இது நம்ம ஸ்டைலுங்கோ

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

Tuesday 28 August, 2012

பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே!


                     காலங்கள் பல கடந்தே போனாலும், கல்லூரி நாட்கள் நம் கனவிலும் மறக்க முடியாத கனிவான நினைவுகளாகும். எனக்கும் என் கல்லூரி நாட்களை அசை போடக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம், அண்மையில் நான் கற்ற கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சங்க ஆண்டு விழா நிகழ்வாகும்.                     26.08.12ல், ஆழ்வார்குறிச்சி,  ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழாவென்ற இனிப்பான தகவல், அன்பு நண்பர் ராஜ்குமாரால் அறிமுகம் செய்யப்பட்ட எங்கள் கல்லூரி சீனியர் திரு.முருகானந்தம் சார் அவர்கள் மூலமாய் தெரியவந்தது. கடந்த பத்து வருடங்களாய் இந்த விழா நடைபெற்று வந்தாலும், என்னை இந்த நிகழ்வில் இணைய வைத்தது, இவர்கள் இருவரின் இடைவிடாத முயற்சியே. சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினர்களாக இணைந்த இந்த வருடமே, என்னையும்,நண்பர்  ராஜ்குமாரையும் செயற்குழு உறுப்பினர்களாக்கி விட்டார் முருகானந்தம் சார். வயது வித்யாசம் பார்க்காமல், அனைவரையும் அணைத்துச்செல்லும் அருங்குணம் இவர் சிறப்பு. தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்யநாதன் அவர்கள் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர். விழாவில்,இக்கல்லூரி முன்னாள் மாணவர், ஸ்டார் விஜய் டி.வியின் “முன் ஜென்மம்” புகழ் திரு.ராஜ்நாராயணனுக்கு, சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவரின் ஏற்புரைப் பேச்சு தினமணியில்:

விழாவில் முன்னாள் மாணவர் ஸ்டார் விஜய் டி.வி. திரு.ராஜ்நாராயணன் பேச்சு-நன்றி-தினமணி.

                  1963ல், பின்தங்கிய கிராமப்பகுதி மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கோடு  தொடங்கப்பட்ட இக்கல்லூரி, இன்று வளர்ந்து கிளை பரப்பி, வையகத்தில் பலரின் வாழ்க்கையில் அறிவு ஒளியேற்றி, வசந்தங்கள் வாழ்வில் மலர வழிகாட்டி வருகின்றது. நாங்களெல்லாம் இக்கல்லூரியில் கற்கும்போது, ஆண்கள் மட்டுமே இக்கல்லூரியில் பயிலமுடியும்.ஆனால், கடந்த ஜூலை மாதத்தில், அக்கல்லூரியில் உணவு பாதுகாப்பு குறித்து சிறப்புரை ஆற்றச்சென்றபோது, மாணவர்களுடன், மாணவிகளும் சேர்ந்து கல்லூரி வளாகத்தைக் கலக்கிக்கொண்டிருந்தனர். இந்த இடத்தில் குறிப்பிட்டுச்சொல்லும் பணியொன்றை, முன்னாள் மாணவர் சங்கம் சிறப்பாய் செய்து வருவதை சொல்லியே ஆகவேண்டும். ஆம், கல்லூரியில் பட்டப்படிப்பு கனவுகளுடன் சேர்ந்து, குடும்பச்சூழ்நிலைகளால், கல்வியைத் தொடர இயலாமல் போகும் மாணவர்களைக்கண்டறிந்து, அவர்தம் கல்வியைத்தொடர, பண உதவி செய்து, மற்ற பல மாணவர் சங்கங்களுக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்ந்து வருகிறது. கல்லூரிப் படிப்பை முடித்து, பன்னாட்டுக் கம்பெனிகளிலும் வேலைதேடி செல்வோருக்கு, ஆங்கில மொழிப்புலமை இல்லாது வாய்ப்புகளை இழக்கக்கூடாதென்ற நோக்கில்,”ஸ்போக்கன் இங்கிலீஸ்” வகுப்புகளையும் முன்னாள் மாணவர் சங்கம் நடத்தி வருகிறது.
                   நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்று கேட்கும், இக்கல்லூரியின் இந்நாள், முன்னாள் பேராசிரியர்கள், ஒவ்வொரு ஆண்டும், உயர்கல்விக்கு பணப்பற்றாக்குறையால் திணறும் மாணவர்களைக்கண்டறிந்து,சத்தமின்றி, தங்களால் இயன்ற பொருளுதவி செய்து, பல திறமைசாலிகளை வெளிக்கொணர்கின்றனர்.
             இக்கல்லூரியில், நான் சேர்ந்தது 1981ம் வருடம். முதல் இரண்டு செமஸ்டர் தேர்வுகள் மட்டுமே எழுதிய நான், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில், சுகாதார ஆய்வாளர் பயிற்சியில் சேர இடம் கிடைத்ததும், கல்லூரி படிப்பை இடைநிறுத்தி, அங்கு சென்று சேர்ந்தேன். ஓராண்டில், அப்பயிற்சியை முடித்து வந்ததும், மீண்டும் கல்லூரிப்படிப்பைத் தொடர அணுகியபோது, அன்புக்கரங்களால் என்னை அரவணைத்தது இக்கல்லூரிதான். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது செமஸ்டர் தேர்வுகளை எழுதிய நான், ஆறாவது செமஸ்டரில் நுழையும் முன்பே, நகராட்சிப்பணிக்குத்தேர்வாகி, செங்கோட்டை நகராட்சிப் பணியில் 1984ல் இணைந்தேன். மீண்டும் கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட இடைவேளையிது. அடுத்த இரு ஆண்டுகள் என் அரசுப்பணியினை நிரந்தரம் செய்ய பாடுபட்ட பின்னர், ஆறாவது செமஸ்டரில் இக்கல்லூரியில் சேர்ந்து கற்க  கோரிக்கை வைத்து, கோரிக்கையிலும் வெற்றி பெற்றேன். இதற்கிடையில் எனக்குத் திருமணமும் முடிந்துவிட்டது.ஆக, மூன்றாண்டு பட்டப்படிப்பை, ஏழாண்டுகளில், எந்தவித அரியர்ஸும் வைக்காமல் படித்து முடித்தேன் என்பதால், என்னால் அந்த கல்லூரி நாட்கள் மறக்க முடியாதவையே! 
நன்றி:தினமலர்.

                            என்னுடன் பயின்ற நண்பர் S.V.பெருமாள், தற்போது சென்னையில் பிரபல Brigap Projects and Marketingன் Managing Partner, நண்பர் வின்னி இர்வின் ஜோஸ் BG Crop Science & Technologies P. Ltdன் Chief Executive Officer, நண்பர் ஜோயல் ஹென்றி, அம்பாசமுத்திரத்தில் அரசு வழக்கறிஞராக(Govt. Pleader) பணியாற்றியவர்.அவரும் மற்றொரு நண்பர் சாகுல்ஹமீதும் அம்பையில் இன்றும் முன்னோடி வழக்கறிஞர்கள். இவர்களையும், இன்னும் பல கல்லூரித்தோழர்களையும் அன்று கண்டு மகிழ்ந்தேன், நான்.  கடந்த 26.08.12ல், வெகு விமரிசையாக ஆழ்வார்குறிச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழா நிகழ்ச்சியின் காணொளித் தொகுப்பு ஒன்றை, முன்னாள் மாணவர், புகைப்படக்கலைஞர், பத்திரிக்கையாளர் திரு.கந்தசாமி அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார். அதனை அனைவரும் காணும் வகையில், இந்தப் பதிவுடன் இணைத்துள்ளேன். கண்டு களியுங்கள் நண்பர்களே.                                   

PART-1

                            
                                PART-II
இக்கல்லூரி முன்னாள் மாணவர்களின் சமீபத்திய சாதனைகள்:
1.
கல்லூரி முன்னாள் மாணவர், திரு.நடராஜன் சார் அவர்கள் சமீபத்தில் பதவி உயர்வு பெற்று, தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழகத்தில், துணைத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். அவரை வாழ்த்திய முன்னாள் மாணவர்கள் பட்டாளம்.
2. இக்கல்லூரியில், எங்களுடன் 1982-85 வருடங்களில், B.Com பயின்ற திரு.L.சுப்பிரமணியன் அவர்கள் குருப்-1 ஆபிஸராக அரசுப்பணியில் சேர்ந்து, சமீபத்தில் இந்திய ஆட்சிப்பணியாளராக பதவி உயர்வு பெற்று, சிதம்பரம் துணை ஆட்சியராய் பதவியேற்றுள்ளார். 
                                     வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே.
Follow FOODNELLAI on Twitter

35 comments:

Unknown said...

வாழ்த்துக்கள்ணே...கல்லூரி நண்பர்களை மீண்டும் சந்திப்பது என்பது எம்புட்டு சந்தோசம் என்று அறிகிறேன்...நன்றி

இம்சைஅரசன் பாபு.. said...

அனைவருக்கும் .இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைப்பது அரிது சார் ..உங்க கூட படித்தது அனைவரும் ஆண்கள் தான ..சார் ..ஹி ..ஹி ..சும்மா தான் கேட்டேன் ..

Unknown said...

கல்லூரி,பள்ளி பால்ய நண்பர்களை அவ்விடத்திலேயே சந்திப்பது நெகிழ்ச்சியாக விசயம்...! ”சான்றோன் எனக் கேட்ட தாய்” மட்டுமல்ல நமது ஆசிரியர்களும்தான்...!

இராஜராஜேஸ்வரி said...

சாதனை புரிந்த கல்லூரி திலகங்களுக்கு வாழ்த்துகள் ..பாராட்டுக்கள்..

நாய் நக்ஸ் said...

Vazhththukkal...
Sir....

Inimaiyaana.....
Ninaivukal.....

NINAITHTHAALE
INIKKUM.....

நாய் நக்ஸ் said...

Vazhththukkal...
Sir....

Inimaiyaana.....
Ninaivukal.....

NINAITHTHAALE
INIKKUM.....

சீனு said...

நீங்கள் பரமகல்யாணி மாணவரா, நானும் தான் சார்...
அருமையான நினைவுகள், இக் கல்லூரியின் கடந்த கல நினைவுகளாக நான் எழுதிய ஒரு பதிவு....

படித்துப் பாருங்கள்

http://seenuguru.blogspot.com/2012/08/blog-post_8.html

சக்தி கல்வி மையம் said...

Vaazththukkal..

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்...

அனைவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

அம்பாளடியாள் said...

பசுமையான இன் நினைவுகள் தொடரட்டும்!... .
சாதனையாளர்களுக்கு எமது வாழ்த்துக்களும் உரித்தாகடும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பகிர்வு! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
http://thalirssb.blogspot.in/2012/08/6.html
மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

MARI The Great said...

இந்த மாதிரி வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது! இந்த வாய்ப்பை பெற்ற நீங்கள் கொடுத்து வைத்தவர்!

சென்னை பித்தன் said...

எவ்வளவு மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சி!
வாழ்த்துகள்

அ. வேல்முருகன் said...

சந்திப்புகள் முடிந்தபிறகும்
நினைவுகள் அசைபோடும்
நிகழ்வுகள்

உணவு உலகம் said...

//விக்கியுலகம் said...
வாழ்த்துக்கள்ணே...கல்லூரி நண்பர்களை மீண்டும் சந்திப்பது என்பது எம்புட்டு சந்தோசம் என்று அறிகிறேன்...நன்றி//
நன்றி விக்கி.

உணவு உலகம் said...

//இம்சைஅரசன் பாபு.. said...
அனைவருக்கும் .இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைப்பது அரிது சார் ..உங்க கூட படித்தது அனைவரும் ஆண்கள் தான ..சார் ..ஹி ..ஹி ..சும்மா தான் கேட்டேன் ..//
ஆண்களேதான் பாபு!

உணவு உலகம் said...

//வீடு சுரேஸ்குமார் said...
கல்லூரி,பள்ளி பால்ய நண்பர்களை அவ்விடத்திலேயே சந்திப்பது நெகிழ்ச்சியாக விசயம்...! ”சான்றோன் எனக் கேட்ட தாய்” மட்டுமல்ல நமது ஆசிரியர்களும்தான்...!//
சரிதான் சுரேஷ்.

உணவு உலகம் said...

//இராஜராஜேஸ்வரி said...
சாதனை புரிந்த கல்லூரி திலகங்களுக்கு வாழ்த்துகள் ..பாராட்டுக்கள்..//
நன்றி சகோ.

உணவு உலகம் said...

//நாய் நக்ஸ் -இலையையும் தின்பவன் said...
Vazhththukkal...
Sir....

Inimaiyaana.....
Ninaivukal.....

NINAITHTHAALE
INIKKUM.....//
நன்றி நக்ஸ்.

உணவு உலகம் said...

//சீனு said...
நீங்கள் பரமகல்யாணி மாணவரா, நானும் தான் சார்...
அருமையான நினைவுகள், இக் கல்லூரியின் கடந்த கல நினைவுகளாக நான் எழுதிய ஒரு பதிவு....

படித்துப் பாருங்கள்

http://seenuguru.blogspot.com/2012/08/blog-post_8.html//
படித்தேன், கமெண்டினேன். நன்றி சீனு.

உணவு உலகம் said...

//வேடந்தாங்கல் - கருண் said...
Vaazththukkal..//
நன்றி கருண். தங்கள் வலைப்பக்கம் என்னால் பார்க்க இயலவில்லை.

உணவு உலகம் said...

//திண்டுக்கல் தனபாலன் said...
பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்...

அனைவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...//
நன்றி சார்.

உணவு உலகம் said...

//அம்பாளடியாள் said...
பசுமையான இன் நினைவுகள் தொடரட்டும்!... .
சாதனையாளர்களுக்கு எமது வாழ்த்துக்களும் உரித்தாகடும் .மிக்க நன்றி பகிர்வுக்கு //
நன்றி சகோ.

உணவு உலகம் said...

//s suresh said...
சிறப்பான பகிர்வு! வாழ்த்துக்கள்!//
நன்றி சார்.

உணவு உலகம் said...

//வரலாற்று சுவடுகள் said...
இந்த மாதிரி வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது! இந்த வாய்ப்பை பெற்ற நீங்கள் கொடுத்து வைத்தவர்!//
நன்று சார்.

உணவு உலகம் said...

// சென்னை பித்தன் said...
எவ்வளவு மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சி!
வாழ்த்துகள்//
சென்னைப்பதிவர் சந்திப்பின் நாயகனின் சிறப்பான வாழ்த்திற்கு நன்றி சார்.

உணவு உலகம் said...

//அ. வேல்முருகன் said...
சந்திப்புகள் முடிந்தபிறகும்
நினைவுகள் அசைபோடும்
நிகழ்வுகள்//
நன்றி சார்.

MANO நாஞ்சில் மனோ said...

நம்மாளுங்க நல்லாத்தான் படிக்கிறாங்க ஆனால் ஆங்கிலம் பேசுவதற்கு ரொம்பவே கஷ்டப்படுபவர்களை பார்த்து இருக்கிறேன், அவர்களுக்கு இந்த ஸ்போக்கன் இங்கிலீஸ் வெகுவாக கைகொடுக்கும், என் வாழ்த்துகளையும் சொல்லுங்க ஆபீசர்...!

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம்ம்ம்ம்ம் நம்ம ஆபீசர் பழைய நண்பர்களை எல்லாம் சந்தித்து ரீஃபிரஷ் ஆகி வயசும் குறைஞ்சி போச்சு போங்க....!

இனி பதிவுலக மார்கண்டேயன் பட்டம் குடுத்துற வேண்டியதுதான்...!

MANO நாஞ்சில் மனோ said...

இம்சைஅரசன் பாபு.. said...
அனைவருக்கும் .இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைப்பது அரிது சார் ..உங்க கூட படித்தது அனைவரும் ஆண்கள் தான ..சார் ..ஹி ..ஹி ..சும்மா தான் கேட்டேன் ..//

அதென்ன சும்மா...? எனக்கும் மைல்டா ஒரு டவுட்டு இருந்துச்சுய்யா...!

ஆத்மா said...

வாழ்த்துக்கள் சார்..........
எங்களுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் இன்னும் கிடைக்கெல்ல ஏன்னா நாங்க இன்ன்மும் கல்லூரிய விட்டு விலகவே இல்லியே... :P

Unknown said...
This comment has been removed by the author.
செல்ல நாய்க்குட்டி மனசு said...

எனது நெடு நாள் ஆசை, கல்லூரியில் நம்முடன் படித்தவர்கள் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்பது.

Rathnavel Natarajan said...

வாழ்க்கையில் மகிழ்வான தருணம்.
வாழ்த்துகள் சார்.

Unknown said...

Surprised to note some of my friends are your college mate.I used to visit informative blogs on food safety. Keep going.You do a marvellous job of educating.