கடந்த ஒரு வாரமா கரண்ட் ஒரு பக்கம், பிராட்பேண்ட் ஒரு பக்கம்னு பாடாய்ப் படுத்துது. கரண்ட் இருக்கும்போது, நெட் வேலை செய்யாது, நெட் கனெக்சன் கிடைக்கும்போது, கரண்ட் போயிடும். கல்லைக் கண்டால், நாயைக்காணோம், நாயைக்கண்டால் கல்லைக்காணோம்(நாய்நக்ஸ்-மன்னிக்க) என்கிற கதையாக, இடைவெளி இல்லாத் தொடர்கதையாகிப்போச்சு!
நண்பர்கள் பலரின் ப்ளாக் பக்கம் போகமுடியல. இது போதாதென்று, நெற்றிக்கண் திறப்பவரின் அன்புத்தொல்லை அழைப்புகள் அப்பப்ப வரும்! சரி பேசலாமென்று சென்றமர்ந்தால், வீடியோவில் அருவாளைத்தூக்கும் மனோ, வீட்டிலிருந்து கொண்டே வீடியோவில் வரமறுக்கும் விக்கி, வீடு சுரேஷ், செல்பேசியில் செல்லமாய்ப் பேசும் சிவா என்றொரு பட்டாளமே மொத்தமாய் வந்து கலக்குவர். அத்தனை பேரும் வரும்போது, அறுந்து விழும் நெட் கனெக்சன்.
இத்தனை போராட்டங்கள் மிகுந்த வாரம், சென்னைப் பித்தன் அய்யா தந்த அவார்டால் களைகட்டியது.ஆம், விருது எனும் வினையூக்கி பதிவெழுத வித்திட்டது. அத்தோடு ஐந்து நண்பர்களுக்கு இந்த அவார்ட் செல்ல வேண்டுமென்ற அன்புக்கட்டளையும் வேறு. நன்றி.
யாரைத் தேர்வு செய்வது, யாரை விடுவது? சிக்கலில் நம்மை ஆழ்த்திவிட்டார் அய்யா.முதலில், எனக்குப் பிடித்த ஏழு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
1. அன்னையின் அன்பு.
2. கவிதை.
3. பதிவுலகம்.
4. நண்பர்கள் அறிமுகம் .
5. சாதனைகள்.
6. நெல்லை அல்வா.
7. வார இறுதி பயணங்கள்.
சரி, எனக்குத்தெரிந்த,நான் படிக்கும் வலைபூக்களிலிருந்து ஐந்து பூக்களைத்தேர்வு செய்துள்ளேன். ஒன்று மட்டும் உண்மை, இந்த விருதுகளை வழங்குவதால், பெருமை எனக்கே.
நாஞ்சில் மனோ : இவரது வலைப்பக்கத்தில், அரசியலிருக்கும், (அருவா) மொக்கையும் இருக்கும். கதை, கவிதை, வசனகவிதை என பல்சுவையும் பொதிந்திருக்கும்.பாசத்தில் உருகும் பன்முக குணம். பார்க்கத்தான் ஆளு பயங்கரமா இருப்பார் (அருவாளுடன்). ஆனா, பழக இனிமையானவர்.
கொஞ்சம் வெட்டிபேச்சு: சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கத்தெரிந்தவர் இந்தத் தங்கை. இவரது வலைப்பூவில், ”உடம்பு இளைப்பது எப்படி?” என்று உடல் ஆரோக்கியம், தந்தை, பட்டிமன்ற பேச்சாளர் திரு.பொ.ம.ராசாமணியின் வழிகாட்டலில், மனம் லேசாவது எப்படி என்று மன ஆரோக்கியம் ம்ற்றும் அமெரிக்க அனுபவங்கள், தத்துவங்கள், தெய்வ நம்பிக்கை, இந்திய அரசியல் என பல்சுவையும் இருக்கும்.
விக்கிஉலகம்: ”அகட விகடம்” என்று பெயர் வைத்தாலும், சூடான அரசியல், சுவையான சுற்றுப்பயணங்கள், வீரதீர போர்முனை டைரி, வியக்கவைக்கும் கிச்சிளிக்காஸ், துள்ளி விளையாடிய பள்ளிநாள் நினைவுகள், உள்ளிருந்து வைக்கும் குத்து(!) என பல்சுவையும் நிறைந்திருக்கும். பதிவர்கள், அதிலும் அவரின் நண்பர்கள், தடம் புரளும்போது, தன்னிலை உணரவைப்பதற்கு மட்டுமே எய்தப்படும் இந்த அம்பு.
ஸ்டார்ட் மியூசிக்: நகைச்சுவை ததும்பும் இந்த நண்பரின் வலைப்பூவில், நக்கலும், நையாண்டியும், திரை விமர்சனமும், திகட்டாத பயடேட்டாவும் அனைவரையும் கவர்ந்திழுக்கும். அறிவியல் சார்ந்த கதை இவருக்கு அத்துப்படி.ஒரு நடிகரின்பால் கொண்ட ஈர்ப்பால், அவர் படமே இவருக்கு ப்ரோஃபைல் படம். இன்னும் இரு நடிகர்கள் இவரிடம் படும்பாடு அப்பாடக்கர்பா சாரி அப்பப்பா .
பசுமை விடியல்: சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் வலைப்பூக்கள் மத்தியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் சுறு சுறுப்பாய் இறங்கி விட்ட நால்வர் அணி. திருவாளர்கள்:ISR.செல்வகுமார்,பிரபுகிருஷ்ணா,சூர்ய பிரகாஷ் மற்றும் திருமதி.கௌசல்யா. குறைந்து வரும் இயற்கை வளங்கள் காப்பது, நிறைந்து வரும் சீமைக்கருவேல மரங்களை அழிப்பது, பிளாஸ்டிக் ஒழிப்பது என்று சமூக சிந்தனை சார்ந்த வலைத்தளம் இது.
இந்த ஐந்து தளங்களின் ஆக்கபூர்வ சிந்தனையாளர்களை, இந்த அன்பு விருதை ஏற்றுக்கொள்ள அழைப்பதுடன்,அவர்கள் மனம்கவர்ந்த ஐவருக்கு இந்தத் தொடர் விருதை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

49 comments:
வாழ்த்துகள்
யாருக்கு?
சொல்லிட்டுப்போங்க சார்.
கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061
வாழ்த்துகள்..
மிக்க நன்றி, அண்ணா. பில்ட் அப்பு பெருசா கொடுத்து இருக்கீங்க..... பேரை காப்பாத்தணுமே என்று நினைக்க வச்சுட்டீங்க. முயற்சி பண்றேன். :-)))
அண்ணே உங்க அன்புக்கு நன்றி...இங்கே நீங்க குறிப்பிட்டு இருக்கும் ஐவரில், என்னை தவிர மற்றவர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள்...நான் இம்புட்டு திறமை வாய்ந்தவர்களுக்கு இடையில் நிற்பதை பெருமையாக எண்ணிக்கொள்ளும் ஓர் சாதாரண மனிதன் அவ்வளவே...உங்களின் பெருந்தன்மைக்கு நன்றி அண்ணே!
Aha...officer....!!!!!!!
Vazhimozhikiren....
Officer...!!!!!!??????
தங்களுக்கும் ஏனைய பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..
சைக்கோ திரை விமர்சனம்
//வீடு K.S.சுரேஸ்குமார் said...
கோவை இராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு AB+ இரத்தம் தேவைப்படுகிறது இரத்ததானம் தர விரும்பும் கோவை நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் Cell : 9865191061//
நன்றி சுரேஷ். இதையும் முயற்சி பண்ணுங்க:
Now it has become easier to get the blood we need.
All you have to do is just type "BLOOD and send SMS to 9600097000
Ex : Blood B+
A blood donor will call you
// வெங்கட் said...
வாழ்த்துகள்..//
நன்றி வெங்கட் சார்.
// Chitra said...
மிக்க நன்றி, அண்ணா. பில்ட் அப்பு பெருசா கொடுத்து இருக்கீங்க..... பேரை காப்பாத்தணுமே என்று நினைக்க வச்சுட்டீங்க. முயற்சி பண்றேன். :-)))//
தன்னடக்கம் ஜாஸ்தி தங்கைக்கு.நன்றி.
// விக்கியுலகம் said...
அண்ணே உங்க அன்புக்கு நன்றி...இங்கே நீங்க குறிப்பிட்டு இருக்கும் ஐவரில், என்னை தவிர மற்றவர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள்...நான் இம்புட்டு திறமை வாய்ந்தவர்களுக்கு இடையில் நிற்பதை பெருமையாக எண்ணிக்கொள்ளும் ஓர் சாதாரண மனிதன் அவ்வளவே...உங்களின் பெருந்தன்மைக்கு நன்றி அண்ணே!//
”பணியுமாம் பெருமை என்றும் ...”
என்ற குறள் வரிகள் நினைவுக்கு வருகிறது. நன்றி.
// NAAI-NAKKS said...
Aha...officer....!!!!!!!
Vazhimozhikiren....
Officer...!!!!!!??????//
மறுபடியும் முதல்ல இருந்தா!!!!:))
// Kumaran said...
தங்களுக்கும் ஏனைய பதிவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..//
நன்றி சார்.
ஆபீசர் கையால விருது.... நன்றி ஆபீசர்...!
////FOOD NELLAI said...
யாருக்கு?
சொல்லிட்டுப்போங்க சார்.////
அதுக்கு பதிவ படிக்கனுமே?
////விக்கியுலகம் said...
அண்ணே உங்க அன்புக்கு நன்றி...இங்கே நீங்க குறிப்பிட்டு இருக்கும் ஐவரில், என்னை தவிர மற்றவர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள்..//////
பார்ரா....?
/////இது போதாதென்று, நெற்றிக்கண் திறப்பவரின் அன்புத்தொல்லை அழைப்புகள் அப்பப்ப வரும்!/////
ஹஹ்ஹா........
எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!
'பசுமை விடியல்' தளம் எனக்குப் புதிது! நன்றி அறிமுகத்திற்கு!
ஏனைய எல்லாருமே எனக்கும் மிகவும் பிடித்தவர்கள் :-)
அருமையாய் விருது பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..
தங்களிடம் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் .. குடுத்த உங்களுக்கும்
வாழ்த்துகள் உங்களுக்கும் /அனைவருக்கும்.
எனக்கு பிடித்த பதிவர்கள் அதில் மூவர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
// நாயைக்கண்டால் கல்லைக்காணோம்(நாய்நக்ஸ்-மன்னிக்க)//
ஒண்ணும் பிரச்னை இல்ல சார். நீங்க கண்டின்யூ பண்ணுங்க.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////FOOD NELLAI said...
யாருக்கு?
சொல்லிட்டுப்போங்க சார்.////
அதுக்கு பதிவ படிக்கனுமே?//
சிபி: கண்டுபிடிச்சிட்டாரோ..!!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கியுலகம் said...
அண்ணே உங்க அன்புக்கு நன்றி...இங்கே நீங்க குறிப்பிட்டு இருக்கும் ஐவரில், என்னை தவிர மற்றவர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள்..//////
பார்ரா....?//
////விக்கியுலகம் said...
அண்ணே உங்க அன்புக்கு நன்றி...இங்கே நீங்க குறிப்பிட்டு இருக்கும் ஐவரில், என்னை தவிர மற்றவர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள்..//////
யம்ம யம்மா..
FOOD Said..
/////இது போதாதென்று, நெற்றிக்கண் திறப்பவரின் அன்புத்தொல்லை அழைப்புகள் அப்பப்ப வரும்!/////
24/7 நெத்திக்கண்ண தொறந்தே வச்சிருக்காரே இந்த மனுஷன்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆபீசர் கையால விருது.... நன்றி ஆபீசர்...!//
பதிவுலக சீனியருக்கு, ஜூனியரின் அன்புப்பரிசு. நன்றி சார்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////FOOD NELLAI said...
யாருக்கு?
சொல்லிட்டுப்போங்க சார்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அதுக்கு பதிவ படிக்கனுமே?//
இப்படி பப்ளிக்கா, போட்டு உடைச்சிட்டீங்களே!
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
////விக்கியுலகம் said...
அண்ணே உங்க அன்புக்கு நன்றி...இங்கே நீங்க குறிப்பிட்டு இருக்கும் ஐவரில், என்னை தவிர மற்றவர்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள்..//////
பார்ரா....?//
எல்லாம் ஒரு சபையடக்கம்தான்!
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இது போதாதென்று, நெற்றிக்கண் திறப்பவரின் அன்புத்தொல்லை அழைப்புகள் அப்பப்ப வரும்!/////
ஹஹ்ஹா........//
இன்னும் நீங்க அவர் கையில மாட்டலேன்னு நினைக்கிறேன். :)
// ஜீ... said...
எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!
'பசுமை விடியல்' தளம் எனக்குப் புதிது! நன்றி அறிமுகத்திற்கு!
ஏனைய எல்லாருமே எனக்கும் மிகவும் பிடித்தவர்கள் :-)//
நன்றி ஜீ. வருகைக்கும், மனமுவந்த வாழ்த்திற்கும்.
// இராஜராஜேஸ்வரி said...
அருமையாய் விருது பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..
தங்களிடம் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..//
நன்றி சகோ, வருகைக்கும் வாழ்த்திற்கும்.
// "என் ராஜபாட்டை"- ராஜா said...
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் .. குடுத்த உங்களுக்கும்//
நன்றி ராஜா வாழ்த்துக்களுக்கு.
// மனசாட்சி said...
வாழ்த்துகள் உங்களுக்கும் /அனைவருக்கும்.
எனக்கு பிடித்த பதிவர்கள் அதில் மூவர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்//
நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும்.
// ! சிவகுமார் ! said...
// நாயைக்கண்டால் கல்லைக்காணோம்(நாய்நக்ஸ்-மன்னிக்க)//
ஒண்ணும் பிரச்னை இல்ல சார். நீங்க கண்டின்யூ பண்ணுங்க.//
அப்ப, கல்லை எறிஞ்சிடவா!!!
// ! சிவகுமார் ! said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////FOOD NELLAI said...
யாருக்கு?
சொல்லிட்டுப்போங்க சார்.////
அதுக்கு பதிவ படிக்கனுமே?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சிபி: கண்டுபிடிச்சிட்டாரோ..!!//
மனசாட்சி பேசுகிறதோ!!!
// ! சிவகுமார் ! said...
FOOD Said..
/////இது போதாதென்று, நெற்றிக்கண் திறப்பவரின் அன்புத்தொல்லை அழைப்புகள் அப்பப்ப வரும்!/////
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
24/7 நெத்திக்கண்ண தொறந்தே வச்சிருக்காரே இந்த மனுஷன்.//
ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ். :))
வாழ்த்துகள்.
ஊக்கம் கொடுக்கும் உயர்வு விருது
வாழ்க வளமுடன் ஆபீசர்
ஐயோ ஐயோ ஆபீசர் நீங்க என்னா சொல்றீங்கன்னு எனக்கு புரியலைங்கோ, உங்க பிளாக் சரியா எனக்கு ஒப்பன் ஆகலைங்கோ.....?
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்........
இப்போதான் எல்லாம் தெரியுது ஆபீசர் மிக்க நன்றி....!!!
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள், எங்க ஆபீசரா கொக்கா....!!!!
நல்ல தேர்வு.அனைவருக்கும் வாழ்த்துகள்.
அண்ணா முதலில் தாமதமாக வந்ததுக்கு மன்னிச்சிடுங்க.
இப்படி ஒரு விருதை பசுமைவிடியல் தளத்திற்கு கொடுத்து கௌரவபடுதியதுக்கு மிக்க நன்றிகள்.
விருது பெற்ற மற்றவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
பதிவுலகத்தில் நட்பை வளர்ப்பதில் இது போன்ற விருதுகள் உதவும். என்னையும் கொடுக்க சொல்லிடீங்க அதுவும் ஐந்து பேருக்கு என்று...நான் எப்படி ஐந்து பேரை மட்டும் தேர்ந்தெடுக்கனு தெரியலையே ?! :)
உங்களுக்கு பிடித்த ஏழு விசயங்கள் அசத்தல் அண்ணா.
உங்கள் அன்பிற்கு என் நன்றிகள் அண்ணா .
இது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கம்.
மிக்க நன்றி அப்பா.
உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்
பல்சுவை பதிவர்கள்
நன்றி சம்பத் சார்.
hii.. Nice Post
Thanks for sharing
Best Regarding.
More Entertainment
For latest stills videos visit ..
www.chicha.in
Post a Comment