மென்மேலும் சிறந்து விளங்கவும் இனிய புத்தாண்டிற்கும் வாழ்த்துகள் ஆபீசர்!//
நன்றிகளோடு ஏற்றுக்கொள்கிறேன் சார்.

உணவு உலகம் said...

// கே. ஆர்.விஜயன் said...
உங்களுக்கும் உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.//
நன்றி விஜயன்.டூர்லாம் முடிந்து வந்தாச்சா? புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

// asiya omar said...
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ.//
நன்றியும் நல்வாழ்த்துக்களும்.

குறையொன்றுமில்லை. said...

இப்பதான் உங்க பக்கம் வரேன் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

உணவு உலகம் said...

//Lakshmi said...
இப்பதான் உங்க பக்கம் வரேன் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.//
நன்றி அம்மா.அடிக்கடி வாங்க.