இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 27 February, 2012

சிங்காரச் சென்னையில் சிறு சந்திப்பு.

சிவகுமார், தஞ்சை குமணன், நான், ஆரூர் மூனா செந்தில்.
இயக்கம்:கே.ஆர்.பி.செந்தில் 
                                  
                       கடந்த ஒரு வாரமாய், சிங்காரச் சென்னையில் முகாம். குளிரின் கொடுமை குறைந்து, வெயிலின் தாக்கம் வெளிவந்து கொண்டிருக்கிறது. பயணங்கள் மட்டும் நம் உடலைப் பதம் பார்க்கிறது. 
                         முதல் மூன்று நாட்களும், கடைவீதி பக்கம் கண்ணும் கருத்துமாயிருந்தனர் என் குடும்பத்தினர். சனிக்கிழமை மாலை நண்பேண்டா சிவாவைத் தொடர்பு கொண்டேன். படம் பார்ப்பதில் பயங்கர பிஸி போல! பிறகென்ன, இருக்கவே இருக்கார், நம்ம நக்கீரர். என்னங்க சிவா ஃபோனை எடுக்கவே மாட்டேங்கறாருன்னு சொன்னதுதான் தாமதம்,மனுஷன் என்ன பண்ணினார்னு தெரியல! அடுத்த அஞ்சு நிமிஷத்தில் சிவா ஃபோனில் அலறிட்டார். சினிமா தியேட்டரில் இருந்தேன். ஃபோனை எடுக்கல, அதுக்காக இப்படியா நக்கீரர்கிட்ட மாட்டி விடுவீங்க. சரி, சரி, மனோ வாரார். அவர்கிட்ட நக்கீரரை மாட்டிவிட்ரலாம்னு சொன்ன பிறகுதான் சிவாவின் உதறல் நின்னுது! நாளை மாலை சந்திப்போம் சார் என்றார்.
                            ஞாயிறு மாலை 6 மணியளவில், தி.நகர், சரவணபவனில் கடைவீதிக்கு வந்திருந்த என் குடும்பத்தினருடன் காத்திருந்தேன். முதலில் திருவாளர்கள் சிவாவும், எங்கே செல்லும் இந்த பாதை கே.ஆர்.பி. செந்திலும் வந்தனர். பதிவுலகம், சென்னைப் பதிவர்கள் என்று கொஞ்ச நேரம் பேச்சு சென்று கொண்டிருந்தது. 
                                அடுத்த சில நிமிடங்களில், திரு.ஆரூர் மூனா செந்தில் வருவதாக சிவா சொன்னார். அவருடன்,புன்னகை மன்னன் தஞ்சைக் குமணனையும் அழைத்து வந்தார். பதிவுலகம் பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்தன.  சிவாவுடனாவது அடிக்கடி ஃபோனில் பேசியிருக்கிறேன். செந்தில் சாரைப்பற்றி மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். ஆரூர் மூனா செந்தில் மற்றும் தஞ்சைக் குமணன் அன்றுதான் அறிமுகம். ஆனால் பல நாள் பழகிய நண்பரைப்போல, அவர்கள் அன்று சந்திக்க வந்ததும், பேசியதும், இன்னும் என்னை விட்டு விலகாத ஆச்சரியம்தான். 
                           
தஞ்சை குமணன், சிவகுமார்,    நான், ஆரூர் மூனா செந்தில்.
புகைப்படம்:கே.ஆர்.பி.செந்தில்
                      சிறிது நேரம் பேசிவிட்டு, என் மகளின் திருமண அழைப்பிதழை நண்பர்களுக்குக் கொடுத்து, திருமணத்திற்கு கட்டாயம் வரவேண்டுமென அழைத்தேன். அடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.  மீண்டும், மார்ச் மாதம் நான் மட்டும் சென்னை வருவேன். அப்போது, மீதமுள்ள சென்னைப் பதிவர்களையும் சந்திக்கலாமென்று சிவா சொல்ல, சென்னை நண்பர்கள் அடுத்து வரும் நண்பர்களைச் சந்திக்கப் புறப்பட, நான் குடும்பத்துடன், கடைவீதிக்கு அடுத்த பயணம் புறப்பட்டேன்.
Follow FOODNELLAI on Twitter

59 comments:

Unknown said...

ஹாஹா அட்டக்காசமான மீட்டிங் போல அண்ணே!

உணவு உலகம் said...

வாங்க விக்கி. அங்கிட்டு உங்களைப்பற்றியெல்லாம் நாங்க பேசவேயில்லை. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ரொம்ப சுருக்கமா முடிச்சிட்டீங்க ஆபீசர்....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// FOOD NELLAI said...
வாங்க விக்கி. அங்கிட்டு உங்களைப்பற்றியெல்லாம் நாங்க பேசவேயில்லை. :)///

நம்பிட்டோம்...

Unknown said...

நண்பர்களை சந்தித்தது மி்க்க மகிழ்ச்சி சார்...!

சி.பி.செந்தில்குமார் said...

சென்னை சென்றதை பற்றி பர்சனலாக என்னிடம் ஃபோனில் சொல்லததை வன்மையாக கண்டிக்கிறேன்.. விரைவில் அண்ணன் ராம்சாமி டெரர் கும்மியில் ஒரு பய டேட்டா போடுவார் - உணவு உலகம் ஆஃபீசர் - ஒரு பய டேட்டா ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

பை த பை

டி சர்ட் என்பது யூத்துங்க போடறது ஹி ஹி

இம்சைஅரசன் பாபு.. said...

//
நம்பிட்டோம்...//

ha ,,,ha ha....நம்பி தான ஆகணும் வர வழி ........:))

சி.பி.செந்தில்குமார் said...

கே ஆர் பி செந்தில் ஃபோட்டோ ஏன் இல்லை? அவரை நிற்க வைத்து எடுத்திருக்கலாம்

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன ரொம்ப சுருக்கமா முடிச்சிட்டீங்க ஆபீசர்....?//
காலத்தின் அருமை கருதிதான் சார்.அடுத்த சந்திப்பு முடித்து இன்னும் கொஞ்சம் விரிவா எழுதறேன்.

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/// FOOD NELLAI said...
வாங்க விக்கி. அங்கிட்டு உங்களைப்பற்றியெல்லாம் நாங்க பேசவேயில்லை. :)///
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நம்பிட்டோம்...///
இப்படி சொல்வது விக்கிக்கு அதிக நம்பிக்கை அளிக்கும்ல! ஹா ஹா ஹா.

உணவு உலகம் said...

//வீடு K.S.சுரேஸ்குமார் said...
நண்பர்களை சந்தித்தது மி்க்க மகிழ்ச்சி சார்...!//
விரைவில் உங்களையும் சந்திக்க வருகிறேன், நண்பரே.

உணவு உலகம் said...

// சி.பி.செந்தில்குமார் said...
சென்னை சென்றதை பற்றி பர்சனலாக என்னிடம் ஃபோனில் சொல்லததை வன்மையாக கண்டிக்கிறேன்.. விரைவில் அண்ணன் ராம்சாமி டெரர் கும்மியில் ஒரு பய டேட்டா போடுவார் - உணவு உலகம் ஆஃபீசர் - ஒரு பய டேட்டா ஹி ஹி//
தப்ப்புதான் சிபி.அதுக்காக ராம்சாமி சாரை ஏன்யா வம்புக்கிழுக்கிறீங்க!

உணவு உலகம் said...

// சி.பி.செந்தில்குமார் said...
பை த பை

டி சர்ட் என்பது யூத்துங்க போடறது ஹி ஹி//
பொறாம!!!!

உணவு உலகம் said...

// இம்சைஅரசன் பாபு.. said...
//
நம்பிட்டோம்...//

ha ,,,ha ha....நம்பி தான ஆகணும் வர வழி ........:))//
நீங்களுமா! என் நம்பிக்கை நட்சத்திரமே.

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
கே ஆர் பி செந்தில் ஃபோட்டோ ஏன் இல்லை? அவரை நிற்க வைத்து எடுத்திருக்கலாம்//
அவர்,ராத்திரியிலும் கறுப்புக்கண்ணாடி போடுறவங்க கூடத்தான் படம் எடுத்துக்குவாராம். :)

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எனக்கு தெரியாம வந்து போயீருக்கிங்க....


அதற்கு என் கண்டனங்கள்...

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த சந்திப்பு பற்றி முன்கூட்டியே சிவா சொன்னார். சந்திப்பில் இருக்கும்போது உங்களுடன் தொலைபேசலாம் என்று நினைத்து சிவாவிற்கு போன் செய்தேன். ஆனால், வந்த சிறிது நேரத்திற்குள் நீங்கள் கிளம்பிவிட்டதாக சொன்னார்.

Anonymous said...

தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார். நீங்கள் சென்ற சில நிமிடங்கள் கழித்து சிராஜுதீன் அங்கு வந்தார். ஜஸ்ட் மிஸ்!!

CS. Mohan Kumar said...

பய புள்ளைங்க ஆபிசர் வர்ற சமாச்சாரத்தை நம்ம கிட்டே சொல்லவே இல்லை?

சிவகுமார் சட்டை சூப்பர்.

Unknown said...

கே.ஆர்.பி அண்ணன் போட்டோ இல்லையே?

Unknown said...

நம்ம சிவகுமாரைப் பாருங்க..பார்க்க அப்புராணி மாதிரி இருந்துட்டு என்னா நக்கல், என்னா எகத்தாளம்!

செல்வா said...

// ஜீ... said...
கே.ஆர்.பி அண்ணன் போட்டோ இல்லையே?//

அதானே :))

உணவு உலகம் said...

// இராஜராஜேஸ்வரி said...
அருமையான பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்...//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

// கவிதை வீதி... // சௌந்தர் // said...
எனக்கு தெரியாம வந்து போயீருக்கிங்க....
அதற்கு என் கண்டனங்கள்...//
தவறுதான் சார். அடுத்தமுறை கண்டிப்பாக அனுமதி பெற்று வருகிறேன்.

உணவு உலகம் said...

// ரஹீம் கஸாலி said...
இந்த சந்திப்பு பற்றி முன்கூட்டியே சிவா சொன்னார். சந்திப்பில் இருக்கும்போது உங்களுடன் தொலைபேசலாம் என்று நினைத்து சிவாவிற்கு போன் செய்தேன். ஆனால், வந்த சிறிது நேரத்திற்குள் நீங்கள் கிளம்பிவிட்டதாக சொன்னார்.//
அன்று என் நிலைமை-பதிவராக இருந்ததைவிட, குடும்பஸ்தராக சுமை அதிகம். அடுத்தமுறை நம் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட ஏதுவாக வருகிறேன். நன்றி.

உணவு உலகம் said...

// ! சிவகுமார் ! said...
தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார். நீங்கள் சென்ற சில நிமிடங்கள் கழித்து சிராஜுதீன் அங்கு வந்தார். ஜஸ்ட் மிஸ்!!//
அடுத்தமுறை மிஸஸ் இல்லாமல் வருவதால், மிஸ்ஸாகாது. நன்றி சிவா.

உணவு உலகம் said...

// மோகன் குமார் said...
பய புள்ளைங்க ஆபிசர் வர்ற சமாச்சாரத்தை நம்ம கிட்டே சொல்லவே இல்லை?

சிவகுமார் சட்டை சூப்பர்.//
அது சிவாவின் தனிச்சிறப்பு.

உணவு உலகம் said...

// ஜீ... said...
கே.ஆர்.பி அண்ணன் போட்டோ இல்லையே?//
வாங்க ஜீ. அவர், கேமராக் கண்கொண்டு மட்டும் பார்ப்பேன். கேமரா கண்ணால் அவரைப்பார்க்க அனுமதியில்லையென்று சொல்லிவிட்டார்.

உணவு உலகம் said...

// ஜீ... said...
நம்ம சிவகுமாரைப் பாருங்க..பார்க்க அப்புராணி மாதிரி இருந்துட்டு என்னா நக்கல், என்னா எகத்தாளம்!//
நேர்லயும் புள்ள அப்பாவியாத்தான் இருந்ததுங்கோ.கள்ளமில்லா உள்ளத்திற்கு சொந்தக்காரர் நம்ம சிவா.

உணவு உலகம் said...

// ப.செல்வக்குமார் said...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஜீ... said...
கே.ஆர்.பி அண்ணன் போட்டோ இல்லையே?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அதானே :))//
எல்லாரும் பார்த்தா திருஷ்டி விழுந்திரும்னு, அவுக வீட்ல சொல்லி அனுப்புனாங்களாம்!

நாய் நக்ஸ் said...

சிவாவிற்கு அந்த பயம் இருக்கட்டும்...
மூணு பேர் ரோம்ப வயசானவன்களா
தெரியுறாங்களே....

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு சந்திப்பு, அருமையா நடந்துருக்கும் போலிருக்கு. வாழ்த்துகள்.

உணவு உலகம் said...

// NAAI-NAKKS said...
சிவாவிற்கு அந்த பயம் இருக்கட்டும்...
மூணு பேர் ரோம்ப வயசானவன்களா
தெரியுறாங்களே....//
சிவா மட்டுமா, சென்னையே அலறுதேய்யா!

உணவு உலகம் said...

// அமைதிச்சாரல் said...
நல்லதொரு சந்திப்பு, அருமையா நடந்துருக்கும் போலிருக்கு. வாழ்த்துகள்.//
நன்றி சகோ.

வெளங்காதவன்™ said...

தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார்.
நன்றி...

:-)

Rathnavel Natarajan said...

பதிவர் சந்திப்புக்கு மகிழ்ச்சி.
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

குணசேகரன்... said...

nice post..

உணவு உலகம் said...

// குணசேகரன்... said...
nice post.. //
Thanks a lot.

Yoga.S. said...

சி.பி.செந்தில்குமார் said...

பை த பை

டி சர்ட் என்பது யூத்துங்க போடறது ஹி ஹி!///அப்போ எதுக்கு நீங்க போட்டிருக்கீங்க?வூட்டுக்காரம்மா துணியெல்லாம் சலவைக்குப் போட்டுட்டாங்களோ?(ஒட்டு மொத்த துணியும் துவைக்கிறதே நீங்க தான்னு தெரியும்,இருந்தாலும்............!)

உணவு உலகம் said...

அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானுங்க!

ஆமினா said...

அழகிய சந்திப்பு :-)

Anonymous said...

தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார், நீங்கள் சென்ற பிறகு நாங்கள் மற்றும் கேபிள் சங்கர், சிராஜ் ஆகியோர் சேர்ந்து பெலிந்தா நாசி கண்டார் என்ற மலேசியன் உணவகத்தில் டின்னர் முடித்த பின்பே கிளம்பினோம். நீங்கள் தவற விட்டு விட்டீர்கள், பரவாயில்லை. அடுத்த முறை பிரமாதமான விருந்துடன் சந்தி்ப்போம்.

Anonymous said...

// NAAI-NAKKS said...
சிவாவிற்கு அந்த பயம் இருக்கட்டும்...
மூணு பேர் ரோம்ப வயசானவன்களா
தெரியுறாங்களே....//

யோவ் நக்கீரரே உனக்கு இன்னும் பயம் தெளியலை, உமக்கும் ஒரு உள்குத்து பதிவு ரெடியாகிட்டு இருக்கு ஜாக்கிரதை.

சக்தி கல்வி மையம் said...

ஆபிசர் என்னை மறந்துட்டார்....

உணவு உலகம் said...

// Rathnavel Natarajan said...
பதிவர் சந்திப்புக்கு மகிழ்ச்சி.
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.//
நன்றி அய்யா.

உணவு உலகம் said...

// ஆமினா said...
அழகிய சந்திப்பு :-)//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

// ஆரூர் மூனா செந்தில் said...
தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சார், நீங்கள் சென்ற பிறகு நாங்கள் மற்றும் கேபிள் சங்கர், சிராஜ் ஆகியோர் சேர்ந்து பெலிந்தா நாசி கண்டார் என்ற மலேசியன் உணவகத்தில் டின்னர் முடித்த பின்பே கிளம்பினோம். நீங்கள் தவற விட்டு விட்டீர்கள், பரவாயில்லை. அடுத்த முறை பிரமாதமான விருந்துடன் சந்தி்ப்போம்.//
அடுத்தமுறை தவறவிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்.

உணவு உலகம் said...

// ஆரூர் மூனா செந்தில் said...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
// NAAI-NAKKS said...
சிவாவிற்கு அந்த பயம் இருக்கட்டும்...
மூணு பேர் ரோம்ப வயசானவன்களா
தெரியுறாங்களே....//
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
யோவ் நக்கீரரே உனக்கு இன்னும் பயம் தெளியலை, உமக்கும் ஒரு உள்குத்து பதிவு ரெடியாகிட்டு இருக்கு ஜாக்கிரதை.//
உள்ளே குத்தினாலும், வெளியே குத்தினாலும் அசராத ஆளுங்க அவரு!

உணவு உலகம் said...

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆபிசர் என்னை மறந்துட்டார்....//
மறக்கவில்லை. மீண்டும் மார்ச்-13,14&15 தேதிகளில் வருகிறேன். நிச்சயம் சந்திக்கிறேன் நண்பரே.

உணவு உலகம் said...

//வெளங்காதவன் said...
தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார்.
நன்றி...:-)//
நன்றி சார்.

சென்னை பித்தன் said...

தெரியாமப் போச்சே!

தஞ்சை குமணன் said...

மி்க்க மகிழ்ச்சி அண்ணே!

தஞ்சை குமணன் said...

பதிவர்களை சந்தித்ததில் நன்றி அண்ணே அடுத்த முறை பிரமாதமான விருந்துடன் சந்தி்ப்போம் அண்ணே,!

உணவு உலகம் said...

// சென்னை பித்தன் said...
தெரியாமப் போச்சே!//
நேரமின்மைதான் காரண்ம். அடுத்த மாத மத்தியில் வரும்போது கண்டிப்பாய் தங்களை சந்திப்பேன். நன்றி.

உணவு உலகம் said...

// தஞ்சை குமணன் said...
மி்க்க மகிழ்ச்சி அண்ணே!//
மீண்டும் சந்திப்போம் நண்பரே.

உணவு உலகம் said...

// தஞ்சை குமணன் said...
பதிவர்களை சந்தித்ததில் நன்றி அண்ணே அடுத்த முறை பிரமாதமான விருந்துடன் சந்தி்ப்போம் அண்ணே,!//
நிச்சயம் விரைவில்.

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...!!!