இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 24 January, 2012

வியாபாரம் மட்டும் நோக்கமல்ல விழிப்புணர்வும்தான்.

          
                                கடந்த சில நாட்களுக்கு முன், காலை நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு. தெரியாத எண் என்பதால், மிகுந்த யோசனையுடனே எடுத்தேன். மறுமுனையில் பேசியவரோ, தம்மை காளீஸ்வரன் என்று அறிமுகம் செய்து கொண்டு, என் பெயரைச் சொல்லி, என்னிடம் பேச வேண்டுமென்கிறார். எனக்கோ ஆச்சரியம்.
                        
                      எப்படி என்னைத் தெரியுமென்றேன்? எல்லாம் கூகுளாண்டவர் உபயம் என்றார். புரியவில்லை, சற்றே விளக்கமாய்ச் சொல்லுங்கள் என்றேன். தாம் காரைக்குடி பேக்கரி ஓனர்ஸ் அசோசியேசனின் கௌரவ செயலாளர் என்றும், 22.01.2012ல், காரைக்குடியில், முகவை மண்டல விழிப்புணர்வு மாநாடு நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த மாநாட்டில், புதிய உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்க, பயிற்றுநர் நாடி, "TOP TEN FOOD SAFETY TRAINERS IN TAMILNADU" என்று கூகுளில் கொடுத்தேன். அதில் உங்கள் பெயர் இருக்கிறது. கண்டிப்பாக வந்து கலந்து கொள்ளவேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டார். சரியென்று ஏற்றுக்கொண்டேன்.

                         
                         அதே விழாவிற்கு, கர்நாடக மாநில, தார்வார்டு, வேளாண்மை விஞ்ஞான பல்கலைக்கழக விஞ்ஞானி மற்றும் பேக்கரித்துறை தலைமை பேராசிரியை முனைவர்.திருமதி.சகுந்தலா மசூர் அவர்களையும் அழைத்திருந்தார். சாதாரணமாய் எண்ணிச்சென்ற எனக்கு,திரு.காளீஸ்வரன், விழிப்புணர்வு மாநாட்டினை, அரசியல் கட்சி மாநாட்டிற்கு இணையாக ஏற்பாடு செய்திருந்ததைக் கண்டு சற்றே மலைப்பாகத்தான் இருந்தது. அதன் பின்னே இருந்த அந்த நாற்பது வயது இளைஞரின் உழைப்பும், உத்வேகமும் புரிந்தது. சங்கரன்கோயில், தரங்கம்பாடி, திருப்பத்தூர்,சிவகங்கை, கோயம்புத்தூர் என பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலர் வந்திருந்தனர்.
                          மாநாடு நடைபெற்ற மண்டபத்தின் தரைத்தளத்தில், பேக்கரித்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு இயந்திரங்கள், சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது.  அதில், CHAT COUNTERS தயாரிக்கும்,கோவை, ஈரோ ஸ்டைல் என்ஜினியர்ஸ், ROTARY RACK OVENS தயாரிக்கும் வி.எஸ். என்ஜினியரிங், பேக்கரி பொருள்களை பேக்கிங் செய்ய பயன்படும் கண்டெய்னர்கள் தயாரிக்கும், மதுரை, பேக்கரி வேல்ட், பேக்கரி இயந்திரங்கள் தயாரிக்கும் கும்பகோணம்,சாமுண்டி நிறுவனம், குளிர்சாதன இயந்திரங்கள் தயாரிக்கும் பெங்களூர், எக்செல் நிறுவனம், உலகத்தரமான பேக்கரி தொழில் நுட்பம் மற்றும் சர்வீஸ் வழங்கும்  மதுரை, M-IMPEX  நிறுவனம்,கோவை, SEEDS ENVIRO LABS மற்றும் பேக்கரி தொழிலிற்குத் தேவையான எசன்ஸ் தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றினை அங்கு அழைத்து வந்தது, மாநாட்டிற்கு வந்த வணிகர்களுக்கு, தொழில் சார்ந்த உதவி புரிவதாய் இருந்தது பாராட்டத்தக்கது. 
                     கடும் போட்டி நிறைந்த இந்த தொழிலில்,ஆண்களுக்கு இணையாக, உலகத்தரமான பேக்கரி தொழில் நுட்பம் மற்றும் சர்வீஸ் வழங்கும் மதுரை, M-IMPEX  நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவது நெல்லையை சார்ந்த திருமதி. சுதாகிருஷ்னண் என்று அறிந்தபோது, மனம் மிக மகிழ்ந்தது.HATS OFF TO YOU Mrs.SUDHA KRISHNAN.
                              முதல் தளத்தில் நடந்த மாநாட்டில், தமிழ்நாடு பேக்கர்ஸ் பெடரேசன் தலைவர் திரு.குமார், அன்னபூர்ணா திரு.முருகேசன், பெரீஸ் பிஸ்கட்ஸ் திரு.மகேந்திரவேல் ஆகியோரின் வாழ்த்துரைகளுக்குப்பின், முனைவர்.திருமதி.சகுந்தலா மசூரின் ”சத்தான பேக்கரி உணவு தயாரிப்பு” என்ற ஆங்கில உரையினை, திருச்சி, ரமணாஸ் பேக்கரி, திரு.சுந்தரராஜன் மொழிபெயர்த்தார். அடுத்து,மதுரை மாநகரில் பணிபுரியும் திரு.மணிவண்ணன், சட்டத்தின் சாராம்சங்களை எடுத்துரைத்தார். 
                  பேக்கரி மற்றும் உணவகத் தொழில் துறைகளிலிருந்து வந்திருந்த அனைவரின் பேச்சிலும் , புதிய சட்டம், அவர்தம் தொழிலை நசுக்கிவிடுமோ என்ற ஐயமே தலைதூக்கி நின்றது.  அதனை தெளிவு படுத்த, அடுத்து நான் பேச அழைக்கப்பட்டேன்.பேக்கரி தொழிலின் பரிணாம் வளர்ச்சியைக்கூறி, ஈரட்டி(BISCUIT),மடக்கு ரொட்டி(PUFFS),பம்பர ரொட்டி(MACRONS)என்று சுத்த தமிழில், காரைக்குடி மண்ணில் பேக்கரி பொருள்களை குறிப்பிடுவதை சொல்லி அவையோரின் கவனத்தை என் பக்கம் ஈர்த்தேன்.
                             எப்படி கற்காலத்தில், தானியங்களை கூழாக்கி, சூடான பாறைகளில் சுட்டுத் துவங்கிய இந்த தொழில் நுட்பம், இன்று மின்சார அடுப்புகளில் பப்ஸ், பன், கேக் போன்றவை தயாரிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளதோ, அதேபோல், பழைய உணவுக்கலப்பட தடை சட்டம் சீர்திருத்தப்பட்டு, இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது என்றும், இந்திய உணவினை, உலகத்தரத்திற்கு உயர்த்துவது ஒன்றே புதிய சட்டத்தின் நோக்கம் என்றும், தவறுகளைத் திருத்திக்கொள்ள பல்வேறு சந்தர்ப்பங்கள் அளிக்க, புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதென்பதையும் தெள்ளத்தெளிவாய் எடுத்துரைத்தேன்.   பாதுகாப்பான பேக்கரித் தொழில் நடத்தி, சுகாதாரமான உணவினை அளிப்பது எப்படி என்பதை விளக்கும் நடைமுறைகளை எடுத்து சொன்னேன்.                     
பேக்கரிதொழிலில் பின்பற்ற உணவுபாதுகாப்பு நடைமுறைகள்:
Ø      தொழில் செய்ய உரிய உரிமம் பெறுதல்
Ø புதிய சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல்.
Ø      உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல்.
Ø      தொழிற்சாலைகளில், விழிப்புணர்வு வாசகங்கள், சுவரொட்டிகள் அனைவரும் அறியும் வண்ணம் வைத்தல்.
Ø      பயன்படுத்த தகுதியற்ற/காலாவதியான உணவுப்
  பொருள்களை, உடனுக்குடன் அப்புறப்படுத்துதல்.
Ø பணியாளர்களுக்கு சுத்தமான, முறையான சீருடைகளை வழங்குதல்.
Øஉணவுப்பொருள் கையாளும் அனைவருக்கும், மருத்துவ பரிசோதனை செய்து, உடற்தகுதி சான்று பெறுதல்.
Øஉணவு உற்பத்தி கூடங்களை, காலமுறைப்படி வெள்ளையடித்தல்.
Øஉணவுப்பொருள் தயாரிக்க,சுத்தமான, பாதுகாப்பான தண்ணீரையே பயன்படுத்துதல்.
Øமுதலுதவிப் பெட்டிகளை, அனைவரும் அறியும் வண்ணம் வைத்திருத்தல்.
Ø உணவுப்பொருள் பாக்கட்கள் மீது ஒட்டப்படும் லேபிள்கள் தயாரிப்பில் தனிக்கவனம் செலுத்துதல்.
Øமூலப்பொருள்கள நம்பிக்கையான விநியோகஸ்தர்களிடமிருந்து மட்டுமே வாங்குதல்.
Øவளாகத்தில் உள்ள சிலந்திவலை/ஒட்டடையினை, உடனுக்குடன் அப்புறப்படுத்துதல்.
Ø உணவு தயாரிக்குமிடங்களிலுள்ள தேவையற்ற பொருள்களை அவ்வப்போது அகற்றுதல்.
Ø      உணவு தயாரிக்குமிடத்தின் தரையைத் தினசரி கழுவுதல்.
Ø      தயாரான உணவுப்பொருள்களை பாதுகாப்பாக இருப்பு வைத்தல்.
Ø சிறு பூச்சிகள், எலிகள் போன்றவை, உணவு தயாரிக்கும்/விற்பனை செய்யும் இடங்களில் உலவுவதைத் தடுக்க, முறையான பூச்சி/எலி கொல்லும் நடைமுறைகளை அனுசரித்தல்.
Ø  உணவுப்பொருள் கையாள்பவர்கள் கையுறை, தலைத்தொப்பி, மேலாடை(Apron) அணிவதை கட்டாயமாக்குதல்.
Ø உணவுப்பொருள்களை பொதியும் பொருள்கள் உணவுத்தரம் வாய்ந்தவையா என உறுதிப்படுத்தி, வாங்கி தேவையான அளவில் இருப்பு வைத்தல்.
Ø      இருப்பில் உள்ள பொருள்கள், தயாரித்த, விற்ற பொருள்களின் கணக்கு பராமரித்தல்.
Ø உணவுப்பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை சுத்தமாகப் பராமரித்தல்.
Ø  உணவுப்பொருள் கையாள்பவர்கள் அவர்தம் கைகளை சுத்தமாகக் கழுவிட அறிவுறுத்துதல்.
Ø  உணவு தயாரித்த பாத்திரங்களை சுத்தம் செய்திட தனியாக இடம் ஒதுக்குதல்.
Øகெட்டுப்போன உணவுப்பொருள்களை தொழிற்சாலை வளாகத்திலிருந்து அப்புறப்படுத்துதல்.
           பயிற்சியில் பங்கு பெற்றவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்ச்சிக்குப் பின், சென்னை, Everonn நிறுவனத்தினர், மாநாட்டில் கலந்து கொண்ட வியாபாரிகளுக்கு, கேள்வித்தாள் ஒன்றை அளித்து, நிகழ்சி ஏற்படுத்திய விழிப்புணர்வை தெரிந்துகொண்டு, அதற்கான சான்றிதழ் அளிக்க முன்வந்ததும், பங்கு பெற்றோர், உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்ற சான்றிதழ் பெற உதவியதும்,வித்யாசமான ஒரு அணுகுமுறையாக இருந்தது.  
நன்றி: மதுரை,தினமலர் செய்தி

Follow FOODNELLAI on Twitter

53 comments:

சி.பி.செந்தில்குமார் said...

GM OFFICER HI HI

சி.பி.செந்தில்குமார் said...

>> கடந்த சில நாட்களுக்கு முன், காலை நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு. தெரியாத எண் என்பதால், மிகுந்த யோசனையுடனே எடுத்தேன்.

HI HI HI NO COMENTS AVVVVVVV

Chitra said...

வாடிக்கையாளர்களும், ஒவ்வொரு கடையை பற்றி தெரிந்து கொள்ளும் விதம் ஏதாவது வழி இருக்கிறதா? அதாவது, தாங்கள் பொருட்கள் / உணவு பதார்த்தங்கள் வாங்கும் கடைகள், விதிமுறைக்கு உட்பட்டு நடக்கின்றன என்பதை தெரிந்து வாங்குவது அவசியமாகிறதே.

Chitra said...

Congratulations for your good work!

சி.பி.செந்தில்குமார் said...

>>TOP TEN FOOD SAFETY TRAINERS IN TAMILNADU" என்று கூகுளில் கொடுத்தேன். அதில் உங்கள் பெயர் இருக்கிறது.

AVVVVVVVVVV. CONGRATS OFFICER, PARTY PLS HI HI

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for your good work!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்படியெல்லாம் நடக்குதா...? சூப்பர் ஆபீசர்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சித்ரா அவர்களின் கேள்வியை வழிமொழிகிறேன்!

Rajagopal.S.M said...

வாழ்த்துக்கள் ஆபிசர்

Kousalya Raj said...

நெல்லை மண்ணை தாண்டி உங்களின் செயல்கள் மதிக்கபடுகிறது, பாராட்டபடுகிறது என்பதை குறித்து மிக மகிழ்கிறேன் அண்ணா.

வந்திருந்த எல்லோருக்கும் உங்களின் பேச்சு நிச்சயம் ஒரு விழிப்புணர்வை கொடுத்திருக்கும்.

புதிய சட்டம் மக்களின் நலனுக்காக என்பதையும், அதனால் வியாபாரிகளுக்கு அதிக பாதிப்புகள் இல்லை என்பதை புரிந்திருப்பார்கள்...

புதிய உணவு பாதுகாப்பு சட்டங்கள் பற்றி பலரும் தெரிந்துகொள்வது நல்லது.

தொடரட்டும் உங்களின் சீரிய விழிப்புணர்வு பணி.

வாழ்த்துக்கள் அண்ணா.

Kousalya Raj said...

//"TOP TEN FOOD SAFETY TRAINERS IN TAMILNADU" என்று கூகுளில் கொடுத்தேன். அதில் உங்கள் பெயர் இருக்கிறது//

சூப்பர்.

Kousalya Raj said...

//M-IMPEX நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவது நெல்லையை சார்ந்த திருமதி. சுதாகிருஷ்னண் //

அசத்துராங்களே !!

சுதாகிருஷ்ணன் மேடம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

மொக்கராசா said...

//"TOP TEN FOOD SAFETY TRAINERS IN TAMILNADU" என்று கூகுளில் கொடுத்தேன். அதில் உங்கள் பெயர் இருக்கிறது.//

வாழ்த்துக்கள், மேன் மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்......

Unknown said...

அருமையான பகிர்வு..... அசத்தலான நிகழ்வு.....உங்கள் சேவைக்கு கிடைத்த அங்கீகாரம். வாழ்க வளமுடன்.

Prabu Krishna said...

அசத்தல். வாழ்த்துகள் உங்களுக்கு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பிளாக் படித்து அதன்மூலம் அழைப்பு வந்தது என்றால் இது மிகவும் கௌரவமான விஷயம்தான் தங்களும் எங்களுக்கும்...

வாழ்த்துக்கள்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// "TOP TEN FOOD SAFETY TRAINERS IN TAMILNADU" என்று கூகுளில் கொடுத்தேன். அதில் உங்கள் பெயர் இருக்கிறது. ///

ரொம்ப பெருமையா இருக்கு ஆபீசர். உங்கள் பணி மேலும் சிறப்படைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நல்ல பகிர்வு. நிறைய விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

மாநாட்டில் உங்கள் பங்கு சிறப்பானது. என் மனமார்ந்த வாழ்த்துகள்.

சென்னை பித்தன் said...

ஒரு விழிப்புணர்வு மாநாட்டில் மிகச் சிறப்பாக உரையாற்றிச் சிறப்பித்த உங்களுக்கு வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா போற போக்கை பார்த்தால் அமெரிக்கா வெள்ளை மாளிகையில இருந்தும் விரைவில் அழைப்பு வந்துரும் போலிருக்கே, வாழ்த்துக்கள் ஆபீசர்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
>> கடந்த சில நாட்களுக்கு முன், காலை நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு. தெரியாத எண் என்பதால், மிகுந்த யோசனையுடனே எடுத்தேன்.

HI HI HI NO COMENTS AVVVVVVV//

அப்பிடியே கமெண்ட்ஸ் போட்டாலும் நீ என்னான்னு போடுவேன்னு எனக்கு தெரியாதா என்ன போடாங் ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் சேவை மகத்தானது ஆபீசர் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....!!!

உணவு உலகம் said...

// சி.பி.செந்தில்குமார் said...
GM OFFICER HI HI//
இப்ப குட்நைட் சிபி. ஹே ஹே.

உணவு உலகம் said...

// சி.பி.செந்தில்குமார் said...
>> கடந்த சில நாட்களுக்கு முன், காலை நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு. தெரியாத எண் என்பதால், மிகுந்த யோசனையுடனே எடுத்தேன்.

HI HI HI NO COMENTS AVVVVVVV//
ஏங்க நீங்க இன்னைக்கு மௌன விரதமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

உணவு உலகம் said...

// Chitra said...
வாடிக்கையாளர்களும், ஒவ்வொரு கடையை பற்றி தெரிந்து கொள்ளும் விதம் ஏதாவது வழி இருக்கிறதா? அதாவது, தாங்கள் பொருட்கள் / உணவு பதார்த்தங்கள் வாங்கும் கடைகள், விதிமுறைக்கு உட்பட்டு நடக்கின்றன என்பதை தெரிந்து வாங்குவது அவசியமாகிறதே.//
சாரி,உடனடியாக ஆன்லைனில் வர இயலவில்லை.
நல்ல கேள்வி.
வாடிக்கையாளரின் அனுபவங்கள் மட்டுமே கை கொடுக்கும்.
ஒவ்வொரு கடையிலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, உரிமம் பெறப்பட்டு,அனைவரும் அறியும் வண்ணம் டிஸ்பிளே செய்ய வேண்டுமென விதி இருக்கிறது.சில நிறுவனங்கள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்று, தம் நிறுவனத்தின் தரத்தை அறியச்செய்கின்றனர்.
என்னைப்பொருத்தவரை, விலை குறைவாகக் கிடைக்கிறதென்பதற்காக வீதியில் விற்பதையெல்லாம் வாங்கும் சிலரின் மனோபாவம் மாறினாலே, பல சுகாதாரக்கேடுகளைக் களையலாம்.
இதற்கும் மேல், நீங்கள் வாங்கும் உணவுப்பொருளின் தரத்தில் குறைபாடு இருப்பதாகக் கருதினால்,உணவு பாதுகாப்பு அலுவலரிடம்தான் முறையிட வேண்டுமென்பதில்லை. ஒவ்வொரு நுகர்வோருக்கும், உணவுப்பொருளை மாதிரி எடுத்து அனுப்பவும், அதில் தரக்குறைவு இருந்தால் வழக்குத்தொடரவும்,உணவு பாதுகாப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உணவு உலகம் said...

// Chitra said...
Congratulations for your good work!//
உதிரியாகக் கிடைப்பவற்றைத் தவிர்த்து, தர முத்திரை பெற்ற பாக்கட்களாகக் கிடைப்பவற்றில் கலப்படத்திற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. நன்றி.

உணவு உலகம் said...

// சி.பி.செந்தில்குமார் said...
>>TOP TEN FOOD SAFETY TRAINERS IN TAMILNADU" என்று கூகுளில் கொடுத்தேன். அதில் உங்கள் பெயர் இருக்கிறது.
AVVVVVVVVVV. CONGRATS OFFICER, PARTY PLS HI HI//
ஆயிரம் பதிவெழுதியதற்கு நீங்கள் கொடுக்கும் பார்ட்டிக்கு அடுத்தது, என் பார்ட்டிதான்!

உணவு உலகம் said...

// இராஜராஜேஸ்வரி said...
Congratulations for your good work!//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

// இராஜராஜேஸ்வரி said...
Congratulations for your good work!//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்படியெல்லாம் நடக்குதா...? சூப்பர் ஆபீசர்!//
நம்புவீங்க என்ற நம்பிக்கைதான் எனக்கும். நன்றி.

உணவு உலகம் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
சித்ரா அவர்களின் கேள்வியை வழிமொழிகிறேன்!//
சித்ராவிற்கு சொன்ன பதிலையே தங்களுக்கும் சமர்பிக்கிறேன்:
வாடிக்கையாளரின் அனுபவங்கள் மட்டுமே கை கொடுக்கும்.
ஒவ்வொரு கடையிலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி, உரிமம் பெறப்பட்டு,அனைவரும் அறியும் வண்ணம் டிஸ்பிளே செய்ய வேண்டுமென விதி இருக்கிறது.சில நிறுவனங்கள் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்று, தம் நிறுவனத்தின் தரத்தை அறியச்செய்கின்றனர்.
என்னைப்பொருத்தவரை, விலை குறைவாகக் கிடைக்கிறதென்பதற்காக வீதியில் விற்பதையெல்லாம் வாங்கும் சிலரின் மனோபாவம் மாறினாலே, பல சுகாதாரக்கேடுகளைக் களையலாம்.
இதற்கும் மேல், நீங்கள் வாங்கும் உணவுப்பொருளின் தரத்தில் குறைபாடு இருப்பதாகக் கருதினால்,உணவு பாதுகாப்பு அலுவலரிடம்தான் முறையிட வேண்டுமென்பதில்லை. ஒவ்வொரு நுகர்வோருக்கும், உணவுப்பொருளை மாதிரி எடுத்து அனுப்பவும், அதில் தரக்குறைவு இருந்தால் வழக்குத்தொடரவும்,உணவு பாதுகாப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நன்றி.

உணவு உலகம் said...

// ராஜகோபால்.S.M said...
வாழ்த்துக்கள் ஆபிசர்//
உங்களுக்கும் ஆபிசர்தானா? அவ்வ்வ்வ்வ்.

உணவு உலகம் said...

//Kousalya said...
நெல்லை மண்ணை தாண்டி உங்களின் செயல்கள் மதிக்கபடுகிறது, பாராட்டபடுகிறது என்பதை குறித்து மிக மகிழ்கிறேன் அண்ணா.
வந்திருந்த எல்லோருக்கும் உங்களின் பேச்சு நிச்சயம் ஒரு விழிப்புணர்வை கொடுத்திருக்கும்.
புதிய சட்டம் மக்களின் நலனுக்காக என்பதையும், அதனால் வியாபாரிகளுக்கு அதிக பாதிப்புகள் இல்லை என்பதை புரிந்திருப்பார்கள்...
புதிய உணவு பாதுகாப்பு சட்டங்கள் பற்றி பலரும் தெரிந்துகொள்வது நல்லது.
தொடரட்டும் உங்களின் சீரிய விழிப்புணர்வு பணி.
வாழ்த்துக்கள் அண்ணா.//
நன்றி சகோதரி. தங்களின் ஊக்கம், எனக்கு உற்சாகமளிக்கும்.

உணவு உலகம் said...

// Kousalya said...
"TOP TEN FOOD SAFETY TRAINERS IN TAMILNADU" என்று கூகுளில் கொடுத்தேன். அதில் உங்கள் பெயர் இருக்கிறது
சூப்பர்.//
எல்லாம் கூகுளாண்டவர் உபயம். நன்றி.

உணவு உலகம் said...

// மொக்கராசா said...
//"TOP TEN FOOD SAFETY TRAINERS IN TAMILNADU" என்று கூகுளில் கொடுத்தேன். அதில் உங்கள் பெயர் இருக்கிறது.//

வாழ்த்துக்கள், மேன் மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்......//
வாங்க ராசா. வாழ்த்த வேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடுறீங்களே. நன்றி.

உணவு உலகம் said...

// கே. ஆர்.விஜயன் said...
அருமையான பகிர்வு..... அசத்தலான நிகழ்வு.....உங்கள் சேவைக்கு கிடைத்த அங்கீகாரம். வாழ்க வளமுடன்.//
நன்றி விஜயன். ”நினைவில் நின்றவை” எழுதுங்க.

உணவு உலகம் said...

// Prabu Krishna said...
அசத்தல். வாழ்த்துகள் உங்களுக்கு.//
பிரபுவின் லட்சிய பயணங்களில் நாங்கள் பாதியளவு கூட வரவில்லையென்பதே உண்மை. நன்றி பிரபு.

உணவு உலகம் said...

// கவிதை வீதி... // சௌந்தர் // said...
பிளாக் படித்து அதன்மூலம் அழைப்பு வந்தது என்றால் இது மிகவும் கௌரவமான விஷயம்தான் தங்களும் எங்களுக்கும்...
வாழ்த்துக்கள்...//
எல்லாம் உங்களை போன்ற நண்பர்களின் பங்களிப்புதான் காரணம். நன்றி.

உணவு உலகம் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
/// "TOP TEN FOOD SAFETY TRAINERS IN TAMILNADU" என்று கூகுளில் கொடுத்தேன். அதில் உங்கள் பெயர் இருக்கிறது. ///

ரொம்ப பெருமையா இருக்கு ஆபீசர். உங்கள் பணி மேலும் சிறப்படைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நல்ல பகிர்வு. நிறைய விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.
மாநாட்டில் உங்கள் பங்கு சிறப்பானது. என் மனமார்ந்த வாழ்த்துகள்.//
நன்றி ஸ்டார்ஜன். வாழ்த்துக்கள் வளமளிக்கும்.

உணவு உலகம் said...

// சென்னை பித்தன் said...
ஒரு விழிப்புணர்வு மாநாட்டில் மிகச் சிறப்பாக உரையாற்றிச் சிறப்பித்த உங்களுக்கு வாழ்த்துகள்.//
நன்றி சார்.

உணவு உலகம் said...

// koodal bala said...
வாழ்த்துக்கள் !//
நன்றி பாலா. உங்கள் உடல் நலம் தேறியது அறிந்து மகிழ்ந்தேன்.

உணவு உலகம் said...

// MANO நாஞ்சில் மனோ said...
ஹா ஹா ஹா போற போக்கை பார்த்தால் அமெரிக்கா வெள்ளை மாளிகையில இருந்தும் விரைவில் அழைப்பு வந்துரும் போலிருக்கே, வாழ்த்துக்கள் ஆபீசர்....!!!//
வந்தா,அவருக்கும் வகுப்பு எடுத்துட வேண்டியதுதான். நன்றி மனோ.

உணவு உலகம் said...

// MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
>> கடந்த சில நாட்களுக்கு முன், காலை நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு. தெரியாத எண் என்பதால், மிகுந்த யோசனையுடனே எடுத்தேன்.

HI HI HI NO COMENTS AVVVVVVV
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்பிடியே கமெண்ட்ஸ் போட்டாலும் நீ என்னான்னு போடுவேன்னு எனக்கு தெரியாதா என்ன போடாங் ஹி ஹி....//
கொஞ்ச நாளா சிபியைத்திட்டித் திருத்த ஆளில்லாம குளிர்விட்டுப்போச்சு சிபிக்கு.

உணவு உலகம் said...

// MANO நாஞ்சில் மனோ said...
உங்கள் சேவை மகத்தானது ஆபீசர் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....!!!//
சேவையென்றெல்லாம் ஒன்றுமில்லை. கடமை.

நாய் நக்ஸ் said...

ஆபிசெர்...இந்த மாதிரி பதிவு போட்டா...நாங்க எங்க போய் ஜாலி
கமெண்ட் போடுறது...???

எங்களுக்கு ஏத்த மாதிரி போஸ்ட் போடுங்க....
ஹி..ஹி..

வாழ்த்துக்கள்.....

உணவு உலகம் said...

// NAAI-NAKKS said...
ஆபிசெர்...இந்த மாதிரி பதிவு போட்டா...நாங்க எங்க போய் ஜாலி
கமெண்ட் போடுறது...???
எங்களுக்கு ஏத்த மாதிரி போஸ்ட் போடுங்க....
ஹி..ஹி..
வாழ்த்துக்கள்.....//
அடுத்து உங்களை ஒரு பேட்டி எடுத்து போட்டுருவோம்! ஹே ஹே ஹே.

Asiya Omar said...

தாங்கள் பதிவுலகில் இருப்பதினால் இது மாதிரி உணவு குறித்த விழிப்புணர்வு செய்திகள் தெரிய முடிகிறது.பகிர்விற்கு நன்றி.வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

நீங்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டது குறித்து நாங்கள் மிகவும் பெருமைப் படுகிறோம்.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.

நிலாமகள் said...

மாநாட்டின் உரை அவ‌ர்க‌ளுக்கு; வ‌லைப்பூவின் ப‌திவு எங்க‌ளுக்கு என‌ அனைவ‌ருக்குமாய் உங்க‌ள் சேவை!

ஷர்புதீன் said...

may i know the menu card of your daughter's marriage !!

non-veg undaa officer?

Thangasivam said...

ஒரு விழிப்புணர்வு மாநாட்டில் மிகச் சிறப்பாக உரையாற்றிச் சிறப்பித்த எனது சீனியர் ஆபிசரான உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

உணவு உலகம் said...

வந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

Unknown said...

"அன்பு நண்பரே உங்கள் மகத்தான சேவையை வலைசரத்தில் தெரியபடுத்தியுள்ளோம் நன்றி!

உணவு உலகம் said...

நன்றி சுரேஷ்.