இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Monday 30 July, 2012

கற்ற கல்லூரியில் கற்பித்த வேளையில்.


கற்ற கல்லூரியில் கற்பித்த வேளையில்.
                           நம் வாழ்வில் உன்னதமான, உயிரோட்டம் மிக்க நிமிடங்கள், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாய் வாய்க்கும். என்றோ ஒரு நாள், அப்படி வாய்க்கும் சில நிமிடங்கள் நம் மனதைவிட்டு அகலுவதுமில்லை. ஆம், அத்தகைய ஒரு நிகழ்வு என் வாழ்வில் ஏற்பட்ட வேளை எதுவெனில், நான் கற்ற கல்லூரியிலேயே,  கற்பிக்க சென்ற வேளை எனலாம். 

கல்லூரியின் அழைப்புக்கடிதம்
    நெல்லை மாவட்டத்தில் என் சொந்த ஊரான அம்பாசமுத்திரத்திலிருந்து, தென்காசி செல்லும் வழியில் அமைந்த ஓர் அழகிய சிற்றூர் ஆழ்வார்குறிச்சி. அந்த ஊரின் பெருமையை பறைசாற்றும் ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரிதான் நான் பட்டப்படிப்பு பயின்ற கல்லூரி. 1980களில், அம்பாசமுத்திரத்திலிருந்து 1சி எண்ணிட்ட நகரப்பேருந்து மட்டும் கல்லூரி வாயில் வரை செல்லும். மாலையிலும், கல்லூரி விடும் நேரத்தில் கல்லூரி வாயிலில் வந்து மாணவர்களை ஏற்றிச்செல்லும். தென்காசி, குற்றாலம் செல்லும் பேருந்துகளில் ஏறினால், மெயின் ரோட்டில் இறங்கி, சுமார் 1 கி.மீ. தூரம் நடக்கவேண்டும். அதனால், அந்த 1சி பஸ்தான் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஆபத்பாந்தவன். அப்போதெல்லாம் கல்லூரியில் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.(விக்கி சாட்டில் கேட்ட கேள்விக்குப் பதில்!
கல்லூரி வாயிலில் நான், கடந்து வந்த பாதைகளைக் கண்முன் நிறுத்தி.
                சிம்சன் குருப் நிறுவனத்தினர், கல்வியிலும்,பொருளாதாரத்திலும் பின் தங்கிய பகுதியில் கல்விக்கண் திறக்க முன்வந்து எடுத்த முயற்சிகளின் பலனே, அந்த கல்லூரி அங்கு அமைந்திட அடித்தளம் அமைத்தது. கற்றறிந்த பேராசிரியர்கள் நாம் கல்வி கற்க பேருதவி புரிவார்கள். நான் கல்லூரியில் பயின்றபோது, எங்கள் விலங்கியல் துறையில் பணியில் இணைந்த திரு.ரஞ்சித்சிங் சார்தான் இன்று அக்கல்லூரியின் முதல்வர். சென்று சந்தித்தபோது, மிகப்பெருமையாக இருந்தது. அதேபோல், வேதியியல் துறைத்தலைவராக இருந்த திரு.தேவராஜன் சார்தான் தற்போது அக்கல்லூரியின் செயலர். இன்னும் என் பெயரை நினைவில் வைத்திருந்தார். எத்தனை ஆண்டுகள் சென்றாலும், பெயரைக்கூட நினைவில் வைத்திருந்த அவரின் நினைவாற்றல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
                       
அழைப்பிதழ் 


             முதுநிலை நுண்ணியல் துறை சார்பில் 10.07.12ல் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு பற்றி உரையாற்றத்தான் அழைக்கப்பட்டேன். முதுநிலை நுண்ணியல் துறை உதவிப்பேராசியர் முனைவர் திரு.விஸ்வநாதன் சார், பேருந்து நிலையத்தில் காத்திருந்து, முகம் தெரியாத என்னை முதல்முதலாய் சந்தித்து, அவர் வாகனத்திலேயே கல்லூரிக்கு  அழைத்துச்சென்று, அன்பைப்பொழிந்தார்.
இணைப்பேராசிரியர் அழகுமுத்து அவர்கள் 
கல்வி கற்ற  மாணவர்கள்  சார்பாய் வரவேற்பு.
                      கல்லூரியில் நுழைந்தவுடன், கோவிலில் நுழைந்த ஓர் உணர்வு.  பரஸ்பர அறிமுகங்களுக்குப் பின்னர், நிகழ்ச்சி ஆரம்பித்தது. எங்கள் ”கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பேரவை” சீரிய பணிகள் பல செய்து வருகின்றன. ஆண்டுதோறும் பழைய மாணவர்கள் அனைவரும்  கூடிக்கலைவதுடன் நின்றுவிடாமல், பொருளாதார சிக்கல்களால், கல்லூரி கல்வி தடைபடும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் கல்வியைத்தொடர பொருளாதார உதவிகள் செய்து, ஈடற்ற சேவையும் செய்துவருகின்றனர். அந்தப்பேரவையின் சார்பில், இணைப்பேராசிரியர் முனைவர். திரு.அழகுமுத்து அவர்கள் வரவேற்று பொன்னாடை போர்த்தினார். 
அரங்கிலிருந்தவர்கள்.
அதில்
 சிகப்புச்சட்டை அணிந்திருக்கும்  
டாக்டர் .திரு. S.T.V.பெருமாள் 
அவர்கள்தான் நான் அரசுப் பணியில் சேர அரும்பாடு பட்டவர்.

                            என் வேளையும் வந்தது. என்னை அறிமுகம் செய்துகொண்டு, நான் இக்கல்லூரியின் முன்னாள் மாணவன், இன்று உங்கள் மத்தியில் உரையாற்ற வந்துள்ளேன். இதேபோல், உங்கள் கல்வியில் நாட்டம் மிகக்கொண்டால், நாளையே நீங்களும் இக்கல்லூரியில் விரிவுரையாளராகவும் வரலாம், இன்னும் சொல்லப்போனால், இம்மாவட்டத்தின் ஆட்சித்தலைவராகவும் வந்து இக்கல்லூரி நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாமென்ற முன்னுரையுடன் தொடங்கி, உணவு கலப்படம்,அதன் தீமைகள், உணவு பாதுகாப்பு என நானறிந்த விஷயங்கள் அனைத்தையும் எடுத்துரைத்து, அவர்தம் ஐயங்கள் போக்க அடுத்த அரை மணி நேரமும் எடுத்துக்கொண்டேன்.


பேராசிரியர்களுக்கு கலப்படம் கண்டுபிடிக்கும் உபாயங்கள்
                             அடுத்து, நான் கொண்டு சென்றிருந்த உணவுப்பொருட்கள், அதனோடு கலப்படம் செய்யப்பயன்படுத்தப்படும் கலவன்கள்(ADULTERANTS), கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி என்பது பற்றிய செயல்விளக்கம். பேராசியர்களும், மாணவர்களும் பெரும் ஆர்வத்துடன் பார்த்துச்சென்றனர். நான் கற்ற கல்லூரியில், கற்பித்த அந்த வேளையில், அடைந்த ஆனந்தம் ஒருபுறம் என்றாலும், என் மனம் கல்லூரி மாணவனாய் இப்போதுமிருக்க மாட்டோமா என்றே ஏங்கிற்று.
கல்லூரி வளாகத்தில் புதிதாய்க்கட்டப்பட்டு வரும்  நூல்நிலையமும், அரங்கமும்

டிஸ்கி: நமது  ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில், வரும் 26.08.12 அன்று, கல்வி கற்ற மாணவர்கள்(ALUMNI) பேரவையின் கூட்டம் நடைபெற உள்ளது. மேலதிக விபரங்களுக்கு, அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் அருமை நண்பர் திரு.முருகானந்தம் சார் அவர்களை vijayreals@yahoo.co.in  மின்னஞ்சலிலோ, செல் எண்:9443131013 லோ தொடர்பு கொள்ளுங்கள் நண்பர்களே.
Follow FOODNELLAI on Twitter

24 comments:

இராஜராஜேஸ்வரி said...

கற்ற கல்லூரியில் கற்பித்த வேளை -- வாழ்வில் உன்னதமான, உயிரோட்டம் மிக்க நிமிடங்கள் --
பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் !

Unknown said...

நாம் படித்த பள்ளியும்...கல்லூரியும் என்றும் நினைவுகளில் சுகத்தை வரவழைக்கக்கூடியவை...!

கவி அழகன் said...

Pasumaiyana ninaivukal

முத்தரசு said...

பழைய நினைவுகளை தூண்டியது இப் பதிவு - பகிர்வுக்கு நன்றி ஆபிசர்

மொக்கராசா said...

கற்ற கல்லூரியால் உங்களுக்கு பெருமை...
உங்களால் நீங்கள் கற்ற கல்லூரிக்கு பெருமை......

Anonymous said...

கல்வி கற்ற கல்லூரியில் உயர்நிலைக்கு சென்று உரையாற்றியதற்கு வாழ்த்துகள்.

Prabu Krishna said...

கற்ற கல்லூரிக்கு செல்வதே மிகவும் சந்தோஷமான தருணம். கற்பித்தது அதைவிட பெரிய சந்தோசம்.

MANO நாஞ்சில் மனோ said...

கல்லூரியில் நுழையும் போதே ஆபீசருக்கு இருபது வயசு குறைந்திருக்கும் இல்லையா....!!!

MANO நாஞ்சில் மனோ said...

மிகவும் சந்தோஷமாக இருக்கு ஆபீசர்...வாழ்த்துகள் வாழ்த்துகள்...வாழ்த்துகள்....!

Unknown said...

பெரும் பாக்கியம் பெற்றவர் நீங்கள்
சந்தோசம் ஆபீசர் ஐயா.

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
கல்லூரியில் நுழையும் போதே ஆபீசருக்கு இருபது வயசு குறைந்திருக்கும் இல்லையா....!!!

30 July 2012 2:07 பம்//

அவருடைய வயதே இருபது தானே அண்ணா...

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா என்ன ஆபீசருக்கு வயசு இருபதா...? சொல்லவே இல்லை பார்த்தால் பத்னைந்து வயசு மாதிரில்லா இருக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

ஆபீசருக்கு மென்மேலும் எனது வாழ்த்துகள்....!

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி சாட்'ல வேற வந்து பிளேட் போடுறானா....?

துபாய் ராஜா said...

பசுமை நிறைந்த நினைவுகளே... பாடல்தான் அந்த நேரத்தில் உங்கள் மனம் முழுதும் நிறைந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது சித்தப்பா சார்...

MARI The Great said...

தொடர்ந்து தங்கள் சேவை மேன்மையடைய வாழ்த்துக்கள்!

கோவை நேரம் said...

வாழ்த்துகள்....இதை விட பெருமை...எதுவுமில்லை...

திண்டுக்கல் தனபாலன் said...

பழைய இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார் !

நாய் நக்ஸ் said...

அருமையான...நினைவுகள்.....
மேலும்...

நிறைவான நெகிழ்ச்சி.....(நிகழ்ச்சி)...

Dinesh Kumar A P said...

அருமை..

நிலாமகள் said...

பாராட்டும் வாழ்த்தும்!

”தளிர் சுரேஷ்” said...

கற்ற கல்லூரியில் கற்பிக்க செல்லும்வாய்ப்பு அனைவருக்கும் கிட்டாது! கிட்டிய வாய்ப்பினை சிறப்பாக செய்து சிறப்பாக பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!

இன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in

உணவு உலகம் said...

//கும்பகர்ணனை யாராவது நேரில் பார்த்துண்டா....? ஆனால்....... நானும் ஆபீசரும், விஜயனும், கவுசல்யா ஜோதிராஜ், ஜோதிராஜ், திவானந்தா சுவாமிகள், ரூபினோ மேடம் எல்லாரும் பார்த்து இருக்கிறோம்....!//
ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல!!!

Rathnavel Natarajan said...

பெருமிதப்பட வைக்கும் நிகழ்ச்சி.
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.