இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday, 5 March, 2012

பாமரனும் புரிந்து கொள்ள உணவுப்பாதுகாப்பு சட்ட தமிழாக்கம்.

                       கரூர் அருகே உணவு பாதுகாப்பு அலுவலராகப் பணிபுரிந்து வரும் என் நண்பர் திரு.கொண்டல்ராஜ், புதிய உணவுப்பாதுகாப்பு சட்டம் மற்றும் அதைச்சார்ந்த விதிகள்,ஒழுங்கு முறைகள் ஆகியவற்றை தமிழாக்கம் செய்து வருகிறார். அதனை, அவர் அனுமதியோடு, என் தளத்தில் பகிர்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

                                                                   பகுதி-1
பதிவுச் சான்றிதழ் பெறும் சிறு உணவு வணிகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான தூய்மை மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்கள்
                                               ஒழுங்குமுறை 2.1.1(2)
உணவு தயாரிப்பாளர்கள்/பதப்படுத்துபவர்/கையாள்வோர் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் மற்றும் தூய்மைத்தேவைகள் உணவு தயாரிக்கும், கையாளும், பதப்படுத்துமிடங்களில், கீழ்க்கண்ட தேவைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும்.

1. வளாகம் அசுத்தமற்ற சுற்றுப்புறம் கொண்ட சுகாதாரமான இடத்தில் அமையப் பெறுவதுடன், எல்லாவகையிலும் தூய்மையான சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும். அனைத்து புதிய உணவு வர்த்தகக் கடைகளும் மாசுபடும் சுற்றுச்சூழல் கொண்ட பகுதிகளைவிட்டு விலகியிருக்குமாறு அமைய வேண்டும்.

2. உணவு தயாரிப்புவளாகம், பராமரிப்பதற்கு, உணவு தயாரிப்பிற்கு 
மற்றும் உணவை சேமிப்பதற்குத் தேவையான போதுமானஅளவு 
எல்லாவகையிலும் தூய்மையான சுற்றுப்புறம் கொண்ட இடத்தைக் 
கொண்டிருக்க வேண்டும்.

3. மேறப்டி இடம் சுத்தமாகவும், போதுமான வெளிச்சம் மற்றும் 
காற்றோட்டத்துடன் இருப்பதுடன், நடமாட்டத்திற்குப் போதுமான 
இடவசதியையும் கொண்டிருக்க வேண்டும்.

4. மேற்படி இடத்தின் தரைப்பகுதி, மற்றும் மேற்கூரை ஆகியவற்றை  
கீரல், விரிசல் ஏதுமின்றி நல்லநிலையில், சுத்தம் செய்வதற்கு ஏதுவாக இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

5.பூச்சிகள் தயாரிப்புக் கூடத்திற்குள் இல்லாதவாறு, தரை, சுவர் இடுக்குப் பகுதிகளை தேவைக்கேற்ற சிறந்த கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். உணவு தயாரிப்பின்போது பூச்சிமருந்து தெளிக்கக்கூடாது. ஆனால் வளாகத்தின் உள்ளே நுழையும் பூச்சிகளுக்கு, அவற்றை கவர்ந்து கொல்லும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். சன்னல்கள், கதவுகள் மற்றும் பிற திறவைகளை வலை அல்லது திரையமைத்து, பூச்சிகளில்லா இடமாகப் பராமரிக்க வேண்டும். உணவு 
தயாரிப்புக்குப்பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இருப்பதோடு, 
தேவைப்பட்டால்அங்கீகரிக்கப்பட்டபரிசோதனைக்கூடங்களில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ரசாயன மற்றும் நுண்ணுயிரியல் பரிசோதனை செய்ய வேண்டும்.

6. தூய்மையான தணண்ர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய  
வேண்டும், விட்டு, விட்டு தண்ணீர் விநியோகம் இருக்கும் பட்சத்தில், 
உணவில் பயன்படுத்த அல்லது சுத்தம் செய்ய, தண்ணீரைப் பாதுகாப்பாக சேமிக்க, போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

7. இயந்திரங்கள், மற்றும் உபகரணங்கள் பயன்பாட்டின்போது சுத்தம் 
    செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.  
    கொள்கலன்கள், மேசைகள் மற்றும் இயந்திரங்களின் செயற்பகுதிகள் 
    போன்றவற்றை சுத்தம் செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க   
    வேண்டும்.

8. உடல்நலக்கேட்டை ஏற்படுத்தக்கூடிய உலோக நச்சுத்தன்மையை 
   ஏற்படுத்தக்கூடிய சாதனங்கள் அல்லது கொள்கலன்களை, உணவு 
   தயாரிக்கவோ, பேக்கிங் செய்யவோ அல்லது சேகரிக்கவோ 
  பயன்படுத்தக் கூடாது. (செமபு,அல்லது பித்தளைப் பாத்திரங்கள் 
 முறையான முலாம் பூச்சை கொண்டிருக்க வேண்டும்).

9. உணவு தயாரிப்புப் பணி முடிந்தவுடன், பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களை சுத்தமாகக் கழுவி, பூஞ்சைத்தொற்று ஏற்படாதவாறு உலர்த்தி அடுக்கி வைக்கப்பட வேண்டும்.

10.ஆய்வு செய்ய ஏதுவாக அனைத்து உபகரணங்களும்  சுவர்ப்பகுதியிலிருந்து போதுமான இடைவெளியுடன் அமைக்கப்பட வேணடும்.

11.சேகரமாகும் கழிவுகளையும் கழிவுநீரையும் முறைப்படி அப்புறப்படுத்த போதுமான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

12. தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் பணிக்கான பணியாளர்கள், தொப்பி, கையுறை(GLOVES), மேலங்கிகள்(APRON) ஆகியவற்றை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

13. தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரை பணியில் ஈடுபடுத்தக் கூடாது.காயம், புண்களுக்கு உரிய கட்டுப்போடப்பட்டு, அப்பணியாளர்களை உணவுடன் நேரடித்தொடர்பு கொள்ள அனுமதிக்கக் கூடாது.

14. பணியாளர்கள் நகங்களை வெட்டி சுத்தமாக பராமரிப்பதுடன், பணியை தொடருமுன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பின்பும் சோப்பு அல்லது தொறறு நீக்கியால் கைகளைக் கழுவவேண்டும். உணவைக் கையாளும்போது தலை மற்றும் உடற்பகுதிகளைச் சொறிவதை தவிர்க்க வேண்டும்.

15. உணவைக் கையாள்வோர், உணவில் விழக்கூடிய போலிநகங்கள் அல்லது பிற ஆபரணங்கள் போன்றவற்றை அணிவதைத் தவிர்ப்பதோடு, பணிநேரங்களில், அவர்கள் தங்களின் முகம் மற்றும் முடியைத் தொடுவதையும தவிர்க்க வேண்டும்.

16. வளாகத்தினுள் குறிப்பாக உணவைக் கையாளும்போது, உணவு உட்கொள்ளுதல், வாயை மெல்லுதல், புகைபிடித்தல, துப்புதல், மூக்கை சீந்துதல் ஆகியவை தடை செய்யப்பட வேண்டும்.

17. அசுத்தமாவதைத் தவிர்க்க, சேமித்த அல்லது விற்பனைக்கு  வைக்கப்பட்டிருக்கும் பொருட்களனைத்தும், முறையான மூடியுடன் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

18. உணவை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் வண்டிகள், சுத்தமாவும்,சுகாதாரமாகவும், நன்கு பழுதுநீக்கம் செய்யப்பட்டும் பராமரிக்கப்பட வேண்டும்.

19.பொட்டலமிடப்பட்ட (பேக்கட்டுகளில்) அல்லது கொள்கலன்களில்  உணவை எடுத்துச்செல்லும்போது, அதற்கான வெப்பநிலையை  பராமரிக்க வேண்டும்.

20.பூச்சிக்கொல்லிகள் ,கிருமிநாசினிகள் மற்றும் சோப்பு போன்ற சுத்தம் செய்யும் பொருட்களை உணவு தயாரிக்குமிடம், உணவு இருப்பு வைக்குமிடம் மற்றும் உணவைக் கையாளுமிடம் ஆகிய இடங்களுக்குத் தொடர்பின்றி, தனியிடத்தில் வைக்க வேண்டும்.
                                                                             
                                                                              உணவு தயாராகி இன்னும் வரும் . . . 

டிஸ்கி: பாராட்டப்பட வேண்டிய தமிழாக்க முயற்சி இது. நன்றி- நண்பர் கொண்டல்ராஜிற்கு.
Follow FOODNELLAI on Twitter

46 comments:

இராஜராஜேஸ்வரி said...

பாராட்டப்பட வேண்டிய தமிழாக்க முயற்சி அருமையாக பயனுள்ளவகையில் அனைவருக்கும் எளிதில் புரிந்துகொள்ளத்தக்க ஆக்கபூர்வமான சாதனை செய்தவருக்கு மனம் நிறைந்த நன்றிகள்...

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்...

FOOD NELLAI said...

//இராஜராஜேஸ்வரி said...
பாராட்டப்பட வேண்டிய தமிழாக்க முயற்சி அருமையாக பயனுள்ளவகையில் அனைவருக்கும் எளிதில் புரிந்துகொள்ளத்தக்க ஆக்கபூர்வமான சாதனை செய்தவருக்கு மனம் நிறைந்த நன்றிகள்...//
நன்றிகளை நண்பர் கொண்டல்ராஜிற்கு சென்று சேர்த்துவிடுகிறேன்.

FOOD NELLAI said...

// இராஜராஜேஸ்வரி said...
அருமையான பகிர்வுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்...//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ

Asiya Omar said...

உணவு தயாரிப்பு பணி,பராமரிப்பது பற்றிய நல்லதொரு பகிர்வு.நன்றி.

விக்கியுலகம் said...

அண்ணே உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் நன்றிகள்!

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு கொஞ்சம் தான் புருஞ்சுது.. அப்போ நான் பாமரன் இல்லையா? ஹி ஹி

மொக்கராசா said...

ultimate post...

i have couple of questions

1.இந்தியா முழுமைக்கு இந்த சட்டம் பொருந்துமா......
2.யாரால் இயற்றப்படுகிறது இந்த சட்டங்கள்...... அவர்கள் உங்கள் கருத்துகளை இந்த மாதிரி சட்டம் இயற்று போது பிரதிபலிப்பார்களா..
3.இந்த சட்டங்களை காலத்திற்கேற்ப சில சில மாற்றங்கள் செய்ய இயலுமா....

வீடு K.S.சுரேஸ்குமார் said...

20 வழிமுறைகள் கூறியுள்ளீர்கள் இதை முறையாக பின்பற்றினாலே போதும்....உணவு தொழில் சுகாதாரமானதாக அமையும் என்பது தின்னம்....பகிர்ந்த உங்களுக்கு நன்றி நண்பருக்கும் நன்றிகள்!

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான பாராட்டப்படவேண்டிய முயற்சி வாழ்த்துக்கள் ஆபீசர்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
எனக்கு கொஞ்சம் தான் புருஞ்சுது.. அப்போ நான் பாமரன் இல்லையா? ஹி ஹி//

அடிங் கொய்யால மூதேவி ராஸ்கல்.....

ஆமினா said...

உங்கள் நண்பரின் அருமையான முயற்சிக்கு பாராட்டுக்கள் அண்ணா

நீங்க சொன்ன விஷயங்கள் யாரும் அதிகமாக கவனத்தில் கொள்வது போலவே தெரிவதில்லையே...


பேக்கரிகளில், சிறுதொழில்களில், ஹோட்டல்களில்..... வெறும் லாபத்தை மட்டுமே தான் கவனத்தில் கொள்கிறார்கள்.

நல்லதொரு பகிர்வு அண்ணா
நிச்சயம் தொடருங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப நல்ல விஷயம். தமிழாக்கத்தை ஒரு புத்தகமாகவோ அல்லது அரசு இணையதளத்திலோ வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். உங்கள் இருவருக்கும் நன்றிகள் ஆபீசர்!

மனசாட்சி said...

தமிழாக்கம்...நன்றி. பாராட்டுக்கள்

Prabu Krishna said...

அருமையான முயற்சி.

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தல் குறைத்தல் பற்றி உள்ளதா? இல்லை அடுத்த பகுதியில் அது பற்றி வருமா?

NAAI-NAKKS said...

NANRI OFFICER...

சென்னை பித்தன் said...

பயனுள்ள ,அவசியமான பதிவு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்...

முயற்சிக்கு நன்றி..

தொடருங்கள்..

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்ப நல்ல விஷயம். தமிழாக்கத்தை ஒரு புத்தகமாகவோ அல்லது அரசு இணையதளத்திலோ வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். உங்கள் இருவருக்கும் நன்றிகள் ஆபீசர்!//


யோவ்... பதிவ படிச்சிட்டு இததான் சொல்லனும்னு கீழ வந்தா அதையே நீயும் சொல்லிருக்க? சரி விடி நல்லத யார் சொன்னா என்ன?

@ ஆபிசர்
இதற்கும் முயற்சி எடுக்கவும் :-))

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

கே. ஆர்.விஜயன் said...

சுகாதாரம் சுற்றுப்புறம் எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் நடைமுறைபடுத்தப்பட்டால் மக்களுக்கு சுகாதாரமான உணவுபதார்த்தங்கள் கிடைக்கும். நல்ல முறையில் நடைமுறை படுத்தப்பட்டால் எல்லோருக்கும் நன்மை. வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
பார்க்க:
http://www.tamilvaasi.com/2012/03/blog-post.html

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சூப்பர் ஆபிசர்.. எளிமையான விளக்கம்.

FOOD NELLAI said...

//Asiya Omar said...
உணவு தயாரிப்பு பணி,பராமரிப்பது பற்றிய நல்லதொரு பகிர்வு.நன்றி.//
நன்றி சகோ.

FOOD NELLAI said...

// விக்கியுலகம் said...
அண்ணே உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் நன்றிகள்!//
நன்றிங்க.

FOOD NELLAI said...

// சி.பி.செந்தில்குமார் said...
எனக்கு கொஞ்சம் தான் புருஞ்சுது.. அப்போ நான் பாமரன் இல்லையா? ஹி ஹி//
பதிவைப் படிச்சவங்களுக்கெல்லாம் புரிஞ்சுதாம்!

FOOD NELLAI said...

// மொக்கராசா said...
ultimate post...

i have couple of questions

1.இந்தியா முழுமைக்கு இந்த சட்டம் பொருந்துமா......
2.யாரால் இயற்றப்படுகிறது இந்த சட்டங்கள்...... அவர்கள் உங்கள் கருத்துகளை இந்த மாதிரி சட்டம் இயற்று போது பிரதிபலிப்பார்களா..
3.இந்த சட்டங்களை காலத்திற்கேற்ப சில சில மாற்றங்கள் செய்ய இயலுமா....//
1.மத்திய அரசின் இந்த சட்டம் இந்தியா முழுவதும் 05.08.11 முதல் அமலுக்கு வந்துள்ளது.
2.இத்தகைய சட்டங்கள், மத்திய அரசில் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு வடிவமைக்கப்படுகிறது.
3.அன்றாடம் தேவைக்கேற்ப,புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது.
வருகைக்கும், கேள்விகளுக்கும் நன்றி நண்பரே.

FOOD NELLAI said...

// வீடு K.S.சுரேஸ்குமார் said...
20 வழிமுறைகள் கூறியுள்ளீர்கள் இதை முறையாக பின்பற்றினாலே போதும்....உணவு தொழில் சுகாதாரமானதாக அமையும் என்பது தின்னம்....பகிர்ந்த உங்களுக்கு நன்றி நண்பருக்கும் நன்றிகள்!//
இன்னும் தொடர்ந்து தர இருக்கிறேன். நன்றி.

FOOD NELLAI said...

// MANO நாஞ்சில் மனோ said...
அருமையான பாராட்டப்படவேண்டிய முயற்சி வாழ்த்துக்கள் ஆபீசர்...!!!//
நன்றி மனோ.

FOOD NELLAI said...

// MANO நாஞ்சில் மனோ said...
சி.பி.செந்தில்குமார் said...
எனக்கு கொஞ்சம் தான் புருஞ்சுது.. அப்போ நான் பாமரன் இல்லையா? ஹி ஹி//

அடிங் கொய்யால மூதேவி ராஸ்கல்.....//
படித்தவர்களுக்குப் புரிந்துள்ளது மனோ. விட்ருங்க பாவம்.

FOOD NELLAI said...

// ஆமினா said...
உங்கள் நண்பரின் அருமையான முயற்சிக்கு பாராட்டுக்கள் அண்ணா
நீங்க சொன்ன விஷயங்கள் யாரும் அதிகமாக கவனத்தில் கொள்வது போலவே தெரிவதில்லையே...
பேக்கரிகளில், சிறுதொழில்களில், ஹோட்டல்களில்..... வெறும் லாபத்தை மட்டுமே தான் கவனத்தில் கொள்கிறார்கள்.
நல்லதொரு பகிர்வு அண்ணா
நிச்சயம் தொடருங்கள்//
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோ. விழிப்புணர்வு மட்டுமே நம் வேதனைகள் தீர்க்க உதவிடும்.தொடர்கிறேன் சகோ.

FOOD NELLAI said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்ப நல்ல விஷயம். தமிழாக்கத்தை ஒரு புத்தகமாகவோ அல்லது அரசு இணையதளத்திலோ வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். உங்கள் இருவருக்கும் நன்றிகள் ஆபீசர்!//
ஒரு சிறு முயற்சியை நண்பர் தொடங்கியுள்ளார். அதனை ஊக்குவிக்க, என் தளத்தில் பகிர்ந்துள்ளேன். நிச்சயம் உங்கள் ஆலோசனைகள்,பலரைச் சென்றடைய உதவிடும்.
மொத்த ஷரத்துக்களையும், தமிழாக்கம் செய்திட சிறிது காலம் ஆகும். முயல்கிறோம். நன்றி சார், தங்கள் ஊக்குவிப்பிற்கு.

FOOD NELLAI said...

// மனசாட்சி said...
தமிழாக்கம்...நன்றி. பாராட்டுக்கள்//
நன்றி.

FOOD NELLAI said...

//Prabu Krishna said...
அருமையான முயற்சி.

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தல் குறைத்தல் பற்றி உள்ளதா? இல்லை அடுத்த பகுதியில் அது பற்றி வருமா?//
உணவுப்பொருட்களை பொதியப் பயன்படுத்தும் பொருட்கள், கொள்கலன்கள் குறித்து மட்டுமே இதில் கூறப்பட்டிருக்கும்.
பிளாஸ்டிக் பயன்பாடு குறைத்தல் பற்றி, சுற்றுச்சூழல் குறித்த சட்டங்களில் மட்டுமே காணலாம்.
நன்றி பிரபு.

FOOD NELLAI said...

//NAAI-NAKKS said...
NANRI OFFICER...//
இது பற்றி நாம ஃபோன்ல பேசுவோமே! :))

FOOD NELLAI said...

// சென்னை பித்தன் said...
பயனுள்ள ,அவசியமான பதிவு.//
நன்றி அய்யா.

FOOD NELLAI said...

//கவிதை வீதி... // சௌந்தர் // said...
அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்...

முயற்சிக்கு நன்றி..

தொடருங்கள்..//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சார்.

FOOD NELLAI said...

// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்ப நல்ல விஷயம். தமிழாக்கத்தை ஒரு புத்தகமாகவோ அல்லது அரசு இணையதளத்திலோ வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். உங்கள் இருவருக்கும் நன்றிகள் ஆபீசர்!//

@ ஆபிசர்
இதற்கும் முயற்சி எடுக்கவும் :-))//

நிச்சயம் நண்பரே.

FOOD NELLAI said...

வைகை said...

//யோவ்... பதிவ படிச்சிட்டு இததான் சொல்லனும்னு கீழ வந்தா அதையே நீயும் சொல்லிருக்க? சரி விடி நல்லத யார் சொன்னா என்ன?//
கருத்தொருமித்த நண்பர்களுக்குள், கருத்துக்கள் வேறு,வேறு வராதே. :))

FOOD NELLAI said...

//Rathnavel Natarajan said...
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.//
நன்றி அய்யா, பகிர்விற்கும், வாழ்த்திற்கும்.

FOOD NELLAI said...

//கே. ஆர்.விஜயன் said...
சுகாதாரம் சுற்றுப்புறம் எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் நடைமுறைபடுத்தப்பட்டால் மக்களுக்கு சுகாதாரமான உணவுபதார்த்தங்கள் கிடைக்கும். நல்ல முறையில் நடைமுறை படுத்தப்பட்டால் எல்லோருக்கும் நன்மை. வாழ்த்துக்கள்.//
நன்றி விஜயன். நம்மாலான எல்லா முயற்சிகளையும் எடுப்போம்.

FOOD NELLAI said...

// தமிழ்வாசி பிரகாஷ் said...
தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
பார்க்க:
http://www.tamilvaasi.com/2012/03/blog-post.html//
ஆஹா, இது வேறயா? வந்துடறேன். நன்றி.

FOOD NELLAI said...

//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சூப்பர் ஆபிசர்.. எளிமையான விளக்கம்.//
நன்றி கருண். காத்திருக்கிறோம் தங்களுக்காக.

! சிவகுமார் ! said...

//தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரை பணியில் ஈடுபடுத்தக் கூடாது.காயம், புண்களுக்கு உரிய கட்டுப்போடப்பட்டு, அப்பணியாளர்களை உணவுடன் நேரடித்தொடர்பு கொள்ள அனுமதிக்கக் கூடாது.//

ஆனால் நடைமுறையில் இது சரியாக பின்பற்றப்படுவதில்லை. பஜ்ஜி கடைகள், சிறு உணவகங்களில் இந்நிலை தொடரத்தான் செய்கிறது.

FOOD NELLAI said...

// ! சிவகுமார் ! said...
//தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரை பணியில் ஈடுபடுத்தக் கூடாது.காயம், புண்களுக்கு உரிய கட்டுப்போடப்பட்டு, அப்பணியாளர்களை உணவுடன் நேரடித்தொடர்பு கொள்ள அனுமதிக்கக் கூடாது.//
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆனால் நடைமுறையில் இது சரியாக பின்பற்றப்படுவதில்லை. பஜ்ஜி கடைகள், சிறு உணவகங்களில் இந்நிலை தொடரத்தான் செய்கிறது.//
இதுவரை சட்டம் தெரியாமலிருந்தது. இப்ப தெரிஞ்சிடுச்சில்ல. அடுத்தமுறை பார்த்தா, கேள்வி கேளுங்க. வழி பிறக்கும். நன்றி.

Krishna said...

Please let me know the clause of the act where the marriage caterers are required to get the license. Because , they dont have a fixed place and permanent staffs