இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Wednesday, 16 May, 2012

சென்னையில் சிறு பதிவர் சந்திப்பு.

சத்யம் வளாகத்தில் சிவாவை எட்டி உதைத்த பெண்

இதன் முதல் பாகம் இங்கே
                               ஆம், அடுத்து என்னை சிவா அழைத்துச்சென்ற இடம். சத்யம் தியேட்டர்.வாங்க சார் படம் பார்க்கலாமென்று வழக்கு எண்.18/9ல்  வசமாய் சிக்கவைத்துவிட்டார். இப்போதெல்லாம், தியேட்டர் சென்று படம் பார்ப்பதென்பது, மிக அரிதாகிவிட்டது.ஆனால், சத்யம் வளாகம் சென்று சினிமா பார்த்ததும், ஓர் அனுபவம்தான். அத்தனை சுத்தம். விகடனில் 55 மார்க் வாங்கிய படம்.  இருக்கையை விட்டு எழுந்து செல்ல மனம் வரவில்லை. சத்யம் வளாகத்தில், புகைப்படம் எடுக்க அனுமதியில்லையாம். கிடைத்த கேப்பில், சிவாவை ஒரு நாட்டிய வால்போஸ்டருக்கருகில் நிறுத்தி நான் எடுத்தபடத்தைப் பார்த்தபோது, அப்பெண் சிவாவை எட்டி உதைப்பது போன்று அமைந்திருந்தது.

இவையெல்லாம் சிவா மட்டும் உணவருந்திய பாத்திரங்களில்லை!
                              படம் முடிந்ததும், தாஜ் ஹோட்டலில் மதிய உணவு. செம கட்டு. சென்னை வரும் வெளியூர் பதிவர்கள் கவனிக்க. வருமுன் சிவாவிடம் சொல்லிவிட்டால், வார இறுதியில் இப்படி வெளியே அழைத்துச்சென்று, கௌரவப்படுத்துவது அவர் ஸ்டைலாம்! அடுத்த நாள் சிபிக்கும், சிவா இப்படியோர் இனிமையான விருந்தளித்ததாகத் தகவல். சிபி பதிவில், விரைவில் எதிர்பார்க்கலாம். அப்போதே, மாலை ஐந்து மணி நெருங்கியது.
உண்ட மயக்கத்தில் தாஜ் ஹோட்டலில்.
                   தாம் கேபிள்ஜியுடன் அவரது வாகனத்தில் வருவதால்,மெரினா காந்திசிலைக்கு,ஆட்டோ பிடித்து, மினி பதிவர் சந்திப்பிற்கு எங்களை வரச்சொன்னார், திரு.கே.ஆர்.பி.செந்தில். அவர்கள் ஷேர் ஆட்டோவில் வருவதாக சிவா சொன்னார். ஆட்டோவில் ஏறி, காந்தி சிலையை அடைந்தோம். 
கேபிள்ஜி வந்த ஷேர் ஆட்டோ

சிவா சத்யமாக “பாஸ் பாஸ்”தான் போடுகிறார்.

கடற்கரை காந்தி சிலைகாந்தி சிலை முன்பு காவல்துறை ஆர்கெஸ்ட்ரா.
                   


                                   விடுமுறை நாட்களில், காவல்துறை ஆர்கெஸ்ட்ரா காந்திசிலை முன் வாசிப்பது வழக்கமாம். அதனை சிறிது நேரம் ரசித்துவிட்டு,   கடற்கரையில் அலைகளை(!) ரசித்துக் காத்திருந்தோம் , நண்பர்கள் வருகைக்காக. முதலில் வந்து சேர்ந்தது திரு.ஆரூர் மூனா செந்தில். கடந்த வாரம் ரயில்வே பணியில் சேர்ந்ததையும், வடநாட்டவர் ஆதிக்கம் எப்படி ரயில்வேத்துறையில் பெருகிவருகிறதென்பதையும் சொல்லி பதைபதைத்தார். தமிழகம், வந்தாரை வாழ வைக்கும் பூமியல்லவா!
ஆரூர் மூனா செந்திலுடன் நான்
                         அடுத்து வந்து சேர்ந்தவர் அஞ்சாசிங்கம் செல்வின். செல்வினுக்கும், சிவாவிற்கும், சேனல் போட்டி ஒன்று நடைபெறுவதை அவர்கள் பேச்சிலிருந்து அறிந்துகொண்டேன்.  சிவகுமார் சிலுவைகுமாராகிறாராம். விபரமறிய அலைபேசியை நாடுங்கள். அருகிலிருந்த கடையிலிருந்து சிவா,செல்வினுக்கு,அடிக்கடி குளிர்ந்த நீர் வாங்கிக்கொடுத்து குளிர்வித்துக்கொண்டிருந்தார்???திருவாளர்கள் சென்னைபித்தன், சிராஜ், காவேரி கணேஷ், ஃபிலாசபி பிரபாகரன் ஆகியோரிடம்,சிவா செல்லில் தொடர்பு கொண்டார். ஃபிலாசஃபி தவிர மற்றவர்களிடம் செல்லில் பேசினேன். சற்றே தாமதமாய் ஃபிலாசஃபி வந்தார். 
ஆரூர் மூனா செந்தில், ஃபிலாசஃபி, நான், செல்வின்
                ஃபிலாசஃபி மேட்னிஷோவில், கலகலப்பு படம் பார்த்துக்கொண்டிருந்ததால், அலைபேசியில் பேசமுடியவில்லையென்றார். கூட்டம் களை கட்டியது. டிராஃபிக்கில் மாட்டி, மிக காலதாமதமாய் தலையும், தளபதியும் வந்துசேர்ந்தனர். கடற்கரை வந்தபின்னரும், அவரது நானோ காரை பார்க் பண்ணமுடியாமல் சிரமப்பட்டார் கேபிள்ஜி. மஞ்சள் நிறமாயிருந்த அதைத்தான், கேபிள்ஜியின் ஆட்டோ என சிவா கலாய்த்துக்கொண்டிருந்தார்.

ஃபிலாசபி,நான்,கேபிள்சங்கர்ஜி(தலை), கேஆர்பி(தளபதி),செல்வின் .
ஃபிலாசஃபி நகம் கடிப்பதேன்???’கலகலப்பு’ கிளுகிளுப்பானதாலோ!

              

                           

                            தலையும், தளபதியும் வந்தவுடன் கூட்டம் களைகட்டியது.  சென்னைப்பதிவர் சந்திப்பு,  அதில் செய்யப்போகும் சமூக சேவைகள், சினியுலகம் என பல தளங்களில் பேச்சு வலம் வந்தது. கேபிள்ஜியை சந்திக்குமுன், அவரெல்லாம் இவ்வளவு எளிமையான மனிதர் என்று நான் எண்ணவில்லை. இத்தனை உயரங்கள் எட்டிய பின்னும், இன்னும் மனிதரிடம் எளிமையும், மனிதமும் எக்கச்சக்கம். கேபிள்ஜியின் அடுத்த பரிணாமமான வசனகர்த்தா, இயக்குனர் போன்றவை குறித்தும் பேசினோம். 

                                    நேரம் செல்லச்செல்ல, நாம் சென்று சேர வேண்டிய இடத்திற்கு வாகன வசதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலை என்னைத்தொற்றிக்கொண்டது. எனினும், கலந்துரையாடலின் கலகலப்பு, காலத்தையும், கவலையையும் மறக்கச்செய்தது. முடிவில், தி.நகர் வரை, கேபிள்ஜி அவரது ஆட்டோவில் என்னையும், சிவாவையும் கொண்டுவந்து விட்டுச்சென்றார். காலைபோல், மெயின்ரோட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்துவந்து வீடு சேர்ந்தேன். நான் வீடு சென்று சேரும்வரை, சிவாவின் அன்பும், செல் அழைப்பும் என்னைத்தொடர்ந்து கொண்டேயிருந்தது. மறக்க முடியாத நாள் அது.

Follow FOODNELLAI on Twitter

41 comments:

விக்கியுலகம் said...

ம்ம்ம் அண்ணே பின்னிட்டேள் போல!

தமிழ்வாசி பிரகாஷ் said...

சார், மினி சந்திப்புன்னு போட்டு சென்னை படை வீரர்கள் அனைவரையும் பார்த்து விட்டீரே.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

நீங்களும் சிபி, மனோ ரேஞ்சுக்கு படங்கள் போட்டு அசத்திடிங்க.....

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

:))

FOOD NELLAI said...

//விக்கியுலகம் said...
ம்ம்ம் அண்ணே பின்னிட்டேள் போல!//
வரும் ஞாயிறு அன்றுதான், மெயின் பிகசரே இருக்கு.

FOOD NELLAI said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
சார், மினி சந்திப்புன்னு போட்டு சென்னை படை வீரர்கள் அனைவரையும் பார்த்து விட்டீரே.....//
வரும் 20ந்தேதி (சென்னைக்கு) வாங்க பழகலாம்

ஆரூர் மூனா செந்தில் said...

சார், இதை விட வரும் ஞாயிறன்று அதிகமாகவே கலக்கி விடலாம். சிவாவுடன் ஒரு நாள் சிறப்பு தான்.

FOOD NELLAI said...

// தமிழ்வாசி பிரகாஷ் said...
நீங்களும் சிபி, மனோ ரேஞ்சுக்கு படங்கள் போட்டு அசத்திடிங்க.....//
மனோ சரி, அது என்ன சிபி ரேஞ்சுக்குன்னு சொல்லி, என்னை கேவலப்படுத்திட்டீங்களே!!!

FOOD NELLAI said...

//சங்கர் நாராயண் @ Cable Sankar said...
:))//
வணக்கம் அண்ணா.

கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே எங்களின் மனம் கவர்ந்தவர் நீங்களும்தான்:))

FOOD NELLAI said...

//ஆரூர் மூனா செந்தில் said...
சார், இதை விட வரும் ஞாயிறன்று அதிகமாகவே கலக்கி விடலாம். சிவாவுடன் ஒரு நாள் சிறப்பு தான்.//
ஆமாம், ஒவ்வொரு பதிவிலும், என் வலைப்பூவின் மேல்பக்கத்திலும், சென்னை பதிவர் சந்திப்பு அழைப்பு மலர்ந்துள்ளது பார்த்தீர்களா நண்பரே?

FOOD NELLAI said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே எங்களின் மனம் கவர்ந்தவர் நீங்களும்தான்:))//
அந்த தகுதியை எனக்களித்த உறவுகள் நீங்கள்.

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

துபாய் ராஜா said...
This comment has been removed by the author.
துபாய் ராஜா said...

பலமாத பரபரப்பான கல்யாண வேலைகளுக்குப் பிறகு நல்லதொரு ரிலாக்ஸான பயணமும், அருமையான பதிவுலக நண்பர்கள் சந்திப்பும் உங்களுக்கு புத்துணர்ச்சியை தந்திருப்பது படங்களிலும், பதிவிலும் தெரிகிறது. வாழ்த்துக்கள் சித்தப்பா சார்.

MANO நாஞ்சில் மனோ said...

சென்னை கடற்கரையில் சுனாமிகளின் கலந்துரையாடல்.....!!!

அஞ்சா சிங்கம் said...

உங்களை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது .......

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா கோவை சரளா வடிவேலை மிதிச்சாப்புல இருக்கே, மனசுக்கு இப்போதான் சந்தோஷமா இருக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது நானோ காரு ஷேர் ஆட்டோவா யார் சொன்னது சிவாவா....? எலேய் சண்முகபாண்டி எட்றா அந்த அருவாளை..!!

Prabu Krishna said...

சூப்பர்...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள் ஆபீசர்., உங்கள் சந்திப்பு இனிமையானதென வரிகளில் உணர்த்திய இடுகை நன்று.

வீடு சுரேஸ்குமார் said...

கொஞ்சம் மிச்சம் வைங்க நாங்க கட்டுசோறு கட்டிகிட்டு வந்திட்டே இருக்கிறோம் ஆபிசர்! சென்னை நெல்லை மாதிரி கலகலக்கப்போகுது......

FOOD NELLAI said...

//துபாய் ராஜா said...
பலமாத பரபரப்பான கல்யாண வேலைகளுக்குப் பிறகு நல்லதொரு ரிலாக்ஸான பயணமும், அருமையான பதிவுலக நண்பர்கள் சந்திப்பும் உங்களுக்கு புத்துணர்ச்சியை தந்திருப்பது படங்களிலும், பதிவிலும் தெரிகிறது. வாழ்த்துக்கள் சித்தப்பா சார்.//
நன்றி ராஜா.
தங்களின் இந்திய எண்ணில், 10 நாட்களுக்குமுன், இருமுறை தொடர்பு கொண்டேன். ஸ்விட்ச் ஆஃப் என்றே பதில் கிடைத்தது. சிங்கை சென்றாச்சா?

FOOD NELLAI said...

//MANO நாஞ்சில் மனோ said...
சென்னை கடற்கரையில் சுனாமிகளின் கலந்துரையாடல்.....!!!//
மும்பை தாதாவும் வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.:)

FOOD NELLAI said...

//MANO நாஞ்சில் மனோ said...
சென்னை கடற்கரையில் சுனாமிகளின் கலந்துரையாடல்.....!!!//
மும்பை தாதாவும் வந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.:)

FOOD NELLAI said...

//அஞ்சா சிங்கம் said...
உங்களை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது .......//
மகிழ்ச்சி சிங்கம். அதிலும் நீங்கள் சொன்ன அந்த ’சிலுவைகுமார்’ மேட்டர்,நெஞ்சிலேயே நிக்குதே!

FOOD NELLAI said...

//MANO நாஞ்சில் மனோ said...
ஆஹா கோவை சரளா வடிவேலை மிதிச்சாப்புல இருக்கே, மனசுக்கு இப்போதான் சந்தோஷமா இருக்கு.//
எப்படில்லாம் ரசிக்கிறாங்கப்பா!!!

FOOD NELLAI said...

//MANO நாஞ்சில் மனோ said...
என்னாது நானோ காரு ஷேர் ஆட்டோவா யார் சொன்னது சிவாவா....? எலேய் சண்முகபாண்டி எட்றா அந்த அருவாளை..!!//
அப்படியே உருவிய வாளோட, 20ந்தேதி பதிவர் சந்திப்பிற்கு வந்து சேர்ந்திருங்க.

FOOD NELLAI said...

// Prabu Krishna said...
சூப்பர்...//
நன்றி பிரபு.

FOOD NELLAI said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வாழ்த்துகள் ஆபீசர்., உங்கள் சந்திப்பு இனிமையானதென வரிகளில் உணர்த்திய இடுகை நன்று.//
நன்றி ஸ்டார்ஜன் சார். நல்லாருக்கீங்களா?

FOOD NELLAI said...

// வீடு சுரேஸ்குமார் said...
கொஞ்சம் மிச்சம் வைங்க நாங்க கட்டுசோறு கட்டிகிட்டு வந்திட்டே இருக்கிறோம் ஆபிசர்! சென்னை நெல்லை மாதிரி கலகலக்கப்போகுது......//
வந்து கலக்குங்க!!!
ஆமா, நீங்க எப்ப முக்கால் ஆனிங்க?(படத்தில சொன்னேனுங்கோ)

Ramani said...

படங்களுடன் பதிவு அருமை யூத் என்பது வயதை வைத்தா
அல்லது எழுத்தை வைத்தா
சந்திப்பு சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

செங்கோவி said...

//சென்னையில் சிறு பதிவர் சந்திப்பு.//

ஸ்டில்லுல எல்லாரும் பல்க்கா இருக்காங்களே..அப்போ இது ‘பெரும் பதிவ்ர் ச்ந்திப்பு’ தானே? சிறு எப்படி வரும் சார்?

சே. குமார் said...

சந்திப்பு அருமையான படங்களுடன் அழகாக பகிரப்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆபீசர் சென்னையவே அதகளம் பண்ணிப்புட்டாரே...........

FOOD NELLAI said...

//Ramani said...
படங்களுடன் பதிவு அருமை யூத் என்பது வயதை வைத்தா
அல்லது எழுத்தை வைத்தா
சந்திப்பு சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்//
புதிய தலைமுறை பதிவர்களுக்கு உற்சாகமூட்டவே யூத் என்ற தலைப்பு.

FOOD NELLAI said...

//செங்கோவி said...

ஸ்டில்லுல எல்லாரும் பல்க்கா இருக்காங்களே..அப்போ இது ‘பெரும் பதிவ்ர் ச்ந்திப்பு’ தானே? சிறு எப்படி வரும் சார்?//
மனசு அப்படிங்க. :))

FOOD NELLAI said...

//சே. குமார் said...
சந்திப்பு அருமையான படங்களுடன் அழகாக பகிரப்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள்.//
நன்றி.

FOOD NELLAI said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆபீசர் சென்னையவே அதகளம் பண்ணிப்புட்டாரே...........//
கூட யாரு,சிவால்ல இருந்தாரு!

சிட்டுக்குருவி said...

சார் சூப்பர் பதிவு........
இபடி ஒரு நிகழ்வு நாடுகளுக்கு மத்தியில் இடம்பெற ஆசைப்படுகிறேன்

இலங்கையிலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் மிக்க சந்தோசம்

சிட்டுக்குருவி said...

வாழ்த்துக்கள் சார் உங்கள் சேவை தொடர...விசாலியின் பதிவு கண்டேன் மெயிலில் வாழ்த்தும் சொல்லிவிட்டேன்.