இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 12 June, 2012

உணவுப்பாதுகாப்பு-நுகர்வோர் கவனத்திற்கு.பாகம்-2

 டிஸ்கி: 25.04.2012 அன்று நடைபெற்ற என் அன்பு மகள் திருமண விழாவில், பதிவுலக சொந்தங்கள் பலரும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர். நேரில் வரமுடியாத நம் பதிவுலக சொந்தங்கள் பலர், நெஞ்சார வாழ்த்தியிருந்தனர்.  வியட்நாமிலிருந்து, விக்கி பறந்து வந்து, வாழ்த்திச் சென்றார்.மும்பையிலிருந்த நாஞ்சில் மனோ,  குடும்பத்துடன் வந்து சென்றார்.

                     இப்படியே, நம்ம ரத்னவேல் நடராஜன் அய்யா தம்பதியினர், ஜோதிராஜ்-கௌசல்யா தம்பதியினர், விஜயன் தம்பதியினர்,சகாதேவன்,சிபி,கவிதை வீதி சௌந்தர், கருண்,பலேபிரபு, யானைக்குட்டி ஞானேந்திரன்,சம்பத்குமார்,சுரேஷ்,நக்கீரன், பிரகாஷ், ராஜபாட்டை ராஜா, கூடல் பாலா,சகோதரிகள்- ரூஃபினா ராஜ்குமார், ஜோஸ்பின் பாபா என நம் பதிவுலக சொந்தங்கள் பலர் வந்திருந்து சிறப்பித்தனர். விழாவில், ”பசுமை விடியல்” இயக்கம் வழங்கிய மரக்கன்றுகள், வீடுகள் பலவற்றில்,புதுமை பறைசாற்றி, புதுத்தளிர் விடுகின்றன.
                     திருமணம் முடிந்தும், சென்னையில் தனிக்குடித்தனம் வைக்கவும், இதுவரை பிரியாத எங்கள் செல்ல மகளை, பிரிந்துவர பட்ட கஷ்டங்களும், பதிவுலகம் பக்கம் வந்து, நன்றி சொல்ல இயலவில்லை. எனினும், வாழ்த்திய அனைவருக்கும் தனி மெயில் அனுப்பியிருந்தேன்.வந்திருந்தும், வாழ்த்தியும் சிறப்பித்த அனைவருக்கும், என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைக் காணிக்கையாக்கி, நீண்ட விடுமுறைக்குப் பின் தங்களை இந்த பதிவின் வழியே சந்திக்கின்றேன்.


                         உண்ணும் உணவைக்கெடுக்கும் ஊர்வன,பறப்பன.



    நாம் உண்ணும் உணவைக் கெடுக்கும் ஊர்வன, பறப்பன உண்டாக்கும் கேடுகள் எத்தனை, எத்தனை?பூச்சிகளும், புழுக்களும்தானே என அவற்றை புறந்தள்ள முடியாது.  பூச்சிகளில் பல, நாம் உண்ணும் உணவைக் குறிவைப்பன. பயிர்களும், அவற்றில் விளையும் தானியங்களும் தாக்குதலின் இலக்காகும். தொற்றுநோய்களைப் பரப்புவது இவற்றின் தொழிலாகும்.  

பூச்சிகளின் தாக்கம்: உணவுப்பொருள் தயாரிப்போருக்கும், இருப்பு வைப்போருக்கும், கையாளுவோருக்கும், விற்பனை செய்வோருக்கும் மும்முனைத் தாக்குதல் மூலம் முழுசாய் சேதம் விளைவிப்பது  
பூச்சிகளின் தாக்கமே. 
       உணவுப்பொருள்கள் மீது, எலிகள் நடமாடும்போது விழுகின்ற முடிகள், கழிக்கும் சிறுநீர், புளுக்கை போன்றவை நாம் உண்ணும் உணவை பாழாக்குவது ஒருபுறமெனில், மறுபுறம் அத்தோடு அவை விட்டுச்செல்லும் நுண்ணுயிரிகள் கொண்டுவரும் நோய்கள் கொடுமையானவை. இவைபோதாதென்று, தானியங்களுக்கும், அவற்றைப் பொதிந்து வைத்துள்ள பொருள்களுக்கும் ஏற்படும் சேதாரம் என ஊர்வன, பறப்பனவற்றால் மனிதன் அடையும் துயரங்கள் ஏராளம்.Salmonella spp, Listeria spp, Escherichia coli, Cryptosporidium parvum, Hanta virus,    Bubonic plague, Leptospira spp , Texoplasmosis போன்ற நோய்க்கிருமிகள் பரவ இந்தவகை ஊர்வன துணைபுரிகின்றன. 

  தொல்லைதரும்  பூச்சிகளை அகற்ற  பூச்சிமருந்து தெளிப்பது மிகச்சாதாரணமாயிற்று. அவ்வாறு  பூச்சிமருந்தைப் பயன்படுத்துவோர், கவனக்குறைவாகவோ, அளவு தெரியாமல் அதிகம் பயன்படுத்தினாலோ, நன்மைக்குப்பதில் தீமைகளே தொடர்ந்துவிடும். கவனக்குறைவாய்  பூச்சிமருந்துகளைக் கையாளுவது, சுற்றுச்சுசூழலையும்,சுற்றியிருக்கும் மனிதர்களையும்,விலங்குகளையும், நிலத்தடி நீரையும் நிச்சயம் பாதித்துவிடும். 
     எலிகள் போன்ற ஊர்வனவற்றால், பயிர்களுக்கு ஏற்படும் சேதாரம் போதாதென்று, தானியங்கள்மீது அவைவிட்டுச்செல்லும் சிறுநீர், புளுக்கை, முடிகள் போன்றவற்றின் மூலம் பரவும் நோய்கள் ஏராளம்.             
                     
கரப்பான்  பூச்சிகள்: கரப்பான்  பூச்சிகளின் கழிவுகள் நம் வீட்டு சமையலறை மற்றும் சாமான்கள் வைக்கும் அறைகளில் துர்நாற்றம் வீச வழிவகுக்கின்றன. கழிவுகளிலிருந்து நோய்க்கிருமிகளை எடுத்துச்சென்று, கவனிக்காமல் திறந்துகிடக்கும் உணவுப்பொருள்கள் மீது ஊர்ந்து, உணவை உண்ணத்தகுதியற்றதாக்கிவிடுகின்றது.
திறந்த புண்கள் எளிதில் ஆறாது போவதும், திறந்து வைத்த உணவு நஞ்சுணவாவதும், வயிற்றுப்போக்கு, வாந்திபேதி வந்துபோவதும், சிறுகுழந்தைகளுக்கு டிப்தீரியா, டைபாய்டு, காமாலை நோய் பரவுவதற்கும் கரப்பான் பூச்சிகளும் காரணமாகின்றன.

ஈக்கள்:பறப்பனவற்றில் வேகம் அதிகம் கொண்டவை. சுகாதாரமற்ற சூழல் ஈக்களை உருவாக்கும். அந்த ஈக்களின் உணவருந்தும் முறைதான், உணவைப் பாழ்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஈக்களின் உடலோடு ஒட்டிக்கொண்டு பரவும் கிருமிகள் ஏராளம். காலரா, வயிற்றுப்போக்கு மற்றும் டைபாய்டு நோய்க்கிருமிகளை பரப்புவதில் ஈக்களின் பங்கு சற்றே அதிகம்தான்.
எறும்புகள்: இனிப்பும், எண்ணெய் பிசுபிசுப்பும் இருக்குமிடம் எறும்புகளுக்குக் கொண்டாட்டம். புண்கள் மீது போடப்படும் மருந்துகட்டுகளும், புண்களிலிருந்து வெளியேறும் சீழ்களும் கூட எங்கும் நிறைந்திருக்கும் எறும்புகளின் இரையாகத் தப்பாது. எறும்பரித்த பொட்டலங்களிலுள்ள உணவுப்பொருள்கள் உண்ணத்தகுதியற்றதாவது இதனால்தான். இவை போதாதென்று, எறும்புக்கடி வலியையும், ஒவ்வாமையையும் உருவாக்க வல்லது. 
தானியங்களும் அவற்றைத்தாக்கும்  பூச்சிகளும்: 

பீன்ஸ், பருப்பு வகைகள்            - Bruchid beetles


காபி, கோகோ            - Flour Beetles, Merchant Grain Beetles,
                                                         Warehouse moths

வெண்ணை                    - Mites, Kapra beetle


உலர்பழங்கள்                                    - Indian Meal Moth, MGB, Tobacco
                                                       beetle, Dried food beetle, Mites


பதப்படுத்திய காய்கறிகள்    - IMM, Miscellaneous general feeders


அரைக்கப்பட்ட தானியங்கள்   - Flour beetles, Mill moth, IMM, Mites                        


அரிசி, கோதுமை, சோளம்         - Rice weevil, Grain weevil Borers,
                                              Saw toothed  grain Beetle, Flour beetle,
                                               IMM and Mites

நன்றி: Mr.N.V.NARAYANAMOORTHYPesPro - Pest Professional

Follow FOODNELLAI on Twitter

29 comments:

இராஜராஜேஸ்வரி said...

விழாவில், ”பசுமை விடியல்” இயக்கம் வழங்கிய மரக்கன்றுகள், வீடுகள் பலவற்றில்,புதுமை பறைசாற்றி, புதுத்தளிர் விடுகின்றன.

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி பல்லாண்டுகள் வாழ புதுத்தளிகளான மணமக்களை மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்...

Unknown said...

மேனகாகாந்தி எழுதிய ஒரு கட்டுரையில் கரப்பான் ஒரு மிகச்சிறந்த துப்புறவு தொழிலாளி எனக் கூறியிருக்கிறார்...கரப்பு உணவுகழிவுகளை தின்று நொதிக்க வைத்து கழிவாக வெளியேற்றினால் அதில் கிருமிகள் உண்டாவதில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார் இதைப் பற்றி பதிவு ஒன்று எழுதலாம் என்று இருந்தேன்.

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
விழாவில், ”பசுமை விடியல்” இயக்கம் வழங்கிய மரக்கன்றுகள், வீடுகள் பலவற்றில்,புதுமை பறைசாற்றி, புதுத்தளிர் விடுகின்றன.

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி பல்லாண்டுகள் வாழ புதுத்தளிகளான மணமக்களை மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்...//
மிக்க நன்றி சகோ.

உணவு உலகம் said...

//வீடு சுரேஸ்குமார் said...
மேனகாகாந்தி எழுதிய ஒரு கட்டுரையில் கரப்பான் ஒரு மிகச்சிறந்த துப்புறவு தொழிலாளி எனக் கூறியிருக்கிறார்...கரப்பு உணவுகழிவுகளை தின்று நொதிக்க வைத்து கழிவாக வெளியேற்றினால் அதில் கிருமிகள் உண்டாவதில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார் இதைப் பற்றி பதிவு ஒன்று எழுதலாம் என்று இருந்தேன்.//
நல்ல விஷயம்தானே. எழுதுங்கோ. என் கட்டுரையிலும், ”கரப்பான் பூச்சிகள்,கழிவுகளிலிருந்து,நோய்க்கிருமிகளை எடுத்துச்சென்று, கவனிக்காமல் திறந்துகிடக்கும் உணவுப்பொருள்கள் மீது ஊர்ந்து, உணவை உண்ணத் தகுதியற்றதாக்கிவிடுகின்றது” என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். நன்றி சுரேஷ்.

Kousalya Raj said...

எத்தனை விதமான பூச்சி இனங்கள்...?! அவை குறித்த தகவல்கள் பயன்படும்.

வீட்டில் சமையலறையை சுத்தமாக வைத்து கொள்வது மிக முக்கியம் என்பதை பதிவு சொல்லிவிட்டது. ஆனால் வெளியிடங்களில் எப்படியோ நினைக்கும் போது கொஞ்சம் பயம்தான் !!

நல்லதொரு பகிர்வு அண்ணா.

உணவு உலகம் said...

//Kousalya said...
எத்தனை விதமான பூச்சி இனங்கள்...?! அவை குறித்த தகவல்கள் பயன்படும்.

வீட்டில் சமையலறையை சுத்தமாக வைத்து கொள்வது மிக முக்கியம் என்பதை பதிவு சொல்லிவிட்டது. ஆனால் வெளியிடங்களில் எப்படியோ நினைக்கும் போது கொஞ்சம் பயம்தான் !!

நல்லதொரு பகிர்வு அண்ணா.//
நன்றி கௌசல்யா. பயப்படாதீங்க, அஞ்சாநெஞ்சன் இருக்க பயமேன்!

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஒன் ஆஃபீசர்

நாய் நக்ஸ் said...

சுத்தம் சோறு போடும்.....

பகிர்வுக்கு நன்றி சார்.....

இங்க கும்மி அடிக்க கூடாதுன்னு பன்னி வேற சொல்லிட்டார்....

சரி பரவாஇல்லை.....நான் அடுத்த ""வீடு"" பாக்குறேன்....

கூடல் பாலா said...

வணக்கம் ஆபீசர்...பயனுள்ள தகவல்களைத் தந்திருக்கீங்க....

Unknown said...

பல பூச்சிகள் பற்றி அறிந்து கொண்டேன்...சுத்தம் சோறும போடும்னு நீங்க சொல்றது புரியிது அண்ணே!

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
குட் ஒன் ஆஃபீசர்//
நன்றி சிபி.

உணவு உலகம் said...

//NAAI-NAKKS said...
சுத்தம் சோறு போடும்.....

பகிர்வுக்கு நன்றி சார்.....

இங்க கும்மி அடிக்க கூடாதுன்னு பன்னி வேற சொல்லிட்டார்....

சரி பரவாஇல்லை.....நான் அடுத்த ""வீடு"" பாக்குறேன்....//
பெரிய வீடாவே பாருங்க!!!

உணவு உலகம் said...

// koodal bala said...
வணக்கம் ஆபீசர்...பயனுள்ள தகவல்களைத் தந்திருக்கீங்க....//
நன்றி பாலா.

உணவு உலகம் said...

//விக்கியுலகம் said...
பல பூச்சிகள் பற்றி அறிந்து கொண்டேன்...சுத்தம் சோறும போடும்னு நீங்க சொல்றது புரியிது அண்ணே!//
ஏர்கனவே சுத்தம் சோறு போடும்னு ஒருத்தர் சத்தமா சொல்லிட்டு, அடுத்த வீடு பார்க்க போய்ட்டார் பாருங்க.ஹே ஹே ஹே. :))
நன்றி விக்கி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

உணவுப் பாதுகாப்பில் பூச்சிகள் செய்கிற அசுத்தங்கள் பற்றி அறிந்து கொண்டேன்.

நீங்கள் பகிர்ந்திருகும் படங்களே கண்டாலே உணவுப் பொருட்களை பூச்சிகள் எந்தளவுக்கு விரும்பி சாப்பிடுகின்றன என தெரிகிறது. ஹி..ஹி...

உணவு உலகம் said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
உணவுப் பாதுகாப்பில் பூச்சிகள் செய்கிற அசுத்தங்கள் பற்றி அறிந்து கொண்டேன்.

நீங்கள் பகிர்ந்திருகும் படங்களே கண்டாலே உணவுப் பொருட்களை பூச்சிகள் எந்தளவுக்கு விரும்பி சாப்பிடுகின்றன என தெரிகிறது. ஹி..ஹி...//
நமக்கு முன் அவை உணவை அதகளப்படுத்திவிடுகின்றன. நன்றி பிரகாஷ்.

Prabu Krishna said...

கரப்பான் உலகின் பழமையான ஒரு உயிரினம், ஒரு ஸ்ப்ரே அடித்து அதைக் கொன்று விடுகிறோம் :-(.

அவர்கள் உலகில் நாம் வாழ இன்னும் நிறைய கொலைகளை புரிய வேண்டும் போலவே

rajamelaiyur said...

திருமணத்தில் தங்களை சந்தித்தது மிக்க மகிஷ்சி

rajamelaiyur said...

இன்று

டெங்கு காய்ச்சல் : தெரிந்து கொள்ளுங்கள்

முத்தரசு said...

பல விடயங்கள் நுணுக்கமாக
அறிந்து கொண்டேன் பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி ஆபிசர்

MANO நாஞ்சில் மனோ said...

யப்பா பூச்சிகளை பற்றி ஆபீசர் சொல்றதை பார்த்தால் சாப்பிடவே பயமா இருக்கு, என்றாலும் சுத்தமா இருப்பதே மிகவும் நல்லதும் நன்றி ஆபீசர்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மிகவும் தேவையான பகிர்வு ஆபீசர்!

உணவு உலகம் said...

//Prabu Krishna said...
கரப்பான் உலகின் பழமையான ஒரு உயிரினம், ஒரு ஸ்ப்ரே அடித்து அதைக் கொன்று விடுகிறோம் :-(.

அவர்கள் உலகில் நாம் வாழ இன்னும் நிறைய கொலைகளை புரிய வேண்டும் போலவே//
ஒரு பக்கம் கரப்பான் பூச்சிகளைக்கொன்றாலும், பாவம் தீர்க்க மறுபக்கம் மரங்களை நட்டு புண்ணியம் தேடிக்கிறீங்க. இரண்டும் நல்லதுதானே.

உணவு உலகம் said...

// "என் ராஜபாட்டை"- ராஜா said...
திருமணத்தில் தங்களை சந்தித்தது மிக்க மகிஷ்சி//
வந்து சிறப்பித்தது எனக்கும் மிக மகிழ்ச்சிதானே.

உணவு உலகம் said...

// "என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று

டெங்கு காய்ச்சல் : தெரிந்து கொள்ளுங்கள்//
அவசியம் வந்து தெரிந்துகொள்கிறேன் நண்பரே.

உணவு உலகம் said...

//மனசாட்சி™ said...
பல விடயங்கள் நுணுக்கமாக
அறிந்து கொண்டேன் பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி ஆபிசர்//
இன்னும் வரும். நன்றி.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
யப்பா பூச்சிகளை பற்றி ஆபீசர் சொல்றதை பார்த்தால் சாப்பிடவே பயமா இருக்கு, என்றாலும் சுத்தமா இருப்பதே மிகவும் நல்லதும் நன்றி ஆபீசர்...!//
சுத்தம் நிச்சயம் சுகம் தரும். நன்றி மனோ.

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மிகவும் தேவையான பகிர்வு ஆபீசர்!//
மிக்க மகிழ்ச்சி சார்.நன்றி.

சென்னை பித்தன் said...

நாம் உண்ணும் உணவைக் கெடுக்கும் பூச்சிகள் பற்றிய விளக்கமான பதிவு