இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Saturday 30 June, 2012

சென்னை யூத்பதிவர் சந்திப்பு செய்தி-THE FORECAST FRONT இதழில்.

                                20.05.2012ல், சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அன்று சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு, அதில் இளம் சாதனையாளர் விசாலினி-இந்தியாவின் விடிவெள்ளி மற்றும் இயற்கை ஆர்வலர் திரு.யோகனாதன் ஆகியோரை பதிவர்கள் கௌரவப்படுத்தியது உட்பட நிகழ்ச்சியின் தொகுப்பு,டெல்லியிலிருந்து வெளியாகும் “THE FORECAST FRONT" ஆங்கில இதழின் ஜூன் -2012 பதிப்பில் செய்தியாக வந்துள்ளது. அதில் கலந்து கொண்ட பதிவர்கள் பெயருடன், அவர்களது வலைப்பூ முகவரியும் கொடுத்துள்ளது மிகச்சிறப்பு. பங்கு பெற்ற அனைவரது பெயரையும் போட அவருக்கு மிகுந்த ஆசையிருந்தும், இடத்தின் அருமை கருதி, சில பெயர்களை மட்டுமே போட முடிந்தது என்று சொன்னார்.
                                             வந்தோம், நிகழ்ச்சியில் கலந்தோம், சென்றோம் என்றில்லாமல், பதிவர்களையும், பங்கு பெற்ற சிறப்பு விருந்தினர்களையும் உற்சாகப்படுத்தும் நோக்கத்தோடு, இந்தியா முழுவதும் சுற்றிவரும் ஒரு பத்திரிக்கையில், இரு பக்கங்களை ஒதுக்கி, நம்மையெல்லாம் பெருமைப்படுத்தியுள்ள அதன் ஆசிரியர் திரு.சுந்தரராஜ் அவர்களுக்கு, பதிவுலகம் சார்பாக நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.                                                      THE FORECAST FRONT பத்திரிக்கையின் வலைத்தளத்திலும், பதிவர் சந்திப்பு செய்தியைப் பகிர்ந்துள்ளனர். முடிந்தவரை பத்திரிக்கையின் வலைத்தளத்திற்கு சென்று, நமது கமெண்ட்களை அங்கேயும் பதிவு செய்வோம்.
 விசாலினி எங்கள் இல்ல விழாவில் கலந்து கொண்ட வீடியோ:

                    
                                         
நெல்லைக்குப் பெருமை சேர்க்கும் நெஞ்சங்கள்:
அடுத்த பிரபலம்.
Follow FOODNELLAI on Twitter

24 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துகள் வாழ்த்துகள் ஆபீசர்...!

MANO நாஞ்சில் மனோ said...

நமது வலைத்தளங்கள் விரிவடைகிறது என்பதே மறுக்கமுடியாத உண்மை...!!!

Unknown said...

நமக்கு பெருமை சார்! முக்கியமாக இந்தப் பெருமையெல்லாம் சிவக்குமாருக்கே சேரும்!

Unknown said...

நல்ல விசயம், வலைத்தளங்களின் வீச்சு புரிகிறது, சந்திப்பை வெற்றிகரமாக நடத்திய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

உணவு உலகம் said...

// MANO நாஞ்சில் மனோ said...
வாழ்த்துகள் வாழ்த்துகள் ஆபீசர்...!//
நன்றி மனோ.

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
நமது வலைத்தளங்கள் விரிவடைகிறது என்பதே மறுக்கமுடியாத உண்மை...!!!//
சந்தேகமின்றி.

உணவு உலகம் said...

// வீடு சுரேஸ்குமார் said...
நமக்கு பெருமை சார்! முக்கியமாக இந்தப் பெருமையெல்லாம் சிவக்குமாருக்கே சேரும்!//
அவருதானே விழா (கதா)நாயகன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமை ஆபீசர், வாழ்த்துகள்......!

உணவு உலகம் said...

//இரவு வானம் said...
நல்ல விசயம், வலைத்தளங்களின் வீச்சு புரிகிறது, சந்திப்பை வெற்றிகரமாக நடத்திய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்//
நன்றிங்க. பாராட்டுக்கள் சென்னைப்பதிவர்களுக்கே.

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அருமை ஆபீசர், வாழ்த்துகள்......!//
நன்றி சார்.

இராஜராஜேஸ்வரி said...

இனிய வாழ்த்துகள் !

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
இனிய வாழ்த்துகள் !//
நன்றி சகோ.

தமிழ்வாசி பிரகாஷ் said...

உண்மையிலே பெருமையான விஷயம் சார்....

வாழ்த்துக்கள்

உணவு உலகம் said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
உண்மையிலே பெருமையான விஷயம் சார்....

வாழ்த்துக்கள்//
நன்றி பிரகாஷ். அப்பப்ப எழுதுங்க.

அஞ்சா சிங்கம் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை ..நன்றி ..........நன்றி ......

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்,

முத்தரசு said...

வாழ்த்துக்கள் பெருமையா இருக்கு ஆபிசர் - பகிர்வுக்கு நன்றி

உணவு உலகம் said...

//அஞ்சா சிங்கம் said...
என்ன சொல்வதென்று தெரியவில்லை ..நன்றி ..........நன்றி ......//
நம் அனைவரது கூட்டு முயற்சிக்கு ஒரு அங்கீகாரம் இது.

உணவு உலகம் said...

//வேடந்தாங்கல் - கருண் said...
வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்//
நன்றி,நன்றி, நன்றி கருண்.

உணவு உலகம் said...

//மனசாட்சி™ said...
வாழ்த்துக்கள் பெருமையா இருக்கு ஆபிசர் - பகிர்வுக்கு நன்றி//
தமிழ் பதிவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம் சார் ! திரு.சுந்தரராஜ் அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள் ! நன்றிகள் பல...

உணவு உலகம் said...

//திண்டுக்கல் தனபாலன் said...
மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம் சார் ! திரு.சுந்தரராஜ் அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள் ! நன்றிகள் பல...//
வருகைக்கு நன்றி சார்.

Unknown said...

வாழ்த்துகள் அண்ணே!

உணவு உலகம் said...

//விக்கியுலகம் said...
வாழ்த்துகள் அண்ணே!//
நன்றி விக்கி.