இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 26 June, 2012

திருமலை-திருப்பதி-திருத்தணி திகட்டாத அனுபவங்கள்.

                                       
                         சென்ற வார இறுதி. சென்னை சென்று திருப்பதி செல்ல திட்டமிட்டோம். எங்களுடன், புது மணத்தம்பதியினரான என் மகளையும், மருமகனையும் அழைத்துச்செல்லத்தீர்மானித்தோம். விடுமுறை நாளென்றால், வசதியாயிருக்குமென்று, சனிக்கிழமை திருப்பதி சென்று தங்குவதென்றும், ஞாயிறு அதிகாலை திருமலைவாசனை தரிசிப்பதென்றும் முடிவெடுத்தோம். 
அதிகாலைத்திருப்பதி.
                      ஆந்திராவைச்சேர்ந்த என் நண்பர் திரு.சீனிவாசனைத்தொடர்பு கொண்டு, திருப்பதி செல்லவேண்டுமென்றேன். எப்ப வாறீங்க, எத்தனை நாள் இருப்பீங்க என்றார். அவர் கோவையில் தற்போது குடியிருக்கிறார். எனினும்,அவர் பணிபுரியும் நிறுவனம், ஆந்திராவில் ஐம்பது வருடங்களாய்க் கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் என்பதால், அனைத்து ஏற்பாடுகளையும் நேர்த்தியாய் செய்திருந்தார்.

ஐந்து மணிக்கு அறையிலிருந்து எடுத்த படம்.
                     அவருடன், அவரது துணைவியார் திருமதி.கீதாவும் நகரியில் வந்து சேர்ந்து கொண்டார். அவருக்குத் தனியே நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், திருமதி. கீதாவால்தான், எங்களுக்கு திருமலைவாசனை அருகில் சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஞாயிறு காலை 5.30 மணிக்கு தரிசனம் செய்ய அனுமதிச்சீட்டுடன் வந்தார். அதிகாலை 3.00 மணிக்கெல்லாம் எழுந்து, ஏழுமலையானை எண்ணத்தில் இருத்தி, வரிசையில் சென்று கொண்டிருந்தோம்.பிரதான வாயிலின் உள்ளே எங்கள் வரிசை நுழைந்ததும், எதிரில் வந்த ஒரு பிரமுகரைப்பார்த்து, சீனிவாசன் சார் வணங்கினார். அவரும், பதிலுக்கு ஏதோ சொல்லிவிட்டுச்சென்றார். அவருடன், அரசியல் பிரமுகர் ஒருவரும் சென்றார். அவர்கள் பேசியது, தெலுங்கில் என்பதால், நான் ஙே!
நாங்கள் தங்கியிருந்த காட்டேஜ்.
நாங்கள் தங்கியிருந்த காட்டேஜ்.


                                   அடுத்த ஐந்து நிமிடங்களில், ஏழுமலையான் எங்களை முழுமையாய் தரிசிக்க அழைத்த அந்த அதிசயம் நடந்தது. ஆம், அந்த முக்கிய பிரமுகர்,  அவருடன் சென்ற அந்த அரசியல் பிரமுகரை தரிசனம் முடித்து வழியனுப்பிவிட்டு, அவசரமாய் வந்து எங்களை வரிசையிலிருந்து வெளியில் வரவைத்து தனித்துக் கோவிலின் உள்ளே அழைத்துச்சென்றார். வெங்கடேசப்பெருமான் சன்னதியிலுள்ள முதல் அறையில் எங்களுடன் அவரும் தரையிலமர்ந்து அளவளாவினார். அப்போது, சீனிவாசன் சார் அறிமுகம் செய்தபோதுதான் தெரிந்தது, அவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று. மிகச் சாதாரணமாய் இருந்தார். 


                         அவரின் தம்பியும், சீனிவாசன் சாரும் பால்ய நண்பர்கள். இருவரும் பரஸ்பரம் பேசி நலம் விசாரித்து முடிக்கவும், அதிகாலை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நபர்கள் வருகை முடியவும் மிகச்சரியாயிருந்தது. அடுத்த அரைமணி நேரம், பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. அந்த நேரத்தில், எங்களை மூலஸ்தானத்திற்கு அருகிலுள்ள அறைக்கு அழைத்துச்சென்று, ஏழுமலைவாசனுக்கு கற்பூர ஆரத்தியெல்லாம் காட்டச்சொல்லி, நன்றாய் நின்று தரிசனம் செய்யுங்கள் என்று அவரும் நின்றிருந்தார். 


                         ”ஜருகண்டி, ஜருகண்டி” எனச் சடுதியில் நம்மைத்தள்ளிவிட ஆளே இல்லை. எத்தனையோ முறை, திருப்பதி சென்றிருந்தாலும், இந்த முறை ஒரு இனிய அனுபவம்தான். நிம்மதியாய் பல நிமிடங்கள் நின்று தரிசித்து வெளியில் வந்தால், பகவானுக்குச் சாத்திய வஸ்த்திரங்கள் இருக்கும் அறைக்கு அழைத்துச்சென்று, அட்சதையை தலையில் போட்டு, அங்கவஸ்த்திரத்தால் ஆசிர்வதித்தனர்.  புல்லரித்த உடல், புரிந்துகொள்ள சிறிது நேரமாயிற்று. மஹாபிரசாதம் அளித்து வழியனுப்பினர்.

நானும் என் மருமகனும்.
                     
நானும் நண்பர் சீனிவாசனும்.
                                              அடுத்து அலமேல்மங்காபுரம் வந்து, அம்மனை தரிசித்து, அங்குள்ள நடசத்திர ஹோடலில் உணவருந்தி, திருத்தணி நோக்கிப்புறப்பட்டோம்.

                     
                       திருத்தணி அருகில் நண்பரின் ’பாஸ்’ பராமரித்துவரும் தோட்டத்தில் சென்று நின்றது கார்.    சென்றவுடன் தாகம் தணிக்க, கூந்தலுடன் குளிரூட்டப்பட்ட இளநீர்,  அடுத்த சில நிமிடங்களில், சிறந்த மாம்பழங்களின் தோல்நீக்கிய துண்டுகள் என இயற்கை உணவுகள் வழங்கி,எதை உண்பது, எதைத்தவிர்ப்பது என்று எங்களைத் திக்குமுக்காட வைத்தனர்.                                                                                               
                   

                    அந்த மாம்பழ உலகம், அங்கு விளையும் மாங்கனிகள், இயற்கையின் ரசிகரான,அறுபத்தைந்து வயது இளைஞர்-அதன் உரிமையாளர் திரு.பிரபாகர் சார் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.

              மாம்பழங்கள் பற்றி எடுத்துரைக்கும் மேலாளர்எழில்கொஞ்சும் ஏழுமலை

தூரத்தில் புள்ளிகளாய் திருப்பதி நகர கட்டடங்கள்
Follow FOODNELLAI on Twitter

53 comments:

Unknown said...

வருடம் வருடம் திருப்பதி போவோம் இந்த வருடம் போக முடியலை....பதிவின் மூலம் அந்த உணர்வை பெற்றேன்! நன்றிங்க..சார்!

Kousalya Raj said...

மிக அருமையான புகைப்படங்கள்...பச்சை பசேல்னு பசுமை போர்த்திய மலை பார்க்க எவ்ளோ அழகு !!

சிறப்பான தரிசனம் முடித்த நிறைவு உங்கள் எழுத்தில் தெரிகிறது.

இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் ! மணம் சுவை இரண்டும் பிரமாதமாக இருக்குமே ! :)

சந்தோசமான , நிறைவான பயணம்.

திருத்தணி புகைப்படங்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன். எனக்கு மிக பிடித்த ஊர்.

வாழ்த்துக்கள் அண்ணா.

கோவை நேரம் said...

திருப்பதி அருள் பெற்று வந்து விட்டீர்...வாழ்த்துகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா அருமையான தரிசனம்...... அரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது........!

Unknown said...

தரிசனம் அருமை போல....வாழ்த்துக்கள் அண்ணே!

Prabu Krishna said...

அருமையான இடம். வெங்கடேஷை பார்க்க போகாட்டியும், இயற்கையை ரசிக்க போகணும்.

rajamelaiyur said...

அருமையான பயண கட்டுரை .. திருப்பதி பார்க்க வேண்டும் என நினைக்கிறேன் முடியவில்லை ..

உணவு உலகம் said...

// வீடு சுரேஸ்குமார் said...
வருடம் வருடம் திருப்பதி போவோம் இந்த வருடம் போக முடியலை....பதிவின் மூலம் அந்த உணர்வை பெற்றேன்! நன்றிங்க..சார்!//
பலமுறை திருப்பதி சென்றிருந்தாலும், இந்தமுறைப் பயணம் மிக இனிமையாயிருந்தது. நன்றி சுரேஷ்.

உணவு உலகம் said...

//Kousalya said...
மிக அருமையான புகைப்படங்கள்...பச்சை பசேல்னு பசுமை போர்த்திய மலை பார்க்க எவ்ளோ அழகு !!

சிறப்பான தரிசனம் முடித்த நிறைவு உங்கள் எழுத்தில் தெரிகிறது.

இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் ! மணம் சுவை இரண்டும் பிரமாதமாக இருக்குமே ! :)

சந்தோசமான , நிறைவான பயணம்.

திருத்தணி புகைப்படங்களை பார்க்க ஆவலாக இருக்கிறேன். எனக்கு மிக பிடித்த ஊர்.

வாழ்த்துக்கள் அண்ணா.//
திருத்தணி புகைப்படங்கள், மாம்பழ விளக்கங்களுடன்,விரைவில். நன்றி சகோ.

உணவு உலகம் said...

//கோவை நேரம் said...
திருப்பதி அருள் பெற்று வந்து விட்டீர்...வாழ்த்துகள்//
ஏழுமலையான் அருளும், உங்கள் வாழ்த்துக்களும். நன்றி.

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆஹா அருமையான தரிசனம்...... அரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது........!//
ஆமா சார். மனம் நிறைவாய் அமைந்தது.

உணவு உலகம் said...

//விக்கியுலகம் said...
தரிசனம் அருமை போல....வாழ்த்துக்கள் அண்ணே!//
ஆமாம். நன்றி விக்கி.

உணவு உலகம் said...

//Prabu Krishna said...
அருமையான இடம். வெங்கடேஷை பார்க்க போகாட்டியும், இயற்கையை ரசிக்க போகணும்.//
உன் வயதில் இயற்கையை(!) ரசிக்கச்செல்லலாம். :))

உணவு உலகம் said...

// "என் ராஜபாட்டை"- ராஜா said...
அருமையான பயண கட்டுரை .. திருப்பதி பார்க்க வேண்டும் என நினைக்கிறேன் முடியவில்லை ..//
எண்ணத்தில் அவனை இருத்தியிருந்தால், வரவழைத்துவிடுவான் விரைவில். நன்றி.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அழகு பயணம் . நட்பை பாராட்டும் உங்களுக்கு அந்த ஏழுமலையானும் நண்பர் போல .
வாழ்த்துக்கள் சார் . அப்புறம் லட்டு (படம் )எங்கே ????

உணவு உலகம் said...

//யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...
அழகு பயணம் . நட்பை பாராட்டும் உங்களுக்கு அந்த ஏழுமலையானும் நண்பர் போல .
வாழ்த்துக்கள் சார் . அப்புறம் லட்டு (படம் )எங்கே ????//
நன்றி ஞானேந்திரன். இன்று மாலையே கிட்டும் உங்களுக்கு.

நாய் நக்ஸ் said...

தல..
ஆபிசர்...

என்கூட சேர்ந்திருந்தா சொர்க்கத்தையே காட்டி....
பல மணிநேரம் அங்கேயே இருக்க வச்சிருப்பேன்...

மிஸ் பண்ணிட்டீங்களே...!!!!

நாய் நக்ஸ் said...

தல...
அங்க ஏதும் ரைடு போகலியா....???

நாய் நக்ஸ் said...

தாகம் தணிக்க, கூந்தலுடன் குளிரூட்டப்பட்ட இளநீர்,/////

அது எனாது தல...????

டோபா ஏதும் இளநி மேல செட் பன்னி இருப்பாங்களா,....???

நாய் நக்ஸ் said...

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும். /////

வயிற்றுக்கு உணவில்லாத போது சிறிது செவிக்கும் ஈயப்படும்.....

இராஜராஜேஸ்வரி said...

அடுத்த ஐந்து நிமிடங்களில், ஏழுமலையான் எங்களை முழுமையாய் தரிசிக்க அழைத்த அந்த அதிசயம் நடந்தது

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான பயணம், படங்கள் எல்லாம் பார்க்காதவை சூப்பராக இருக்கு...!!

MANO நாஞ்சில் மனோ said...

மலைகள் போட்டோ பார்த்தால் ஏதோ வெளிநாட்டு இடங்கள் போலவே இருக்கிறது அருமை...!

MANO நாஞ்சில் மனோ said...

NAAI-NAKKS said...
தல..
ஆபிசர்...

என்கூட சேர்ந்திருந்தா சொர்க்கத்தையே காட்டி....
பல மணிநேரம் அங்கேயே இருக்க வச்சிருப்பேன்...

மிஸ் பண்ணிட்டீங்களே...!!!!//

இவரு ஜென்மத்துக்கும் திருந்த மாட்டார் போல, எலேய் சண்முகபாண்டி அருவாளை எங்கலேய் வச்சே...?

சி.பி.செந்தில்குமார் said...

ஆஃபீசர்!
\

லட்டை ஃபிரிட்ஜில் வைத்திருக்கவும், நெல்லை வருகையில் பெற்றுக்கொள்கிறேன்

பை கூச்சம் இல்லாமல் கேட்டு வாங்கி சாப்பிடுவோர் சங்கம் ஹி ஹி

sathishsangkavi.blogspot.com said...

அருமையான தரிசனம்... அற்புதமான வாய்ப்புகள்....

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பயணம்... படங்கள் அருமை ! நன்றி சார் !

SCCOBY BLOGSPOT.IN said...

அனைவராலும் பாராட்டுப்பத்திரம் வாசிக்கப்பட்டு எனக்கு புகழ்வதற்கு வழி இல்லாமல் செய்து விட்டார்கள் ஆனாலும் அந்த IAS அதிகாரியை மட்டுமாவது எனக்கு தாங்கள் அறிமுகப் படுத்தலாம்
எதிர்ப்பார்ப்புடனும் அடுத்த பதிவினையும் எதிர்நோக்கும்
licsundaramurthy@gmail.com
www.salemscooby.blogspot.com

”தளிர் சுரேஷ்” said...

கூட இருந்து தரிசித்த உணர்வை தந்தது பதிவு! அருமையான பயணவிளக்கமும் படங்களும்! நன்றி!

Ganapathi DCW said...

சார்,ஏழுமலையானை தரிசித்த திருப்தி உங்கள் கட்டுரையில் கிடைத்தது.
நன்றி

கணபதி.மா
தூத்துக்குடி-8

உணவு உலகம் said...

//NAAI-NAKKS said...
தல..
ஆபிசர்...

என்கூட சேர்ந்திருந்தா சொர்க்கத்தையே காட்டி....
பல மணிநேரம் அங்கேயே இருக்க வச்சிருப்பேன்...

மிஸ் பண்ணிட்டீங்களே...!!!!//
சொர்க்கமா, நரகமான்னு சொல்லாமலே தெரியுமே! :)

உணவு உலகம் said...

//NAAI-NAKKS said...
தல...
அங்க ஏதும் ரைடு போகலியா....???//
கார்ல ரைடுனோமே!!!

உணவு உலகம் said...

//NAAI-NAKKS said...
தாகம் தணிக்க, கூந்தலுடன் குளிரூட்டப்பட்ட இளநீர்,/////

அது எனாது தல...????

டோபா ஏதும் இளநி மேல செட் பன்னி இருப்பாங்களா,....???//
நக்ஸ் தலை வழுக்கையான பின்னர் தெரியும்.

உணவு உலகம் said...

//NAAI-NAKKS said...
செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும். /////

வயிற்றுக்கு உணவில்லாத போது சிறிது செவிக்கும் ஈயப்படும்.....//
வயிற்றுக்கு உணவென்பது உமக்குப்பொருந்தாதே. வயிற்றுக்கு
. . .ஹால் என்பதே உமக்குப்பொருந்தும். :))

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
அடுத்த ஐந்து நிமிடங்களில், ஏழுமலையான் எங்களை முழுமையாய் தரிசிக்க அழைத்த அந்த அதிசயம் நடந்தது

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

// MANO நாஞ்சில் மனோ said...
அருமையான பயணம், படங்கள் எல்லாம் பார்க்காதவை சூப்பராக இருக்கு...!!//
நன்றி மனோ. நாலு வார்த்தை சொன்னாலும் நச்சுன்னு சொல்லிடறீங்க.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
மலைகள் போட்டோ பார்த்தால் ஏதோ வெளிநாட்டு இடங்கள் போலவே இருக்கிறது அருமை...!//
அடுத்தமுறை இந்திய பயணத்தில், சென்று வாருங்கள். நேரில் பார்த்தால், இன்னும் அருமையா இருக்கும்.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
இவரு ஜென்மத்துக்கும் திருந்த மாட்டார் போல, எலேய் சண்முகபாண்டி அருவாளை எங்கலேய் வச்சே...?//
நக்ஸிற்கு அருவாளை எடுப்பதற்குப் பதில், ABC பண்றது பெட்டர்.ABC பற்றித்தெரியாதவர்கள் தனி மெயிலில் விளக்கம் கேட்டால் சொல்லப்படும்.

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
ஆஃபீசர்!
லட்டை ஃபிரிட்ஜில் வைத்திருக்கவும், நெல்லை வருகையில் பெற்றுக்கொள்கிறேன்
பை கூச்சம் இல்லாமல் கேட்டு வாங்கி சாப்பிடுவோர் சங்கம் ஹி ஹி//
நாமெல்லாம் கூச்சப்பட்டா, இப்படி வாட்டசாட்டமா வளர்ந்திருப்போமா!!!
வாங்க, நீங்க வரும்வரை லட்டும்(?) காத்திருக்கும்.

உணவு உலகம் said...

//சங்கவி said...
அருமையான தரிசனம்... அற்புதமான வாய்ப்புகள்....//
நன்றி சங்கவி சார்.

உணவு உலகம் said...

//திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல பயணம்... படங்கள் அருமை ! நன்றி சார் !//
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தனபாலன் சார்.

உணவு உலகம் said...

//LIC SUNDARA MURTHY said...
அனைவராலும் பாராட்டுப்பத்திரம் வாசிக்கப்பட்டு எனக்கு புகழ்வதற்கு வழி இல்லாமல் செய்து விட்டார்கள் ஆனாலும் அந்த IAS அதிகாரியை மட்டுமாவது எனக்கு தாங்கள் அறிமுகப் படுத்தலாம்
எதிர்ப்பார்ப்புடனும் அடுத்த பதிவினையும் எதிர்நோக்கும்
licsundaramurthy@gmail.com
www.salemscooby.blogspot.com//
முதல் வருகை. மிக்க நன்றி சார். நட்பு தொடரட்டும்.

உணவு உலகம் said...

// s suresh said...
கூட இருந்து தரிசித்த உணர்வை தந்தது பதிவு! அருமையான பயணவிளக்கமும் படங்களும்! நன்றி!//
மனம் நிறைந்த வார்த்தைகள்.

உணவு உலகம் said...

// Ganapathi DCW said...
சார்,ஏழுமலையானை தரிசித்த திருப்தி உங்கள் கட்டுரையில் கிடைத்தது.
நன்றி

கணபதி.மா
தூத்துக்குடி-8//
முதல் வருகை. மிக்க மகிழ்ச்சி. பரமகல்யாணி கல்லூரி நண்பர் என்றெண்ணுகிறேன். FB friends request அனுப்பியிருக்கிறேன். நன்றி.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பயணம் பற்றிய அருமையான பகிர்வு.

உணவு உலகம் said...

//சே. குமார் said...
நல்ல பயணம் பற்றிய அருமையான பகிர்வு.//
நன்றி சார்.

சாந்தி மாரியப்பன் said...

நிறைவான தரிசனம்.. அதுவும் ஏகாந்தமா. நீங்க கொடுத்து வெச்சுருக்கீங்க :-)

புண்ணியத்தில் கொஞ்சத்தை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றிண்ணா.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. அருமையான தரிசனத்துக்கு மகிழ்ச்சி. புது மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.
நன்றி.

உணவு உலகம் said...

//அமைதிச்சாரல் said...
நிறைவான தரிசனம்.. அதுவும் ஏகாந்தமா. நீங்க கொடுத்து வெச்சுருக்கீங்க :-)

புண்ணியத்தில் கொஞ்சத்தை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றிண்ணா.//
நன்றி சகோ. நாசூக்கா, புண்ணியத்தை பகிரச்சொல்லிட்டீங்க.

உணவு உலகம் said...

//Rathnavel Natarajan said...
அருமையான பதிவு. அருமையான தரிசனத்துக்கு மகிழ்ச்சி. புது மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துகள்.
நன்றி.//
நன்றி அய்யா.

அம்பாளடியாள் said...

வணக்கம் சார் ஏழுமலையானின் தரிசனம் பெற்றுவந்த தங்களுக்கு வாழ்த்துக்கள் .இப்படி ஒரு அரிய சந்தர்பம் எளிதில் எல்லோருக்கும் கிட்டிவிடாது அத்துடன் தங்கள்
ஆக்கத்தை வாசித்ததில் எமக்கும் அந்த உணர்வு கிட்டியது .படங்களும் பகிர்வும் அருமை!...மிக்க நன்றி பகிர்வுக்கு .

உணவு உலகம் said...

//அம்பாளடியாள் said...
வணக்கம் சார் ஏழுமலையானின் தரிசனம் பெற்றுவந்த தங்களுக்கு வாழ்த்துக்கள் .இப்படி ஒரு அரிய சந்தர்பம் எளிதில் எல்லோருக்கும் கிட்டிவிடாது அத்துடன் தங்கள்
ஆக்கத்தை வாசித்ததில் எமக்கும் அந்த உணர்வு கிட்டியது .படங்களும் பகிர்வும் அருமை!...மிக்க நன்றி பகிர்வுக்கு .//
வாங்க சகோ. வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.

Unknown said...

ரொம்ப பொறாமையாக உள்ளது.அமர்களமான தரிசனம்.Everytime we do darshan with long wait,push,pull,sweat etc.Lucky guy.
வாழ்க வளமுடன்.