இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 14 May, 2012

சென்னையில் சிவாவுடன் ஒருநாள்.

பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவம்.
              சென்னைப்பக்கம் வந்து சில நாளாச்சு. ”மெட்ராஸ் பவன்”சிவாவிடம் பேசினேன். இந்த வார இறுதியில், என்னுடன் இருக்கவேண்டுமென அன்புக்கட்டளையிட்டார். சரி எங்கு, எப்போது சந்திப்பது என்று கேட்டவுடன், மகிழ்ச்சியில் மனம் மகிழ்ந்தார். சனிக்கிழமை காலை 8 மணிக்குள் தியாகராஜநகர் வாருங்கள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிற்கு செல்லலாமென்றார்.
பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவம்.
                           காலை 6.00 மணிக்கெல்லாம், ஃபோனில் நினைவுபடுத்தினார். என் மகள் குடியிருக்கும் முகலிவாக்கம் விரிவாக்கப்பகுதியிலிருந்து,அந்த நேரத்திற்கு,பஸ் ஏதும் இல்லாததால்,சுமார் 2 கி.மீ. நடந்தே மெயின்ரோடு வந்து, பதினைந்து நிமிடங்கள் காலதாமதமாய் தியாகராஜநகர் சென்றடைந்தேன். முகம் மலர வரவேற்றார். 
பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவம்.
                                  அங்கிருந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிற்குச்சென்றோம்.  கோவிலை அடைந்தபின்னர்தான், சிவா அழைத்துச்சென்றதன்(!) காரணம் புரிந்துகொண்டேன்.பெண்கள் கூட்டம் ’ஜே ஜே’ என்றிருந்தது. கோவிலில், ”பிரம்மோற்சவம்”. கூட்டத்திற்குள் புகுந்து, விறு விறுவென்று கோவிலிற்குள் நுழைந்தோம். திடீரென சிவாவைக்காணவில்லை. 
பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவம்.
                                             சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்தே, கோவிலிற்குள் வந்து சேர்ந்தார்???  கூட்டத்திற்குள் புகுந்தபோது,  இளம்பென் ஒருவர் அவரை மட்டும் வழிமறித்து, ”உள்ளே போகாதீங்கோ, செத்தநாழி, இப்படி நின்னு, தரிசனம்(!) பண்ணிட்டுப்போங்கோ”ன்னு அவர் அருகிலேயே நிறுத்தி வைத்துவிட்டார் என்றார். நாராயணா, நாராயணா!
                                           கோவிலிற்குள் தரிசனம் முடித்து வந்து, வெளியில் நடைபெற்ற உற்சவர் பூஜைகளைப்பார்த்துவிட்டு, நேரே மயிலாப்பூர் புறப்பட்டோம். அந்தக் கூட்டத்தில்,சிவா,அடிக்கடி காணாமல் போனாலும், அடுத்த சில நிமிடங்களில் என்னுடன் வந்து சேர்ந்து கொண்டார்.  ஆட்டோ சென்று நின்ற இடம்- ”கற்பகம்பாள் மெஸ்”. அங்கு, ’நெய்ப்பொங்கல்’ நன்றாக இருக்குமென்று அதை ஆர்டர் செய்தார். அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. ரவா கிச்சடிதான் கிடைத்தது.
கற்பகாம்பாள் மெஸ்ஸில் சிவா
                                                எப்படிங்க இப்படி சென்னை மெஸ்களையும், அவற்றில் ஸ்பெசல் என்னவென்றும் தெரிந்து கொண்டீர்களென்றேன்? எல்லாம், கேபிள் சங்கர்ஜியின் உபயமென்றார். வாழ்க கேபிள் சங்கர்ஜி. அவர் பதிவில் பல உணவகங்களைப்பற்றி எழுதி, அந்த உணவகங்களை வாழ வைப்பதையும், அன்றைய தினத்தில் அவரைச் சந்தித்தபின் அறிந்துகொண்டேன். அந்த அருமையான மனிதரைப்பற்றி, அடுத்த பதிவில். 
மயிலை வசந்தவிழா
                                                 வயிற்றுக்கடன் முடிந்ததும், மயிலை கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள் தரிசனம். அங்கும் நல்ல கூட்டம். ஒவ்வொரு சன்னிதியாக அழைத்துச்சென்று, அழகாய் தரிசனம் செய்ய வைத்தார். ஆனால், அவர் மட்டும் ஆண்டவனிடம் அதிக நேரம் வேண்டிக்கொண்டார். நல்ல மனைவி அமைய ஆண்டவன் அருள்புரியட்டும். மயிலையிலும் வசந்தவிழா கோலாகலம்.
மயிலை வசந்தவிழா
                                        வெளியில் வரும்போது, ஃபிரஞ்சு நாட்டிலிருந்து வந்த பயணிகள் சிலரைப்பார்த்ததும், அதில் ஒருவரிடம் சென்று,சிவா, சுய அறிமுகம் செய்துகொண்டு,இங்கு வந்ததன் நோக்கங்களை கேட்டுத்தெரிந்துகொண்டார். அவர் பெயர் ‘ஜோ’. விடைபெறும்போது, ஃபிரான்ஸிற்கு சிவாவை வரச்சொல்லி அழைப்பு விடுத்துச்சென்றார். 
ஃபிரெஞ்சு நாட்டுக்காரரை கலவரப்படுத்தும் சிவா
                    நிறைய இடங்களில், இந்தியா வரும் வெளிநாட்டுப்பயணிகளை நம் மக்கள் அதிக பணம் கேட்டு ஏமாற்றுகின்றனர். நாம் வலியச்சென்று பேசும்போது, அவர்களுக்கு நம் நாட்டு மக்கள் மீது, மரியாதை பிறக்கும். மேலும்,நாம் கோவிலிற்குச்சென்றால்,இறைவனை தரிசிப்பது, வரம் கேட்பது என்று இயந்திரத்தனமாய் செயல்படுகிறோம்,ஆனால், வெளிநாட்டவர்களோ, இங்கிருக்கும் கோவில்கள் பற்றி முழுமையாகத்தெரிந்து கொண்டு, வந்து முறையாகப் பார்க்க வேண்டிய இடங்கள் அனைத்தையும் சுற்றிப்பார்த்து செல்கின்றனர். எனவேதான், அவர்களிடம் அது பற்றிப்பேசி தெரிந்து கொள்ளவே அறிமுகம் செய்துகொண்டேன் என்றார். என்ன ஒரு பார்வை, ஆச்சரியப்பட்டேன்!


வீட்டில் நல்ல பிள்ளை சிவா
                                      அங்கிருந்து அவர் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். கடந்தமுறை நானும், திரு,சுந்தரராஜன் சாரும் சென்றபோது, வெயிலிற்கு இதமாய், சிவாவின் தாயார்,அன்பும், பாசமும் கலந்து, மோர் கரைத்துக்கொடுத்தார்கள். சரி, இந்த முறையும் அம்மாவின் பாசத்துடன், மோர் கிடைக்கப்போகிறதென்று எண்ணிப்போனேன். சிவா என்ன சொன்னார் என்று தெரியவில்லை. திராட்சை ஜூஸ் கிடைத்தது. 
மயிலை கோவில் முன் நாங்கள்.
                                             அடுத்து, ஒரு வழக்கில்,என்னை இழுத்துவிட்டார்,சிவா.  சத்யம் தியேட்டரில், சிவகுமாரை எட்டி உதைத்த பெண்,கேபிள்ஜி, கே.ஆர்.பி, ஆரூர் மூனா செந்தில்,ஃபிலாசஃபி, அஞ்சாசிங்கம், தஞ்சைக்குமணன் சந்திப்பு,நடந்தது என்ன? காத்திருங்கள். . . 


சந்தோஷச்செய்தி: சென்னையில் பதிவர் சந்திப்பு, அதுவும் யூத் பதிவர் சந்திப்பு. வரும் 20.05.12 ஞாயிறு மாலை 4 மணிக்கு. 
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்,
              6,மஹாவீர் காம்ப்ளக்ஸ்,(முதல் தளம்)
              முனுசாமி சாலை, கே.கே.நகர்-மேற்கு,
               சென்னை-78.
             உறவுகளே வாருங்கள், உன்னத விழாவிற்கு உயிர் கொடுக்க. பதிவர்கள் சந்திப்பதும், உறவை பலப்படுத்துவது மட்டுமே நோக்கமல்ல என்றெண்ணி, புதிய முயற்சியாய்:
  • பதினொரு வயதில், பல சாதனைகள் படைத்துவரும்”இந்தியாவின் பெருமை” - விசாலினிக்கு இனிய  பாராட்டுவிழா. 
  •     ”உதிரம் கொடுத்து, உயிர் காத்திட” - விரும்பும் பதிவர்கள் அரங்கிலேயே இரத்ததானம் வழங்கிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.              
Follow FOODNELLAI on Twitter

45 comments:

இராஜராஜேஸ்வரி said...

மயிலையிலும் வசந்தவிழா கோலாகலம்.

கோலாகல பகிர்வுகள் ! பாராட்டுக்கள் !

இராஜராஜேஸ்வரி said...

மயிலையிலும் வசந்தவிழா கோலாகலம்.

கோலாகல பகிர்வுகள் ! பாராட்டுக்கள் !

இராஜராஜேஸ்வரி said...

மயிலையிலும் வசந்தவிழா கோலாகலம்.

கோலாகல பகிர்வுகள் ! பாராட்டுக்கள் !

சி.பி.செந்தில்குமார் said...

ஆஃபீசர் 2 கி மீ நடந்தாரா? அய்யகோ....!!!சிவாவுக்கு வன்மையான கண்டனங்கள் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>அடுத்து, ஒரு வழக்கில்,என்னை இழுத்துவிட்டார்,சிவா. சத்யம் தியேட்டரில், சிவகுமாரை எட்டி உதைத்த பெண்,கேபிள்ஜி, கே.ஆர்.பி, ஆரூர் மூனா செந்தில்,ஃபிலாசஃபி, அஞ்சாசிங்கம், தஞ்சைக்குமணன் சந்திப்பு,நடந்தது என்ன? காத்திருங்கள்.


ஒரு முறை சென்னை விஜயம்.. 5 பதிவு தேத்திட்டாருடோய்

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
மயிலையிலும் வசந்தவிழா கோலாகலம்.

கோலாகல பகிர்வுகள் ! பாராட்டுக்கள் !//
நன்றி,வருகைக்கும் வாழ்த்திற்கும்.

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
ஆஃபீசர் 2 கி மீ நடந்தாரா? /அய்யகோ....!!!சிவாவுக்கு வன்மையான கண்டனங்கள் ஹி ஹி//
நாராயணா!!!
எப்படித்தான் எங்க உடம்பைக்குறைக்கிறதுங்கோ?

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>அடுத்து, ஒரு வழக்கில்,என்னை இழுத்துவிட்டார்,சிவா. சத்யம் தியேட்டரில், சிவகுமாரை எட்டி உதைத்த பெண்,கேபிள்ஜி, கே.ஆர்.பி, ஆரூர் மூனா செந்தில்,ஃபிலாசஃபி, அஞ்சாசிங்கம், தஞ்சைக்குமணன் சந்திப்பு,நடந்தது என்ன? காத்திருங்கள்.

ஒரு முறை சென்னை விஜயம்.. 5 பதிவு தேத்திட்டாருடோய்//
நாங்க என்ன, சென்னை விஜயம் செய்து, பதிவர்களை வந்து பார்க்க சொல்லுமளவிற்கு அப்பாடக்கர் பதிவரா?
இன்னும் ஒரு பதிவில் சொல்லிடறேனுங்கோ!

Unknown said...

அண்ணே எஞ்சாய்(!) பண்றதும் பண்ணிட்டு சிவா பேர்ல போடுறீங்களே ஹெஹெ!

உணவு உலகம் said...

//விக்கியுலகம் said...
அண்ணே எஞ்சாய்(!) பண்றதும் பண்ணிட்டு சிவா பேர்ல போடுறீங்களே ஹெஹெ!//
விக்கி, உணவு உலக மனசாட்சி! :))

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது சிவாவை ஒரு பெண் கடத்திவிட்டாளா...? ஐயோ ஆபீசர் நீங்க பெல்டை கொண்டு போகலையா மணம் ச்சே மனம் பதறுதே எனக்கு நான் இல்லாம போயிட்டேனே....

MANO நாஞ்சில் மனோ said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்...!!!

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
என்னாது சிவாவை ஒரு பெண் கடத்திவிட்டாளா...? ஐயோ ஆபீசர் நீங்க பெல்டை கொண்டு போகலையா மணம் ச்சே மனம் பதறுதே எனக்கு நான் இல்லாம போயிட்டேனே....//
செத்த நேரம், காலம் கடத்திட்டார்!

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்...!!!//
வந்து கலந்து கொண்டால் நலம்.அனைவரும் மகிழ்வுறுவோம்.

இம்சைஅரசன் பாபு.. said...

வணக்கம் சார் .. சென்னை பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள் ..கோவில் கோவிலா சுத்தி இருக்கீங்க சென்னை போய் ..

உணவு உலகம் said...

// இம்சைஅரசன் பாபு.. said...
வணக்கம் சார் .. சென்னை பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள் ..கோவில் கோவிலா சுத்தி இருக்கீங்க சென்னை போய் ..//
எல்லாம் சிவமயம், சாரி சிவா உபயம்.

Prabu Krishna said...

விசாலினிக்கு பாராட்டு விழா, ரத்த தான விழா என பதிவர் சந்திப்பு அமர்க்களம் ஆகும் போலவே.

நாய் நக்ஸ் said...

சிவாவின்-அம்மாவின் அன்பே அன்பு.....
கண்டிப்பாக அனைவரும் அந்த அன்புக்கு...அடிமைதான்.....

SHE IS A TYPICAL MOTHER.....

ஏங்க வைக்கும் அன்பு....

நாய் நக்ஸ் said...

ஆபீசர் 20 ம் தேதி மிச்ச மீதியை.....

பார்த்துடுவோம்......

Unknown said...

என்னாது சிவாவை ஒரு பெண் கடத்திவிட்டாளா...? ஐயோ ஆபீசர் நீங்க பெல்டை கொண்டு போகலையா மணம் ச்சே மனம் பதறுதே எனக்கு நான் இல்லாம போயிட்டேனே....
//////////////
எதுக்கு போட்டாவா போட்டு நாற்பது பதிவு போடவா......

Unknown said...

சத்யம் தியேட்டரில், சிவகுமாரை எட்டி உதைத்த பெண்,
///////////////////
அடப்பாவமே!சிவா நிலமை இப்படிபோச்சே...!

Unknown said...

NAAI-NAKKS said...
ஆபீசர் 20 ம் தேதி மிச்ச மீதியை.....

பார்த்துடுவோம்....
///////////////

கலவரம் நடக்கும் போல 20ம் தேதி!

அஞ்சா சிங்கம் said...

அவர் மட்டும் ஆண்டவனிடம் அதிக நேரம் வேண்டிக்கொண்டார். நல்ல மனைவி அமைய ஆண்டவன் அருள்புரியட்டும்.........................////////////////////////////////////

அட ஆபீசர் உங்களுக்கு விசயமே தெரியாதா? அவரு பெயரை சிலுவை குமார்ன்னு மாத்த போறார் . அப்புறம் எங்க அம்பாள் அருள் புரிய ...........................................

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துகள்..

Anonymous said...

//அஞ்சா சிங்கம் said...

அட ஆபீசர் உங்களுக்கு விசயமே தெரியாதா? அவரு பெயரை சிலுவை குமார்ன்னு மாத்த போறார் . அப்புறம் எங்க அம்பாள் அருள் புரிய //

கம்பெனி சீக்ரெட்டை வெளில சொல்லாதப்பா!!

கோவை நேரம் said...

நெல்லை புயல் சென்னையில் மையம்...

உணவு உலகம் said...

//Prabu Krishna said...
விசாலினிக்கு பாராட்டு விழா, ரத்த தான விழா என பதிவர் சந்திப்பு அமர்க்களம் ஆகும் போலவே.//
ஆமாம் பிரபு, நேரம் கிடைத்தால், அவசியம் வந்து கலந்து கொள்.

உணவு உலகம் said...

//NAAI-NAKKS said...
சிவாவின்-அம்மாவின் அன்பே அன்பு.....
கண்டிப்பாக அனைவரும் அந்த அன்புக்கு...அடிமைதான்.....

SHE IS A TYPICAL MOTHER.....

ஏங்க வைக்கும் அன்பு....//
கள்ளமற்ற தாயன்பு,அது தூய அன்பு.

உணவு உலகம் said...

//NAAI-NAKKS said...
ஆபீசர் 20 ம் தேதி மிச்ச மீதியை.....

பார்த்துடுவோம்......//
நெல்லையில் நீங்க மிச்சம் வைக்கவேயில்லையே, அப்புறம் எப்படி சென்னையில் மீதியைப்பார்க்கிறது?

உணவு உலகம் said...

//வீடு சுரேஸ்குமார் said...
என்னாது சிவாவை ஒரு பெண் கடத்திவிட்டாளா...? ஐயோ ஆபீசர் நீங்க பெல்டை கொண்டு போகலையா மணம் ச்சே மனம் பதறுதே எனக்கு நான் இல்லாம போயிட்டேனே....
//////////////
எதுக்கு போட்டாவா போட்டு நாற்பது பதிவு போடவா......//
அவருக்கு போட்டியா, நாந்தான் ஃபோட்டோ நிறைய போட்டுட்டேனே!

உணவு உலகம் said...

// வீடு சுரேஸ்குமார் said...
சத்யம் தியேட்டரில், சிவகுமாரை எட்டி உதைத்த பெண்,
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அடப்பாவமே!சிவா நிலமை இப்படிபோச்சே...!//
சிவா நிலைமை இப்படின்னா, ஃபிலாசபி நிலைமை இன்னும் கலவரப்படுத்திட்டு!

உணவு உலகம் said...

//வீடு சுரேஸ்குமார் said...
NAAI-NAKKS said...
ஆபீசர் 20 ம் தேதி மிச்ச மீதியை.....

பார்த்துடுவோம்....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கலவரம் நடக்கும் போல 20ம் தேதி!//
பெல்ட், பெல்ட்.

உணவு உலகம் said...

//அஞ்சா சிங்கம் said...
அவர் மட்டும் ஆண்டவனிடம் அதிக நேரம் வேண்டிக்கொண்டார். நல்ல மனைவி அமைய ஆண்டவன் அருள்புரியட்டும்....................
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அட ஆபீசர் உங்களுக்கு விசயமே தெரியாதா? அவரு பெயரை சிலுவை குமார்ன்னு மாத்த போறார் . அப்புறம் எங்க அம்பாள் அருள் புரிய //
சத்யமேவ ஜெயதே!!!
எல்லாம் சின்னப்பொட்டி செய்ற மாயை.

உணவு உலகம் said...

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
வாழ்த்துகள்..//
எதுக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு இருக்கீங்க?
வந்து சென்னைப்பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளுங்க கருண்.

உணவு உலகம் said...

//! சிவகுமார் ! said...
அஞ்சா சிங்கம் said...
அட ஆபீசர் உங்களுக்கு விசயமே தெரியாதா? அவரு பெயரை சிலுவை குமார்ன்னு மாத்த போறார் . அப்புறம் எங்க அம்பாள் அருள் புரிய
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கம்பெனி சீக்ரெட்டை வெளில சொல்லாதப்பா!!//
ஆமா அதுக்குத்தானே, சாகர் ரெஸ்டாரெண்டில், ரெண்டு பாட்டில் தண்ணீர்(மினரல் வாட்டருங்கோ),சிங்கத்திற்கு ஸ்பெஷலா வாங்கிக்கொடுத்தீங்க,சிவா!!

உணவு உலகம் said...

//கோவை நேரம் said...
நெல்லை புயல் சென்னையில் மையம்...//
நெல்லையை விட்டுக்கிளம்பியதும், நெல்லையில் நல்ல மழையாம்! பாவம்,சென்னைதான் காயுது.

கோகுல் said...

விடைபெறும்போது, ஃபிரான்ஸிற்கு சிவாவை வரச்சொல்லி அழைப்பு விடுத்துச்சென்றார். //
அப்ப பாரீஸ் பவன் அப்டின்னு ஒரு பிளாக் விரைவில் துவக்கப்ப்படும்னு சொல்லுங்க.

உணவு உலகம் said...

//கோகுல் said...
விடைபெறும்போது, ஃபிரான்ஸிற்கு சிவாவை வரச்சொல்லி அழைப்பு விடுத்துச்சென்றார்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அப்ப பாரீஸ் பவன் அப்டின்னு ஒரு பிளாக் விரைவில் துவக்கப்ப்படும்னு சொல்லுங்க.//
ஆனா,இப்ப சிவாவோட கவனமெல்லாம், வேறொரு பவன்மேல இருக்குதாம், அஞ்சாசிங்கத்தைக்கேளுங்க சொல்வாரு!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆகா.... உணவுலகம் ஆரம்பிச்சுட்டார்......

சிவா அடிக்கடி காணாம போனத ஆபீசர் கேட்டறிந்து தனி பதிவா போடணும்....

தமிழ்வாசி பிரகாஷ் said...

பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...

Anonymous said...

சிவா முழுசா உரிச்சி காட்டிட்டீங்க போல.

உணவு உலகம் said...

// தமிழ்வாசி பிரகாஷ் said...
ஆகா.... உணவுலகம் ஆரம்பிச்சுட்டார்......

சிவா அடிக்கடி காணாம போனத ஆபீசர் கேட்டறிந்து தனி பதிவா போடணும்....//
பேராசைங்க உங்களுக்கு!

உணவு உலகம் said...

//ஆரூர் மூனா செந்தில் said...
சிவா முழுசா உரிச்சி காட்டிட்டீங்க போல.//
அஞ்சாசிங்கம் வேற வரிஞ்சு கட்டிட்டு வாறாரே!

உணவு உலகம் said...

//Rathnavel Natarajan said...
அருமையான பதிவு.
வாழ்த்துகள்.//
நன்றி அய்யா. சென்னைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலுமாவென திட்டமிடுங்கள்.

'பரிவை' சே.குமார் said...

சிவாவுடன் ஒரு அருமையான ரவுண்ட்-அப்.

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.